சிருஷ்டியை மாற்றும் ஆறாவது அறிவு “கார்த்திகேயா…!”

Brahma creator.jpg

சிருஷ்டியை மாற்றும் ஆறாவது அறிவு “கார்த்திகேயா…!”

நமது வாழ்கையில் காலையில் இருந்து இரவு வரையிலும் சலிப்பு சஞ்சலம் சங்கடம் கோபம் குரோதம் என்ற என்ற எத்தனையோ நிகழ்வுகளைப் பார்க்கின்றோம்
1.வெறுப்படைவோரைப் பார்க்கின்றோம்
2.வேதனைப்படுவோரைப் பார்க்கின்றோம்
3.வேதனைபடுத்துவோரைப் பார்க்கின்றோம்
4.கோபப்படுவோரைப் பார்க்கின்றோம்.

இவை அனைத்தும் நாம் கண்களால் பார்த்து நுகர்ந்து அறிகின்றோம். நாம் பார்த்து நுகர்ந்து அறிந்தாலும் அதை எல்லாம் நமது உயிர் “ஓ…” என்று ஜீவ அணுவாக மாற்றி நம் உடலிலே அது பெருகச் செய்து விடுகின்றது.

ஆகவே பல கோடி உடல்களில் இருந்து நஞ்சினை வென்று நம் வாழ்கையில் நஞ்சினை வென்றிடும் அருள் சக்தி பெற்று இன்று மனித உரு கொடுத்த நமது உயிரை நாம் மதித்தல் வேண்டும்.

நம் உயிரை மதிப்பதற்கு என்ன வழி…?

நமது வாழ்கையில் பிறருடைய தீமைகளைக் கேட்டறிந்தாலோ பார்த்து நுகர்ந்தாலோ அதை நம் உடலுக்குள் புகாதபடி தடுத்தல் வேண்டும். உயிரால் வளர்க்கப்பட்ட இந்த உடலான சிவத்தை நாம் பாதுகாத்தல் வேண்டும்.

ஏனென்றால் சிவத்திற்குள் (உடலுக்குள்) நல்ல சக்திகள் இருந்தால் தான் உடலில் நோய் இல்லாத நிலைகள் ஏற்படும்.

நம் உடலைச் சிவமாக மதித்து நம் உயிரை ஈசனாக மதித்து நாம் ஒவ்வொரு நொடிகளில் இந்த வாழ்கையில் சலிப்போ சஞ்சலமோ சங்கடமோ வெறுப்போ வேதனையோ இதைப் போல நிகழ்சிகளை நாம் பார்த்துக் கேட்டுணர்ந்தால் அவை நம் உடலுக்குள் புகாது பாதுகாத்தல் வேண்டும்.

ஞானிகள் காட்டிய அருள் வழியில் நமது உடலில் இருக்கும்
1.ஆறாவது அறிவைக் கார்த்திகேயா என்றும்
2.அது அறிந்திடும் ஆற்றல் பெற்றது என்றும்
3.அது தீமைகளை நமக்குள் புகாதபடி “பாதுகாக்கும் சக்தி…!” என்றும் தெளிவாக எடுத்துக் கூறி உள்ளார்கள்.

எத்தகைய தீமைகள் வந்தாலும் நம் உடலுக்குள் அது போகாதபடி அதை நாம் தடுத்து நம் உடலுக்குள் அந்தத் தீமையின் நிலைகள் (அணுக்களாக) உருவாகாது அதைத் தடைப்படுத்தல் வேண்டும்.

அதைத் தடைப்படுத்த வேண்டும் என்றால்… முதலில் சொன்ன மாதிரி நாம் கண்களால் பார்த்துக் கேட்டறிந்த உணர்வுகள் (சலிப்பு கோபம் சங்கடம் ஆத்திரம் வேதனை) அனைத்தும் நமக்குள் தீமையின் அணுக்களாக எப்படி உடலுக்குள் அணுக்களாக உருவாகின்றதோ அதே போன்று
1.அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும்
2.அது எங்கள் இரத்த நாளங்களிலே கலந்து உடல் முழுவதும் படர வேண்டும்
3.எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும் என்று
3.நாம் தீமைகளைக் கேட்டறிந்த அடுத்த நிமிடத்திலேயே இதை இணைத்திடல் வேண்டும்.

நாம் எப்படி ஒரு குழம்பை வைக்கும் போது பதம் பார்த்து அதாவது காரம் புளிப்பு உப்பு போன்ற மற்ற நிலைகளை அறுசுவைகளை ஒரு சுவையாக மாற்றி சுவைமிக்க குழம்பாக வைக்கின்றோமோ அதைப் போன்று
1.தனித்தனியாக வரும் இந்த வெறுப்பு கோபம் வேதனை என்ற உணர்வுகளுக்குள்
2.அருள் ஞானியின் உணர்வுகளைச் சேர்த்து
3.அந்த நஞ்சினை வென்றிடும் உணர்வுகளை நமக்குள் உருவாக்குதல் வேண்டும்.

தீமைகள் வரும் பொழுதெல்லாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று இதை நுகரப்படும் போது நம் உடலுக்குள் ஒளியான அணுக்கள் பெருகுகின்றது. ஆகவே
1.நமது வாழ்கையில் ஒவ்வொரு நிமிடமும்
2.நாம் அந்த நஞ்சினை வென்றிடும் உணர்வுகளை அணுக்களாக உருவாக்குதல் வேண்டும்.

அதனால் தான் நம் ஆறாவது அறிவை முருகா என்று காட்டி “பிரம்மாவைச் சிறைப் பிடித்தான் முருகன்…!” என்று நம் சாஸ்திரங்களில் மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

இப்படி சந்தர்ப்பத்தால் நாம் சந்திக்க நேரும் எந்தத் தீமைகளும் நமக்குள் உருவாகாதபடி
1.அருள் உணர்வை நமக்குள் உருவாக்கும் சக்தியாக
2.அந்தச் சிருஷ்டியையே நாம் மாற்றுகின்றோம்.

Leave a Reply