இரத்தங்களைத் தூய்மையாக்கத் தியானிக்கும் பொழுது நாம் உணரக்கூடிய சில நிகழ்வுகள்

streaming-blood

இரத்தங்களைத் தூய்மையாக்கத் தியானிக்கும் பொழுது நாம் உணரக்கூடிய சில நிகழ்வுகள்

 

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தநாளங்களில் கலந்திட அருள்வாய் ஈஸ்வரா…! என்று சொல்லி ஏங்கிக் கண்ணின் நினைவினை உங்கள் இரத்தநாளங்களில் செலுத்தித் தியானியுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்கள் முழுவதும் படர அருள்வாய் ஈஸ்வரா என்று இரத்த நாளங்களில் உள்ள ஜீவ அணுக்களும் ஜீவ ஆன்மாக்களும் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

ஏனென்றால் நாம் நுகர்ந்தது ஜீவ அணுவாக இரத்தத்தில் உருவாகின்றது. ஜீவான்மா என்பது இன்னொரு மனிதன் மேல் நாம் பிரியப்பட்டு இருந்தால் அவர் இறந்த பின் அந்த ஆன்மா நம் உடலுக்குள் வந்தால் நம் இரத்தத்தில் தான் தங்கியிருக்கும்.

ஏனென்றால் நண்பனை உற்றுப் பார்த்து பாசத்துடன் பழகியிருந்தால் அவன் இறக்கும் போது கேள்விப்பட்டதும் “நண்பா போய்விட்டாயா…!” என்று ஏக்கத்துடன் கண்ணால் நுகரப்படும் பொழுது அந்த ஆன்மா நம் இரத்தத்தில் தான் வந்து குடிகொள்ளும்.

அந்த இரத்தத்தின் மூலமாக உணவை எடுத்துத் தான் அது அந்த அணுவாக வளரும். அந்த ஜீவான்மா நம் உயிர் பாகம் செல்லும் போது அதனுடைய உணர்ச்சிகளை உந்தி அது உணவாக எடுத்துக் கொள்ளும். நமக்குத் தீமையை விளைவிக்கும்.

1.ஆக அதன் உணர்வுகளைத் தான் அது செயல்படுத்த முற்படும்.
2.அதை மாற்ற அந்த ஆன்மாவால் முடியாது.

ஆகையினால் அத்தகைய ஆன்மாக்களால் முடியாததை நம் இரத்தங்களில் ஜீவான்மாக்கள் எது இருந்தாலும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் அது பெறவேண்டும் என்று நாம் தியானிக்க வேண்டும்.

இப்படித் தியானித்துத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்க்கப்படும் பொழுது அந்த ஜீவான்மாக்கள் ஒளியின் உணர்வாகப் பெறும். நல்ல ஜீவ ஆன்மாவாக நாம் ஆக்க முடியும்.

அதே சமயத்தில் ஜீவ அணுக்கள் என்றால் சலிப்பு சஞ்சலம் சங்கடம் கோபம் குரோதம் போன்ற உணர்வுகளை எடுக்கும் பொழுது அது எல்லாம் ஜீவ அணுக்களாகத்தான் நம் இரத்தங்களில் உருவாகின்றது.

உதாரணமாக ஒரு பட்டாம்பூச்சி ஒரு பூவிலே தன் முட்டையை இட்டால் அந்தப் பூவின் உணர்வை நுகர்ந்து அந்தப் பூவின் நிறத்திற்குத் தக்க பட்டாம்பூச்சியாக மாறி அதன் கலரிலே வருகின்றது.

அதைப் போல் நாம் சந்தர்ப்பத்தால் எடுக்கும் உணர்வுகள் அனைத்தும் நம் இரத்தத்தில் கலக்கப்படும் பொழுது அது கருத்தன்மையாகி முட்டையாகின்றது. மீண்டும் அதற்கு வளர்ச்சி கொடுத்தால் விளைந்து விடுகிறது.

இதைப் போல மற்ற வேதனைப்பட்டோரின் உணர்வுகளை நமக்குள் கவர்ந்து இருந்தாலும்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நம் இரத்தங்களில் சேர்த்து
2.அருள் ஒளி என்ற உணர்வாக ஊட்டி
3.ஒளியின் அறிவாக இயக்கும் அந்த உணர்வை நாம் கண்ணால் செலுத்தப்படும் பொழுது இரத்தத்தில் நல்ல கருவாக மாறும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் இரத்த நாளங்களில் உள்ள ஜீவ அணுக்களும் ஜீவ ஆன்மாக்களும் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

1.மிகச் சக்தி வாய்ந்த துருவ நட்சதிரத்தின் உணர்வுகளை உங்கள் இரத்தத்தில் கலக்கப்படும் பொழுது
2.உங்கள் உடலுக்குள் ஒரு மின்சாரம் பாய்வது போன்று உணர்ச்சிகள் வரும்.
3.அப்பொழுது அந்த மகிழ்ச்சி ஊட்டும் உணர்வுகள் உங்களுக்குள் வரும்.
4.சிலருக்கு அந்தத் தீமை என்று உணர்வுகள் இரத்தத்திலே இருந்தால் அது அடங்கப்படும் பொழுது அது கொஞ்சம் சோர்வடையும்.

தியானிக்கும் பொழுது இதை உணர முடியும்.

எண்ணம் போல் வாழ்வு என்பது பற்றியும்… ஒரே நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் சித்தர்கள் பற்றியும்… ஈஸ்வரபட்டர் சொன்னது

Lord ewara meditation

எண்ணம் போல் வாழ்வு என்பது பற்றியும்… ஒரே நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் சித்தர்கள் பற்றியும்… ஈஸ்வரபட்டர் சொன்னது

 

1.நம் எண்ணத்தில் பல நினைவுகளைச் சிதறடித்துக் கொண்டு நாம் சுவாசம் எடுக்கும் பொழுது
2.அந்நிலை தான் நம் எண்ணத்தையும் சுவாசத்தையும் ஒருநிலைப்படுத்தி
3.பல அணுக்களின் உந்துதலுக்கு நாம் ஆளாகி
4.மீண்டும் மீண்டும் பல பல எண்ணங்களை எண்ணியே
5.நம் சுவாச நிலையைக் கெடுத்துக் கொள்கின்றோம்.

நாம் எந்த நிலையில்… எந்த நினைவில் இருக்கின்றோமோ… அந்நிலையில் எண்ணும் எண்ணத்தை வைத்து நாம் சுவாசம் எடுக்கும் பொழுது “அந்நிலையேதான்…” வாழ் நாட்களில் நம்முடன் கூடவே வருகின்றது.

1.அவ்வாண்டவனை நினைத்துச் சுவாசம் விடும் பொழுது
2.அந்தச் சுவாச நிலை கொண்டு நம் உயிரணுவிற்குப் பெரும் உன்னத நிலை கிட்டுகின்றது.

ஆனால் அந்நிலையை நாம் புரிந்திடாமல்…
1.நம் வாழ்க்கையையே
2.நாம் நம்மையையே நாம் அடிமையாக்கிக் கொள்கின்றோம்.
3.அசுத்த சுவாச நிலை என்பதன் பொருளும் இது தான்.

நம் எண்ணத்தைக் கொண்டு தான் நம் சுவாச நிலையில் பலவித நறுமணங்கள் பெற முடிகிறது. நல்ல மணமுடைய சுவாச நிலையில் உள்ள பொழுது நம் உயிர் நிலைக்குப் பெரும் ஊட்டம் கிடைக்கின்றது.

நாம் வாழ்வதுவும் மடிவதுவும் நம் எண்ணத்தைக் கொண்டு தான்…!

இந்நிலையைப் புரிந்து கொண்டு இந்நிலையில் இருந்து தான் பல கோடிச் சித்தர்கள் இன்றும் வாழ்கிறார்கள்.

1.வாழும் வாழ்க்கையில் நிறைவு பெற்று வாழும் பொழுது
2.அச்சித்தர்களின் நிலையைப் போல இந்த மனித உடலைப் பெற்ற நாம் எல்லோருமே பல கோடி ஆண்டுகள் வாழ்ந்திடலாம்.
3.உயிர் என்னும் ஆத்மாவிற்குப் பெரும் நிலையைத் தேடிடலாம்.