“நீலவண்ண உயிராத்மாவாக…” எப்படி ஆகவேண்டும்…?

om vinayakar

“நீலவண்ண உயிராத்மாவாக…” எப்படி ஆகவேண்டும் 

 

“மெய்யை மெய்யால் உணர்தலும் ஒன்று…
அறிவை அறிவால் அறிதலே நன்று…!
1.கோடாயுதம் கொண்டு மத்தகத்தால் தகர்க்கப்பட
2.மேலாம் அறிவு சித்தித்தது…! என்பது மெய்ப் பொருள் காணும் நிலை.

வழிவழியாக வந்த இந்தத் தத்துவங்கள் அனைத்தும் “குருவால் உபதேசிக்கப்பட வேண்டும்…!” என்று மறைபொருள் ஆக்கப்பட்டுவிட்டது. குரு என்பவன் மெய்ப் பொருளின் உண்மையை நாடிக் கோபம் சுடு சொல் தவிர்த்து மெய் ஞானம் உரைத்தலே நன்று.

ஆனால்
1.இனிய சொல்லால் வார்த்தைகள் ஆடி (ஏமாற்றும் நிலை)
2.நிலையற்ற பொருள் செல்வத்தை அடைவதிலும் அல்லது அதை அளிப்பதற்கும்
3.தான் ஒரு கருவியாகச் செயல்படும் எண்ணத்தையும் தவிர்த்திடல் வேண்டும்.

ஆக தான் பெற வேண்டியதைப் பெற்றே உயர்த்திடும் வழியாகப் பேரருள் செல்வத்தைப் பெற்றிடவே பூமியின் ஈர்ப்புப் பிடிப்பில் சிக்குண்டுவிடும் எண்ணச் செயல்களை எல்லாம் களைந்திடல் வேண்டும்.

குரு என்பவன் மெய்ப் பொருளை வாய்மையால் உபதேசிக்கும் நிலையில் நின்று அறிவின் அமைதிக்கு வழி காட்டிட வேண்டுமப்பா…!

ஆனால் இன்றைய குருமார்கள் செல்வத்தைத் தேடிக் கொண்டிருக்கின்றனர். எந்தச் செல்வத்தைக் கண்டுபிடிக்கப் போகின்றார்கள்…?

வாழ்க்கை நிலையில் அருள் செல்வம் பெற்று உயர் நிலை பெறவேண்டியவன்…
1.செல்வச் செழிப்பை எண்ணத்தில் கொண்டு…
2.அதி ஆசைக்குத் தன்னையே அடகு வைத்து…
3.உயர் ஞானத்தால் ஆத்ம பலம் பெற்றிட வழிகாட்ட வந்த உபதேசியின் (குரு) நிலை எல்லாம்
4.குறி சொல்பவனின் நிலை ஆகிவிட்டது…!

அந்த நிலை நமக்கு வேண்டாம். “நான் தான்…!” என்ற நிலையே உயர் ஞான வளர்ப்பிற்குத் தடைக்கல் ஆகிவிடும்.

அறிவை அறிவால் அறிவது என்பதே தத்துவப் பொருள் காட்டப்பட்ட உண்மையின் சாரங்களைக் கைக் கொள்ள வேண்டும் என்பதே.

ஆகாரத்தை நாம் உண்ணும் நிலையில்… உண்ணும் ஆகாரங்களின் சுவை குணம் மணத்திற்கொப்ப கண்களால் பார்த்து எடுக்கும் சுவாசத்தின் எண்ணத்தால் ஜீரணத்தின் செயல்பாடு தொடங்கினாலும் “வாயின் கடைவாய்ப் பகுதியில் நடைபெறும் ஓர் சூட்சமம் உள்ளது…!”

ஓ…ம் என்ற வடிவத்தின் நாதமாக ஆகாயவெளி உயிரணுக்களின் கலப்பால் அந்த ஓங்கார நாதத்தையே ஒலி கொண்டு ஒளியாக்கும் தொடருக்கு வருதல் வேண்டும்.

மனிதச் சரீர அமைப்பில் சிரசையே ஓ…ம் என்ற வடிவமாகக் கண்ணுற்றுப் பார்க்கலாம். சிரசின் கீழ் தாடைப் பகுதி அசைவதிலும் ஓர் சூட்சமதைக் கண்டு கொண்டு வான இயல் தத்துவத்தையே எண்ணத்தால் உணர்ந்து தெளிந்தவர்கள் மெய் ஞானிகள்.

சிவசக்தியின் அணுக்கள் கலந்திடும் செயலில் கண்டப்பகுதியை (தொண்டை) ஆகாயம் என்றும் அங்கு கலந்திடும் அணுக்களுக்கு “{மஹேஸ்வரன் – லலிதை” என்று சூட்சமப்படுத்திக் காட்டினார்கள் ஞானிகள்.

அதாவது உணவாக உட்கொள்ளும் ஆகாரத்தையே அமில மூலங்களாக” மாற்றி… “பஞ்சேந்திரியங்கள் வழியாகச் செயல்படுத்திடும் நாடிகள் சரீரத்தின் கதியை இயக்குகிறது.

நாம் வழி காட்டிடும் தியானத்தின் தொடரில் உணர்வு (உணர்ச்சிகளாக) கொண்டு எடுத்திடும் ஒளிகாந்த சக்தியின் வீரியம் கொண்டு சரீரத்தில் சக்தியை ஈர்த்துப் பெற்று அதை விளைய வைத்து “நீல வண்ண ஒளி ஆத்மாவாக” ஒவ்வொருவரும் ஆக்கம் பெற வேண்டும்.

1.உடலுக்குள் பரப்பும் சக்திகள் அனைத்தும் மேலான அறிவெண்ணம் கொண்டு
2.உணர்வின் எண்ணத்தால் எடுக்கும் தியானமாக ஒன்று குவிக்கப்பட்டு
3.நீல வண்ண ஆத்மாவாக்கிடும் செயலுக்கு – “உந்திடும் விசைத் தன்மையாக”
4.கீழ் தாடைப் பகுதியினுள் அமைவு காட்டப்பட்ட மறை பொருளைத் தெளிவாக்கிவிட்டால்
5.அங்கு செயல்படும் உண்மை தெளிவுறும்…! (நீலகண்டா…! என்று கழுத்தளவில் நிறுத்தி விஷத்தையே ஆக்கச் சக்தியாக மாற்றிடும் பக்குவ நிலை கிடைக்கும்)

Leave a Reply