நமக்குள் நல்லதை உருவாக்க வேண்டும் என்றால் சிருஷ்டியைச் (பிரம்மாவை) சிறைப்பிடிக்க வேண்டும்…!

sixth sense power

நமக்குள் நல்லதை உருவாக்க வேண்டும் என்றால் சிருஷ்டியைச் (பிரம்மாவை) சிறைப்பிடிக்க வேண்டும்…!

 

ஒருவன் குறும்புத்தனம் செய்கின்றான்… நாம் பார்க்கின்றோம். அதை நுகர்ந்தபின் அந்த குறும்பின் உணர்ச்சியை ஊட்டும் அணுத்தன்மை நம் உடலில் விளைந்து விடுகின்றது. அப்பொழுது அதை புகாது நமக்குள் தடுத்தல் வேண்டும்.

அந்த குறும்புத்தனத்தின் உணர்வை நீக்க வேண்டும் என்றால் “ஈஸ்வரா…!” என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்று இந்த உணர்வை எடுத்து அதனுடன் கலந்து என் உடல் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் படர வேண்டும். ஈஸ்வரா என்று நாம் எண்ணுதல் வேண்டும்.

இப்படி எண்ணிய பின் எவன் குறும்புத்தனம் செய்தானோ…
1.அவன் அறியாத இருள் நீங்க வேண்டும்
2.அவன் பொருள் அறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும்
3.அவன் தெளிந்த மனம் பெற வேண்டும்
4.பிறரை மதிக்கும் நன்மதிப்பான அந்த உணர்வுகள் அவனிடம் தோன்றப்பட வேண்டு என்று எண்ணினால்
5.அந்த குறும்புத்தனத்துடன் நமது அந்த அருளொளி என்ற உணர்வைக் கூட்டி ஒரு புது உணர்வாக மாற்றுகின்றோம்.

விவசாயங்களில் என்ன செய்கின்றோம்…? நமக்கு வேண்டிய உணர்வின் அணுக்களைச் சேர்த்து தாவர இனங்களை மாற்றித் நமக்குகந்த புது வித ரகங்களை உருவாக்கிக் கொள்கின்றோம்.

அதே போல மனிதனுக்குகந்த நிலையில் உயிரினங்களில் மற்ற மரபணுக்களைச் சேர்த்துச் சேர்த்து அதனின் உடல்களை உருமாற்றுகின்றோம். ஆகவே பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் அந்த ஆறாவது அறிவின் தன்மை.

1.இதையெல்லாம் உருவாக்கும் திறன் இருந்தும் நமக்குள் நல்லதை உருவாக்கத் தவறினால்
2.சந்தர்ப்பத்தால் நாம் நுகர்ந்த தீமைகள் நம்மை அது வலிமை கொண்டு
3,மீண்டும் தேய்பிறை என்ற நிலையில் மனிதனல்லாத உடலை உருமாற்றிக் கொண்டிருக்கும் – நம் உயிரின் வேலை.

அதைத் தான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்ற நிலையைத் தெளிவாக்கப்படுகின்றது நமது சாஸ்திரங்கள்.

நாம் ரோட்டில் நடந்து போய்க் கொண்டிருக்கின்றோம். சந்தர்ப்பத்தில் காக்கா வலிப்பு வந்து ஒருவன் கீழே விழுந்து விடுகின்றான். இரக்கத்துடன் கேட்கிறோம்.

இருந்தாலும் சிலருக்குப் பலவீனமான உணர்வு இருந்தால் அது சிறு மூளை பாகத்தில் தாக்கி விட்டால் அது வெடுக்கு…வெடுக்கு… என்று சுண்டும்.

1.இதற்கு முன்னாடி காக்கா வலிப்பு இல்லை…
2.ஆனால் இப்படிச் சந்தித்த நிலைகள் கொண்டு அதிர்ச்சி ஆன பின்
3.இந்த உணர்வின் தன்மை அணு அங்கே தேங்கி விட்டால் அவர்களுக்கு இந்தக் காக்கா வலிப்பு வரும்.
4.சின்னக் குழந்தையாக இருக்கும் பொழுதெல்லாம் இது இல்லை என்று எண்ணுவார்கள்
5.ஆனால் இந்த உணர்வின் அறிவு இப்படி வருகின்றது.

இதைப் போல ஒரு சாந்த குணம் கொண்ட… பரிவான நிலைகள் கொண்ட ஒரு மனிதன்… எதிர்பாராத நிலைகள் சந்திக்கப்படும் பொழுது ஆ…ஆ…! என்ற இந்த உணர்வின் தன்மை பயந்தால் என்ன நடக்கின்றது…?

டரன்சாக்சன் (TRANCACTION) செய்யக்கூடிய உணர்வுகள் ஒலிப்பெருக்கி ஆகும்போது சிறு மூளைப் பாகங்களில் உள்ள நுண்ணிய நரம்புகள் விரிவு அடைந்து விடுகின்றது.
1.அப்போது நமக்குள் மயக்கம் ஆகின்றது
2.உறுப்புகளின் தன்மை கை கால் அங்கங்கள் வராமல் கூட போய் விடுகின்றது – அதிர்ச்சியினால்…!

இதெல்லாம் நாம் அறியாமலே நுகரும் உணர்வுகள். அப்போது நம்மைக் காக்க வேண்டும் என்றால் என்ன வேண்டும்…? ஆறாவது அறிவைச் சீராக நாம் பயன்படுத்த வேண்டும்.

ஈஸ்வரா…! என்று உணர்வின் தன்மை உயிரோடு ஒன்ற வேண்டும். அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று
1.இங்கே புருவ மத்தியில் நிலை நிறுத்தி
2.உட்புகும் அந்தத் தீமையின் செயலாக்கங்களை நாம் தடைப்படுத்தி பழக வேண்டும்.

யாரைப் பார்த்து அந்த அதிர்ச்சியின் நிலைகள் ஆனதோ அவனுக்குள் அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருள் பெற வேண்டும். அவன் உணர்வுகள் காக்கப்பட வேண்டும். அவன் பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும். அவன் உடலில் உள்ள பிணிகள் நீங்க வேண்டும் அவன் தெளிவான வாழ்க்கை வாழ வேண்டும் என்று இந்த உணர்வுகளை எடுத்து நமக்குள் படைத்து விட்டால் நமக்குள் அந்த உயர்ந்த குணங்களை உருவாக்குகின்றது. அவனுடைய செயல்கள் நமக்குள் வருவதில்லை.

சந்தர்ப்பத்தால் வேதனையை நுகரப்படும்போது அது பிரம்மமாகின்றது… உருவாகி விடுகின்றது. ஆனால் அதே சமயத்தில் நம் ஆறாவது அறிவு சேனாதிபதி இதையெல்லாம் பாதுகாக்கும் சக்தி பெற்றது. கார்த்திகேயா…! இதையெல்லாம் அறிந்து கொள்ளக்கூடிய சக்தி பெற்றது அந்த ஆறாவது அறிவு.

1.தீமை என்ற உணர்வுகள் வந்தாலே…
2.அருள் ஒளி என்ற உணர்வை நமக்குள் இணைத்து
3.அதைச் சுவைமிக்கதாக நாம் படைத்துப் பழக வேண்டும்.
4.அந்த அணுக்களை மாற்றிப் பழக வேண்டும்…!

அது தான் பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன் என்பது…!

Leave a Reply