அகஸ்தியா… தெற்கில் போ…! என்று சிவன் சொல்கிறார்

Agastyar

அகஸ்தியா… தெற்கில் போ…! என்று சிவன் சொல்கிறார் 

யுதர்கள் ஆதாம் ஏவாள் என்ற நிலைகளைச் சொல்கின்றார்கள். ஆதாம் என்றால் பூமி… ஏவாள் என்றால் இயக்கம்…!

ஆண் பெண் என்று இங்கு பூமியிலே ஆதியில் தோன்றினார்கள். ஆண் பெண் ஆன பின் விஷத் தன்மை இருக்கும் பக்கம் போக வேண்டாம்..! என்று ஆண்டவன் கூறினார்.

ஆனால் அந்த விஷத்தை உறிந்த பின் அதற்குத் தண்டனையாக பாம்புகளாகப் பிறந்தார்கள்… அதுவாகப் பிறந்தார்கள்…! என்று அவன் சொல்கின்றான்.

ஏனென்றால் இதே தத்துவத்தை இங்கே நம் நாட்டிலே அன்றே சொன்னார்கள். சக்தி சிவமாகின்றது என்று…!

ஆதியிலே ஒரு சமயம் அகஸ்தியன் வாழ்ந்து வளர்ந்த காலங்களில் பூமியின் தன்மை முட்டை வடிவில் வருகின்றது… எப்படி…? அதாவது பனிப்பாறைகள் அங்கே உறையப்படும்பொழுது அது பூமி திரும்பும் தன்மை வருகின்றது எடை கூடும்போது…!

அப்பொழுதுதான் தெற்கில் போ…! என்று அகஸ்தியனை போகச் சொன்னதாகக் காவியங்கள் உண்டு.

அந்த உணர்வுக்கொப்ப சூரியனை எண்ணி ஏங்கி இந்த உணர்வின் தன்மை தனக்குள் எடுத்து உறைந்த பனிப்பாறைகளைக் கரையும்படி செய்கின்றான்… அகஸ்தியன். ஏனென்றால் அந்த உணர்வின் வலிமையை அவன் பெற்றதனால் அவ்வாறு மாற்றிச் சமநிலைப்படுத்தினான்.

அதற்கு அப்புறம் இப்பொழுது விஞ்ஞானி வந்துவிட்டான்.

ஒரு பக்கத்தில் அணுகுண்டை வெடிக்க வைத்தான் என்றால் அதனால் புகை மண்டலங்கள் பெருகினால் மேலே ஈர்க்கக் கூடிய தன்மை எல்லாம் போய்விடும். இப்போது உறைபனி அதிகமானால் டபக்… என்று பூமி திரும்பிவிடும்.

அன்று மெய் ஞானியான அகஸ்தியன் தனக்குள் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை கொண்டு முட்டை வடிவில் வந்த பூமியை அது திரும்பாதபடி சமப்படுத்தி வைத்தான்… இன்றளவும் சீராக ஓடிக் கொண்டுள்ளது.

அதை நமக்குப் புரியச் செய்வதற்காக சிவனுக்கும் பார்வதிக்கும் கல்யாணம் என்று குட்டி கதையாகப் போட்டு விளக்குகின்றார்கள்.

சிவனுக்கும் பார்வதிக்கும் கல்யாணம் ஆகின்றது. அதனால் கூட்டங்கள் அங்கே நிறையச் சேர்ந்துவிடும்.
1.அதை நீ சமப்படுத்தத் தெற்கே போ… என்று
2.சிவன் அகஸ்தியனுக்குக் கட்டளையிட்டான்
3.அகஸ்தியன் அவ்வாறு போனான்…!

சிவனும் பார்வதியும் என்றால் பூம சுழலும் போது துருவப் பகுதியில் தன் பார்வையில் சிக்குவதை எடுத்து அது வழியாக பூமியாகின்றது.
1.அதனால்தான் பார்வதி பஜே
2.இந்த உணர்வின் சக்தி எதுவாகுதோ அதன் வழி இயக்குகின்றது.
3.ஆகவேதான் சிவனுக்கும் பார்வதிக்கும் கல்யாணம்
4.சக்திகள் வந்து உறைந்து உடலாகும்போது இரண்டும் இணைந்து பூமியாகின்றது என்பதைக் காட்டுவதற்காக
5.இப்படி ஒரு சாஸ்திரத்தை தெளிவாகக் கூறுகின்றார்.

நீ தெற்கில் போ…! என்று வரும்போது தெற்கில் தான் வெப்பத்தின் தன்மை அதிகம். அப்போது அந்த உணர்வின் தன்மையை அகஸ்தியன் எடுத்து அதைச் சமப்படுத்துவதற்காக திசைத் திருப்புகின்றான்.

அப்போது திசை திருப்பும்போது இதன் உணர்வுகள் மாறி எடையற்ற நிலைகளும் இது சேர்க்கப்படும்போது சமநிலை வருகின்றது.

இப்படி அகஸ்தியன் மாற்றியமைத்தான்…! என்ற நிலைகளைச் சாஸ்திரங்கள் மறைமுகமாக மனிதன் அறிந்து கொள்வதற்குத் தெளிவான நிலைகள் கூறுகின்றது.

அன்று அகஸ்தியன் சமப்படுத்திய உணர்வுகள் எல்லாம் பூமியிலே படர்ந்துள்ளது. அவனுக்குள் விளைந்த பேராற்றல்களும் இங்கே பரவி உள்ளது.

நான் (ஞானகுரு) மட்டும் இதைக் கண்டுணர்ந்து சொல்கிறேன் என்று இல்லை. இதையெல்லாம் நீங்களும் தெரிய முடியும்… தெரிந்து கொள்ள வேண்டும்.

தெரிந்தால் தான் இந்த நாட்டில் படர்ந்து கொண்டிருக்கும் விஷத் தன்மையை மாற்ற முடியும். ஏனென்றால் அகஸ்தியனின் தத்துவங்கள் காலத்தால் மறைந்துவிட்டது.

இந்தச் சூரியனும் அழியும் தருணம் வந்துவிட்டது. ஆனால் சூரியன் அழிவதற்கு முன் இந்த உயிரினங்களின் மாற்றங்கள் அதிகரிக்கும்.

நாம் மனித இனமாக இன்று நல்ல நிலையில் இருக்கும்போதே அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் எடுத்து வளர்த்துக் கொண்டு இந்த உடலை விட்டுச் சென்றால் என்றும் பிறவியில்லா நிலை அடைதல் வேண்டும். அந்த துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நாம் சென்று சேர வேண்டும்.

ஏனென்றால் இனம் இனத்தை வளர்க்கும்…!

1.குருநாதர் அந்த உயர்ந்த உணர்வை பெற்றார்
2.இந்த இனம் வளர வேண்டும் என்று எனக்குள் பதிவு செய்தார்.
3.அதே குருவின் உணர்வை உங்களுக்குள் பதிவு செய்யும் போது
4.அருள் என்ற உணர்வை சேர்க்கப்படும்போது இது பெருங்கூட்டமாக மாறுகின்றது…!

 

Leave a Reply