இந்தக் கலியில் ஞானம் பெறுபவன் மட்டும் எப்படித் தப்புவான்…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

stable spiritual power

இந்தக் கலியில் ஞானம் பெறுபவன் மட்டும் எப்படித் தப்புவான்…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

ஞானத்தின் வழி செல்லும் போதனை முறையையும்… தியான வழிபாட்டின் முறையையும்… மீண்டும் மீண்டும் வலியுறுத்திச் சொல்வதின் நிலை என்ன…?

இந்தப் பூமி தோன்ற இந்தப் பூமியின் ஜீவன் பெற அஜ்ஜீவனின் வளர்ச்சியினால் மனித ஆன்மாக்கள் தோன்ற…
1.இவர்கள் சொல்லும் “இயற்கைச் சக்தி…” என்றாலும்
2.இதற்கு மூல சக்தி வளர ஒரு சக்தி தேவை.

அச்சக்தி அமிலக்கூட்டு நிலை பெற்றோர்கள் நம் சப்தரிஷிகளின் செயல் வடிவம்தான் நம் பூமியும்… பூமியில் வளர்ச்சியான எல்லாமுமே…!

பல கோடி ஆண்டுகளாக எண்ணிலும் கருத்திலும் எடுத்துச் சொல்ல முடியாத மாற்றங்களின் செயல் திறனில் வழி வந்த நிலையில்
1.மனித இனம் தோன்றி மனித இன குண அமில வளர்ச்சியிலிருந்து தான்
2.மீண்டும் மீண்டும் சகல சக்திகளையும் சக்தி வழி பெறச் செயலாக்க முடியும் என்ற உண்மையின் தத்துவத்தில்…
3.தான் வடித்த வடிவான “மனித மகசூலான ஞான ஒளியைத்தான்…” நம் சப்தரிஷிகள் காணத் துடிக்கின்றனர்.

தன் செயலின் பலன் தான் மனித இனம். இந்த மனித இனம் தோன்றி வளர சப்தரிஷிகளின் செயல் காலத்தில் பல கோடி ஆண்டுகள் ஆகிவிடுகின்றன.

இவ்வினம் தோன்றி அவ்வினத்தின் ஒளியை எடுத்தால் தான் மீண்டும் மீண்டும் இவ்வின வளர்ச்சிக்கு அவர்கள் பயிர் செய்ய முடியும். செய்த மகசூலில் வரும் பயிரை எல்லாம் உணவாக உண்டு கழித்து விட்டால் மீண்டும் பயிர் செய்ய விதை நெல் தேவைப்படுகின்றது.

அவர்கள் செய்த பயிருக்கு மகசூல் பெற்று அந்த மகசூலில் மீதமான விதை நெல் இருந்தால் தான் மீண்டும் மகசூல் காண முடியும். இதன் அடிப்படையின் நிலையை ஒத்துத்தான் நம் சப்தரிஷிகளின் நிலையும் மகசூலைக் கண்டு அதிலுள்ள பலனால் மீண்டும் மீண்டும் பயிர் செய்யச் செயல் புரியும் நிலை தான் “இங்கே உணர்த்தும் நிலை…!”

இதனை ஒத்துப் பல நிலைகளில் செயல் புரிந்து வருகின்றனர் சப்தரிஷிகள்.

இந்த மனிதக் கரு தோன்றி இது நாள் வரை அவர்களின் ஒளி வட்டத்தில் கலக்கும் நிலை கொண்ட ஆன்மாக்களின் வளர்ச்சியைக் காண பல காலமாகப் பல செயல்களைப் புரிந்து வருகின்றனர். ஆனால்
1.இம்மனித ஆன்மாக்களின் எண்ண வாழ்க்கையில்
2.அவ்வொளி ஞானத்தின் சித்து நிலை பெறப்படுவது மிகவும் குறைந்தே வருகின்றது.

தன் ஞான வளர்ச்சியை உலகுக்கு உணர்த்தத்தான் அந்தந்தக் கால கட்டத்தில் அச்சப்தரிஷிகளே தோன்றி அக்கால மாற்றத்தின் சில நிலைகளைச் செயல் புரிந்து அவர்கள் நல் ஒளியின் ஆத்மாக்களை எடுத்ததின் நிலை தான் நாம் இன்று கேள்விப்படும் பல மகான்கள் தோன்றிய நிலை எல்லாம்.

அந்த மகான்கள் தோன்றியதன் நிலை எல்லாம் தான் வளர்த்த பூமியின் சக்தியிலிருந்து தன் சக்தியின் பலனைப் பெற்றால் தான்… மீண்டும் சப்தரிஷிகளுக்கு அவர்களின் செயலின் மண்டலம் தோன்றி வளர்ந்து “ஜீவனை வளர்க்க முடியும்…”

சூரியனைச் சுற்றியுள்ள நாற்பத்தியேழு மண்டலங்களில் நம் பூமியில் மட்டும் இன்று மனித ஆன்மாக்கள் வாழ முடிகின்றது. இன்று வாழும் இதே நிலை இக்கலியின் மாற்றத்தில் அழியப் பெறுவதனால் மீண்டும் மனித ஜனனம் தேவை.

காற்று மண்டலமே விஷக் கோளமாகச் சுழலும் இந்தக் கலியில் இதன் வளர்ச்சி நிலையின் மாற்றத்தின் பொழுது மனிதன் தன்னைத் தானே அறிந்து கொள்ளச் செயலாக்கியுள்ள இந்த விஷக் குண்டுகள் வெடிப்பதற்கு முதலிலேயே இம்மனிதனின் ஞானம் ஒளி பெற்றால் அச்சப்தரிஷிகளின் ஒளிக் கூட்டு அதிகப்படும்.

உலகமே விஷமாகி ஜீவராசிகள் அனைத்துமே மடியப் போகின்றன என்றால் ஞானம் பெறுபவன் மட்டும் எப்படித் தப்புவான்…?

ஒரு பானை சாதம் வடிக்கின்றோம்.
1.அப்பானையில் இட்ட அரிசி எல்லாம் வெந்து சாதமாக ஆனாலும்
2.அதில் உள்ள கல் வேகுவதில்லை அல்லவா…!

பூமியில் உற்பத்தி செய்தது தான் அந்தப் பானையும் அக்கல்லும் விறகும் கரியும் அடுப்பும் எல்லாமே…! அதனதன் வளர்ச்சி கொண்டு விறகு எரிந்து உஷ்ணத்தைக் கக்கிச் சாம்பலாகின்றது.

சுட்ட சட்டி எந்த உஷ்ணத்தை ஏற்றி அடுப்பு எரிந்தாலும் அது தாங்கி நீரை அவியாக்கி அரிசி எல்லாவற்றையும் வேக வைத்தாலும் அந்தக் கல் மட்டும் எந்த உஷ்ணமாக ஏறினாலும் அப்படியே உள்ளது.

அதைப் போன்று ஒளியின் சக்தியால் பிம்பம் கொண்ட “நாம்” அச்சக்தி பிம்பத்தின் பிம்ப ஞானம் பெற்றால் இந்தப் பூமியின் மாற்றத்தினால்
1.நீரும் நெருப்பும் விஷ வாயும் நம் ஒளியை எந்தப் பின்னமும் படுத்தாது
2.சாதத்தில் கொதித்து வந்த கல்லைப் போன்று…!

Leave a Reply