அறிவால் அறிந்து செயல்படும் தன்மைக்கும் ஒளியாக மாறிய பின் செயல்படும் தன்மைக்கும் உண்டான வித்தியாசம்

annamalai girivalam.jpg

அறிவால் அறிந்து செயல்படும் தன்மைக்கும் ஒளியாக மாறிய பின் செயல்படும் தன்மைக்கும் உண்டான வித்தியாசம்

நாம் சுவாசித்த உணர்வின்படி நமக்குள் வெறுப்போ சலிப்போ இதற்கு முன் உடலுக்குள் நுழைந்த அந்த உணர்வுகளின் தன்மையால் நோயாக உருவாக்கப்பட்டு அதனால் வேதனைப்படுகின்றோம்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று அந்த அருள் உணர்வுகளை நம் உடலுக்குள் வலுவாக்கும் போது அந்த நோயையும் அதனால் வரும் வேதனையின் வளர்ச்சியையும் குறைக்கலாம்.. வளராது தடுக்கலாம்….!

நோய்க்குக் காரணமான அந்த ஊழ்வினை என்ற வித்துக்கள் உடலுக்குள் அதிகமாக இருக்கும் போது
1.அது தன் இனத்தை விருத்தி செய்யாதபடி அருள் என்ற உணர்வை நமக்குள் சேர்த்து
2.இருளை உருவாக்கும் உணர்வினை மாற்றித் தெளிந்த மனதை நாம் உருவாக்க முடியும்.

வாழ்க்கையில் மனக் கவலையோ மனச் சோர்வோ மற்ற நிலைகளோ நமக்குள் தோன்றும் போதெல்லாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளையும் பேரொளியையும் எடுத்துக் கொண்டால் அந்தத் தீமைகள் வளராது தடுக்கப்படுகிறது.

நாம் நுகராது விட்ட அந்தத் தீமையான உணர்வுகளை எல்லாம் சூரியன் கவர்ந்து சென்று விடும். நம் ஈர்ப்பிலிருந்து விலக்கிச் சென்றுவிடும். நம் ஆன்மா சுத்தமாகும். அப்பொழுது நமக்குள் இருக்கும் தீமையான உணர்வுகளுக்கு உணவு கிடைக்காது தடைப்படும்.

இவ்வாறு நமது வாழ்கையில் தொடர்ந்து இப்பணிகளைச் செய்தல் வேண்டும்.
1.இந்த உடலை விட்டுச் செல்லும் வரையிலும்
2.அருள் ஒளி என்ற உணர்வினை நாம் எடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.

ஏனென்றால் எப்படி இருந்தாலும் இந்த உடலை விட்டு எப்படியும் இந்த உயிர் சென்றே தான் ஆகும். ஆனால் எதன் உணர்வின் தன்மையை முடிவாகத் தனக்குள் வளர்த்து கொண்டதோ அதற்குத்தக்க உணர்வு கொண்ட அடுத்த உடலை எடுக்கும்.
1.ஆகவே ஒளி என்ற உணர்வின் தன்மை நாம் எடுக்கும் போது
2.ஒளி என்ற உடலினை உருவாக்குகிறது.

இருள் சூழ்ந்த ஒரு உடலுக்குள் (மனிதனுக்குள்) அறிவு என்ற நிலைகளில் இருந்தாலும் உடலினின்றே இயக்குகின்றது. அறிந்துணர்ந்து செயல்படும் தன்மை தான் இது.

ஆனால் ஒளியாக வாழும் சப்தரிஷி மண்டலத்தில் அங்கே அப்படி அல்ல.
1.அது அனைத்து உணர்வினையும் ஒளியாக மாற்றும் நிலை பெற்றது. (அறிந்து அறிவின் தன்மையாக இயக்குவது அல்ல)
2.சப்தரிஷி மண்டலத்தின் உணர்வின் தன்மை நமக்குள் எடுத்தால் நம் உணர்வினை ஒளியாக மாற்றும்.
3.அதை நுகர்வோருடைய இருளை எல்லாம் அகற்றி அறிவென்ற நிலையில் தெளிவாக்கும் தன்மை பெறும்.

முழுமுதற் கடவுள் என்று விநாயகர் தத்துவத்தில் கூறியது போல உயிர் மனிதனாக உருவாக்கிய பின் முழுமையாக உருவாக்கும் சக்தி பெற்றது

1.இப்படிப் பேரருள் என்ற உணர்வை நமக்குள் உருவாக்கினால்
2.அந்த ஒளியின் தன்மை கொண்டு நுகர்வோர் உணர்வுகளிலும் தீமையை அகற்றி
3.ஒளி என்ற உணர்வை உருவாக்கும் கடவுளாக நாம் ஆக முடியும்.
4.இதன் தொடர் வரிசையில் தீமைகளை அகற்றிப் பகைமையை மாற்றி நல் உணர்வை இயக்கி
5.ஒவ்வொரு மனிதனையும் நல் வழிபடுத்தும் நிலையாக நமக்குள் வரும்.

Leave a Reply