அக்கால ஞானிகள் கேட்ட “பிச்சாந்தேஹி…!” என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

pitchai

க்கால ஞானிகள் கேட்ட “பிச்சாந்தேஹி…!” என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

1.நோயாளிக்கு மூன்று வேளை உணவு
2.சம்சாரிக்கு இரண்டு வேளை உணவு
3.ஞானிக்கு ஒரு வேளை உணவு என்ற உணவின் நியமனக் கட்டுப்பாடு
4.உலகோதய வாழ்க்கையில் எல்லோரும் உடல் நலத்துடன் வாழ்வதற்காக அன்றைய சித்தர்கள் வகுத்த வழி…!

குருவிடம் சிஷ்யன் முதலில் கற்றுக் கொள்ள வேண்டியது “குருகுல வாசத்தில் நாவின் சுவையை அடக்கி…!” ஆகாரக் கட்டுப்பாட்டின் வழியில் புலனடக்கம் பெற்று…
1.தனக்குள் இயக்கும் எல்லா உணர்வுகளையும்
2.தன் மனக்கட்டுப்பாட்டில் அடங்கச் செய்வதாகும்.

ஞானிக்கு ஓர் வேளை தான் உணவு என்றால் அதையும் அவன் எப்படி ஏற்கின்றான்…?

ஓர் நாளைக்கு ஓர் முறை தான் என்ற நிலையில் தான் தேர்வு செய்த ஓர் வீட்டிற்குச் சென்று “பிச்சாந்தேஹி…!” என்று கேட்பான். ஆனால் அந்தச் சொல் வழக்கில் இருந்து விடுபட்டு இன்று அதனுடைய புனிதத் தன்மையே திரிந்து போய்விட்டது.

ஞானிகள் வீடு வீடாகச் சென்று பிட்சை கேட்பதில்லை.

இன்று ஓர் ஞானியோ… முனிவனோ…
1.தனது வீட்டிற்குப் போஜனத்திற்காக வரமாட்டாரா…?
2.அவருடைய ஆசியைப் பெற மாட்டோமா…? என்று
3.வாசலில் காத்திருக்கும் இல்லறத்தோர் ஏங்கியது அந்தக் காலம்.
(அக்கால வழக்கம் எல்லாம் இன்று கேடுற்று விட்டது)

ஏதாவது ஓர் வீட்டைத் தேர்ந்தெடுத்து ஓர் வேளை பகல் பொழுதோ அல்லது அந்திமப் பொழுதோ சென்று சிறிது நேரம் நின்று பிட்சை என்ற ஒரு சொல் கேட்டு அன்புடன் வந்து அளித்திட்ட அமுதை அமுதமாக எண்ணி உண்பார்கள்.

ஒரு வேளைப் பொழுதுதான் உண்ணும் வழக்கமாக இருந்தாலும் “பிச்சாந்தேஹி…!” என்று கேட்டுக் குறித்த அவகாச காலத்தில் உணவு வராவிட்டால் என்ன செய்வார்கள்…?

அங்கு நிற்காமல் திரும்பி வந்து வெறும் நீரைக் குடித்து விட்டு மகிழ்ச்சியுடன் அமைதியாக அமர்ந்து “ஈஸ்வர தியானத்தில்” ஈடுபடுவார்கள். அக்காலத்தில் மூலிகை ஔஷதங்களைத் குருவின் மூலம் அறிந்து பெற்று அதை உண்டு வந்த அந்த வழக்கம் இன்று நடைமுறையில் சாத்தியப்படவில்லை.

இன்று உண்ணும் உணவிலும் ஊட்டச் சத்துக்கள் குறைவு. அது போக உடல் சோர்வும் மன நலிவும் உற்றுப் பிணிகளுக்கு ஆளாகுவது தான் இன்றைய நிலை.
1.அக்கால ஞானிகள் பெற்ற ஞானம் என்பது மிகவும் எளிதல்ல…!
2.கடுமையின் கடுமையை எதிர் நோக்கி வென்று வந்தார்கள் அவர்கள்.

அன்று மக்கள் தொகை பெருக்கம் இல்லாததால் குறைந்த கால அளவில் தான் பெறவேண்டிய நற்சக்தியை வளர்ச்சிப்படுத்தும் செயல் முறைக்குத் “தியானம் என்பதே… மிகக் கடுமையான பரிசோதனை முறைகளாக இருந்தது…!”

தான் பெற்ற சக்தியையே அது எந்த வழித் தொடர் என்பதை அறிந்து அதைப் பெற்று தனது நிலையை மென்மேலும் உயர்த்திடவே அனுபவப் பாட நிலைகள் கொண்டு வளர்ந்தவர்கள் தான் “அக்கால ஞானிகள்…!”

ஒரு வேளை உணவும் கிடைத்திடா விட்டாலும் வெறும் நீரை அருந்தி சந்தோஷமாகத் துயில் கொள்ளும்
1.தியானத் துயிலில் மனப் பக்குவ நிலை பெறும் சத்திய சோதனையையே
2. சத்திய நிலை நிலைக்கப் பெறும் தொடரில் வென்று
3.தனது நிலையை அன்று வளர்த்துக் கொண்டார்கள்.

அதே போல இந்த உலகில் வாழையடி வாழை என வாழ்ந்து கொண்டிருக்கும் ஞான சக்திச் செல்வங்களும் (மக்கள்) பெறவேண்டும் என்ற ஆசையின் நிலையில் தான்
1.இன்று கடுமையை விடுத்து
2.எளிய முறையாகத் தியானத்தின் மூலம் நற்சக்தி பெறுதல் என்று உணர்த்தி வருகின்றேன் (ஈஸ்வரபட்டர்).

மிகச் சுலபமான நிலைகளில் எண்ணத்தால் எண்ணி ஏங்கினாலே கிடைக்கும் வழிக்கு இந்தத் தியான முறையை உணர்த்துவது என்பதே வளர்ச்சியின் வளர்ப்பாக்கி “ஆதி சக்தியின் மூலத்தில் எல்லோரையும் கலக்கச் செய்வதற்குத்தான்..!”

கார்த்திகை நட்சத்திரம் வெளியேறியதால் பூமிக்குள் ஏற்படும் மாற்றங்கள்

Maharishi doctor

கார்த்திகை நட்சத்திரம் வெளியேறியதால் பூமிக்குள் ஏற்படும் மாற்றங்கள்

 

நம்முடைய சூரியக் குடும்பத்திலிருந்து கார்த்திகை நட்சத்திரம் விலகிப் போய்விட்டது. அதனால் நம் பிரபஞ்சத்தில் அறிவின் ஞானம் சூனியமாகிப் போய்விட்டது. ஏனென்றால்
1.ஒன்றுடன் ஒன்று மோதி… அந்த உணர்வின் தன்மை
2.”அறிவு ஒளியாக..” வருவதெல்லாம் குறைந்து விட்டது.

கார்த்திகை நட்சத்திரம் போல ஏனைய சில நட்சத்திரங்களும் விலகும் பருவத்தில் இருக்கிறது. இப்படி விலகி விட்டால் நம் சூரியக் குடும்பத்தில் மங்கல் ஏற்பட்டுவிடும்.

சில ஆயிரம் ஆண்டுகள் செல்லப்படும் போது நம் சூரியன் தனித்துப் பிரிந்து விடும். நம் பூமிக்குள் நீர் வளம் அதிகமாகிவிடும். இந்த எடையின் தன்மை கூடும் போது ஈர்க்கும் தன்மையாகி சூரியனை விட்டு விலகிச் செல்லும்.

சூரியனை விட்டு விலகினால் அப்பொழுது பூமி முழுவதும் பனிப்பாறைகளாக (வியாழன் கோள் போல்) மாறும். அதற்குள் இங்கே இருக்கக்கூடிய உயிரினங்கள் தாவர இனங்கள் அனைத்தும் பூமிக்குள் (பனிகளுக்குள்) ஒடுங்கி விடும்.

ஐஸ் (பெட்டிக்குள்) பாறைகளுக்குள் வைத்து மறுபடியும் சுழலும்போது சிதறுண்டு போகும் போது உயிரணுக்கள் எல்லாம் அடுத்த பிரபஞ்சத்திற்குள் பரவும்.

நம் உயிரான அணுக்கள் அப்படிப் பரவப்போகும் போது அது எடுத்துக் கொண்ட… நாம் நுகர்ந்த உணர்விற்கொப்ப… வேறு எங்கேயோ போய் உருவாக்கும். இதைத் தான் நாம் பெற முடியும்.

இப்படிப்பட்ட கால கட்டத்தில் இந்த உடலில் நாம் இப்பொழுது நல்ல நினைவுடன் இருக்கும் பொழுதே குறுகிய காலத்திற்குள் நாம் ஒளி நிலை பெற வேண்டும்.

1.ஏனென்றால் இந்த உடலில் எத்தனை நாள் நாம் வாழுகின்றோம் என்று தெரிகிறது. (அறுபதே எழுபதோ அவ்வளவு தான்…!)
2.நன்றாக இருக்க வேண்டும்… நன்றாக வாழ வேண்டும்…! என்று தான் கஷ்டப்பட்டுச் சம்பாரிக்கின்றோம்.
3.அதைச் செலவழிக்கவும் செய்கிறோம். ஆடம்பர பொருளுக்காகவும் செலவழிக்கின்றோம்.

ஆனால் இது எல்லாம் நமக்கு உதவியாக இருக்கிறதா…?

சம்பாதித்து வீடு சொத்து பணம் பொருள்கள் மனைவி மக்கள் எல்லாமே அழகாக வைத்திருந்தாலும் கூட
1.நமக்கு நோய் என்ற உணர்வு வந்தால் என்ன செய்கிறோம்…?
2.அதை எல்லாம் தள்ளி விட்டுத் தூக்கித் தூக்கி எறிகிறோம்.
(உடல் சரியில்லை என்றால் நல்ல உணவை உட்கொள்ளும் எண்ணமோ சொத்தையும் சுகத்தையும் உடைகளையும் நகைகளையும் அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை வருகிறதா…? இல்லையே…!)
3.அப்போது எல்லாவற்றையும் தூக்கி எறிய வேண்டும் என்ற எண்ணம் தான் வருகிறதே தவிர “நல்லா இருக்க வேண்டும்…!” என்று அது நமக்கு உதவுகிறதா…?

அதே போல் நாம் நன்றாகத் தான் இருக்கிறோம். அடுத்தாற்போல யாராவது வந்து நம்மை ஏளனமாகச் சிரித்து கேவலப்படுத்தினால் என்ன நினைக்கின்றோம்…?

பார்…! என்னை எப்படிக் கேவலப்படுத்துகின்றான்… இப்படிக் கேவலப்படுத்துகின்றானே…! என்ற இந்த உணர்வைத் தான் எண்ணுகின்றோம்.

அந்த உணர்வை எடுத்தவுடனே நாம் நன்றாக இருந்ததை மறந்து விட்டு அவர் மேல் கோபமும் வெறுப்பும் வேதனையும் ஆகி அவர்கள் எதை எதை எல்லாம் சொல்கிறார்களோ… அதை நமக்குள் விளைய வைக்கின்றோம். அதைத் தான் பழகி வைத்திருக்கின்றோம்.

அதுதான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ நீ அதுவாகின்றாய் என்று தெளிவாக்குகின்றார்கள்…!

1.அவர்கள் என்னமோ சொல்லி விட்டுப் போகிறார்கள்…
2.அவர்களுக்கு நல்ல புத்தி வரட்டும்…
3.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இந்த உணர்வை எடுத்து
4.அவர்கள் சொல்லும் தீமை நமக்குள் வராது தடுக்கப் பழக வேண்டும்.

அதனால் தான் ஆறாவது அறிவைச் “சேனாதிபதி…” என்று தெளிவாகக் காட்டுகின்றார்கள் ஞானிகள். அந்த அருள் ஞானத்தை நாம் பெருக்கப்படும் போது அது நமக்குப் பாதுகாப்பாக வரும்.

அருள் ஞானத்தை பெருக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…? நாம் எந்த மகரிஷிகளை எண்ணுகின்றோமோ அந்த அருள் சக்தி பெறவேண்டும் என்று உயிருடன் நினைக்கப்படும் போது உயிர் அதை உருவாக்குகிறது.

அது தான் பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன் என்பது. அறிந்துணர்ந்து செயல்படும் அந்தச் சக்தியைக் “கார்த்திகேயா…!” என்று காட்டுகின்றார்கள்.

வேதனை என்ற உணர்வை நுகர்ந்தால் தீமையின் உணர்வின் தன்மையாக நம்மை மாற்றும். அதைத் தடுக்க அருள் ஒளியை உருவாக்கும் அணுவை நமக்குள் பெருக்கினால் அது நம்மை காக்கும்…!

இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்…!