பைத்தியம் போன்று வாழ்ந்த குருநாதர் தனக்குள் இருந்த சக்திகளை எம்மிடம் காட்டினார்

Gnanaguru - papanasam

பைத்தியம் போன்று வாழ்ந்த குருநாதர் தனக்குள் இருந்த சக்திகளை எம்மிடம் காட்டினார்

 

பழனியம்பதியில் குருநாதர் எமக்கு உறுதுணையாக இருந்த காலத்தில் யாம் (ஞானகுரு) மில்லில் வேலை செய்து கொண்டிருந்தோம்.

ஒரு சமயம் நெய்காரப்பட்டியில் வசிக்கும் எமது நண்பர் இராமசாமி நாயுடு அவர்களை ஒரு மாந்திரீகவாதி சந்தித்து அவருடைய இடத்திலுள்ள ஒரு பெரிய மரத்தைத் தன்னுடைய மந்திர சக்தியால் வீழ்த்திவிட்டேன். இந்த மரத்தில் வசித்த பூதத்தைப் போக்கிவிட்டேன். இனிமேல் உங்களுக்கு நல்லதாக இருக்கும் என்று சில ஜோதிடங்களைக் கூறி பணம் கொடுங்கள் என்று மந்திரவாதி இராமசாமியைக் கேட்டுக் கொண்டிருந்தார்.

அந்தச் சந்தர்ப்பத்தில் குருநாதர் எம்மை இராமசாமியைச் சந்தித்து வரும்படி அனுப்பி வைத்தார். அது சமயம குருநாதர் பாதரசத்தால் உருவாக்கப்பட்ட இரசமணியை எம்மிடம் கொடுத்து அதை வைத்திருக்கும்படிக் கூறினார்.

இரசமணியை என் கையில் கொடுத்து உன் நண்பனைப் போய்ப் பார் என்று கூறினார். குருநாதர் கூறிய வண்ணம் யாம் சென்று எமது நண்பரைப் பார்க்கும்போது அவர் கையிலும் ஒரு இரசமணி இருந்தது.

குருநாதர் எம்மிடம் கொடுத்த இரசமணி உருண்டையாக இருந்தது. நண்பர் தன் கையில் வைத்திருந்த இரசமணி சதுரமாக இருந்தது.

அந்த மந்திரவாதி இராமசாமி கையில் வைத்திருந்த இரசமணியைக் குறித்து சிலவற்றை அவரிடம் கூறிக் கொண்டிருந்தார். அவர்கள் இரண்டு பேரும் பேசிக் கொண்டிருக்கும் அந்த நேரத்தில் எதிர்பாராதவிதமாக யாம் சென்றோம்.

அது சமயம் எமது சட்டைப் பையில் கணேஷ் பீடிக்கட்டு வைத்திருந்தோம். முன்பு யாம் தொப்பி சிகரெட் குடிப்பது வழக்கம். குருநாதர்தான் கணேஷ் பீடி பற்றிச் சில விஷயங்களைக் கூறி எம்மைக் கணேஷ் பீடி குடிக்கும்படி செய்தார்.

அந்தச் சந்தர்ப்பத்தில் கணங்களுக்கெல்லாம் ஈசன் கணேசன் என்று பல உண்மைகளை எமக்கு குருநாதர் கூறினார். கணேஷ் பீடியில் விஷய்ம் இருக்கிறது என்று கூறினார் குருநாதர்.

ஆகையினால் எமது சட்டைப் பையில் கணேஷ் பீடிகளை வைத்திருந்தோம். அதே சமயத்தில் எம்மிடத்தில் மறைவாக தொப்பி சிக்ரெட் வைத்திருந்தோம்.

அங்கே இருந்த மந்திரவாதி என்னைப் பார்த்து தொப்பி சிகரெட் கொடுப்பா என்றார். கணேஷ் பீடி வெளியில் தெரியும்படி இருந்தது ஆனால். அதைக் கேட்பதை விட்டு தொப்பி சிக்ரெட் கொடுப்பா என்று எம்மைப் பார்த்துக் கேட்டார் அந்த மந்திரவாதி.

ஆனால், யாம் எம்மிடம் சிகரெட் எதுவும் இல்லை என்றோம்.

என்னிடம் எதுவும் மறைக்க முடியாது என்றார் மந்திரவாதி. நீ கொண்டு வந்த இரசமணியையும் என்னிடம் கொடு என்றார். நீ என்னிடம் மறைப்பாய் என்று எனக்குத் தெரியும். ஆனால், என்னிடம் நீ எதுவும் மறைக்க முடியாது என்று என்னைப் பார்த்துக் கூறினார் மந்திரவாதி.

ஆகவே, குருநாதர் எம்மிடம் கொடுத்திருந்த இரசமணியை எடுத்து அவர் கையில் கொடுத்தோம்.

யாம் கொடுத்த இரசமணியை வாங்கிக் கொண்ட மந்திரவாதி தன்னிடமிருந்த பாதரசத்தை யாம் கொடுத்த இரசமணியில் செலுத்தினார். இதனால் யாம் கொடுத்த இரசமணி கருத்துப் போய்விட்டது.

நீ கொடுத்த இரசமணியில் சக்தி கிடையாது என்று பார்த்துக் கொண்டாயல்லவா என்று எம்மைப் பார்த்துக் கேட்டார் மந்திரவாதி.

சக்தி உள்ளதா இல்லையா..,? என்று எனக்குத் தெரியாது. என் குருநாதர்தான் இதைக் கொடுத்தார் என்று கூறினேன்.

நீ கொண்டு வந்த இரசமணியில் சக்தி இல்லை என்பதைக் காட்டவே இது போன்று செய்து காண்பித்தேன் என்றார். தன் கையில் இருந்த சதுரமான இரசமணியை எம்மிடம் காண்பித்து, “இதில் ஒரு பக்கம் பார்த்தால் நாம் எண்ணுகின்ற மனித்ருடைய நிலையைத் தெரிந்து கொள்ளலாம்” என்று கூறினார்.

மந்திரவாதி ஒரு குச்சியை எடுத்தார். அதே சமயத்தில் வானத்தில் பறந்து கொண்டிருந்து ஒரு காகத்தைக் காட்டினார். தன் கையில் இருந்த குச்சியை ஒடித்தார் மந்திரவாதி.

அது சமயம் மந்திரவாதி சுட்டிக் காண்பித்த காகத்தின் இறக்கை ஒடிந்தது. காகம் கீழே விழுந்த்து. என்னை எதிர்ப்பவனின் நிலையும் இது போன்று ஆகும் என்று என்னைப் பயமுறுத்தினார் மந்திரவாதி.

எனக்கு ஒன்றும் தெரியாது. என்னுடைய குருநாதர் இந்த இடத்திற்குப் போ என்று கூறினார், அதனால் வந்தேன். “நீங்கள் போ..,” என்று கூறினால் நான் இங்கிருந்து போய்விடுகின்றேன் என்று கூறினேன்.

எனக்குப் பயமாகிவிட்டது. ஏனென்றால் மாந்திரீகவாதி குச்சியை ஒடித்தால் காகத்தின் இறக்கையே ஒடிகிறது. எம்மையும் மந்திரவாதி ஏதாவது செய்துவிடுவாரோ என்று யாம் பயந்தோம்.

மந்திரவாதி இராமசாமியிடம் காட்டி “இந்த ஆளைப் போகச் சொல்” என்றார்.

இராமசாமி என்னைப் பார்த்து என் ரைஸ்மில்லில் இரு. சிறிது நேரத்தில் வந்துவிடுகிறேன் என்று கூறினார்.

என்ன இது பெரிய வம்பாகிவிட்டது? குருநாதர் போகச் சொன்னார் என்று நான் இங்கே வந்தேன். மந்திரவாதி காகத்தின் இறக்கையை ஒடித்தது போன்று என்னுடய கை காலை உடைத்துவிட்டால் என் பிழைப்பு என்னாவது என்ற பயம் வந்துவிட்டது. உண்மையில் இது நடந்த நிகழ்ச்சி.

இராமசாமி ரைஸ்மில்லுக்குப் போகச் சொன்னதும் ஆளை விட்டால் போதும் நான் சென்றுவிடுகிறேன் என்று செல்ல ஆரம்பித்தேன். அவர்களிருந்த இடத்தை விட்டு யாம் நகர்ந்து செல்லும்போது குருநாதர் ஒரு சப்தத்தைக் கொடுத்தார்.

“கூ.., கூ..,” என்று ஒரு பட்சியின் சப்தத்தைப் போன்று குரல் கொடுத்தார். ஆனால், எனக்கு அதன் அர்த்தம் புரியவில்லை. நான் வரும் அந்த வழியில் ஒரு மாமரம் அதனுடைய ஒரு நல்ல வலுவான கிளை “சடார்..,” என்று ஒடிந்து விழுந்தது.

அந்தக் கிளையில் பல காய்களும் இருந்தது. காய்கள் “பொல பொல” என்று கீழே விழுந்தது. “கூ.., கூ..,” என்ற சப்தம் குருவிடம் இருந்து வந்ததால் எனக்குக் கொஞ்சம் தைரியம் வந்தது.

பின், ரைஸ்மில்லுக்குச் சென்று அமர்ந்து கொண்டோம். இராமசாமி வருகைக்காகக் காத்திருந்தோம் நேரம் அதிகமாகிவிட்டது.

நான்கு மணி நேரம் கழித்து இராமசாமியும் மந்திரவாதியும் வந்தார்கள். அவர்கள் வரும்போது நான் ஒரு சேரில் உட்கார்ந்திருந்தோம். அவர்கள் வரும் நேரத்தில் யாம் சேரில் அமர்ந்திருந்ததால் மந்திரவாதி யாம் அமர்ந்திருந்த சேரை உடையும்படிச் செய்தார்.

இதனால் நான் கீழே விழுந்தேன். அதைப் பார்த்த மந்திரவாதி எம்மைப் பார்த்து “கே..க்..கே..க்..கே..,” என்று சிரித்தார். எம்மை “இங்கிருந்து போ..,” என்று சொல்லியது போன்று மந்திரவாதியின் இந்த்ச் செயல்.

மந்திரவாதியும் இராமசாமியும் ஒவ்வொரு சேரில் உட்கார்ந்து கொண்டார்கள். யாம் நின்று கொண்டிருந்தோம். அந்தச் சமயம் மந்திரவாதி அமர்ந்திருந்த சேர் நொறுங்கியது.

என்னப்பா.., என்னிடமே வித்தையக் காண்பிக்கின்றாயா..,?” என்று எம்மைப் பார்த்து மந்திரவாதி கேட்டார்.

அதற்கு யாம் எனக்கு ஒன்றும் தெரியாது குருநாதருக்கும் உங்களுக்கும் இடையில் என்ன நிலை இருக்கிறது என்பது எனக்குத் தெரியாது என்றோம்.

அது சமயம் குருநாதர், “உடனே பஸ் ஏறி வா..,” என்று எமக்குக் கட்டளையிட்டார். குருநாதரின் உணர்வுகள் என் காதில் ஒலித்தன.

மந்திரவாதி அமர்ந்த சேர் நொறுங்கியவுடன் நாம் இரண்டு பேரும் நண்பர்களாகிவிடுவோம் என்று மந்திரவாதி எம்மைப் பார்த்துக் கூறினார். அதன் பின் அவருடைய கதைகளை எம்மிடம் கூறினார்.

உன்னுடைய குருநாதர் சக்தி வாய்ந்தவர்தான். ஆனால், நீ மிகவும் அவரிடம் அவஸ்தைப்படுவாய், அவரிடமிருந்து நீ விலகிவிடு. உன்னுடைய குடும்பத்தை நீ காப்பாற்றுவதற்குண்டான உபாயத்தை நான் சொல்கிறேன். அத்ன் வ்ழி நடந்து கொள் என்று எம்மைப் பார்த்துக் கூறினார்.

இப்படி மந்திரவாதி எம்மிடம் பேசிக் கொண்டிருந்த நேரத்தில் குருநாதர் என்னைக் கன்னத்தில் அடித்தது போல இருந்தது. “எழுந்து நீ வாடா..,” என்று கூறினார்.

அது சமயம் குருநாதரிடமுள்ள பழக்கத்திலிருந்து யாம் விடுபடுவதற்கு கூடுமான வரையிலும் பல அறிவுரைகளைக் கூறினார். உன் முகவரியைக் கொடு, உன்னை வீட்டில் வந்து பார்க்கிறேன் என்று மாந்திரீகவாதி கூறினார்.

“நீ பஸ் ஏறுடா..,” என்றார் குருநாதர். அந்த நேரத்தில் எம்மிடம் காசும் இல்லை. ரைஸ் மில்லுக்குச் சென்ற இடத்தில் எமது பணத்தை அங்கேயே மறந்து வைத்துவிட்டு வந்துவிட்டோம்.

பஸ்ஸில் ஏறி உட்கார்ந்துவிட்டோம். சண்முக நதி (பழனி) பாலம் வரையிலும் பஸ் கண்டக்டர் டிக்கெட் கேட்கவில்லை.

ஆனால், சண்முக பாலத்தின் அருகே குருநாதர் நின்று கொண்டு யாம் வந்த பஸ்ஸைக் கைகாட்டி நிறுத்தினார். இந்த பஸ்ஸில் ஒரு திருடன் இருக்கின்றான், அவனை இறக்குங்கள் என்று கண்டக்டரிடம் கூறினார் குருநாதர்.

கண்டக்டர் “திருடன் யார்..,?” என்று குருநாதரிடம் கேட்டார். குருநாதர் ஒரு பைத்தியக்காரரைப் போன்று தோற்றமளித்ததால் பஸ் கண்டக்டர் குருநாதரின் வார்த்தையை நம்பாமல், பஸ்ஸில் திருடன் யாரும் இல்லை என்றார்.

அதே நேரத்தில் பஸ் டிரைவரும் ப்ஸ்ஸை நகர்த்த முயற்சி செய்தார். ஆனால், பஸ் நகரவில்லை.

திருடனை இறக்கி விடவில்லை என்றால் பஸ் போகாது என்று கூறினார். இப்படி இது அரை மணி நேரம் இந்த வாக்குவாதம் நடக்கின்றது.

பிறகு குருநாதர் பஸ்ஸிற்குள் ஏறி, “இவன் தன் திருடன், இவனை இறக்குங்கள்.., “ என்று எம்மைச் சுட்டிக் காண்பித்துக் கூறினார். இது நடந்த நிகழ்ச்சி.

பழனியில் இருக்ககூடியவர்கள் குருநாதரைப் பற்றிய உணமைகளையோ அவரிடம் இருக்கக்கூடிய சக்திகளையோ அறிய முடியாது.
1.அந்த அளவிற்கு மற்றவர்களிடம்
2.ஒரு பைத்தியம் போன்று நடந்து கொண்டார்.
3.தன்னிடம் உள்ள சக்திகளை ஒவ்வொன்றாக எம்மிடம் வெளிப்படுத்திக் காண்பித்தார் குருநாதர்.

“எனக்கு இந்த வித்தைகளே வேண்டாம்.., நீங்கள் செய்வதே போதும்..,” என்று கூறினோம். ஏனென்றால் குருநாதரின் நிலையைக் கண்டு எமக்குள் பயம்.

பஸ்ஸை விட்டு எம்மை இறங்கச் செய்து பழனி சண்முக நதி ஆற்றுப் பக்கம் எம்மை அழைத்துச் சென்றார் குருநாதர்.

அங்கே அமர்ந்து தரையில் குருநாதர் தனது காலால் ஒரு சக்கரத்தை “கிறு.., கிறு..,” என்று வரைந்தார்.

குருநாதர் தான் வரைந்த சக்கரத்திற்குள் ஒரு கத்தியை எடுத்துக் குத்தினார். “மேலே பாருடா..,” என்று எம்மைப் பார்த்துக் கூறினார்.
1.சக்கரத்தினுள் குத்திய கத்தி மேலே சூரியனை நோக்கிப் பறந்து சென்றது.
2.அந்தக் கத்தி சூரியனுக்கே சென்றது.

பிறகு குருநாதர் எம்மிடம் “நீ சந்தித்த மாந்திரீகவாதியின் நிலை இப்பொழுது எப்படி உள்ளது தெரியுமா..?”. தன் சக்தியை அவன் இழந்த நிலையில் உள்ளான் என்று கூறினார்.

இதுபோன்றவர்கள் சில பூதகணங்களைக் கைவல்யம் செய்து கொண்டுள்ளார்கள் என்பதை எனக்கு அங்கே உணர்த்தினார் குருநாதர்.

தெய்வீக வழிகளில் தெய்வ வழிபாடுகளைக் கொண்டுள்ளவர்களை இந்த மாந்திரீகவாதிகள் ஏமாற்றுகிறார்கள்.

தெய்வங்களின் பெயரைச் சொல்லி மற்றவர்களுக்கு ஆசைகளை ஊட்டி அவரை உயர்ந்த சீமானாகும் நிலைகளைச் செய்யும்போது அதன் வழிகளில் மந்திரவாதி தன்னையும் சீமானாக்கி அவருடைய மறைவில் மாந்திரீகவாதிகள் தான் வாழ்வதற்குண்டான நிலைகளைச் செய்து கொள்கின்றான்.

மாந்திரீகவாதி கற்றுக் கொண்ட வித்தைகள் அனைத்தும் அவனுடைய மனித உடல் வாழ்க்கைக் காலத்தோடு சரி.

இந்த மாந்திரீகவாதியின் உடலை விட்டுப் பிரிந்து செல்லும் உயிரான்மா இந்த மாந்திரீகவாதி தான் உடலுடன் வாழும் காலத்தில் ஜெபித்த மந்திரத்தை இன்னொருவன் ஜெபித்தான் என்றால் உடலை விட்டுப் பிரிந்து சென்ற மாந்திரீகவாதி தன்னுடைய உடலோடு வாழும் காலத்தில் செய்த அதே வேலையை ஜெபித்தவனின் உடலுக்குள் இருந்து செய்யும்.

ஜெபித்தவனையும் அதே தவறான நிலைக்கு அழைத்துச் சென்று வீழ்த்தும்.

ஜெபித்தவனின் உடலில் மாந்திரீகவாதியின் உயிரான்மா வாழும் காலத்தில் பல தவறின் உணர்வுகளைத் தனக்குள் சேர்த்துக்கொண்டதற்கொப்ப, ஜெபித்தவன் இறந்தபின், ஜெபித்தவனின் உடலை விட்டு வெளியே வரும் மாந்திரீகவாதியின் உயிரான்மா மீண்டும் மனிதரல்லாத உருவைப் பெறும்.

ஆக மனிதர்கள் மாந்திரீகம் என்ற நிலையில் தங்களின் உடலின் இச்சைக்குத்தான் இத்தனை வேலைகளும் செய்கின்றனர்.

மனிதர் தம் உயிரை மறந்து உடலின் இச்சைக் கொண்டு வாழ்ந்து வரும் இவ்வுலகில் மகரிஷிகள் காண்பித்த அருள்வழியில், தம் வாழ்க்கையில் அறியாது வரும்
1.தீமைகளைப் போக்கிடும் நிலையாக
2.இருளை வென்றிடும் நிலையாக,
3.உயிரில் ஒன்றும் உணர்வினை
4.ஒளியின் உணர்வாக ஆக்கிடும் நிலையாக
5.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நுகர்ந்து பழகவேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நுகர்ந்தால், உடலுக்குப் பின் உயிருடன் ஒன்றி வேகா நிலை பெற்று என்றுமே மரணமில்லா பெருவாழ்வாக வாழ்ந்திடும் பாக்கியத்தைப் பெற முடியும். சப்தரிஷி மண்டலத்துடன் நாம் ஐக்கியமாக முடியும்,

இதுவே மனிதனின் கடைசி எல்லை என்று குருநாதர் எமக்கு உணர்த்தினார்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.