நாம் ஏன் ஆத்ம சுத்தி செய்ய வேண்டும்…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Pranayamam - soul cleaning

நாம் ஏன் ஆத்ம சுத்தி செய்ய வேண்டும்…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

அறுசுவை உணவுகள் உண்டிடும் காலத்தே உட்கொள்ளும் பொருள்களின் சுவைகள் அது காரமோ… புளிப்போ… உவர்ப்போ.. இனிப்போ.. துவர்ப்போ.. கையிப்போ..! எந்தச் சுவை ஆகினும் அந்தச் சுவைகளின் குணங்களின் கன பரிமாண அடர்வின் தொகுப்பில் திகட்டல் ஏற்பட்டால் என்ன செய்கிறோம்..?

உடனே நீரைத் தான் தேடிச் சென்று குடிக்கின்றோம். நீரை உட்கொண்டு அந்தச் சுவைகளைச் சமன்படுத்துதல் போல் ஜீவ காந்த சரீரம் கொண்டிடும் உணர்வில் கனமான சுவாச அலைகளை நீக்கிட என்ன செய்ய வேண்டும்…?

1.அந்தச் சுவைகளுக்கெல்லாம் வீரியமான உயர்வெண்ண மின் காந்த அலைகளை
2.மகரிஷிகளை எண்ணி ஈர்த்திடும் செயலில்
3.நம் சுவாச ஓட்டம் அமைதி கொண்டு நம்முடைய உணர்வின் குணங்களும் சமன் கொள்ளும்
4.நம் சுவாசமும் நாடியும் சீராகும்.

சுலபமாகப் பெற்று உயர்ந்திடும் இந்தத் தியானத்தின் வழியில் செயல்படுத்தும் “மனத்தின் திறன்” என்பதெல்லாம் அவரவர்களின் எண்ணத்திற்கொப்பத்தான் கொள்ள முடிந்திடும்.

தான் கைக்கொள்ளும் ஒவ்வொரு செயலிலும்… காரியமாற்றும் நிலையிலும்…
1.தன் ஆத்ம உயர்வுக்காக வேண்டி
2.எண்ணிச் சுவாசித்திடும் பக்குவம் தானப்பா ஆத்ம சுத்தி என்பது.

சரீர வாழ்க்கையில் சுவாச ஓட்டத்தின் செயலில் மனிதன் ஒவ்வொரு நிமிடத்திலும் எடுக்கும் உணர்வுகளின் வீரியத்தால் நமக்குள் மாற்றம் கொள்ளச் செய்யும் செயல்களாக பயம்… கோபம்… மோகம்… ஆவேசம்… ஆத்திரம்… பழி…. ஆகிய இந்தக் குணங்களின் மோதல்களால் முதலில் பாதிக்கப்படுவது சரீரம் தானப்பா…!

அது எப்படி என்றால்…
1.சுவாச ஓட்டங்கள் நாடிகளின் வழியாக ஓடிச் செயல்படும் செயலில்
2.சிறுகச் சிறுகக் கூட்டிக் கொள்ளும் அந்த உணர்வுகளின் வலுவினால்
3.இரத்த நாளங்கள் குழைவு கொண்டு
4.நரம்பு ஓட்டங்களில் தளர்வு பெற்று
5.எலும்புகளின் ஊண் ஒளி குறைவுபட்டுத் தளர்வுறும்.

பக்குவமாக அந்தக் குணங்களை விலக்கிக் கொண்டு நல் நிலை பெறுவதற்கே இந்த ஆத்ம சுத்தி என்ற ஆயுதமப்பா…! அதனால் சரீர சுத்தியும் கிடைக்குமப்பா…!

கேன்சர் நோயை நீக்கும் இயற்கை வழி

turmeric and neem medicine

கேன்சர் நோயை நீக்கும் இயற்கை வழி

நாம் நல்ல நிலையில் இருக்கின்றோம். நல்ல உணவைத்தான் உட்கொள்கின்றோம். ஆனாலும் ஒரு மனிதன் வேதனைப்படுகின்றான் என்ற உணர்வை உற்றுப் பார்த்து அடிக்கடி அவன் உணர்வை எடுத்தால் அது விஷமான அணுக்களை நம் உடலுக்குள் உருவாக்கும் நிலை வந்து விடுகின்றது.

நமக்குள் இருக்கும் எலும்புகள் மேக்னட் (காந்த சக்தி கொண்டது). அதே சமயத்தில் எலும்புக்குள் இருப்பது ஊண். வேதனைப்படுவோரைப் பார்க்கும் பொழுது
1.நம் கண்ணில் உள்ள கரு விழி
2.எலும்புக்குள் உள்ள ஊணில் முதலில் அதைப் பதிவாக்கி விடுகின்றது.

ஆக அந்த வேதனப்படும் உணர்வை நம் ஆன்மாவாக (நம்முடைய ஈர்ப்பு வட்டம்) மாற்றுகின்றது. அதிலிருந்து நாம் இழுத்துச் சுவாசித்த உடனே இந்த உணர்வை எலும்பில் ஒட்ட வைக்கின்றது.

வேதனை உணர்வு எங்கே எப்படி அணுவாக ஆனதோ நமக்குள் உருவாக்கி மனித உடலில் எலும்பை உருவாக்கியது அல்லவா… அதை அது சாப்பிடத் தொடங்கும். அதாவது அந்த அசைவத்தை அது சாப்பிடும்.

ஏனென்றால் அது வளரும் தன்மை வளர்ச்சி பெற்றது. எலும்பை உருவாக்கிய அணுக்கள் அது மடிகிறது. அப்பொழுது எலும்புகள் எல்லாம் வளர்ச்சி குன்றத் தொடங்கும். அதை டி.பி. என்று சொல்கிறோம்.

அதை மாற்ற மருத்துவத்தில் என்ன செய்கிறார்கள்…?
1.விஞ்ஞான அறிவு கொண்டு கிருமிப் போர் என்ற நிலையில் மருந்தை இஞ்செக்சன் (INJECTION) செய்கிறார்கள்.
2.எதிர்மறையான அணுக்களை உடலுக்குள் உருவாக்குகின்றார்கள்.
3.அந்த உருவை உருவாக்கப்படும் பொழுது அது டி.பி. அணுக்களை உணவாக உட்கொண்டாலும்
4.அதிகமாகச் சாப்பாடு கொடுத்து நல்ல அணுக்களை உருவாக்கி
5.டி.பி. அணுக்களைக் கொன்று டி,பி. நோயையும் இன்று சுலபத்தில் குணப்படுத்துகின்றார்கள்.

ஆனால் கேன்சர் நோய் வந்தது என்றால் அதை மாற்றுவது அவ்வளவு சுலபமானது அல்ல…! வேதனை… வேதனை… என்ற உணர்வு ஆன பின் நம் உடலில் விஷத் தன்மையான அணுக்களின் பெருக்கமாகின்றது.

இந்த விஷமான அணுக்களானால் மரத்தில் விழுதுகள் பாய்ச்சுவது போல் கேன்சரை உருவாக்கும் அந்த அணு உடல் முழுவதும் அதனின் விழுதுகளைப் பாய்ச்சும்.
1.மற்ற நல்ல அணுக்களை இயக்கும் விஷத் தன்மைகளை எல்லாம் அது எடுத்துக் கொண்டு ஒரு பக்கம் குவியும்.
2.கேன்சர் அணுக்களைக் கொல்வதற்கு மருந்து கொடுத்தாலும் கூட நல்ல அணுக்களும் மடிந்திடும்.
3.ஆகவே கேன்சருக்கு மருந்து கொடுத்து அதைக் கொல்வது என்பது முடியாது.

அதனால் தான் விஞ்ஞான அறிவில் என்ன செய்கிறார்கள்…? கேன்சர் உருவான அந்தப் பாகத்தில் எலெக்ட்ரிக் (மின்சாரத்தை) வைத்துக் கருக்குகின்றார்கள்.

கருக்கினாலும் கூட அது நொந்து போனால் அழுகிய உணர்வு கொண்ட அணுக்கள் டி.பி. போன்று உருவாகும். மீண்டும் நல்ல அணுக்களை உணவாக உட்கொள்ளும் நிலைகள் வரும். அந்தப் பாகம் அவஸ்தைப்பட்டது தான் மிச்சம்.

ஆக கேன்சர் நோயை நீக்க முடிகின்றதா…? என்றால் இல்லை.

ஆனால் அதை தியானத்தால் நாம் போக்க முடியும். எப்படி…?
1.மஞ்சள் விஷத் தன்மையை அடக்கக்கூடியது.
2.வேப்பிலையையும் மஞ்சளையும் இரண்டையும் சமமாக வைத்து அரைத்துத் தண்ணீர் போல் கரைத்துக் கொடுக்க வேண்டும்.

கேன்சர் என்று தெரிந்து விட்டாலே துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா…! அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவான்மாக்கள் அனைத்தும் பெறவேண்டும் ஈஸ்வரா..! என்று ஒரு நாளைக்கு ஐம்பது முறையாவது எண்ணி வலுவாகத் தியானிக்க வேண்டும்.

தியானித்த பின் மனைவியும் இதே உணர்வை எடுத்து
1.“என் கணவனுக்கு உடல் நலம் சரியாக வேண்டும்” என்று எண்ணத்தில்
2.அந்த மருந்தைக் (மஞ்சள் வேப்பிலை) கொடுத்தால் இந்தக் கேன்சர் நோயை நீக்க முடியும்.

உங்களுக்குள் அந்தச் சக்தி இருக்கின்றது. இந்த முறைப்படி தியானம் எடுத்துக் கொண்டவர்கள் உங்கள் எண்ணத்தினால் கேன்சர் நோயைப் போக்க முடியும்