நாம் பெறும் அருள் ஞான சக்தியை நல்ல முறையில் பயன்படுத்துவது பற்றியும் அதைச் சேமிக்க வேண்டிய முறையைப் பற்றியும் ஈஸ்வரபட்டர் சொன்னது

vasi yogam

நாம் பெறும் அருள் ஞான சக்தியை நல்ல முறையில் பயன்படுத்துவது பற்றியும் அதைச் சேமிக்க வேண்டிய முறையைப் பற்றியும் ஈஸ்வரபட்டர் சொன்னது

 

“ஜடாக்கினி மன திறன்…!” என்னும் மூலச் சக்தி நாத விந்துவாக… இரசமணியாகச் செயல்படும் அந்த வீரிய குண அமிலம் “இராமபாணம்…” என்று காட்டப்பட்டது.

எந்த இலட்சியம் தன் கருத்தோ அந்த இலட்சியத்தை எய்தும் பாக்கிய நிலை பெறுவது அதுவே தான்…! ஆனால் அந்தப் பாக்கிய நிலை பெற்றுவிட்டால் மட்டும் போதாது. அதை வளர்க்கவும் வேண்டும்.

இராமபாணத்தை எய்தினால் அது அப்படியே திரும்பி வரும்…! என்கின்ற பொருள் எல்லாம் என்ன…?
1.எண்ணம் கொண்டு செலுத்தப்படும் ஜடாக்கினி மூல சக்தியை
2.வான இயலை இலக்காகக் கொண்டு செலுத்தப்பட்டால்
3.அதை நம் வாழ்வின் இலட்சியமாகக் கொண்டால்
4.அந்தச் சக்தி குறைவுபடாது மேன்மேலும் வளரும் என்பதே இராமபாணம் திரும்பும் தொடர்.

ஜடாக்கினி அனுபவத்தில் வான்மீகிமாமகரிஷி மாத்திரம் தப்பித்துக் கொண்டாரா… என்ன…? அவர் பெற்ற அனுபவப் பாட நிலை என்ன…?
1.ஜடாக்கினி செயல் சக்தியைச் செலுத்திக் கண்ட “ஓர் அனுபவமாக..”
2.“வாலி வதம்…! என்ற பாங்கில் இராமன் தலை குனிந்தான்…! என்கின்ற பொருள் என்ன…?

ஆச்சா மரத்தை வெட்டுபவன் அந்த வலுவான மரத்தை முறித்திட வலுவான சக்தி மாத்திரம் போதாது. அந்த ஆயுதம் கூர்படத் தீட்டப்பட்டிருக்க வேண்டும்.

“தான் பெற்ற தவ சக்தியை” வான்மீகி கூர்பார்த்த விதம் ஆச்சா மரத்தை வெட்டும் செயல் போல் அவர் செயல் நிலை இருந்தாலும் சபரி அன்று அவரைக் கேட்டாள் “என்னையும் வானத்தில் இருத்த முடியுமா…? என்று…!”

அங்கே அந்த உபதேசத் தத்துவம் மழுங்கி விட்ட ஆயுதத்தால் ஆச்சா மரத்தை வெட்ட முடியுமா…?

உலகோதயம் என்னும் பிடிப்பில் “ஆச்சா மரம்…” என்பதெல்லாம் சொல் நாமம் பெயர் விளக்கத்திற்காகச் சூட்சமமாகக் கொடுக்கப்பட்டது தான். ஏனென்றால் நம் கவனம் ஞானத்தை வளர்த்திடும் எண்ணத்தில் நிலை பெற்றிருக்க வேண்டும்.

இது சொல் ஈர்க்கும் செயல் மாத்திரமல்ல…! இதிலே வலியுறுத்தும் காரியார்த்தம் (நுட்பம்) எது என்றால் “ஊசி முனைத் துவாரத்தில் நீர் குறைந்துவிடும்…” என்கின்ற பொருளின் விளக்கத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

அதைப் புரிந்து கொண்டால் ஞானத்தை வளர்க்க உதவாத… நம் ஆத்ம பலத்தை வீரியப்படுத்த உதவாத எந்தச் செயலையும்
1.உற்றுறுந்து கேட்கவும் வேண்டாம்…
2.அதிசயித்து நோக்கவும் வேண்டாம்….
3.”பெருமாள் படியளந்தான்…” என்பது போல் இருக்க வேண்டுமே தவிர
4.எடுக்கும் வீரிய ஜடாக்கினி முல சக்தி நம்முடைய முக்கியமான சேமிப்பாக இருக்க வேண்டும்.

மரணமில்லா பெருவாழ்வு பெற வேண்டும் என்றால் நாம் என்ன செய்ய வேண்டும்…?

cosmic power of human

மரணமில்லா பெருவாழ்வு பெற வேண்டும் என்றால் நாம் என்ன செய்ய வேண்டும்…?

 

நாம் மனிதராக வாழும் அனைவரும் நாம் ஒருவருக்கொருவர் அருள் ஞானத்துடன் வாழ்தல் வேண்டும். ஒருவருக்கொருவர் மகிழ்ந்து வாழும் உணர்வை நாம் நுகர்ந்து பழகுதல் வேண்டும்.

1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எல்லோரும் பெறவேண்டும்.
2.அவர்கள் வாழ்கையில் அறியாது இருள்கள் நீங்க வேண்டும்.
3.மெய்ப் பொருள் காணும் அருள் சக்தி பெறவேண்டும்.
4.அவர்கள் குடும்பம் எல்லாம் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழவேண்டும்.
5.அவர்கள் பிறவி இல்லா நிலை அடைதல் வேண்டும். அருள் ஞான வாழ்க்கை வாழ்தல் வேண்டும்.
6.இருளை அகற்றிடும் மெய்ப் பொருள் காணும் அருள் சக்தி நம் பூமியில் வாழும் மக்கள் அனைவரும் பெற வேண்டும் என்று
7.நாம் எல்லோரும் தியானிக்க வேண்டும்.

இவ்வாறு நாம் தியானிக்கும் எல்லோருடைய உணர்வுகளும் ஒன்றாகச் சேர்த்தால் என்ன ஆகும்…?

தீமையான உணர்வுகளை மனிதர்களான நாம் ஈர்க்கும் சக்தி குறைந்தால் இந்தக் காலையில் 6 மணிக்கு எல்லாம் சூரியன் தனக்குள் இழுத்துச் சென்று அதை எல்லாம் அங்கே கரைத்து விடும். ஒளியாக மாற்றும்.
1.நம்முடைய ஆன்மா தூய்மையாகின்றது.
2.நாம் வாழும் இந்தப் பூமியான பரமாத்மாவும் தூய்மையாகின்றது.

உதாரணமாக அடுப்பிலே வைத்து எரிக்கப்படும் ஒரு விறகானது பல விதமான உணர்வுகள் வைத்து அது எரிகின்றது. விறகு எரிந்து நெருப்பாக மாறுகின்றது… ஒளியாக மாறுகின்றது.

விறகோ கருகிவிடுகிறது. ஆனால் அதற்குள் இருக்கும் அந்த மணங்கள் பிரிந்து விடுகின்றது. அந்த உணர்வின் தன்மைகள் அனைத்தும் சூரியன் கவர்ந்து ஒளியாக மாற்றிக் கொள்கின்றது.

அந்த விறகிலிருந்து வந்த ஆவியின் தன்மை எதன் உணர்வு பெற்றதோ புவியின் ஈர்ப்பின் தன்மை கொண்டு எந்த வித்தின் தன்மை இங்கு பெறுகின்றதோ அதே மரத்தின் அதே வித்தாக (அந்த விறகின் மணங்கள்) இணைந்து மீண்டும் விளைகின்றது.

ஆகவே எதன் எதன் உணர்வின் தன்மை எது எது விளைகின்றதோ அது எல்லாம் இயற்கையில் இப்படி மாற்றிக் கொண்டே உள்ளது. (ஆவியாக இருப்பது திடப்பொருளாகின்றது மீண்டும் அது ஆவியாகிறது மீண்டும் திடப்பொருளாகிறது)

ஆனால் நாம் “என்றுமே மாறாத நிலைகள் பெற வேண்டும்…!” என்றால் என்ன செய்ய வேண்டும்…?

ஆறாவது அறிவு பெற்ற மனிதன் நஞ்சினை வென்று ஏழாவது நிலையாக உணர்வுகளை ஒளியாக மாற்றி என்றும் பதினாறு என்ற நிலை அடைந்த
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளை நாம் அனைவரும் நுகர்ந்து பழகுதல் வேண்டும்.
2.நம் உடலுக்குள் அதைப் பெருக்குதல் வேண்டும்.
3.அதை அழியாச் செல்வமாக நமக்குள் மாற்றி அமைத்தல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வாழும் சப்தரிஷி மண்டல எல்லையை நாம் அடைதல் வேண்டும்.