நம்மை மெய் ஞானியாக… மகரிஷியாக… ஆக்கச் செய்யும் பரிபாஷைகள்…!

guruji blessings

நம்மை மெய் ஞானியாக… மகரிஷியாக… ஆக்கச் செய்யும் பரிபாஷைகள்…!

 

சாமிகள் (ஞானகுரு) உபதேசம் கொடுக்கும் பொழுது அதிகமாக உபயோகப்படுத்தும் பரிபாஷைகளில் (உபதேசத்தில் அடிக்கடி வெளிப்படுத்தும் சொற்கள்)
1.”தன்மை” என்று இணைத்துப் பேசுவார்
2.”நிலைகள்” என்று இணைத்துப் பேசுவார்
3.சுமார் 15 நிமிடம் உபதேசத்தில் குறைந்தது 20 – 50 தடவை இதை உபயோகிப்பார்.
4.இது போக சில பரிபாஷைகள் ஒரு “இது… ஒரு அது”
5.அதே போல ஒரு… “இதை… அதை…” என்றும் சொல்வார்.
6.”ஆக..” “ஆகவே…” “நமக்குள்.., தனக்குள்…” என்றும் நிறையச் சொல்வார்.
7.இதற்கு முழுமையான அர்த்தங்களை அவரை எண்ணித் தியானித்தால் முழுவதும் தெரிந்து கொள்ள முடியும்.

எனக்குத் தெரிந்ததைச் சொல்கிறேன்.

27 நட்சத்திரத்தின் ஆற்றல்கள் கொண்டு தான் எல்லாமே இந்தப் பிரபஞ்சத்திற்குள் கலவைகள் ஆகின்றது. ஒன்று ஏற்றுக் கொள்ளும் ஒன்று ஏற்றுக் கொள்ளாது.

இப்படிப் பல கலவைகள் மாறி மாறி… “சில காரணங்களுக்கு ஒத்துப் போவதும் சில காரணங்களுக்காக ஒத்துப் போகாதுமாக…!” இப்படி மாறி மாறி எண்ணத்தில் எண்ண முடியாத கலவைகள் ஒவ்வொரு நொடிப் பொழுதும் மாற்றங்கள் நமக்குள்ளும் சரி எல்லாவற்றிலும் சரி ஆகிக் கொண்டேயுள்ளது.

1.50 வருடத்திற்கு (1970க்கு முன்னாடி) முன்னால் ஞானகுரு சொன்ன உபதேசக் கருத்துக்களும்
2.தற்சமயம் 2019ல் வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் உபதேசக் கருத்துக்களும்
3.பல கோடி கோடி கோடி ஆண்டுகளுக்கு முன்னாடி காலமே இல்லாத நிலையில் அந்த மெய் ஞானிகள் கண்டுணர்ந்த பேருண்மைகளும்
4.எல்லாவற்றையும் இணைத்து அதனுடன் நம்மையும் இணைக்கும் தன்மைக்கு
5.எல்லாவற்றுக்கும் பொருந்தும் தன்மைக்குத்தான் இந்தப் பரிபாஷைகள் உதவி செய்யும்.

யார் இந்த உபதேசத்தைக் கேட்டாலும்… “எனக்குத்தான் குருநாதர் இதைச் சொல்கிறார்…! எனக்காக வேண்டித்தான் சொல்கிறார்…! எனக்கு மட்டுமே தான் இதைச் சொல்கிறார்…! என்று அது இணைத்துச் சொல்ல வைக்கும்.

அது தான் குருவின் வேலை.

சாமிகள் தன் உபதேச வாயிலாக வெளிப்படுத்தும் பொழுது மெய் ஞானிகள் உணர்வை மட்டும் நான் சொல்லவில்லை…!
1.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் 27 நட்சத்திரத்தின் ஆற்றலை எனக்குக் காட்டி
2.அந்தச் சக்தி வாய்ந்த அந்த ஆற்றல்களை எம்மைத் தொடச் செய்து
3.அந்த உணர்வுகளை எப்படிச் சேர்த்துக் கொள்ள வேண்டும்…? என்று உணர்த்தி அதை எம்மைப் பெறும்படி செய்தார்.

மேலும் அந்த 27 நட்சத்திரத்தின் ஆற்றல்களை ஞானிகளின் உணர்வுடன் எந்த அளவில் நீ கலக்க வேண்டும்…? எந்த அளவு கலந்து மற்றவர்களுக்கு அருள் ஞான வித்தாக ஊன்ற வேண்டும்…? எப்படி ஞானிகளின் உணர்வை உன்னை நாடி வருபவர்களுக்குள் விளையச் செய்ய வேண்டும்…? என்று மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தெளிவாகக் காட்டினார். அவர் காட்டிய அருள் வழியில் தான் யாம் உபதேசிக்கின்றோம் என்கிறார் சாமிகள் (ஞானகுரு)

தன்மை… நிலைகள்… அது… இது… அதை… இதை… ஆக… நமக்குள்… தனக்குள்… இப்படி சாமிகள் உபதேச வாயிலாக வரும் இந்த ஒலிகள் சொல்லாக ஞானகுரு வெளிப்படுத்தும் பொழுது
1.அது நன்மை செய்பவனை ஞானியாக ஆக்க அவன் நல்லதுடன் கலந்து இயக்கும்.
2.அவன் வைத்திருக்கும் நல்லது மூலமாகவே அவன் வளர்வான்
3.அந்த நல்லதுக்கு உற்சாகம் ஊட்டி அவனைச் சிறுகச் சிறுகத் தெளிவாக்கி
4.அவன் வைத்திருப்பது நல்லது தானா,,,? இல்லையா? எது நல்லது…? எது கெட்டது ? என்று அவன் வழியிலேயே அவனை உணரும்படிச் செய்யும்.
5.இதைப் போன்று தான் கெட்டது வைத்திருப்பவனை ஞானியாக்க அவன் வைத்திருக்கும் கெட்டதுடன் கலந்து இயக்கும்
6.அந்தக் கெட்டது மூலமாக அவன் வளர்வான்.
7.அவனுக்கும் உற்சாகத்தை ஊட்டி அவனையும் கெட்டது எது…? நல்லது எது…? என்று அந்தக் கெட்டது மூலமாகவே உணரச் செய்து அவனையும் ஞானியாக்கும்.

அதற்குத்தான் இந்த ஒலியின் ஓசைகள் தன்மை/நிலைகள் எல்லாம்.

1.படித்தவனுக்கும் படிக்காதவனுக்கும்
2.பிடித்தவனுக்கும் பிடிக்காதவனுக்கும்
3.நல்லவனுக்கும் கெட்டவனுக்கும்
4,தெரிய வேண்டும் என்று எண்ணுபவனுக்கும் எனக்கு எல்லாம் தெரியும் என்று சொல்பவனுக்கும்
5.இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம் – எல்லோருக்கும் பொருந்தும்படியான உபதேசமாக அது அமைவதே அந்த ஒலிகள்.

அதாவது இப்படியும் இருக்கலாம்… அப்படியும் இருக்கலாம்… எப்படியும் இருக்கலாம்…! என்று எண்ணச் செய்துவிட்டு கடைசியில்
1.இப்படி இருந்தால்… இப்படித்தான் ஆகும்…! என்ற மெய் ஞானிகள் கண்டுணர்ந்த மூலத்தை அறியச் செய்யும் பரிபாஷைகள் அவைகள்.
2.இது தான் எனக்குத் தெரிந்தது என்னுடைய அனுபவத்தில்

இன்னும் நிறைய இருக்கின்றது அதையெல்லாம் எழுத்தில் பதிவு செய்ய முடியாது – அது “ஞான குருவின் உபதேச… BODY LANGUAGE” – அதைப் பிடித்தால்… நுகர்ந்தால்… கவர்ந்தால்… சுவாசித்தால்… மகரிஷியுடன் மகரிஷியாக நாமும் அவர்களுடன் ஐக்கியமாகலாம்.

ஞானகுருவின் உபதேசத்தின் மூலமாக நாம் எளிதில் ஞானியாக வளர முடியும். விண்ணின் ஆற்றலைப் பெற முடியும்.

ஆரோக்கியமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கும் திடீரென்று இருதய அடைப்பு சிறுநீரகம் செயலிழப்பு போன்றவைகள் ஏற்படுவதன் காரணம் என்ன…? (HEART ATTACK AND KIDNEY FAILURE)

route for sapdharihi mandalam

ஆரோக்கியமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கும் திடீரென்று இருதய அடைப்பு சிறுநீரகம் செயலிழப்பு போன்றவைகள் ஏற்படுவதன் காரணம் என்ன…? (HEART ATTACK AND KIDNEY FAILURE)

 

உயிரணு என்று சொல்கின்றோம். அணுக்கள் என்று சொல்கின்றோம். ஜீவ அணுக்கள் என்று சொல்கின்றோம். ஜீவ ஆன்மாக்கள் என்று சொல்கிறோம். இது பற்றிய விளக்கங்களை நாம் அறிந்து கொள்வது நல்லது.

1.வானவீதியில் முதலில் உருவானது உயிரணு
2.நாம் என்னென்ன குணங்களை எண்ணுகிறோமோ அவை எல்லாம் அணுவாக மாற்றுகின்றது.
3.நம் உடலில் சேர்த்து அது மீண்டும் நம் உணர்வுடன் சேர்ந்து வளர்ச்சியில்
4.தன் இனத்தைப் பெருக்கும் போது அது ஜீவ அணுவாக மாறுகிறது.

இதே மாதிரி வான் வீதியில் சூரியனிலிருந்து வரும் போது மற்ற கோள்களின் தன்மையைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து கொண்டால் அது “வெறும் அணு…”

அந்த அணுவை நாம் சுவாசித்த பின்
1.உடலுக்குள் சேர்ந்து வளர்ச்சியாகும் பொழுது
2.ஒரு ஜீவனுள்ள அதாவது “ஜீவ அணுவாக…” மாறும்.

உதாரணமாக நமக்கு வேண்டிய ஒருவன் நோய்வாய்ப்பட்டிருக்கின்றான். அந்த உடலில் நோயின் உணர்வுகள் ஆன்மாவாக மாறி இருக்கின்றது.

அவர் உடலில் விளைந்த நோயின் தன்மையை நாம் கூர்மையாகப் பார்க்கிறோம். அந்த விஷத் தன்மையை நம் உடலில் எடுத்து வைத்துக் கொள்கிறோம்.

அந்த மனிதன் உடலை விட்டுப் பிரிந்ததும் அவர் இறந்துவிட்டார் என்று நாம் கேள்விப்பட்டவுடன்.. “அடடா நல்ல மனிதன் இறந்து விட்டாரே…!” என்று பாசத்துடன் எண்ணுகின்றோம்.

அப்பொழுது அவர் உடலில் விளைந்த நோயைப் பற்றிய உணர்வுகளை நமக்குள் ஏற்கனவே பதிவு செய்து வைத்திருப்பதால் அதனின் வலிமை கொண்டு அந்த ஆன்மா நம்மிடம் வந்து விடும்.

அந்த உயிரான்மா நம் உடலுக்குள் வந்தவுடனே ஜீவ ஆன்மாவாக மாறுகிறது. அப்போது அது என்ன செய்கிறது…? நமக்குள் வட்டம் இடுகிறது. இதைப் போன்ற ஜீவ ஆன்மாக்கள் எல்லாம் எங்கே இருக்கிறது என்றால் இரத்தத்திற்குள் தான் இருக்கும்.

சில ஆவி பிடித்தவர்களை நீங்கள் பார்த்தீர்கள் என்றால் அவர்களிடம் அந்த வேகமான துடிப்பு இருக்கும். இரத்த ஓட்டங்களிலே சுற்றிக் கொண்டு வரும் பொழுது
1.மூளை பாகம் வந்தது என்றால் அதனுடைய எண்ணங்களை வைத்து நம்மை இயக்கும்.
2.மூளை பாகத்திலிருந்து திரும்ப வெளியே வந்து விட்டது என்றால் சாந்தம் ஆகும்.

ஆனால் அந்த மூளை பாகத்திலிருக்கும் பொழுது அந்த ஆன்மா அது வாழ்ந்த காலத்தில் என்னென்ன எண்ணங்களை எடுத்திருந்ததோ அதை எல்லாம் பேசத் தொடங்கும். அது வாழ்ந்த காலத்தில் எடுத்துக் கொண்ட உணர்விற்குத் தகுந்த மாதிரி
1.வேண்டாததை எல்லாம் கேட்கும்.
2.வேண்டாததை எல்லாம் பேசும்.
3.(நன்றாகப் பழகியவர்கள் திடீரென்று அவர்கள் குணாதிசயங்களில் மாற்றம் ஆவதெல்லாம் இதைப் போன்ற நிலைகள் தான் காரணம்)

இப்படி அந்த இரத்த நாளங்களில் அந்த ஜீவான்மா குடி கொண்டு உடல் முழுவதும் சுழன்று வந்து தனக்கு வேண்டியதை உற்பத்தி செய்து (உணர்ச்சிகளைத் தூண்டி) அது சாப்பிட்டுக் கொண்டே இருக்கும்.

அத்தகைய எண்ணங்கள் தோன்றும் பொழுது அதை நாம் சுவாசிக்கின்றோம். அந்த உணர்வுகள் உடலுக்குள் சேர்ந்து அணுக்களாகிறது. வளர்ந்து ஜீவ அணுக்களாகின்றது.

அந்த ஜீவ அணுக்களின் மூலமாகத்தான் நாம் தொடர்ந்து சுவாசிக்கிறோம். சுவாசித்தது நம் தசைகளில் போய்ச் சேர்ந்துவிடுகிறது. அப்போது ஒவ்வொன்றும் அது எந்தெந்த குணங்கள் எடுத்தோமோ அந்த உணர்வுகளே வெளியிலிருந்து இழுக்கும். அதாவது
1.தனக்குத் தேவையான உணர்வலைகளைச் சுவாசத்தின் மூலமாகக்
2.காற்றிலிருந்து உணவாக எடுக்கும்.

ஆக ஒரு செடி எப்படி மரமாக விளைகிறதோ அது போல் தான் உடலுக்குள்ளும் உணர்வுகள் விளைகின்றது. (அணுக்கள்… ஜீவ அணுக்கள்… ஜீவ ஆன்மாக்கள்…!)

நாம் பார்த்து கேட்டு நுகர்ந்தறிந்த அந்த எண்ணங்கள் அனைத்தும் முதலில் நம் எலும்புகளுக்குள் ஊழ்வினை என்ற வித்தாக உருவாகிறது. பின் மனித உடலிலிருந்து அலைகளாகப் பாய்கிறது. அதனதன் சத்தைக் காற்றிலிருந்து எடுத்து வளர்க்கின்றது.

சில இடங்களில் காவல் தெய்வங்கள் என்ற நிலையில் கொடூரமான சிலைகளை உருவாக்கி வைத்திருப்பார்கள்…! அதிலுள்ள பற்கள் எல்லாம் நீட்டிக் கொண்டு இருக்கும்.

அந்தத் தெய்வத்தை உற்றுப் பார்த்து அதையே வணங்கி அந்த உணர்வுகளை அதிகமாக எடுத்து ஒரு மனிதன் இறந்தான் என்றால் என்ன ஆகின்றது…?

இறந்த அந்த உயிரான்மா இன்னொரு உடலுக்குள் போனது என்றால் இரத்தத்தில் சுழன்று வரும் பொழுது அந்தக் கொடூரமான சிலையைப் போன்றே அந்த ராட்சஷ உணர்வுகள் வரும்… அந்த உணர்ச்சிகளை இயக்கும்.

அது எப்படி அடக்கி ஆட்சி புரியும் தன்மைக்கு வந்ததோ இந்த ஆன்மா இந்த மனித உடலுக்குள் வந்தவுடன்
1.என்னை வாய் பேச விட மாட்டேன் என்கிறது…
2.என்னை என்னென்னவோ செய்கிறது…! என்றெல்லாம் சிலர் சொல்வார்கள்.
3.இதில் எத்தனையோ வகைகள் உண்டு.

ஆனால் அந்த ஆன்மா இரத்தத்திற்குள் தான் இருக்கிறது. சுழன்று வந்தாலும் உடலுடன் ஒட்டி வரும். ஆனால் அது தசைகளில் அணுக்களாக மாற்றாது. இரத்தத்திற்குள் தான் அந்த அணுக்கள் பெருகும்.

இத்தகை அணுக்களாக மாறும் பொழுது சந்தர்ப்பத்தில் இரத்தத்தின் மூலம் இருதயத்திற்கு வந்தால் இருதயத் துடிப்பே குறையும் இருதய அடைப்பாகும் (HEART ATTACK).

அதே சமயத்தில் இரத்தத்தில் கலந்து வரும் நிலையில் இரத்தத்தில் உள்ள விஷத் தன்மைகளைப் பிரிக்கும் கிட்னிக்கு (சிறுநீரகம்) வந்தால் அதைச் செயலற்றதாக மாற்றி வடிகட்டும் தன்மையை இழக்கச் செய்து விடும்.

இதைப் போன்ற நிலைகள் எல்லாம் நம் வாழ்க்கையில் நம்மை அறியாமலே வரக்கூடிய கடுமையான சில தீமைகளாகும்.

இதைப் போன்ற நிலைகளை வராது தடுத்துக் கொள்வதற்காகத்தான்
1.“ஈஸ்வரா…!” என்று புருவ மத்தியிலிருக்கும் உயிரை எண்ணி
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்தங்கள் முழுவதும் படர்ந்து
3.எங்கள் இரத்தங்களில் உள்ள ஜீவ அணுக்களும் ஜீவான்மாக்களும் பெறவேண்டும் என்று அடிக்கடி ஆத்ம சுத்தி செய்யும்படிச் சொல்கிறோம்.

மேலும் எங்கள் உடலில் உள்ள ஆன்மாக்கள் அனைத்தும் சப்தரிஷி மண்டல ஒளி அலைகளுடன் கலந்து என்னுள் இருந்தே அழியா ஒளிச் சரீரம் பெறவேண்டும் என்று நம் நினைவுகள் மாறும் பொழுதெல்லாம் செய்தால் அந்த ஆன்மாக்களின் இயக்கம் தணிந்து விடும். நோயாக மாற்றாது.

நம்முடன் ஒத்து வாழும் நிலைக்கு வரும். அந்த ஆன்மாக்கள் மூலம் நாமும் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் அதீத சக்திகளை வளர்க்கவும் முடியும்.