சக்தி இருக்கிறதா…? என்று கேட்டவுடன் ரோசப்பட்டு எதையாவது செய்ய முடியுமா…?

praise and disgrace

சக்தி இருக்கிறதா..? என்று கேட்டவுடன் ரோசப்பட்டு எதையாவது செய்ய முடியுமா…?

 

அந்தக் காலத்தில் தன்னுடன் வாழ்ந்த சகாகக்களின் நோயை நீக்கப் பல பச்சிலைகளையும் மூலிகைகளையும் தாவரங்களின் விழுதுகளையும் அகஸ்தியமாமகரிஷி கண்டுணர்ந்து அதை வைத்து நோய்களை நீக்கியுள்ளார்.

அன்றைக்கும் கேன்ஸர் நோய் வந்துள்ளது. அந்தக் கேன்ஸருக்கு நேரடியாக விழுதைக் கொடுத்தவுடன் அல்லது கட்டி இருக்கும் இடத்தில் அந்தத் திரவத்தை வைத்தவுடனே சர்ர்ர்ர்… என்று கரைத்துக் கொண்டு போகும். விஷ நீர்களை எடுத்து விட்டு அந்தக் கேன்சரைக் குறைக்கும்.

அதே மாதிரி இன்னொரு பச்சிலை இருக்கிறது. இப்பொழுது எப்படி கத்தியை வைத்து அறுவை சிகிச்சை செய்து பின்பு அதை எப்படி மூடுகிறார்களோ பச்சிலையை அரைத்துத் தேய்த்தால் அந்தத் தோல் அப்படியே மூடிவிடும். அக்காலத்தில் செய்த வைத்திய முறை.

இது எல்லாம் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரால் எமக்கு (ஞானகுரு) உணர்த்தப்பட்ட நிலைகள்.

ஒரு சமயம் நான் சுற்றுப் பயணம் செய்யும் பொழுது இது நடந்த நிகழ்ச்சி. ஒருவருக்குக் காலில் ஆணி இருந்தது. அவரால் நடக்க முடியவில்லை. அந்தக் காலில் உள்ள ஆணியை எடுப்பதற்காக வேண்டி “காலை நீட்டுங்கள்…!” என்றார்கள்.

அந்தப் பச்சிலையை வைத்துத் தேய்க்கிறார்கள். தேய்த்தவுடன் அந்த ஆணி அப்படியே ஆழமாக இருப்பதை எடுக்கிறார். அந்த வலி தெரியவில்லை. இப்பொழுது நடங்கள் பார்க்கலாம்… என்கிறார். ஆணியை எடுத்தவுடனே அவர் தாங்கித் தாங்கி நடக்க ஆரம்பித்தார்.

அப்பொழுது நான் சொன்னேன் வலியை மறக்கச் செய்து எடுக்கின்றீர்கள். இன்னும் கொஞ்ச நேரம் போனால் அவருக்குக் கடுமையான வலி வரும். வலி வந்தது என்றால் தாங்க முடியாது என்று சொன்னேன்.

கேட்டு விட்டு அப்படியே போய் விட்டார். ஏனென்றால் ஆணியை எடுக்க இவர் பணம் குறைவாக வாங்கினார்.

எழுந்திரிக்க முடியாதவர் நல்லதாக ஆனவுடன் இவன் சொன்னதைக் கேட்டு அவர் ஒரு கொலையைச் செய்கிறார். அந்த மாதிரி ஆனவுடன்… “பிறரைக் கொல்வதற்கு நீ வருவாய்…!” என்றேன்.

அவனை அறியாமலேயே இவனுக்குள் செய்கிறான் அவனைக் கொல்லவும் செய்கிறான் இவன் உடலில் உள்ள நல்ல அணுக்களைக் கொல்லவும் செய்கின்றான்.

ஆக இவனால் விளைந்த உணர்வுகள் அணுக்களாக மாற்றப்படும் போது எத்தனை பேர் உடலுக்குள் இது உருவாகிறது…? இந்த உணர்வுகள் எல்லாம் இங்கே மனிதனுக்குள் படர்கிறது. “இதை நீ கரைப்பது எப்பொழுது…?” என்று கேட்டேன்…!

ஏனென்றால் சித்தான புதிதில் முதலில் இதெல்லாம் யாம் (ஞானகுரு) செய்தோம். அதிலே எத்தனை பேர் இங்கே வந்திருக்கிறார்கள்…? தனக்கு நன்றாகி விட்டால் அதற்கு அப்புறம் எங்கேயோ போகிறார்கள்…? யாம் சொல்லும் அருள் வழியைச் சிந்தித்துப் பார்ப்போர் இல்லை.

ஆக மேலே சொன்ன மாதிரி எத்தனையோ எதிர்பார்ப்பிலே வருகின்றார்கள். யாம் உபதேசிக்கும் அருள் ஞானிகளின் அருள் உணர்வை எடுத்து வளர்த்துக் கொண்டால் எல்லாவற்றையுமே நல்லதாக ஆக்கிக் கொள்ளலாம்.

ஆனால் அவர்கள் எண்ணியபடி நல்லதாக ஆகவில்லை என்றால் என்ன செய்கிறார்கள்…? வேறு ஒருவரைப் பார்க்கலாம்…! கடைசியில் இந்தச் சாமிக்கு சக்தி இல்லை…! என்று சொல்லிவிட்டுப் போகிறார்கள்.

ஆக இவர்கள் தவறு செய்து கொண்டே இருப்பார்கள். அதற்கெல்லாம் நான் உடந்தையாக இருந்து கொண்டே இருக்க வேண்டும்….! அது எப்படி என்னால் (ஞானகுரு) முடியும்…?

1.உங்களுக்குள் ஒரு தவறாகிறது….
2.அந்தத் தீமைகளிலிருந்து அருள் சக்தியை எடுத்து மாற்றிக் கொள்ளுங்கள்…! என்று நாம் விவரமாகச் சொல்கிறோம்
3.நீங்கள் முயற்சி செய்ய வேண்டும் அல்லவா..!

அதைச் செய்யவில்லை என்றால் மற்றவர்கள் தவறு செய்வதற்கு மறைமுகமாக யாம் ஒரு பெரிய குற்றவாளி ஆகிக் கொண்டே இருக்க வேண்டும்.

1.உங்கள் குற்றத்தை இயக்கும் நிலைகளிலிருந்து மீட்டிட மறைமுகமாக அந்த உணர்வுகளைச் செலுத்துவது நல்லதா…?
2.என் புகழுக்காக வேண்டி… ஆகா கடவுள் நீயே தான்…! என்று நீங்கள் என்னைப் போற்றித் துதித்ததும் உடனே உங்களை நான் உயர்த்துவதா..?
3.ஏனென்றால் என்னை நீங்கள் போற்றினீர்கள் என்றால் அந்தப் போற்றுதலின் மறைவில் என்ன ஆகிறது…?
4.உங்களையும் கெடுக்கின்றேன்… நானும் கெட்டேன்… அடுத்தவர்களையும் கெடுக்கச் செய்யும்
5.ஞானிகள்… மகரிஷிகள்… கொடுக்கும் சக்தியை எப்படி விரயமாக்குவது…?

சிலர் நினைக்கலாம் இந்தச் சாமி என்ன என்று..?
1.நீங்கள் சாமிக்கு என்ன பெரிய சக்தி இருக்கிறது…? என்று கேட்டவுடன்
2.நான் ரோசப்பட்டு ஏதாவது செய்வதா…?

இயற்கையின் உண்மை நிலைகளை உணர்த்தி அந்த உணர்வால் தான் எத்தகைய நிலையாக இருந்தாலும் மாற்றப் படவேண்டும். குருநாதர் காட்டிய வழியில் அதைத் தான் இன்றும் யாம் செய்து கொண்டிருக்கின்றோம்.

மெய் ஞானிகளின் ஞான வித்துக்களை உங்களுக்குள் அழுத்தம் திருத்தமாகப் பதிவாக்குகின்றோம். அதை நீங்கள் உங்களுக்குள் ஆழமாகப் பதிவாக்கிக் கொண்டு மீண்டும் அதை நினைவுக்குக் கொண்டு வந்து அதை வளர்த்தால் உங்களை அது மெய் ஞானியாக நிச்சயம் உயர்த்தும்…!

நம்முடைய குணாதிசயங்களுக்கு மூல காரணம் எது..? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

palani hill muruga

நம்முடைய குணாதிசயங்களுக்கு மூல காரணம் எது..? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

பிறவி எடுத்து நம் பிறவியில் நமக்கு வரும் குணாதிசயங்கள் எல்லாம் ஜாதகத்திலும் ஜோதிடத்திலும் சொல்வதைப் போல்
1.நாம் பிறக்கும் நாளைக் கொண்டோ
2.பிறந்த நட்சத்திரத்தைக் கொண்டோ வருவதல்ல அந்தக் குண நிலைகள் எல்லாம்…!

இந்தக் குண நிலைகளின் உண்மை நிலை ஒவ்வொரு மனிதனுக்கும் வருவது அவன் முதல் பிறவியில் செய்ததின் தொடர்ச்சி தான்… இந்தப் பிறப்பில் நாம் சாந்தமாக உள்ளதும் கோப நிலையில் உள்ளதும் மற்ற எல்லாமே.

வாழ்க்கையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு குண நிலையில் வாழ்கின்றோம். எல்லோரும் ஒன்றாக நினைப்பது அவ்வாண்டவனின் சக்தி ஒன்றைத்தான்.

குண நிலையில் பல மாற்றங்கள் இருந்தாலும் அவ்வாண்டவனின் சக்தியை ஒரே நிலையில் எப்படி வணங்குகின்றோமோ அந்நிலையிலேயே எல்லோரும் வாழ்ந்திடலாம்.

1.ஒருவர் கோபக்காரராக இருந்தால் அந்தக் கோப நிலை முதல் ஜென்மத்தின் தொடர்ச்சி தான்.
2.சாந்தமுள்ளவராக இருப்பதும் முன் ஜென்மத்தின் எண்ணத்தை வைத்துத்தான் அமைகிறது.

முன் ஜென்மத்தின் தொடரிலேயே இப்பொழுது பிறவிக்கு வந்தாலும் இந்த ஜென்மத்தில் நாம் வாழும் வாழ் நாட்களை வீண் விரயமாக்கிடாமல் வாழ வேண்டும்.

அந்த வினைப்பயன்கள் எல்லாம்
1.நாம் பிறந்த நேரம்…
2.நாம் செய்த பாவ புண்ணியங்கள்… என்று தன்னைத் தானே தாழ்த்திக் கொள்ளாதீர்கள்.

இப்பொழுது வாழ்ந்திடும் வாழ் நாட்களில் நம் எண்ணத்திலும்… நம் சுவாசத்திலும் அந்த மகரிஷிகள் ஞானிகளின் அருள் சக்திகளை எடுத்து வாழ்ந்து சுவாசத்தைச் சீராக்கி அருள் மணங்களை நம் சுவாச நிலைக்குக் கொண்டு வந்து வாழ்ந்திட வேண்டும்.

இந்தப் பிறவியில் இதை அதிகமாக வளர்க்கும் பொழுது நம்முடைய நாளைய சரீரம் அது ஒளியின் சரீரமாக அமையும்.