“தனுசு கோடி..!” என்ற நிலையில் முடிவான உணர்வு கொண்டு… அருளைப் பெருக்கி அதன் நிலையிலேயே நமது உயிரை இயக்க வேண்டும்…!

Image

dhanuskodi - rameswaram

“தனுசு கோடி..!” என்ற நிலையில் முடிவான உணர்வு கொண்டு… அருளைப் பெருக்கி அதன் நிலையிலேயே நமது உயிரை இயக்க வேண்டும்…!

 

செடி கொடி மரங்களை எடுத்துக் கொண்டால் மற்ற மரங்களின் அடர்த்தி அதிகமானால் இந்த மணம் பட்டபின் அதனின் வளர்ச்சி குன்றுகிறது. இதனுடைய அழுத்தத்தை மாற்றி விடுகிறது.

மேலை நாட்டில் உருவான சௌண்டால் மரத்தை இங்கு கொண்டு வந்து போட்டோமானால் இதனுடைய வளர்ச்சி ஆன பின் பக்கத்தில் இருக்கும் செடிகளின் வளர்ச்சியைக் குன்றச் செய்கின்றது.

ஏனென்றால் இதெல்லாம் இயற்கையின் நியதிகள்.

அது போல் காலையிலிருந்து இரவு வரையிலும் நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகளில் “நல்லது…!” என்று நினைத்தாலும் பிறர் படும் தீமையான நிலையும் பத்திரிக்கை டி.வி வாயிலாகப் படிக்கும் எத்தனையோ சம்பவங்களையும் நண்பர்களுடன் கலந்து உறவாடும் உணர்வுகளையும் நுகர நேருகிறது.

பகைமை உணர்வுகளுடனோ பகைமையற்ற நிலையிலோ நாம் பேசினாலும்
1.நுகர்ந்த உணர்வுகள் நம் உயிரிலே பட்டு அந்த உணர்வுகள் உணர்ச்சிகளைத் தூண்டும் போது
2.இரத்தங்களில் கலந்தால் உடலில் உள்ள எல்லாப் பாகங்களுக்கும் அது செல்கிறது.

இந்த உணர்ச்சிகள் நம் இரத்த நாளங்களில் கலந்து கலந்து அதற்குத் தக்க இந்த உணர்வு இரத்த ஓட்டங்களில் ஓடும்போது இது அடங்குகிற வரையிலும்
1.நாம் நிறுத்தினாலும் அல்லது வேறொருவருடய நிலையில் எண்ணத்தைச் செலுத்த்னாலும்
2.இது இரத்தங்களில் சேர்த்து எல்லா அணுக்களுக்கும் எதிர்ப்பான உணர்வு வருகிறது.
3.நல்ல அணுக்களுக்கு எதிர்நிலை ஆகிவிட்டால் அந்த அணுக்களின் வளர்ச்சி குன்றுகிறது.
4.வலியோ வேதனையோ அல்லது நோயாக வந்துவிடுகிறது.

அதை எல்லாம் மாற்றி அமைப்பதற்காகத்தான் உங்களுக்குள் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து அதை எல்லாம் நல்லதாக்கும்படி சொல்கிறேன்.

ஆகவே அந்த அருளைப் பெருக்கி இருளைப் போக்கும் சக்தியாக நாம் மாற வேண்டும். இதைத்தான் “நேரமாகி விட்டது…! அதனால் இராமேஸ்வரத்தில் இராமன் மனதைக் (மணலைக்) குவித்துச் சிவலிங்கத்தைப் பூஜித்தான்…!” என்று காட்டியிருப்பார்கள்.

அதாவது எல்லா உணர்வுகளையும் ஒன்றாகக் குவித்தான் என்று பொருள்.
1.ஒரே நாளில் அல்ல.
2.நம் ஆயுள் முடிவதற்கு முன்னாடி ஒவ்வொரு நிமிடத்திலும் இணைந்து வாழும் உணர்வுகளை அந்தத் துருவ நட்சத்திரத்துடன் இணைத்து
3.வாழ்க்கையில் வரும் கார உணர்வுகளை மாற்றித் “தனுசு கோடி..!” என்ற நிலையில்
4.”முடிவான உணர்வு கொண்டு… அந்த அருள் உணர்வின் தன்மையைப் பெருக்க வேண்டும்…!”
5.அதன் நிலையிலேயே நமது உயிரை இயக்க வேண்டும். அந்த ஒளியான உணர்வின் தன்மையை நாம் அடைய வேண்டும்.

எந்த நாட்டிலிருந்து வந்திருந்தாலும் இங்கே இராமேஸ்வரம் வந்து விடுகிறார்கள். ஆனால் உண்மையின் நிலைகள் தெரியாதபடி எத்தனையோ வகையான நிலைகளில் பிரித்து விட்டார்கள்.

துளசி இராமாயணம் வால்மீகி இராமாயணம் கம்ப இராமாயணம் என்று இன்னும் எத்தனையோ வகையான இராமாயணங்களாக அவரவர்கள் உணர்வுக்குத் தக்க எழுதி அந்தந்த நாட்டிற்குப் பயன்படுத்தி அவர்கள் அரசுக்கு பயன்படுத்தி விட்டார்கள்.

மனித உடலுக்குப் பின் விண் செல்லும் மார்க்கத்தை மக்களுக்கு யாரும் உணர்த்தவில்லை.

இராமாயணத்தைப் படித்தவர்கள் வீட்டிலெல்லாம் பாருங்கள் சண்டை நிறைய இருக்கும். இதைச் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். அவர்களுக்குள் வெறுப்பும் வேதனையும்தான் அதிகமாகும்.

1.ஏனென்றால் சாந்தமும் ஞானமும் கொண்ட பின்
2.நான் எல்லாமும் சொன்னேன்…@ என்ற நிலையில் பிறருடைய உணர்வு அதிகரிக்கும் பொழுது அந்த உணர்வின் இயக்கம் மாற்றிவிடும்.

நாம் பிறருடைய நிலைகளை நுகர்ந்து அறிகிறோம். இல்லை என்றால் அறிய முடியாது. ஆனால் அப்படி அறிந்தாலும் தீமைகள் என்று அறிந்த உடனே உடலுக்குள் தீமைகள் புகுந்து விடாதபடி முதலில் தடுத்து நிறுத்த வேண்டும்.

தங்கத்தில் திராவகத்தை ஊற்றினால் எப்படிச் செம்பும் பித்தளையும் ஆவியாக மாறுகிறதோ அது போல “ஈஸ்வரா…!” என்று உங்கள் உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்று கண்ணின் நினைவை உயிருடன் ஒன்ற வேண்டும்.

ஒரு நிமிடம் ஏங்கிய பின் லேசாகக் கண்களை மூடி எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும். எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும். எங்கள் ஜீவான்மா பெற வேண்டும் என்று கண்ணின் நினைவை உடலுக்குள் பாய்ச்சிப் பழக வேண்டும்.

நாம் ரசம் வைக்கிறோம் என்றால் வெறும் தண்ணீராகத் தான் இருக்கிறது. அதில் காரம் புளிப்பு எல்லாம் சேர்க்கிறோம். எந்த உணர்வைச் சேர்க்கிறோமோ அந்த உணர்ச்சியை ஊட்டுகிறது.

அது போல நாம் நுகரும் எல்லா உணர்வுக்குள்ளும் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைக் கலந்து சேர்க்கப்படும் போது அருள் உணர்வின் உணர்ச்சிகள் கலந்த அலைகளாக நம் இரத்தங்களில் கலக்கிறது. ஆகவே
1.அந்தப் பேரருளைப் பெற வேண்டும்.
2.என் உடலிலுள்ள அனைத்தும் பேரொளியாக மாற வேண்டும் என்றால் நாம் அதுவாகின்றோம்.

இலக்கு இல்லாதோர் விளக்கு இல்லாதோர்…!

destiny of human body

இலக்கு இல்லாதோர் விளக்கு இல்லாதோர்…!

 

மனித வாழ்க்கையின் எல்லை எது…? என்று அறிய முயற்சிக்க முடியாதபடி மனம் போகும் (நம் எண்ணங்கள்) வழியில் எல்லாம் நாம் சென்று கொண்டிருந்தோம் என்றால் நாளை என்ன ஆகும்…?

ஒரு நெல் பயிரை விளைய வைக்க இவ்வளவு காலம் என்று உள்ளது. குறைத்தாலும் விளையாது… கூட்டினாலும் பலன் இல்லை…! அது போல்
1.மனிதனின் பிறப்பின் பலனைப் பற்றிச் சிந்திக்காமலும்
2.அந்தப் பலனை அடையக்கூடியதாக வாழ்க்கை வாழாமலும்
3.மனிதனாகப் பிறந்து எத்தனை வருடம் வாழ்ந்தாலும் எப்படி வாழ்ந்தாலும்
4.அது “இலக்கு இல்லாதோர்… விளக்கு இல்லாதோர்…!” போன்ற நிலை தான்.

ஆனால் புறத்தில் நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் ஒரு இலக்கை வைத்துத்தான் செயல்படுகின்றோம். அப்படி இல்லை…! என்று யாரும் சொல்ல முடியாது. அதுவே அகத்திற்குள் என்றால் அதில் எந்த இலக்கும் இருப்பதில்லை.

இருக்கும் வரை எல்லாவற்றையும் அனுபவிக்க வேண்டும்… இறந்த பிற்பாடு யாருக்கு என்ன தெரியும்…? நாம் என்ன பார்க்கப் போகின்றோமோ…? என்று அதை மிகவும் சாதாரணமாக நினைக்கின்றோம்.
1.ஆக இந்த உடலில் வாழ்வதற்கு நமக்கு “இலக்கு…” தேவைப்படுகிறது.
2.ஆனால் உடலுக்குப் பின் என்ன…? என்ற நிலைக்கு இலக்கு தேவையில்லை.

மகாபாரதத்தில் துரோணர் வில் வித்தையைக் கற்றுக் கொடுக்கும்போது துரோணரின் மகனான அசுவத்தாமன் வந்து… “எனக்கு வித்தைகளைக் கற்றுக் கொடுக்காமல் அர்ச்சுனனுக்கு அதிகமான வித்தைகளைக் கற்றுக் கொடுக்கிறீர்கள்… அது ஏன்…? என்று துரோணரிடம் கேட்பான்.

அதற்காக அவர் ஒரு செயல் மூலமாக அவனுக்கு உணர்த்துவார். மரத்தில் ஒரு கிளி பொம்மையை வைத்து பாண்டவர்கள் கௌரவர்கள் எல்லோரையும் அழைத்து “அங்கே என்ன தெரிகிறது…?” என்று கேட்பார்.

ஒவ்வொருவரும் “மரம் தெரிகிறது…! கிளை ஆடுகிறது…! கிளி இருக்கிறது…! என்று என்னென்னமோ சொல்வார்கள்.
1.அர்ச்சுனன் ஒருவன் மட்டும் “எனக்குக் கண் தெரிகிறது…!” என்பான் (கிளியின் கண்).
2.அர்ச்சுனன் என்றால் கூர்மை… அந்த இலக்கு…!

அந்தக் கூர்மை சரியாக இருப்பதால் தான் “அவனுக்கு அதிகமாக வித்தையைக் கற்றுக் கொடுக்கிறேன்…!” என்று துரோணர் அசுவத்தாமனுக்கு விளக்குவார்.

ஆகவே நம்முடைய கூர்மை உடல் பெறக் கூடியதில் சிந்தனை இருக்குமானால் அந்த வித்தைகளைத் தான் நாம் கற்றுக் கொண்டெ இருப்போம். மீண்டும் மீண்டும் இந்தப் பூமிக்குள் பிறந்து பல பல உடல்கள் எடுத்து ஒவ்வொரு சரீரத்திலும் பல வேதனைகளைப் பட்டுக் கொண்டே இருக்க முடியும்.

மாறாக நம்முடைய கூர்மை நம்மைப் போல் மனிதர்களாக வாழ்ந்து இந்த உடலுக்குப் பின் என்ன…? என்ற நிலையில் உணர்ந்து ஒளியாக விண்ணிலே சப்தரிஷி மண்டலங்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் அவர்கள் பால் இருக்குமானால்
1.அவர்கள் அடைந்த பிறவியில்லா நிலை என்ற
2.என்றுமே அழியாத ஒளி உடல் பெறலாம்.
3.நம்முடைய எல்லை அந்தச் சப்தரிஷி மண்டலமாகத் தான் இருக்க வேண்டும்…!