ஞானிகளைப் பற்றிய சரித்திரங்களும் அவர்கள் ஞானம் பெற்ற சந்தர்ப்பங்களும்

ஆதிசங்கரரின் சரித்திரம் 

ஆதிசங்கரர் உணர்த்திய ஆன்மீகம் 

ஆதிசங்கரர் தன் வயிற்றுவலியை நீக்கிய பின் துவைதவாதிகள் அவரை என்ன செய்தார்கள்..? 

காற்றில் மிதக்கும் தன்மை பெற்ற ஆதிசங்கரர், கோலமாமகரிஷி 

இராமலிங்க அடிகள் படிப்பு வராத நிலைகள் இருப்பினும் ஞானம் பெற்ற சந்தர்ப்பம்

இராமலிங்க அடிகள் ஞானம் பெற்ற சந்தர்ப்பம் 

தீமையைப் பார்க்காது, தீமைகள் எனக்குள் விளையக்கூடாது – இராமலிங்க அடிகள் 

இராமலிங்க அடிகள் சொன்னது தீமையை நான் பார்க்கக் கூடாது

ஐயப்பன் பெற்ற நிலை  

திருமூலர் – கருமாரி – சிதம்பர இரகசியம் 

பதஞ்சலி முனிவர் – திருமூலர், சிதம்பரம் 

பதஞ்சலி திருமூலர் ஆக ஆனதன் சந்தர்ப்பம் 

பதஞ்சலி முனிவரின் உண்மை நிலைகளை குருநாதர் சூட்சமாக அழைத்துச் சென்று காட்டினார் 

அபிராமிப்பட்டர் சரபோஜியிடம் சொன்னது – மனிதனுக்குத் திதி கிடையாது 

நட்சத்திரத்தை அறிந்த பிருகுவின் மகன்கள் தாய் கருவில் எடுத்த உணர்வின் இயக்கம், அத்திரி  

விவேகானந்தர் கடவுளை இராமகிருஷ்ணரிடம் உணர்ந்த விதம் – சிகாகோ உபதேசம்

விவேகானந்தர் சரித்திரம் 

அருணகிரிநாதரின் முழு சரித்திரம் 

நபிகள் ஞானம் பெற்ற நிலை – அரசர்கள் அவர் தத்துவத்தை மாற்றியது 

முகம்மது நபி ஞானம் பெற்ற நிலை 

காந்திஜி சிறு வயதில் செய்த தவறுகளும் தென்னாப்பிரிக்காவில் பெற்ற ஞான உணர்வுகளும் 

கோபமாகத் தாக்குவது கோழை, மன உறுதி கொண்டு அவர் மனதைச் சீர்படுத்துவது மன பலம் 

தீமைகளை வென்ற ஞானிகளிடம் எதைக் கேட்க வேண்டும் 

அன்று வான இயலை அறிந்து கோவிலை உருவாக்கிய மெய்ஞானிகள் 

நாஸ்டர்டாமஸ் சொன்ன கருத்துக்களில் உள்ள உண்மைகள்

திருஞான சம்பந்தரின் உணர்வைப் பெற்றுத்தான் அருணகிரி ஞானியானார் 

ஞானிகள் கொடுத்த பாடலுக்கு இன்றிருப்போர் கொடுக்கும் வியாக்கியானங்கள் 

இராமலிங்க அடிகள் சொன்ன கந்தக் கோட்டம்

கசாப்புக் கடைக்காரனிடம் போய்க் கற்றுக் கொள் – வாசுகி கொங்கணவரிடம் சொன்னது 

நம் நாட்டு ஞானிகள் காட்டிய ஆலயப் பண்புகள் 

போகர் உருவாக்கிய நவபாஷாணச் சிலையின் இரகசியம்

தியானம் செய்யும் பொழுது உடல் முழுவதுமே சூடு ஆகின்றது… ஏன்..? நல்லதா… கெட்டதா…!

fire maharishis

தியானம் செய்யும் பொழுது உடல் முழுவதுமே சூடு ஆகின்றது… ஏன்..? நல்லதா… கெட்டதா…!

 

கோவிலில் தீப ஆராதனையாக அந்த நெருப்பைத்தான் சாமிக்கு ஒளியாகக் காட்டுகின்றார்கள். அதே ஆராதனையைத்தான் நம்மிடமும் கொண்டு வந்து கொடுக்கின்றார்கள்.
1.அந்த நெருப்பை நம் இரண்டு கைகளாலும் பட்டும் படாமலும் தொட்டு
2.முகத்தில் இரண்டு கையையும் கொண்டு போய் புருவ மத்தியில் விரல் படுகின்ற மாதிரி ஒற்றிக் கொள்கின்றோம்.

இப்படி ஏன் செய்கிறோம்…?

இதை யாரும் யோசிப்பதில்லை. எல்லோரும் இப்படிச் செய்கிறார்கள். அதனால் நாமும் அவ்வாறு செய்கிறோம். அது தான் நமக்குத் தெரியும்.

அதாவது மகரிஷிகள் அனைவருமே நெருப்பின் சக்தியை வளர்த்துக் கொண்டவர்கள். பேரொளியாக மாற்றிக் கொண்டவர்கள். “எம அக்னி” என்று அவர்களைச் சொல்வார்கள்,
1.அவர்கள் தங்களுக்குள் பெற்று வளர்ந்த அந்த நெருப்பின் சக்தியை
2.அதாவது பேரருள் பேரொளியை…
2.சாதாரண மக்களையும் நுகரச் செய்து அவரவர்கள் உயிரிலே அந்த நெருப்பின் சக்தியைச் சேர்க்கச் செய்கின்றார்கள்.

அதைச் சேர்க்கச் சேர்க்க உடலில் அறியாது சேர்ந்த தீமைகள் அனைத்தும் வேக வைக்கப்பட்டு தீமைகள் ஆவியாகப் பிரிந்து செல்கிறது.

அதே சமயத்தில் நாம் எடுக்கும் அருள் மகரிஷிகளின் அருள் உணர்வுகளால் நம் உடலில் உள்ள நல்ல அணுக்கள் அதீத சக்தியைப் பெறும் சந்தர்ப்பமாக அது அமைகிறது.
1.அதாவது தீமையை மாற்றி
2.நன்மை செய்யும் சக்தியாக நாம் மாற்றுகின்றோம் என்று அர்த்தம்.

கடையில் வாங்கிய அரிசி பருப்பு காய்கறிகள் எல்லாவற்றையும் பாத்திரத்திலே போட்டு அடுப்பிலே வைத்து வேக வைத்து அதிலுள்ள காரலை நீக்கி சுவையாகச் சமைத்துச் சாப்பிடுகின்றோம் அல்லவா…!

அது போல் புருவ மத்தியின் வழியாக மகரிஷிகளின் அருள் சக்தியை (நெருப்பை) கூட்டினால் நாம் எந்த நல்லதை உருவாக்க வேண்டும் என்று விரும்புகின்றோமோ அதை உருவாக்க முடியும்.

தியானம் இந்த முறைப்படி செய்தால் கடுமையான சூடு உண்டாகும். அது உண்மைதான். சூடு அதிகமானாலும்……!
1.நாம் பெறும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எத்தனை பேருக்குக் கொடுக்க முடியுமோ கொடுக்கலாம்
2.எத்தனை பேர் மேல் பகைமை கொண்டோமோ… எத்தனை பேர் மேல் வெறுப்பு கொண்டோமோ… அவர்களுக்கெல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பாய்ச்சினால்
3.நம் உடலில் உள்ள சூடு உடனே குறையும்… சாந்தியாகும்…!

தியானம் செய்யும் பொழுதும் சரி… அல்லது செய்த பின்பும் சரி.. புருவ மத்தியிலோ அல்லது உடலிலோ சூடு வருகின்றது என்றால் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்கின்றது என்று அர்த்தம்

சந்தோஷப்பட வேண்டிய விஷயம் இது…!

முழு முதல் கடவுள் யார்…?

ganesha

முழு முதல் கடவுள் யார்…?

 

ஆதிமூலம் என்ற உயிர் இந்த மனிதனாக ஆன பிறகு முழு முதற் கடவுள் என்று அன்றே ஞானிகள் தெளிவாக்கியிருக்கிறார்கள். அந்த விநாயகருக்கு அங்குசத்தையும் போட்டுக் காட்டியுள்ளார்கள். ஏன்…?

யானையை அங்குசத்தை வைத்து அடக்குவார்கள். அது போல் இந்த உலகில் உள்ள அனைத்தையும் அடக்கி ஆட்சி புரியும் சக்தி பெற்றது இந்த மனித உடல் என்று காட்டுவதற்காக அங்குசத்தை விநாயகருக்குக் காட்டியுள்ளார்கள்.

1.மனிதன் உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரம் ஆகிவிட்டால்
2.இந்த அண்டத்தில் இருக்கிறது எதையுமே தனக்குக் கீழ் கொண்டு வர முடியும்.
3.அதனால் தான் விநாயகரை முழு முதல் கடவுள் என்று ஞானிகள் காட்டினார்கள்.

ஆனால் இவர்கள் என்ன செய்து விட்டார்கள் என்றால் “சிவனுக்கு முந்தியவன் விநாயகன்… அதனால் விநாயகர் முழு முதல் கடவுள்…!” என்று இப்படிச் சொல்வார்கள்.

சிவனுக்கு முந்தியவன் வினை தான். அந்த உணர்வின் தன்மை “ஓ…!” என்று பிரணவமாகி இந்த உடலாகும் போது சிவன். உடலாகும் போது சிவன். சிவனின் பிள்ளை விநாயகன். ஆகவே பிரணவத்திற்குரியவன். எது…?

இந்த வினை.

ஒரு உயிரணுவிற்குள் எந்தச் செடியின் சத்து மோதுகிறதோ அது பிரணவம். ஜீவ அணுவாக மாற்றும் சக்தி பெற்றது உயிர். (உயிரணுவிற்குள் துடிப்பும் அதனால் வெப்பமும் உருவாகிறது)
1.செடியின் சத்தை அந்த உயிரணு நுகர்ந்தால் பிரணவமாகிறது.
2.ஆகவே அந்தச் சத்து வினையாகிறது.
3.அதனால்தான் அந்த வினை உயிருடன் சேர்க்கப்படும் போது “விநாயகா…!” என்று தெளிவாக்கியுள்ளார்கள் ஞானிகள்.
4.இந்த மூலத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு செடியின் சத்தை நுகர்ந்தால் அது வினை. அதனால் தான் சிவனுக்கு முந்தியவன் விநாயகன். செடியின் சத்தை அது நுகர்ந்தபின் “ஓ…!” என்று பிரணவமாகி “ம்…!” என்று உடலாகும் போது விநாயகன். (சிவம் என்பது திடப்பொருள்)

எந்தச் செடியின் சத்தை உயிரணு நுகர்ந்ததோ மூஷிக வாகனா…!
1.அதாவது அந்த மணமே இயக்கி
2.அந்தச் செடி இருக்கும் பக்கம் நகர்ந்து செல்லும் இயக்கச் சக்தியாக மாறுகிறது.
3.இது தான் விநாயகன்.

ஆனால் முழு முதற் கடவுள் என்று சொல்லும் பொழுது
1.பல கோடி வினைகளைச் சேர்த்து மனிதனாக ஆன பின் கணங்களுக்கு அதிபதி
2.எல்லாவற்றையும் அடக்கி ஆட்சி புரியும் நிலை பெற்றது…!
3.அதனால் தான் அங்குசத்தை வைத்துக் காட்டியது.

மனித உடலில் முழு முதற் கடவுள் என்ற நிலையில் எண்ணத்தால் எண்ணி நாம் உருவாக்கிக் கொண்டே இருக்கிறோம். பிரணவத்தைத் தெரிந்து கொண்டவன் தான் மனிதன்.
1.இந்த உயிரின் இயக்கத்தைத் தெரிந்து கொண்டவனும்
2.தன்னை அறிதல் என்ற நிலையிலே கண்டுணர்ந்தவனும் ஆதியிலே அகஸ்தியன் தான்.
3.அதாவது இயற்கையின் இயக்கச் சக்தியை உணர்ந்து கொண்டவன்… பிரணவத்தை உணர்ந்து கொண்டவன் அந்த அகஸ்தியன்.
4.ஆகையினால் தான் விநாயகரை முழு முதற் கடவுள் என்றும் நாம் உருவாக்கும் சக்தி பெற்றவர்கள் என்றும் சொல்வது.

அதே சமயத்தில் மனித உடலின் ஆறாவது அறிவாக வரக்கூடிய மணம் முருகன். பிரம்மாவைச் சிறைப் பிடித்தான் முருகன் என்றால் நம் உடலுக்குள் அந்த உருவாக்கும் திறன் உண்டு
1.அதை வைத்து உருவாக்கக் கூடிய நிலையும்
2.உலகில் வரக்கூடியதை அடக்கும் சக்தி பெற்றது என்றும் ஞானிகள் கொடுக்கிறார்கள்.
3.இந்த வினையைச் சேர்த்துக் கொண்டவர்கள் அகண்ட உலகில் எங்கே வேண்டும் என்றாலும் போகலாம்.

ஆனால் இப்போது இந்த உடலிலிருந்தே இந்த உணர்வுகளை அடக்கினால் தான் உண்டு. இதைச் செய்யத் தவறி விட்டோம் என்றால் மீண்டும் பரிணாம வளர்ச்சியில் தேய் பிறையாகத்தான் போய்விடுவோம்

ஆகவே மனித உடல் பெற்ற இந்தப் பாக்கியத்தை நழுவ விடாது அந்த அகஸ்தியமாமகரிஷி சென்ற அருள் வழியில் நாம் செல்வோம். அகஸ்தியரைப் போன்ற மெய் ஞானியாக வளர்வோம்.