நாம் எண்ணும் நல்ல குணங்களை நம்மைக் காக்கும் தெய்வமாகத் துதிக்க வேண்டும்… நாம் பார்க்கும் அனவைரையும் மதிக்க வேண்டும்..! ஏன்…?

auspicious-time

நாம் எண்ணும் நல்ல குணங்களை நம்மைக் காக்கும் தெய்வமாகத் துதிக்க வேண்டும்… நாம் பார்க்கும் அனவைரையும் மதிக்க வேண்டும்..! ஏன்…?

 

தினசரி வாழ்க்கையில் எத்தனையோ பேரை நாம் பார்க்க நேர்கின்றது. அவர்களுடன் பழகவும் நேர்கின்றது. இருந்தாலும் அவர்களுடன் பழகும் பொழுது சிலரின் செயலைப் பார்த்தவுடன் நமக்கு வெறுப்பு வந்து விடுகின்றது.

அப்படி வந்தால் நம்முடைய காரியங்கள் தடைப்படுகின்றது. கோபமும் எரிச்சலும் ஆத்திரமும் வேதனையும் வருகின்றது. இதை எப்படி மாற்றுவது…?

நம்முடைய குருநாதர் காட்டிய அருள் வழியில் நாம் பார்க்கும் அனைவரையும் மதித்துப் பழக வேண்டும். ஆகாதவர்களைப் பார்க்கும் போது நாம் என்ன செய்கிறோம்…?
1.போகிறான் பார்… அன்றைக்கு என்னென்ன செய்தான்…?
2.இப்பொழுது என்ன செய்கிறான் பார்…! ஒழுங்காக இருக்கின்றானா பார்…! என்ற வகையில்
3.அவர்களைப் பார்த்தாலே நமக்குப் பிடிக்காமல் இருக்கும்.
4.அவர்களை நாம் மதிப்பற்ற நிலைகள் பார்க்கிறோம்.
5.மதிப்பற்ற உணர்வுகள் நமக்குள் வரும் போது நம் நல்ல குணங்களை நாமே மதிக்காத நிலை வருகிறது.

அந்த உணர்வின் தன்மை நமக்குள் நம் இரத்த நாளங்களில் இருக்கும் போது நல்ல அணுக்களுக்குச் சேரும் இரத்த நாளங்களில் கலந்து இதற்கும் அதற்கும் வித்தியாசமான கலர்கள் மாறும். நம் உடலிலுள்ள நல்ல அணுக்கள் அதை ஏற்றுக் கொள்ளும் தன்மை வராது.

1.நாம் எப்போதுமே யார் எந்த நிலையில் தவறு செய்தாலும் – அவர்களுக்கும்
2.அந்த ஈசன் வீற்றிருக்கும் இடத்திலே நல்ல உணர்வுகள் தோன்ற வேண்டும்… நல்ல நிலையில் வர வேண்டும் என்று
3.மனதிற்குள் இந்த உணர்வை எடுத்துச் சேர்த்து கொண்டே வர வேண்டும்.
4.இப்படி எடுக்கும் அருள் உணர்வுகள் நம்மைக் காக்கும் சக்தியாக வரும்.

இதை எதற்காகச் சொல்கிறோம் என்று தெரிந்து கொள்வது மிகவும் நல்லது…! உதாரணமாக நாம் வீட்டு உபயோகத்திற்காக வைத்திருக்கும் தண்ணீர் அது உப்புத் தண்ணீராக இருந்தால் அங்கே சில வித்தியாசமான நிலைகள் இருக்கும். உப்பு படிந்து (SCALE) அழுக்காக இருப்பதைக் காணலாம்.

ஆனால் நல்ல தண்ணீரை உபயோகித்தால் அந்த இடங்களில் இந்த அழுக்கின் தன்மை அதிகமாக இருக்காது. எல்லாமே ஓரளவிற்குச் சுத்தமாக இருக்கும். இதே போலத்தான்
1.நாம் சுவாசிக்கும் உணர்வுகளுக்குள் நல்ல உணர்வின் தன்மையாக வரப்படும் போது
2.அது இரத்த நாளங்களில் கலந்து இருதயப் பகுதிக்கு வரும் சமயம் உறையும் தன்மை வராது.
3.அதனால் தெளிவாக மூச்சு விடும் தன்மை வருகிறது.

ஏனென்றால் நல்ல உணர்வை எடுக்கும் நிலையில் தனக்குள் வடிகட்டிய உணர்வின் தன்மையாக வருகின்றது. அப்பொழுது துடிப்பின் நிலை சீராகும் போது FILTER ஆகி அங்கே ஏற்படும் வெப்பத்தின் நிலைகளால் வரும் தீமைகளைப் பிரிக்கும் தன்மை வருகிறது.

ஆனால் எதிர்மறையான உணர்வின் மோதல்களால் துடிப்பின் நிலைகள் கூடி அந்த வெப்பத்தின் தன்மை அதிகரிக்கும் போது இரத்தம் போகும் பாதைகளில் உறையும் தன்மை அதிகரிக்கும்.

பாத்திரத்தில் தண்ணீரை விட்டு மற்ற பொருள்களைப் போட்டு நெருப்பை வைத்துத் தொடர்ந்து சூடாக்கும் போது பொருள்கள் உறைந்து போகிறது.

அதே போல சுவாசிக்கும் தீமையான உணர்வுகள் இரத்தத்தின் வழி வரும் தன்மையில் வெப்பமாகி இதயத்தில் பிரிக்கும் போது எல்லாம் உறையும் தன்மை வருகிறது.

1.இதெல்லாம் நாம் எடுத்துக் கொண்ட உணர்விற்கொப்ப
2.உணர்ச்சியின் வேக துடிப்பு ஆங்காங்கு நடக்கும் நிகழ்ச்சிகளில் ஏற்படக்கூடிய
3.அந்த அணுக்களின் தன்மை தனக்குள் பெருக்கும் நிலை.

அணுக்களால் நுகரும் இந்த உணர்வின் ஆவித் தன்மை கவரப்படும் போது அது உணவாக அந்த அணுக்களுக்குள் உள் சென்று வெளி வரும் போது தசைகளாக மாறுகின்றது.

இவையெல்லாம் அதனதன் உணர்வுகொப்பப் பிரித்து நம் உடல் உறுப்புகள் இப்படிப் பல கோடி அணுக்களால் உருவாக்கப்பட்டது. அதன் உணர்வின் மலம் தான் நம்முடைய உடல்.

மனித உருவாகப் பெற்றாலும் அதிலே நல்ல அணுக்கள் உற்பத்தியானால் நல்ல மலங்கள் உருவாகும். நல்ல உடலாக மாறும். நல்ல உணர்ச்சிகள் உருவாகும். ஆகவே இவையெல்லாம் உருவாக்குவது நம் உயிரே.

உணர்வின் இயக்கத்தால் அதன் நிலைகளை மாற்றி அதற்குத்தக்க நம் உறுப்புக்களாக மாற்றுகின்றது.
1.கோபமான உணர்வை நுகர்ந்தால் கோபத்தின் உணர்ச்சிகளை ஊட்டும்.
2.வேதனை என்ற உணர்வை நுகர்ந்தால் வேதனை என்ற உணர்ச்சியை ஊட்டும்.
3.அதன் உணர்ச்சிகொப்ப நம் எண்ணம் செயல் வரும்.
4.உறுப்புகளில் அந்த உணர்வின் தன்மையை இது மாற்றும்.

ஆகவே தான் நம்மை ஆளும் ஆண்டவனுக்கு நாம் நல்ல உணர்வுகளை நுகர்ந்து ஆராதனை செய்ய வேண்டும்.
1.மலரைப் போல மணமும் மகிழ்ந்து வாழும் சக்தியும்
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று
3.உயிரான ஈசனுக்கு நாம் ஆராதனை செய்ய வேண்டும்.

அதே சமயத்தில் நாம் எண்ணும் நல்ல குணங்களை எல்லாம் நம்மைக் காக்கும் தெய்வமாக மதிக்க வேண்டும்.
1.அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமான அதனின் உணர்வை நம் உடலிலே சேர்க்கும் போது
2.நல்ல குணங்களை உருவாக்கும் அணுத் தன்மையாக வருகிறது.
3.அதுவே தெய்வமாக நம்மை காக்கிறது.

அதன் வழி கடைப்பிடித்து அந்த நல்ல சொற்களை மற்றவர்களுக்குச் சொல்லும் போது அவர்களும் நமக்கு உதவி செய்யும் அதே நல்ல உணர்வுகள் கொண்டு நம்மை அணுகி வருவார்கள்.

ஆனால் வெறுப்புணர்வு கொண்டு நாம் சொல்லும் போது நம் உடலிலுள்ள நல்ல அணுக்களும் வெறுப்பின் தன்மை அடைகிறது.

அதே வெறுப்பான சொல்களை நாம் சொல்லும் போது நண்பர்கள் கேட்டால் அவர்களுக்குள்ளும் வெறுப்பின் தன்மை உருவாகி நம் வாழ்க்கையே எதிர் நிலையான உணர்வுகளை நமக்குள் உருவாக்குகிறது. இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் இந்த உணர்வுகள் எல்லாம் ஒரு சொல்லாக இருக்கலாம். அந்த ஒரு சொல்லுக்குள் இத்தனையும் அடங்கியுள்ளது.

வாழ்க்கையில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய அறநெறிகள் இவை…!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.