என்றோ அழிந்திருக்க வேண்டிய இந்தப் பூமியை இன்னும் காத்துக் கொண்டிருக்கும் சித்தர்களின் செயல்கள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

earth change protection

என்றோ அழிந்திருக்க வேண்டிய இந்தப் பூமியை இன்னும் காத்துக் கொண்டிருக்கும் சித்தர்களின் செயல்கள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

அன்று ஆண்ட அரசரகள் தன் நிலை குறையாமல் இருக்க இயேசு பிரானை இம்சித்தது “யூதர்கள்…” என்று பழியை அவர்கள் மேல் போட்டுத் தன் உயர்வை மங்காமல் பாதுகாத்துக் கொள்ள தங்களை மறைத்துக் கொண்டனர்.

அதே சமயத்தில் யூத சமுதாய இன மக்கள் எங்கிருந்தாலும் அவர்களை அழிக்க வேண்டும்…! என்ற வெறியில் அன்று பலரை அன்றாண்ட அரசர்கள் அந்த உடல்களை அழித்தார்கள்.

அந்த உடல்களில் ஏறிய “ஒளி அலை…!” அழித்த உடலிலிருந்து எங்கப்பா சென்றிருக்கும்…? இன்றும் யூத இனத்திலிருந்து தப்பி வந்த மக்கள் தான் இந்தியாவிலும்… ஆரிய இனங்களாகக் குடியேறி வழித் தொடர் பெற்று இன்று வரை சமுதாயச் சுழற்சியில் உள்ளனர்.

இந்த உலகினில் தொழில் நுட்ப வல்லுனர்களில் உயர் ஞானம் கொண்டவர்களில் பெரும்பான்மையோர் யூத சமுதாய இன மனிதர்கள் தாம்.

இயேசு பிரானை அன்றாண்ட அரசர்கள் அவர் சக்தி வெளிப்படாமல் இருக்க ஒரு தடங்கலை ஏற்படுத்தியிருக்கா விட்டால் இயேசுவின் ஞானத்தினாலேயே இந்த உலக மனித ஆத்மாக்களுக்கு அன்றே பல உயர்ந்த சக்திகளை இன்னும் வளர்ச்சிப்படுத்தி இருப்பார்.

இயேசு பிரான் ஏன் உடலை விட்டுச் சென்ற பிறகு வளர்ச்சி அளித்திருக்கக்கூடாது…? மகானின் சக்தியிலும் தடங்கலா…?

1.ஜீவ உடலில் இருந்து எடுக்கும் சுவாச அலையில்
2.இந்தப் பூமிக்கு வேண்டிய சக்தி அலையை ஈர்க்க
3.எண்ணத்தின் உணர்வால் எடுக்கும் சுவாசத்தில்
4.அந்த ஒளி அலை காந்தத் தன்மை ஈர்ப்பிற்கு வர வேண்டும்.

பொதுவான மண்டலம் தான் பால்வெளி மண்டலம். பல மண்டலங்களுக்கும் பால்வெளி மண்டலம் தான் சக்தி தருகின்றது. ஆனாலும்
1.ஈர்ப்பிற்கு வருவதற்கு
2.இவ்வெண்ணச் சுவாசத்தில் எடுக்கும் அலையின் காந்தத் தன்மை தான் பூமியில் பாய முடியும்.

எண்ணத்தால் வழிப்படுத்தும் செயலினால் தான் பூமிக்கு ஈர்ப்புச் சக்தியே கூடியதேயன்றி “தானாக” எதுவும் நடக்கவில்லை.

மகான்களின் சக்தி ஒளியை ஆத்மாக்களின் எண்ணத்துடன் பாய்ச்சி “அவர்கள் எடுக்கும் சுவாச அலையினால் தான்…!” பிற மண்டலங்களின் ஒளி அலையும் நமக்குக் கிட்டும்.

அன்றைய புராணக் கதைகளில் விளக்கியுள்ள சனி பகவான் கேது செவ்வாய் இப்படி ஒவ்வொரு மண்டலங்களுக்கும் உருவங்களையும் கோவைக் கதைகளையும் எதற்காக உணர்த்திச் சென்றான் நம் சித்தன்…?
1.தெரிந்தோ தெரியாமலோ கதை உருவில் காணும் உருவ ஈர்ப்பில்
2.எண்ணம் செல்லும் பொழுது அவ்வலை சக்தி பூமியில் வந்து பதிகிறது.

இயேசு பிரானின் காலத்தில் தேவலோகத்திலிருந்து தேவ தூதர்கள் நட்சத்திரங்களாக மின்னி வந்தார்கள்…! என்று எதனை உணர்த்தினார்கள்…?

இயேசு பிரான் வந்ததினால் தான் நம் பூமிக்கே பல மண்டலங்களின் ஈர்ப்பலையின் தொடர் ஏற்பட்டது. இயேசு பிரான் சில மலைகளிலிருந்து ஜெபம் செய்தார். அந்த மலைகளுக்கே சில ஒளி அலையை எடுக்கும் முறைப்படுத்திச் சென்றார்.

அவரது ஒளி அலை பாயப்பட்ட பல ஆத்மாக்கள் யூத இன சமுதாயத்தில் சித்து நிலையிலும் சூட்சும செயலிலும் அவர் இருந்த காலத்திலிருந்த மனித ஆத்மாக்களே இன்று வரையிலும் உள்ளனர்.

விஞ்ஞானத்தால் பல சாதனைகளைப்படுத்திப் பல மண்டலங்களுக்குப் பல விஷ வாயு குண்டுகளைச் செலுத்தி அதனை வெடிக்க வைக்கும் முறையெல்லாம் படுத்தி
1.குரோத உணர்வின் நாட்டுப் பற்று வெறியினாலும்
2.ஜாதி மத இன வெறியினாலும் செய்யப்படும் சூழ்ச்சிகளை எல்லாம்
3.இன்றும் மாற்றி அமைத்து வருகின்றனர் இயேசு பிரானின் வழித் தொடரின் ஆசி பெற்ற யூத இன சித்து நிலை கொண்ட சிலர்.

என்றோ அழிந்திருக்க வேண்டிய இப்பூமியை வெறியுணர்வு கொண்ட சமுதாய இன மக்களை அவர்களின் எண்ணத்தில் ஏற்படும் செயல் விளைவுகளையெல்லாம் “மாற்றிக் கொண்டு தான் இந்தச் சித்தர்கள் உள்ளார்கள்…!”

துதிக்கும் மடாலயங்களில் சிலுவையில் அறையப்பட்ட சோர்ந்த முகம் கொண்ட இயேசு பிரானைக் காணுகின்றார்கள். அந்த இயேசு பிரான் செயலாக்கும் முறையை “யாராவது உணர்கின்றார்களா…?”

Leave a Reply