நம் செயல்கள் அனைத்தும் அந்த மகரிஷிகளின் ஞானமுடன் செல்ல வேண்டிய “குறுகிய காலகட்டம் இது…!”

Ramalingam ramewaran

நம் செயல்கள் அனைத்தும் அந்த மகரிஷிகளின் ஞானமுடன் செல்ல வேண்டிய “குறுகிய காலகட்டம் இது…!” 

 

ஒன்றின் தொடர் கொண்டு ஒன்று வளர்கின்றது. வளர்ப்பின் படர் பலவாகிப் பலவின் பல வளர்ந்தே உருவாகி உருவாகி உருண்டோடும் உரு குண வளர்ப்புச் செயலில் தொடர் கொண்ட நிலையில் வளர்வது தான் அனைத்துமே.

ஒன்றிலிருந்து ஒன்று பிறந்து ஒவ்வொன்றாக வளரும் வளர்ச்சி கதியில் உருவாகி உணர்வாகி செயலாகி செயலில் வழி பெறுவது பல.

1.இயற்கையின் உண்மை உணர்வில் உருண்டோடும் சக்திகள் எல்லாமே “அவன் படைப்பென்றாலும்”
2.அவன் படைப்பிலிருந்து நல் ஒளி படைப்புப் பெறுவது தான் “இறை ஞானம்..” என்பது.

பலவாக உள்ள இந்த உலகில் இயற்கைப் படைப்பில் மற்றெல்லா உயிரினங்களைக் காட்டிலும் மனித ஞானத்தை உயர்வாகச் செயலாக்கும் சக்தி உருவாகியுள்ளது.

1.இறை ஞானத்தின் சக்தியை உணர்ந்து வழி ஞானம் பெறவல்ல ஆற்றல் மனித குண ஞானத்திற்குத் தான் உண்டு.
2.உயர்த்துபவன்… உயர்ந்தவன்…! என்ற வமிசக் கோட்பாட்டை அறியும் ஞானம் மனிதனுக்குண்டு.

மனிதன் வாழ மற்ற இயற்கையும் துணை கொள்கின்றது. தீயது என்ற நிலை உள்ளதினால் தான் நல்லதைப் பிரித்துக் காண முடிகின்றது. நற்சக்தியின் செயலிலே சகல வளர்ப்பும் இருந்ததென்றால் ஞானத்தின் வளர்ப்பு நிலை பெறுவது எப்படி…?

1.சக்தியின் ஸ்வரூபத்தில் சகலமும் உண்டு.
2.சகலமும் இருந்தால் தான்… சகலத்திலும் இருந்து “உயர் உணர்வு எது…?” என்று செயல் கொள்ள முடியும்.

உயர் நிலை உணர்ந்து… உயர் ஞான இறை சக்தி அடைய… ஞானத்தை உணர்ந்து செயல் கொள்ளக்கூடிய நிலை “மனித உரு வளர்ச்சி கொண்ட வழித் தொடரில் தான் உண்டு…!” என்பதை உணர்ந்து இந்தப் பூமியில் மனித இன வளர்ச்சியை ஊக்குவித்தனர் சப்த ரிஷிகள்.

குருவாக இன்று நாம் சொல்லும் “வியாழனின் ஞான ரிஷி” தான் வியாழனின் மனிதக் கரு உரு நிலையிலிருந்து மனிதனின் அமில குண வளர்ச்சி சக்தியை அம்மண்டலத்தில் மனித இனங்கள் வாழ முடியாத வளர்ப்பு நிலை கொண்ட மண்டலமாக வியாழன் மாறும் தருவாயில் இங்கே பூமியில் மனிதக் கருவை வளரக் காரணமானவர்.

அதாவது அந்தச் சூட்சம ஞானச் செயல்… மனித இனத்தின் சுழற்சி வட்டம் சப்தரிஷியினால் ஈர்த்தெடுக்கப்பட்டு மீண்டும் மனிதக் கரு உருவாகவும்… மண்டலமாக நம் பூமியின் சக்தி அலையை வளர்க்கவும் செய்து… இப்பூமியின் ஈர்ப்பிற்கு மனித இனக் கருவை வளர்க்க விட்டனர் அன்று சப்தரிஷிகள்.

1.இன வளர்ச்சியில் ஞானத்தை உணர்ந்த அவர்கள் செயல்
2.அந்தந்தக் கால நிலைக்கொப்ப அவர்கள் பதித்த வளர்ச்சியிலிருந்தே
3.தன் வளர்ச்சிக்குப் பலம் கூட்ட தன் வளர்ப்பில் பயிராக்கிய பயிரிலிருந்து
4.மீண்டும் பயிராக்க “விதையைத்தான்” இன்று அவர்கள் சேமிக்கின்றார்கள்.

சப்தரிஷி உருவான அமிலக் கூட்டு இன நிலைக்கொப்ப தன் குண உணவையே தான் எடுத்து தான் வளர்ந்து இவ்வின வளர்ச்சி மங்கா நிலைக்காகத்தான் “சப்தரிஷிகளின் செயல்” இன்றுள்ளது.

இறைவனின் படைப்புத்தான் ஒவ்வொன்றும். படைப்பின் படைப்பெல்லாம் அவனே தான். அவனின் படைப்பில் இறை ஞானம் பெறும் மனித ஞானம் கொள்வது தான் படைக்கப்பட்டவன் படைப்பின் பொருள் காணும் நிலை.

நாம் நம் வாழ்க்கையில் சாதாரண நிலையில் உணர்ந்து வாழ்ந்து ஜீவன் பிரிந்து செல்லும் நிலையில் உள்ள நிலையை அந்தந்தக் காலங்களில் சப்தரிஷிகள் பல உடல்களை ஏற்று பல ஞானிகளை உருவாக்கிச் சென்றார்கள்.

ஆனால் இன்று வளர்ந்து பெருகியுள்ள மனிதனின் குண வழித் தொடர் யாவையுமே விஞ்ஞானம் என்ற உடல் பிம்ப சுகம் காணும் செயல் ஞானமாக வளர்ந்து வேரூன்றி கிளை விட்டுப் படர்ந்து விட்டது.

1.இதனை மாற்றியமைத்து
2.உயர் ஞானமான ஆத்ம ஞானத்தை வளர்த்து
3.இறை ஞானம் என்ற மனித அமில குண சக்தி ஈர்ப்பு வளர்ச்சி தரும் சப்தரிஷியின் ஞானமுடன்
4.நம் உணர்வின் செயல் இன்றுள்ள கால கட்டத்தில் செல்ல வேண்டிய குறுகிய காலமிது…!

Leave a Reply