நம்முடைய தவறை நீக்குவதற்காக ஞானிகளால் வைக்கப்பட்ட ஆலயங்களில் எதை வேண்டுகிறோம்…?

Renganathan saamigal

நம்முடைய தவறை நீக்குவதற்காக ஞானிகளால் வைக்கப்பட்ட ஆலயங்களில் எதை வேண்டுகிறோம்…?

 

பல கோடிச் சரீரங்களில் தீமையை உணர்ந்து உணர்ந்து அதிலே பரிணாம வளர்ச்சி ஆகி
1.தீமையிலிருந்து விடுபட்ட உணர்வுகள்
2.தீமையிலிருந்து விடுபடும் அனைத்தையும் அறிந்திடும் அறிவாக
3.தனக்குள் தீமை வராது சேனாதிபதியாக ஆறாவது அறிவு கார்த்திகேயா என்று
4.இந்த மனித உடலில் இருக்கின்றது.

நாம் உணவாக உட்கொள்ளும் உணவில் மறைந்த நஞ்சுகளை மலமாக மாற்றும் நிலையைச் சரவணபவா… தீமைகளைச் சரணமடையச் செய்யக்கூடிய சக்தியாக கந்தா… பலவற்றையும் அறிந்து கடம்பா… உருவாக்கத் தெரிந்து கொண்டவன் கார்த்திகேயா என்று ஆறாவது அறிவின் இயல்பைக் காட்டுகின்றார்கள்.

கோபப்படுபவரை சலிப்புப்படுபவரை என்று பலவிதமான உணர்வுகளை ஒவ்வொரு நாம் நுகர்கின்றோம். வருவதை எல்லாம் அரவணைத்துக் கொள்கிறோம் அல்லவா…!

கந்தா.. கடம்பா…! நாம் எண்ணியதை எல்லாம் உருவாக்குகின்றான் கார்த்திகேயா. ஏனென்றால் நமக்குள் இதெல்லாம் எப்படி உருவாகிறது என்று தெரிந்து கொள்கின்றான்.

தீமைகளை வெல்லும் சக்தியான ஆறாவது அறிவு கார்த்திகேயா… சேனாதிபதி…! தீமை வந்தால் அதை நீக்கிடும் நிலையைக் கொண்டு வருகின்றது.

ஆனால் ஒருவன் தீமை செய்கின்றான் என்றால் அவனை அழிக்க வேண்டும் என்ற உணர்வை நுகர்ந்தோம் என்றால் ஓ…ம் நமச்சிவாய…! நம் உடலை அழிக்கும் “அணுவாக” இங்கே நுழைந்து விடுகின்றது.
1.அவனை அழிக்க வேண்டும் என்று எண்ணும் பொழுது
2.அழித்திடும் உணர்வின் தன்மை இங்கே வருகின்றது.
3.அவனைக் கொல்ல வேண்டும் என்று எண்ணினோம். நம் நல்ல எண்ணத்தை அது கொல்லும்.
4.கொல்ல வேண்டும் என்ற உணர்ச்சியைத் தூண்டும்.. அடுத்து அவனைக் கொல்லும்.
5.அவனைக் கொன்று ரசிக்கும். ரசிக்கும் உணர்வுகள் இங்கே வந்த பிற்பாடு
6.உடலுக்குள் கிருமிகளாக உருவாகி டி.பி நோயாக உருவாகும். நம்மையும் கொல்லும்…!

அப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்…?

இவனிடம் இருப்பது வேதனை. இதை முதலில் அடக்க வேண்டும். வேதனை என்ற நஞ்சை அடக்க வேண்டும் என்றால் அருள் மகரிஷிகளின் உணர்வை நம் உடலுக்குள் சேர்த்தே ஆக வேண்டும்.

மகரிஷிகளின் அருள் உணர்வை நமக்குள் சேர்க்கச் சேர்க்க அந்த நஞ்சுகள் ஒடுங்கும். ஏனென்றால் இதைப் போன்ற நஞ்சினை வென்றவர்கள் அந்த மகரிஷிகள். இதை எண்ணி நமக்குள் எடுத்துக் கொண்டால் நாம் எண்ணியதை உருவாக்குவது உயிர்.

இதைத்தான் ஒவ்வொருவரையும் ஆலயங்களில் எண்ணி எடுக்கும்படி சொல்கிறார்கள் ஞானிகள். ஆலயத்திற்குச் செல்வோர்
1.அவர் அருளைப் பெற்று
2.மற்றவர்கள் எல்லாம் நலமாக வேண்டும் என்ற எண்ணம் இங்கே தோன்றுகிறதா என்றால் இல்லை…!

நான் தவறு செய்தேன்… கொலை செய்தேன்… கொள்ளை அடிக்கிறேன்…! என்பவனும் ஆடு கோழி மாடை அறுப்பவனும் கோவிலுக்குள் போகின்றான். உண்டியலில் காணிக்கையைப் போட்டு விட்டு என்னைக் காப்பாற்றுடா…! என்று வேண்டுகின்றான்.

நான் தவறு செய்கின்றேன். நான் செய்யும் தவறுக்கு அவன் உதவி செய்யவில்லை. அதனால் அவனுக்கு இடைஞ்சல் செய்தேன் எனக்கு ஒத்து வரவில்லை அதனால் அவனைக் கொன்றேன்.

இப்படி எல்லாம் சொல்லிக் கொண்டு செய்த பாவத்திற்காக வேண்டிக் கோவிலில் அபிஷேகம் செய்து ஆராதனை செய்து என்னைக் காப்பாற்றுடா..! என்று சொன்னால் யாரும் காக்க முடியாது. அவன் எப்படிக் காப்பான்…?

“கந்தக் கோட்டத்திற்குள் அமர்ந்த கந்தவேலே…! அருள் பெரும் ஜோதி நீ… தனிப் பெரும் கருணை…!” எதனையுமே நீ அருள் பெரும் ஜோதியாக இயக்குகின்றாய். தனிப் பெரும் கருணையாக எனக்குள் உருவாக்குகின்றாய் என்று இராமலிங்க அடிகள் பாடினார்.

நாம் எண்ணியதைத்தான் உயிர் இங்கே கொடுக்கின்றது. நான் யாரிடமும் யாசிக்கக் கூடாது… யாருக்கும் நான் இல்லை என்று சொல்லக் கூடாது. அந்த அருள் தாகத்துடன் வருபவருக்கு அருள் ஞானத்தைப் போதிக்க வேண்டும் என்று வேண்டினார் அடிகளார்.

யாரிடமும் யாசகம் வாங்க மாட்டேன் என்று சொன்னவுடனே சாப்பாடு போடுவதற்கு வந்து விட்டோம். சாப்பாடு போடுகிறோம் என்றால் எல்லோரும் தான் வருகின்றார்கள்.
1.ஆனால் அவர்கள் மனதைத் திருத்த முடிகின்றதா..?
2.உடல் பசியைப் போக்க முடிகின்றது. அருள் ஞானப் பசிக்கு உணவு கிடைக்கிறதா…? இல்லை…!

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் யாம் (ஞானகுரு) அந்த அருள் ஞானத்தைக் கொடுக்கின்றோம். ஏங்கி இருக்கக் கூடிய அணுக்களுக்கு அதைக் கொடுக்கின்றோம்.
1.மெய் ஞானத்தைப் பெறவேண்டும் என்பவர்கள் தான் இங்கே வருவார்கள்.
2.அந்தப் பசியைப் போக்கும் பொழுது அருள் ஒளியின் உணர்வு உங்களுக்குள் வளர்கின்றது.
3.அதற்குத்தான் மணிக்கணக்கில் பேசுகிறோம்…!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.