YouTube VIDEOS – சாமிகள் உபதேசம்

இரவிலே நல்ல தூக்கம் இல்லாமல் போவதன் காரணம் என்ன…?
பகலில் வந்த தீமைகளை நாம் நீக்கத் தவறினால் இரவு தூக்கத்திலும் கெட்ட கனவுகள் வரும். காலையில் எழுந்தவுடனும் அதே நினைவுகள் தொடர்ந்து வந்து நம் வாழ்க்கையின் அன்றாட செயல்களைக் கெடுக்கும். சிலருக்கு இறந்தவர்களும் கனவில் வந்தார்கள்… பயமுறுத்தக்கூடிய சில உருவங்களும் வந்தது…! என்றும் சொல்வார்கள். அதை எல்லாம் மாற்ற வேண்டும் என்றால் படுக்கப் போகும் முன் அவசியம் துருவ நட்சத்திரத்தையும் சப்தரிஷி மண்டலத்தையும் குறைந்த பட்சம் அரை மணி நேரமாவது எண்ண வேண்டும். அந்த எண்ணத்துடனே தூங்கினால் இரவு முழுவதும் வான மண்டலத்தில் மிதப்பது போல் ஆனந்தமாக இருக்கும். காலையில் எழும் பொழுதும் ஒரு மகிழ்ந்த உணர்வு வரும். அன்றாடக் காரியங்கள் சீராக இருக்கும்.

சத்ரிய தர்மம்…!
நாம் நுகரும் உணர்வுகளே நம்மை ஆள்கிறது. ஒரு கக்கரவர்த்தி தன் ஆசைக்குகந்ததைத் தான் செயல்படுத்த விரும்புவான். ஒரு நாட்டின் மீது படையெடுக்க வேண்டாம்.. தனக்குக் கீழ் இருப்பவன் சொன்னால் அதை ஏற்க மாட்டான். எவன் அதைச் சொன்னானோ அவனை அகற்ற வேண்டும் என்று தான் ஆணையிடுவான். ஆக மொத்தம் சத்ரிய தர்மம் என்றால் மற்றதை அடக்கி ஆட்சி புரியும் நிலையே வருகிறது. நம் உயிரும் பத்தாவது நிலையை அடையக்கூடிய தகுதி பெற்றது தான். தசரதச் சக்கரவர்த்தி என்று இராமாயணத்தில் காட்டியுள்ளார்கள். இருந்தாலும் நமக்குள் நாம் நுகரும் உணர்வுகள் அனைத்தும் அதனதன் நிலைக்கே நம்மை ஆளத் தொடங்கினால் தீமைகளே விளைந்து விடும். அதை நாம் மாற்றிடல் வேண்டும் அல்லவா…!

நல்லவரா கெட்டவரா என்று அடுத்தவரை உற்றுப் பார்க்கலாமா…?
தினசரி வாழ்க்கையில் நாம் எத்தனையோ பேருடன் பழக நேர்கிறது. நல்லவரா கெட்டவரா என்று பார்க்கும் சந்தர்ப்பமும் உருவாகிறது. இருந்தாலும் அந்த உணர்வை அதிகமாக வளர்க்கத் தொடங்கினால் அவர்களுக்குள் எந்தத் தீமை இயக்குகிறதோ அது நமக்குள்ளும் இயக்கத் தொடங்கும். ஜோதிடம் பார்ப்பவர்களும் இதை வைத்துத் தான் அடுத்தவர் உணர்வைக் கவர்ந்து நடந்தவைகளை எல்லாம் சொல்வார்கள் ஆனால் நமக்கு அது தேவையில்லை. தீமையை நீக்கும் சக்தி தான் நமக்குத் தேவை. மற்றவர்களிடம் இருக்கும் குற்றங்களை அறிவதற்குப் பதில் அவர்கள் அதிலிருந்து விடுபடும் சக்தியை நாம் எடுத்துக் கொண்டால் நமக்குள் அந்தத் தீமைகள் வரவே வராது. தீமைகளையோ குற்றங்களையோ குறைகளையோ அறிந்து விலகிச் செல்லலாம். அதை வளர்க்கவே கூடாது. நல்லதாக வேண்டும் என்று உடனே அதைத் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

முன்னோர்களை விண் செலுத்தும் தியானப் பயிற்சியும் விளக்கமும்
அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளையும் பேரொளியையும் சப்தரிஷி மண்டலத்தின் அருள் சக்தியையும் அதிகாலை துருவ தியானத்தில் வலுவாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின் நம் முன்னோர்கள் மூதாதையர்களின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்களை அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்ய வேண்டும். அவர்கள் பிற மனித உடலில் இருந்தாலும் அங்கிருந்து வெளியே வந்தவுடன் முன்னோர்கள் விபத்தில் இறந்திருந்தாலும் தற்கொலை செய்திருந்தாலும் கூட அவர்களை விண் செலுத்த முடியும். குடும்பத்தில் வரும் பரம்பரை நோயை அறவே அகற்ற முடியும். “முழுமையான விளக்கம்…”

தியான வாசகங்களும் ஓம் ஈஸ்வரா குருதேவா… பாடலும்
தியானத்தில் சொல்லப்படும் வாசகங்களும் சாமிகள் பாடிய அன்னையும் பிதாவும்… ஓ..ம் ஈஸ்வரா… குருதேவா பாடலும்

இராமலிங்க அடிகள் சொன்ன தத்துவம்
அருள் பெரும் ஜோதி தனிப் பெரும் கருணை என்ற நிலையில் பிறரை இம்சிக்காத நிலை நான் பெறவேண்டும். தீமையை நான் பார்க்கக் கூடாது தீமைகள் எனக்குள் வரக்கூடாது என்பதே அவருடைய பிரார்த்தனை. வேகா நிலை பெற்றுப் போகாப்புனல்… அதாவது மீண்டும் இன்னொரு உடலுக்குள் சென்று பிறக்கக்கூடாது என்றார். அன்று ஓட்டல் கிடையாது. ஆகவே தர்மசாலையை அமைத்து மக்களுக்கு உணவைக் கொடுத்து ஞானத்தைப் போதிக்கும் நிலையை ஏற்படுத்தினார். அதற்காகத்தான் அன்னமிட்டாரே தவிர அன்னதானம் செய்தால் புண்ணியம் என்று சொல்லவில்லை. மக்களுக்கு மெய் ஞானத்தைக் கொடுப்பதே உண்மையான தர்மம் என்றார்.

யாம் கொடுக்கும் அருள் பிரசாதம்
குரு அருள் உங்களுக்கு என்றும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதற்கே இந்தப் பிரசாதத்தைக் கொடுக்கின்றேன். அருள் மணங்கள் கமழும். எல்லோரும் அந்த அருள் ஞானப் பிரசாதத்தைப் பெறவேண்டும் என்று நீங்கள் வேண்டுங்கள். கோவிலில் போனால் நாம் எப்படி வணங்க வேண்டும் என்பதையும் நாம் முறைப்படுத்திடல் வேண்டும். எல்லோருக்கும் நாம் வழிகாட்டியாக இருக்க வேண்டும். மற்றவரைத் தள்ளிவிட்டு நாம் மட்டும் அருளைப் பெறவேண்டும் என்ற எண்ணத்தை விட்டு விடுங்கள். எல்லோரும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று ஆசைப்படுங்கள். அதையே தியானியுங்கள்… தவமாக இருங்கள். அப்பொழுது நீங்கள் இருந்த இடத்திலிருந்தே எல்லா ஆற்றலையும் பெறும் தகுதி பெறுவீர்கள்.

எல்லோரும் நல்லவரே…!
இந்த உலக மக்கள் யாரும் தவறு செய்யவில்லை. அறியாத நிலைகளில்… சந்தர்ப்பத்தால் அவர்கள் உயர்ந்த பண்புகள் இழக்கப்பட்டு ஒளி நிலை பெறாதபடி ஆக்கி விடுகிறது. விஞ்ஞான நிலைகளும் இன்று இழி நிலைக்கே மனிதனை அழைத்துச் செல்கிறது. அதற்கு என்ன செய்ய வேண்டும்…? என்று உணர்த்தினார் ஈஸ்வரபட்டர். அதைச் செயல்படுத்தும் முன் உன் தாய் தந்தையரின் ஆசியை நீ பெற்று வா என்றார் குரு. அவர்கள் அருளால் தான் நீ அந்த மெய் ஞானத்தின் சக்தியைப் பெற முடியும் என்றார்.

வியாசர், ஆதிசங்கரர் வெளிப்படுத்திய தத்துவங்கள் எப்படி மறைந்தது…?
யாரையும் குறை காண வேண்டாம். அருள் உணர்வைப் பெருக்கினாலே போதும். மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைக்கின்றார்கள் என்பது தேவை இல்லை. அன்று வியாசர் வெளிப்படுத்திய கருத்துக்களை மந்திர ஒலிகளாக வேதங்களாக மாற்றி விட்டனர். ஆதிசங்கரர் கொடுத்த அத்வைதத் தத்துவத்தை ஏற்காத துவைதவாதிகள் அவருக்கு ஏவல் செய்தனர். ஆனால் அதிலிருந்து விடுபட்டார். இதே போல் தான் அப்பருக்கும் ஏவல் செய்தார்கள்.

இவர் மனிதரே இல்லை “ஒரு ரிஷிப் பிண்டம்”
ஒரு சமயம் ரிக் வேதம் கற்றுக் கொடுக்கும் வாத்தியார் நடந்து வந்து கொண்டிருக்கும் பொழுது அவர் குடுமியைப் பிடித்துத் தூக்கி அடிக்கத் தொடங்கினார் ஈஸ்வரபட்டர். ஏண்டா தப்புத் தப்பாக வேதத்தைச் சொல்கிறாய் என்று அவரை வாயில் வராத வார்த்தையைச் சொல்லித் திட்டினார். பின் ரிக் வேதத்தைச் சுருதி மாறாமல் மேலிருந்து கீழேயும் திருப்பிக் கீழிருந்து மேலேயும் அப்படியே பாடிக் காட்டினார் ஈஸ்வரபட்டர். மேலும் ஒவ்வொன்றும் எப்படி உருவாகிறது என்பதை ஆதியிலிருந்து விளக்கிக் கூறினார். அந்த வாத்தியார் அடியை வாங்கிக் கொண்டு பின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டு சென்றார். மறு நாள் என்னிடம் (ஞானகுரு) வந்து “இவர் ஒரு ரிஷிப் பிண்டம்… குருநாதராக நீங்கள் பெற்றது உங்கள் பாக்கியம்..” என்றார்.

சொர்க்க வாசல் என்பது எது…?
பரமபதம் என்று ஒரு விளையாட்டை ஞானிகள் உருவாக்கி மனிதன் விண்ணுலகம் செல்லும் மார்க்கத்தைத் தான் அதிலே காட்டினார்கள். சொர்க்க வாசல் என்பது அது நம் புருவ மத்தி வழி தான். அதிகாலையில் அருள் உணர்வுகளை எடுத்து குடும்பத்தில் உள்ளோர் அனைவரையும் ஒற்றுமையுடன் இணைந்து வாழச் செய்யவே புள்ளிகளை இணைத்துக் கோலமிடும் பழக்கங்களாக ஏற்படுத்தினார்கள் ஞானிகள். விளக்கைக் காட்டியதும் இருள் விலகுவது போல் இந்த வாழ்க்கையில் இருள் சூழச் செய்யும் நிலைகளிலிருந்து விடுபட விளக்கு பூஜை என்று வைத்தார்கள் ஞானிகள்.

அவனன்றி அணுவும் அசையாது – விளக்கம்
விண்ணின் ஆற்றலைக் கண்ணின் துணை கொண்டு பெற்றுப் பழகுங்கள். ஏனென்றால் கண்ணன் சங்கநாதம் ஊதிய பின் தான் குருக்ஷேத்திரப் போர். அருள் மகரிஷிகளின் அருள் உணர்வைச் சேர்த்து உங்கள் உயிருக்குள் குருக்ஷேத்திரப் போரை வழி நடத்துங்கள். உயிர் போய்விட்டால் உடனே இந்த உடல் சவமாகின்றது. சிறிது நேரமானால் நீசமாகின்றது. நீசமான உடலை எப்பொழுது அப்புறப்படுத்த வேண்டும் என்று தான் அப்பொழுது கேட்பார்கள். உயிர் இருந்தால் தான் மதிப்பு. ஆக எல்லோரும் அந்த உயிரைத் தான் மதிக்கின்றார்கள்… நீசத்தைப் பார்ப்பதில்லை. ஆகவே உங்கள் உயிரை மதித்து அருள் உணர்வை வளர்த்துப் பாருங்கள். அது உங்களுக்கு உயர்வைக் கொடுக்கும். அவனுடன் அவனாக நாம் ஒளியாகலாம்… வேகா நிலை பெறலாம். சாகாக்கலை நமக்கு வேண்டாம்.

அகக்கண் மூலம் எப்படித் தியானிக்க வேண்டும்…?
மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற உங்களுக்குச் செடிகளுக்கு உரம் ஏற்றுவது போல் ஏற்றிக் கொடுக்கின்றோம். ஈஸ்வரபட்டர் எனக்கு அப்படித்தான் கொடுத்தார். காற்றிலிருந்து ஞானிகளின் அருள் உணர்வை எல்லோரையும் எடுக்கும் பயிற்சியைக் கொடுக்கச் சொன்னார். உயிர் வழி விண்ணிலிருந்து சக்தி எடுப்பது – பிராணாயாமம்

தர்மம் செய்வது எப்படி…? என்று ஈஸ்வரபட்டர் சொன்னது
உள் உணர்வில் ஈஸ்வரபட்டர் ஞானத்தின் உணர்வுகளை எனக்குள் பாய்ச்சினார். கரையான் உண்ர்வுகளையும் அதனின் மந்திர உணர்வுகளையும் உணர்த்தினார். காளி காட்சி தெரிந்தது வைர வைடூரியங்களையும் காட்டினார். பின் தர்மம் எப்படிச் செய்ய வேண்டும் என்று அனுபவபூர்வமாக உபதேசம் கொடுத்தார். எல்லோருடைய உயிரையும் கடவுளாக மதிக்க வேண்டும் ஈசன் வீற்றிருக்கும் அந்த ஆலயங்களைத் தூய்மைப்படுத்த வேண்டும் என்றார். இந்தச் சேவையை நீ செய் என்றார்.

ஆனைமலைக் காட்டில் யானைகளுக்கு மத்தியில் பெற்ற அனுபவம்
ஞானிகள் கொடுத்த தத்துவங்களை அரசர் காலத்தில் அரசனைப் புகழ் பாடி எப்படி மாற்றினார்கள் என்பதை ஈஸ்வரபட்டர் உணர்த்தினார். ரோட்டிலே வேகமாகச் சென்று கொண்டிருக்கும் பேருந்துக்குக் குறுக்கே இழுத்துச் சென்று அதிலே சில முக்கிய அனுபவத்தையும் கொடுக்கின்றார். அதே சமயத்தில் காட்டுக்குள் அழைத்துச் சென்று பல அனுபவங்களைப் பெறச் செய்கிறார் குருநாதர். அவர் கொடுத்த சக்திகளை நல்ல வழியில் எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதையும் உணர்த்துகிறார். யானைகளுக்கு மத்தியில் சிக்க வைத்து அதிலிருந்து தப்பும் வழியையும் காட்டினார் குருநாதர். நமக்குச் சக்தி இருக்கிறது என்ற நிலையில் மற்றவர்களைத் தாக்கும் உணர்வை நாம் செயல்படுத்தக்கூடாது என்பதை நிதர்சனமாகவே காட்டினார்.

பட்சியின் உணர்வுகள் தாக்கப்பட்டு வான்மீகி ஞானம் பெற்ற நேரடி சந்தர்ப்பம்
ஒரு பட்சியை வீழ்த்திய வான்மீகியால் இரண்டாவது பட்சியை வீழ்த்த முடியாததன் காரணம் என்ன…? அதனின் பாச உணர்வு வான்மீகிக்குள் செயல்பட்டது எப்படி…? அகஸ்தியன் உணர்வை நுகரும் சந்தர்ப்பம் எப்படிக் கிடைத்தது…? இராமனைப் பற்றி எண்ணுகிறோம் ஆனால் வான்மீகி வெளிப்படுத்திய உட்பொருளை நாம் அறியவில்லை. ஈஸ்வரபட்டர் இதை எல்லாம் தெளிவாக்கினார்.

அகஸ்தியன் நடந்து சென்ற இடங்களில் உள்ள சக்திகள்
பாபநாசம் இமயமலை வட துருவம் தென் துருவம் எல்லாம் சுழன்று வந்தவர் “அகஸ்தியர்…” அவருடைய ஆற்றல்களைப் பெறும்படி செய்தார் ஈஸ்வரபட்டர்.அகஸ்தியர் தம் உணர்வுகளை ஒளியாக மாற்றி இன்றும் துருவ நட்சத்திரமாக உள்ளார். அவரைப் பின்பற்றியவர்கள் சப்தரிஷி மண்டலமாக உள்ளார்கள்.

பித்தராக இருந்த ஈஸ்வரபட்டர் என்னை ஆட்கொண்ட முறை
என் (ஞானகுரு) மனைவியைக் காப்பாற்றினார் குருநாதர். அதன் வழி அவரை நான் நம்பினேன். தெய்வங்களைப் பற்றி உணர்த்தினார். அதே சமயத்தில் வாழும் மனிதர்கள் எல்லோரும் சாப அலைகளில் சிக்கி எப்படிச் சிரமப்படுகிறார்கள்..? மீண்டும் மீண்டும் உடல் பெறும் நிலைகளையும் சாகாக்கலையைப் பற்றியும் உணர்த்தினார்.

உடலுக்குள் இருக்கும் அனைத்திற்கும் உயிரே “குரு…”
உயிரான குருவின் துணை கொண்டு அந்த மாமகரிஷிகளின் அருள் சக்திகளை நாம் எளிதில் பெறலாம். ஏனென்றால் படைக்கப்பட்ட காவியங்கள் அனைத்திலுமே இந்தப் பேருண்மை காட்டப்பட்டுள்ளது.

ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா… என்னை ஆட்கொண்டருள்வாய் கருணைஸ்வரூபா…!
உயிருடன் நாம் இணைந்திட… உயிர் வேறல்ல நாம் வேறல்ல..! என்ற நிலையை அடைந்திட… ஈஸ்வரபட்டர் கொடுத்த பாடலும் விளக்கமும்

கூட்டுத் தியானத்தின் சக்தி சாதாரணமானதல்ல…!
ஒரு தேரை பலர் சேர்ந்து இழுத்துச் செல்வது போல் நாம் பெறும் சக்தியை எல்லோரும் பெறவேண்டும் என்று மானசீகமாக எண்ணினால் மகரிஷிகளின் அருளை எளிதில் பெறும் தகுதியை நாம் பெறுகின்றோம். மகரிஷிகளுடன் நாம் ஒன்றுகின்றோம்.

குருநாதர் எமக்கு எப்படிச் சக்தி கொடுத்தார் ஞானகுரு
ஈஸ்வரபட்டர் அவர் பெற்ற… அவர் கண்டுணர்ந்த மெய் உணர்வுகளை…என்னை (ஞானகுரு) அடித்து உதைத்துத் தான் கொடுத்தார். துன்பத்தை ஏற்படுத்தி உண்மைகளை உணரச் செய்தார். ஆனால் உங்களுக்குத் துன்பம் வரும் பொழுது இந்த உபதேசத்தின் உணர்வுகளை நினைவுக்குக் கொண்டு வாருங்கள் என்று சொல்கிறோம். அப்பொழுதெல்லாம் உங்களால் அந்த மகரிஷிகளின் ஆற்றல்களை நிச்சயம் பெற முடியும் என்று உறுதியாகக் கூறுகின்றோம்

துன்பம் வந்தால் அதை உடனடியாக நீக்கும் சக்தி கொடுக்கின்றோம்
திரும்பத் திரும்ப உங்களுக்குள் மகரிஷிகளின் அருள் உணர்வை ஆழமாகப் பதிவு செய்து கொண்டேயிருக்கின்றோம். துன்பத்தை மாற்றி இன்பமாக்கும் சக்தியைத்தான் உங்களுக்குள் பதிவு செய்கிறோம். ஈஸ்வரா என்று புருவ மத்தியில் எண்ணினாலே உங்களுக்கு அந்தச் சக்தி கிடைக்கும்படி செய்கிறோம் – ஞானகுரு

முரடனாக இருந்த வான்மீகி எப்படி ஞானியாக மாறினான்…?
ஈஸ்வரபட்டர் எம்மைக் (ஞானகுரு) காட்டுக்குள் அழைத்துச் சென்று பல அனுபவங்களைக் கொடுத்தார். அங்கே வைத்து வான்மீகி ஞானம் பெற்றதையும் உணர்த்தினார். ஒரு பட்சியின் ரூபமாகப் பாச உணர்வு கொண்டு மனிதனின் இருளைப் போக்கிக் காக்கும் உணர்வை எப்படிப் பெற்றான்… ஞானியாக மாறியது எவ்வாறு…? என்றார் குருநாதர்.

உயிர் எப்படிக் கடவுள் ஆகின்றது…?
உயிரை நாம் நேசிக்க வேண்டும்… மதிக்க வேண்டும் என்று ஈஸ்வரபட்டர் எனக்கு (ஞானகுரு) உணர்த்தினார். மேலும் எந்த மந்திரங்களையும் சொல்லாதே என்றும் தெளிவாக்கினார். அருள் உணர்வைப் பெற்று உயிருடன் ஒன்றி ஒளியாக வேண்டும் என்றார்.

ஆத்ம சுத்தி உபதேசம்
தீமையை நீக்கும் அருள் உணர்வுகளை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்கின்றோம். இந்தப் பதிவை மீண்டும் எண்ணினால் உங்களுக்கு அந்த ஆத்ம சுத்தி செய்யும் வலு கூடும்.

கௌரவமாக வாழ்ந்த எனக்குக் குருநாதர் கொடுத்த உபதேசம்
தீமைகளைப் பிளக்கும் ஆற்றலை எம்மைச் “சாக்கடையின் அருகில் அமர வைத்துத்தான்” ஈஸ்வரபட்டர் கொடுத்தார். இந்தக் காற்று மண்டலத்தில் மறைந்துள்ள மெய் ஞானிகளின் உணர்வுகளை எப்படி நுகர வேண்டும்…? உயிருடன் ஒன்றி ஒளியாக எப்படி நிலைத்திருக்க வேண்டும்…? என்பதையும் தெளிவாக உணர்த்தினார் குருநாதர்.

போகர் பெற்ற தாவர இன மூலிகைகளின் ஆற்றல்கள்
ஒவ்வொரு தாவர இனச் சத்தையும் நுகர்ந்தறிந்தவன் போகன். அந்த ஆற்றலையும் தனக்குள் பெருக்கிக் கொண்டான். அகஸ்தியன் பெற்ற சக்திகளைப் போகன் பெற்றுத் தன் உயிரான்மாவை ஒளியாக மாற்றினான். அவன் பெற்ற ஆற்றலை நாமும் பெறுதல் வேண்டும்.

அகஸ்தியன் தாய் தந்தையர் செயல்படுத்திய நோய் நீக்கும் ஆற்றல்கள்
பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியன் தாய் தந்தையர் பல தாவர இன மூலிகைகளையும் நஞ்சினை வென்றிடும் அற்புத பச்சிலைகளையும் அறிந்தவர்கள். அதை வைத்து அக்கால மக்களின் நோயை நீக்கினார்கள். நோயை நீக்கி மகிழ்ச்சி அடையச் செய்தார்கள். அந்த மகிழ்ச்சியைத் தங்களுக்குள்ளும் வளர்த்துக் கொண்டார்கள். அந்தத் தாய் தந்தையருக்கு ஆற்றல் கொண்ட குழந்தையாக உருவானவர் தான் அகஸ்தியர்.

குரு விண் சென்ற உணர்வு
குருநாதர் (ஈஸ்வரபட்டர்) ஒளியின் சுடராக மாறி யாருடைய ஈர்ப்பிலும் சிக்காது நான் எப்படி விண் செல்கிறேன் பார் என்று என்னைக் (ஞானகுரு) காணும்படிச் செய்தார்.

விஞ்ஞான உலகிலிருந்து மீண்டு கல்கி செல்லும் வழி
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் விண் சென்ற உணர்வுகளை எடுத்து வளர்த்துக் கொண்டு விஞ்ஞான உலகில் வந்த விஷத்தன்மைகளை வென்று ஒளியின் சரீரம் பெற்று விண்ணுலகம் செல்ல வேண்டும்.

நரசிம்ம அவதாரம் விளக்கம்
கெட்டதை வகுந்து நல்லதை நாம் உருவக்க வேண்டும். தீமைகள் வரும் பொழுது நாம் நரசிம்ம அவதாரமாக ஆக வேண்டும். தீமை செய்பவர்களை வீழ்த்த அல்ல..! தீமையான உணர்வுகளைப் பிளத்தல் வேண்டும்.

பல எண்ணங்கள் பலராமன் அவதாரம்
பல எண்ணங்களில் சுழலும் நாம் அதைச் சமப்படுத்திச் சீராக்க வேண்டும். அதற்கு ஒரு சக்தி தேவை. அதை அறிதல் வேண்டும்

உடல் என்ற கூட்டை விட்டு நாம் எப்படி விண் செல்ல வேண்டும்…?
பட்டுப் புழு கூட்டைக் கட்டி அதிலிருந்து விடுபட வலுவான எண்ணங்களை எடுத்துப் பறக்கும் இறக்கைகள் முளைத்து பறக்கும் பூச்சியாக வருகின்றதோ அதைப் போல் எந்த அருள் ஞானியின் உணர்வைச் நாம் சேர்க்கின்றோமோ அவன் உணர்வு கொண்டு பிறவியில்லா நிலையை அடைய முடியும்.

இன்றைய உலகில் தலைக்கு மேல் கத்தி தொங்குவது போல் தான் வாழ்க்கை உள்ளது
விஞ்ஞானத்தின் வளர்ச்சியாலும் அதற்கு நாம் அடிமைப்பட்டு வாழ்வதாலும் மனிதர்கள் ஒருவருக்கொருவர் தாக்கி அழித்திடும் நிலையே உள்ளது. உலகில் உள்ள மதங்கள் மக்களை நல்வழியில் நடக்க வேண்டும் என்று போதித்தாலும் அதை யாரும் கடைப்பிடிப்பதில்லை.

தெய்வங்கள் காட்சி தருமா…? அதனின் உண்மைகள் என்ன…?
பல பக்தி கொண்டவர்களின் உணர்வுகளை நாம் நுகரப்படும் பொழுது அதனின் அலைகள் நமக்குள் படமாகவும்… பேசுவது போலவும் காட்சிகள் தெரியும்.

காலையில் எழுந்ததும் செய்ய வேண்டிய தியானம்
காலையில் கண் விழித்ததும் அருள் மகரிஷிகளின் உணர்வை ஒரு பத்து நிமிடம் எடுத்துப் பாருங்கள். தீமைகளிலிருந்து விடுபடும்பல அற்புத சக்திகள் உங்களுக்குள் உருவாகும்.

நீங்கள் ஒவ்வொருவரும் அகஸ்தியராக மாறவேண்டும்… மாற முடியும்..!
மனிதனுடைய கடைசி எல்லை எது…? அழியாப் பேரின்பச் சொத்து எது…? அந்த எல்லையைத் தெரிந்த ஞானிகள் நாம் அனைவரும் எதைப் பெறவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்…? உடலை விட்டுப் பிரியும் ஆன்மாக்களை விண் செலுத்தி நாமும் விண் செல்ல வேண்டும்.

உடலை விட்டுப் பிரிந்து சென்ற கணவரின் உயிரான்மாவை விண் செலுத்தும் முறை
கணவர் நம்முடன் இல்லையே என்று எண்ணக் கூடாது. அகஸ்தியன் அவர் மனைவியுடன் ஒரு உயிரும் ஒன்றி வாழ்வது போல் நாங்கள் வாழ வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும். நமக்கு அழியாச் சொத்து அது தான்…!

நாரதன் என்ற உணர்வின் இயக்கம்
தீமை செய்பவர்களுக்கு நாம் அருள் உணர்வைப் பாய்ச்சினால் அங்கே பகைமையை அகற்றச் செய்யும். உண்மையை உணர்த்தும்.

புரை உணர்வின் இயக்கம்
சந்தேக உணர்வினால் ஏற்படும் பகைமை உணர்வுகளை நாம் எப்படி மாற்ற வேண்டும்…?

வாழ்க்கையில் வரும் சோர்வைப் போக்கும் வழி
நம்முடைய சுவாச உணர்வுகளால் உடலுக்குள் சில உபாதைகள் ஏற்படுகின்றது. சில உயிரினங்கள் வீட்டுக்குள் உருவாகும் நிலையும் ஏற்படுகின்து. அதை மாற்ற வேண்டும் என்றால் மகரிஷிகளின் அருள் உணர்வு கொண்டு இப்படித்தான் (நல்லதாக) இருக்க வேண்டும் என்று வலுப்படுத்த வேண்டும்…?

நம் உடலில் இருக்கும் 5 6 லிட்டர் இரத்தத்தைப் பரிசுத்தமாக வைக்க வேண்டும்
நம் உடலில் உள்ள இரத்தங்களில் நட்பு கொண்ட உணர்வுகளை உருவாக்க வேண்டும். அதனால் தான் இராமன் குகனை முதலில் நட்பாக்கிக் கொண்டான் என்று வான்மீகி – இராமாயணத்தில் குறிப்பிடுள்ளார்.

துருவ தியானத்தில் கவரும் சக்தியின் விளக்கம்
அகஸ்தியன் பெற்ற அருள் மணங்களைக் கவருங்கள். துருவ நட்சத்திரத்தின் சக்தியையும் சப்தரிஷி மண்டலங்களின் சக்தியையும் கவருங்கள். அந்த நேரத்தில் கிடைக்கும் சக்தியைப் பற்றி விளக்கமாகத் தெரிந்து கொள்ளுங்கள்

இராமகிருஷ்ண பரமகம்சரும் விவேகானந்தரும் ஞானம் பெற்ற நிலைகள்
இராமகிருஷ்ணர் பெற்ற ஆற்றல்கள் எப்படிப்பட்டது…? விவேகானந்தர் அவரிடம் கடவுளைப் பற்றி எப்படித் தெரிந்து கொண்டார்….? சில அகோரிகளின் செயல்கள்

நாடி சாஸ்திரத்தின் உண்மை நிலைகள்
அகஸ்தியர் நாடி விசுவாமித்திரர் நாடி என்றும் மந்திரங்களைச் சொல்லி யாகம் வளர்ப்பதும் போன்ற நிலைகள் பற்றிய தெளிவான விளக்கம்

வியாசர் சக்தி பெற்றதும் அத்திரி பிருகு புஜண்டகர் அவர்களின் நிலையும்
அகஸ்தியர் பெற்ற உண்மைகளை வியாசர் எப்படிப் பெற்றார்..? அவர் ஞானம் பெற்ற சந்தர்ப்பம் எது…? அவர் கண்டதை பின் வந்த பிருகு எப்படிப் பெற்றார் என்ன ஆனார்…?

துருவ நட்சத்திரத்துடன் ஐக்கியமாகுங்கள்

சிவன் ராத்திரி

அகஸ்திய மாமகரிஷி -1

ஓசோன் திரையை அடைக்க முடியும்
(துருவ வழியில் மகரிஷிகளின் உணர்வைக் கவர்ந்து ஓசோன் ஓட்டையை அடைக்க முடியும்)

துருவ நட்சத்திரம் – மின்னல் – 27 நட்சத்திரம்
ஒரு நொடிக்குள் உணர்வை ஒளியாக்கும் துருவ நட்சத்திரத்தின் ஆற்றல். இருளை நீக்கி ஒளி ஒளி பெறும் ஆற்றல்

புருவ மத்தி தியானம் – THIRD EYE
புருவ மத்தியில் துருவ நட்சத்திரத்தை எண்ணி தீமைகள் புகாது அடைத்துப் பழக வேண்டும்.

போஸ்ட் கம்பியில் கல்லைத் தட்டுகிறார் குருநாதர்
எல்லோரும் நல்லவராக வேண்டும் என்ற பித்து எனக்கு என்று சொல்கிறார் குருநாதர்

முருகன் சிலையை போகர் உருவாக்கிய உண்மையின் நிலைகள்
நாம் எடுக்க வேண்டிய உறுதிமொழி
மகரிஷிகளின் துணை கொண்டு அருள் ஒளியின் சுடரை நமக்குள் உருவாக்க வேண்டும்.

அகக்கண் தியானம்
உட்கார்ந்த இடத்திலிருந்தே அகண்ட அண்டத்தை அறிந்த அகஸ்தியனின் ஆற்றலைப் பெறும் தியானம்

தியானம் செய்ய வேண்டிய முறை
எந்த இடத்திலும் எந்தச் சூழ்நிலையிலும் இந்தத் தியானத்தைச் செய்ய முடியும். ஆற்றல்மிக்க சக்திகளை நமக்குள் சேர்த்து நம்மை நாம் காத்திடும் தியான பயிற்சி

தீமையை நீக்கும் சக்தி
தீமை வரும் போது நம் ஆன்மாவைச் சுத்தப்படுத்தி தீமைகளைப் பிளக்கும் ஆற்றல்

ஒளி நிலை தியானம்
ஒளிப் பிளம்பாக நீங்கள் மாற முடியும். உங்கள் ஆன்மா ஒளியாக மாறும். உங்களைச் சுற்றி ஒளி வட்டம் பெருகும்.அழியா ஓளிச் சரீரம் பெறுங்கள்.

மின்சார தியானம் – நோய் நீக்கும் ஆற்றல்
உங்கள் உடலில் சர்க்கரைச் சத்தோ இரத்தக் கொதிப்போ வாத நோயோ, ஆஸ்மா நோயோ மூல நோயோ, இருதய நோயோ இதைப் போன்று இருந்தால் அதில் எல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தி மின்சாரம் பாய்ந்தது போலப் பாய்ந்து அந்த உறுப்புகள் சீராக இயங்கத் தொடங்கும்.

பிராணாயாமம்
“தம் கட்டி” துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை சுவாசத்தின் மூலமாக நம் உடலில் எல்லா அணுக்களையும் பெற்ச் செய்யும் தியானம்.
தீமைகளை நீக்கலாம், எத்தகைய கொடிய நோயையும் நீக்கலாம், ஒளிசக்தியைக் கூட்டலாம், துருவ நட்சத்திரத்துடன் ஒன்றி வாழலாம்

சப்தரிஷிகள்
சப்தரிஷிகள் உபதேசித்து உணர்த்திய அருள் வழி எங்கள் வாழ்க்கையில் நாங்கள் கடைப்பிடித்திட அருள்வாய் ஈஸ்வரா

என்னைக் “கூடிய சீக்கிரமே.. பார்ப்பாய்…!” என்றார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்

உடலிலுள்ள இரத்தத்தைப் பரிசுத்தப்படுத்தும் தியானம் (DIALYSIS)

உயிர் வழி சுவாசம்

Leave a Reply