மிக மிகக் குறைவான நேரத்தில் தியானத்தின் மூலம் அதீத சக்திகளைப் பெற முடியும்…! எப்படி…? – அனுபவம்

மிக மிகக் குறைவான நேரத்தில் தியானத்தின் மூலம் அதீத சக்திகளைப் பெற முடியும்…! எப்படி…? – அனுபவம்

Life meditation

கேள்வி:-
நான் ஷிப்ட் வேலையில் பணிபுரிகிறேன். சில நேரங்களில் OVER TIME பார்க்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. ஷிப்டில் உள்ள போது குறைந்த நேரத்தில் செய்யக்கூடிய தியான முறையைக் கூறுங்கள்.

பதில்:-
குறைந்த நேரம் செய்யக் கூடிய தியானம் அல்லது கூடிய நேரம் செய்யும் தியானம் என்று எதுவும் கிடையாது.

எவ்வளவு நேரம் தியானம் செய்கிறோம் என்பதை விட எந்த அளவுக்கு அழுத்தமாக நாம் தியானிக்கின்றோம் என்பது தான் மிகவும் முக்கியம்.
1.அழுத்தம் அதிகமானால் வெப்பம் கூடும்.
2.வெப்பம் கூடினால் கவரும் சக்தியான காந்தம் கூடும்.
3.கவரும் சக்தி கூடினால் அதிக ஆற்றல் கிடைக்கும்.

நாம் செய்யும் தியானத்தின் அழுத்தத்தை அதிகமாக்க வேண்டும் என்றால் ஞானகுருவின் உபதேசங்களை அதிகமாக ஆழமாகப் பதிவாக்க வேண்டும். அதுவும் குறிப்பாக நாம் எந்த வேலை செய்து கொண்டிருந்தாலும் அதனுடன் இணைத்து அதையும் கேட்டுக் கொண்டே… பதிவாக்கிக் கொண்டே இருக்க வேண்டும்…!

சிலர் சொல்வார்கள். சாமிகள் உபதேசம் சரியாக அர்த்தம் ஆகாது. அதனால் அமைதியான நேரத்தில் கேட்டால் தான் நல்லது என்பார்கள். தினசரி வாழ்க்கையில் அமைதியான நேரம் என்பது எப்பொழுது வரும் என்று யார் சொல்ல முடியும்…?

ஆனால் சாமிகள் தன்னுடைய உபதேசத்தைப் பற்றி அவர் சொல்லும் பொழுது
1.இதை அர்த்தம் தெரிந்து எடுப்பதைக் காட்டிலும்
2.உங்களுக்குள் ஆழமாகப் பதிவாக்கிக் கொள்ளுங்கள்
3.திரும்பத் திரும்பக் கேட்டுப் பதிவாக்குங்கள் என்று தான் பல முறை சொல்லியுள்ளார்,

உதாரணமாக சினிமாப் பாடலாக இருந்தாலும் சரி அல்லது மற்ற எந்தப் பாடலாக இருந்தாலும் சரி அதை எல்லாம் நம் மற்ற வேலை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது தான் கேட்டு மகிழ்கிறோம்.

ஒரு பாடலை எத்தனை முறை கேட்கிறோம் என்று சற்று சிந்தித்துப் பாருங்கள். ஒரு தடவை தான் கேட்கிறோமா…? இல்லையே..! அதே சமயத்தில் பாடல் பிடிக்கவில்லை என்றாலும் பத்துப் பதினைந்து தடவை கேட்கும்படியான சந்தர்ப்பம் வந்துவிட்டால் உங்களை அறியமாலே அந்தப் பாடலை நீங்களே பாடுவீர்கள்.

இதற்கு நல்ல உதாரணம் சொல்ல வேண்டும் என்றால் டி.வி.யிலோ அல்லது FM ரேடியோவிலோ விளம்பரங்களை அடிக்கடி சொல்லும் பொழுது அது எல்லாம் அப்படியே நமக்குள் பதிவாகின்றது.
1.அழுத்தம் என்பதற்கு அர்த்தமே இது தான்.
2.பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ… அது முக்கியமில்லை…!
3.நாம் எந்த அளவுக்கு அதைப் பார்க்கின்றோமோ அல்லது கேட்டுப் பதிவாக்குகின்றோமோ அது தான் முக்கியம்.

நீங்கள் டி.வி விளம்பரங்களை உற்றுப் பார்க்கின்றீர்களா..? இல்லை…! ஆனாலும் திரும்பத் திரும்பப் பார்க்கும் பொழுது அது நமக்குள் பதிவாகின்றது. அடுத்து அந்தப் பதிவானது அதன் அறிவாக நம்மை இயக்குகிறது.

அது போல் தான்
1.ஞானகுருவின் உபதேசக் கருத்துக்களைத் திரும்பத் திரும்பக் கேட்க…
2.எல்லா நேரத்திலும் (பாத்ரூமில் இருந்தாலும்) கேட்டுக் கொண்டேயிருந்தால்
3.ஒவ்வொரு நாளைக்கும் சாமிகள் சொல்லும் ஏதாவது ஒரு விஷயம் தனியாகப் புலப்படும் (அந்த நுண்ணிய உணர்வுகள்)
4.இப்படிப் பதிவாகும் உபதேசம் நாள்கள் மாதங்களாகி… மாதங்கள் வருடங்களாகும் பொழுது… நம் உடலில் உள்ள இரத்தங்களில் எல்லாம் அந்த அணுக்களின் அதீத பெருக்கமாகும்.
5.(குறைந்த பட்சம் ஆறு மண்டலமாவது பதிவாக்க வேண்டும் 6 X 48 = 288 நாள்கள்)

அப்படிப் பெருக்கமாகும் பொழுது குருவின் உணர்வுகள் நமக்குள் உணர்ச்சியைத் தூண்டும்… தூண்டிக் கொண்டே இருக்கும்…! அந்தத் தூண்டுதல் வந்துவிட்டாலே
1.ஒரு விநாடிக்கும் குறைவான நேரத்தில் கண்ணின் நினைவு புருவ மத்திக்குச் சென்று
2.அங்கிருந்து பூமியின் வடக்குத் திசையில் துருவப் பாதையின் வழியாக துருவ நட்சத்திரத்துடன் மோதி
3.மோதிய வேகத்திலேயே துருவ நட்சத்திரத்தின் சக்திகளை அப்படியே உறிஞ்சி
4.உங்கள் உடலுக்குள்ளோ உடல் உறுப்புக்குள்ளோ அல்லது அடுத்தவருக்குள்ளோ மற்ற பொருளுக்குள்ளோ…
5.எங்கே செலுத்த வேண்டும் என்று விரும்புகின்றீர்களோ அங்கே அதைச் செலுத்தினால்
6.அது தான்… “குறைவான நேரத்தில் எடுக்கும் மிக மிகச் சக்தி வாய்ந்த தியானமாகும்…!

இப்படி ஒரு நாளைக்குப் பத்துப் பதினைந்து தடவை எடுத்தால் உங்கள் எண்ணத்தில் அல்லது உங்கள் மனதில் காலையில் எழும் பொழுதும் இரவு படுக்கும் பொழுதும் இது தான் ஓடிக் கொண்டே இருக்கும்.

ஷிப்டும் ஞாபகம் இருக்காது. வேலையும் ஞாபகம் இருக்காது. ஆனால் எல்லா வேலையும் மற்றவர்களைக் காட்டிலும் நன்றாகச் செய்வீர்கள்.

அந்த வேலையும் சரியாக நடக்கும். அதே சமயத்தில் இந்தத் தியானத்தின் மூலம் அதீத அளவிலும் சக்தி பெற முடியும். (இடி மின்னல் சூறாவளி போன்று எடுத்துக் கொள்ள முடியும்).

தீமைகள் அதிகமாக வந்தால் அதை நீக்கி நல்லதாக்க இடி மின்னல் சூறாவளி போன்று நான் வருவேன் என்று ஈஸ்வரபட்டர் சொல்லியுள்ளார்.
1.நான் அவர் சொன்ன வழியில் தான் செய்து கொண்டுள்ளேன்.
2.மணிக்கணக்காகத் தியானம் செய்வதில்லை.

ஞானகுருவின் உபதேச LINK:- https://wp.me/P3UBkg-1Ia

நாத விந்துகள் ஆதி நமோ நமோ… வேத மந்திர ஸ்வரூபாய நமோ நமோ… வெகு கோடி…!

sri-arunagirinathar

நாத விந்துகள் ஆதி நமோ நமோ… வேத மந்திர ஸ்வரூபாய நமோ நமோ… வெகு கோடி…!

 

உதாரணமாக ஆப்பிரிக்காவில் இருக்கக்கூடிய யானைக்கும் நம் நாட்டில் இருக்கக்கூடிய யானைக்கும் வித்தியாசம் இருக்கும். அதனுடைய தலை சிறுத்தும் காது பெருத்தும் இருக்கும் பார்வையும் வித்தியாசமாக இருக்கும்.

நம் நாட்டில் உள்ள யானைகள் காது சிறுத்தும் தலை பெருத்தும் தும்பிக்கை பெருத்தும் இருக்கும். இதற்குண்டான ஞானம் அதற்கில்லை. இது மனிதனுக்குண்டான ஒத்த நிலைகளில் வரும்.

நம் நாட்டிலே மாவுத்தன் யானையிடம் எப்படிப் பழகிக் கொள்கிறார்கள்…? தன் உடலில் உள்ல வியர்வையைத் தேய்த்து யானைக்கு உணவுடன் கலந்து கொடுத்து விடுவான். கொடுத்தவுடனே இவனுடைய மணத்தை நுகர்ந்து இவனை ஒத்து வரும். இவன் சொல்வதைக் கேட்கும்.

யானையிடம் பழகியவன் அந்த யானை வாசனையை இவன் நுகர்ந்திருந்தான் என்றால் அடுத்த யானையிடம் போனால் இது விடும். யானையிடம் பழகாது போனான் என்றால் இது டப் என்று தட்டி எரிந்து விடும். இந்த வாசனையை அது கண்டு கொள்ளக்கூடிய நிலைகள் நிறைய இருக்கிறது.

ஒரு யானை மாவுத்தன் இன்னொரு யானையிடம் போகலாம். யானை மாவுத்தன் அல்லாது நீங்கள் போனீர்கள் என்றால் உடனே அடையாளம் கண்டு விடும். தட்டி விடும். எல்லாம் இந்த உணர்வினுடைய இயக்கங்கள்.

அதே போல மொழிவாரியாகப் பேசக்கூடிய மாநிலங்கள் நம் நாட்டில் எத்தனையோ இருக்கிறது.
1.கன்னடம் பேசுகிறவர்கள் முகத்தைப் பாருங்கள் ஒரு வித்தியாசமான தோற்றம் வரும்.
2.மலையாளம் பேசுகிறவர்கள் முகத்தைப் பாருங்கள் அதிலே சில மாற்றங்கள் இருக்கும்.

தமிழ் நாட்டை எடுத்துக் கொண்டோம் என்றாலும் சென்னையில் தமிழ் பேசுகிறவர்களுக்கும் மதுரையில் பேசுகிற தமிழுக்கும் வித்தியாசம் இருக்கும்.

அதிலே மதுரையில் பேசுகிற தமிழுக்கும் திருநெல்வேலியில் பேசுகிற தமிழுக்கும் அந்த நாத சுருதிகள் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். அவர்கள் முகங்களைப் பார்த்தாலும் அந்த வித்தியாசம் தெரியும்.

நீங்கள் தெற்கத்திக்காரரா..? மதுரைக்காரரா…? தஞ்சாவூர்க்காரரா…? என்று கேட்டு கொள்ளலாம். ஆள் முகத்தைப் பார்த்தே இந்த ஊர்க்காரர் என்று சொல்லிவிடலாம். சொல்வது அர்த்தம் அல்லவா…?

நீங்கள் நல்ல குணத்துடன் இருக்கின்றீர்கள். சண்டை போடுகிறவர்களைக் கூர்மையாகப் பார்க்கின்றீர்கள். இந்த உணர்வு நல்ல உணர்வுடன் சேர்ந்து விட்டது என்றால் என்ன செய்கின்றது…?
1.அந்த சண்டை போடுகிறவர்கள் முகம் எப்படி இருக்கிறதோ
2.அதேபோல உங்கள் முகத்தினுடைய மாற்றமே வரும். பார்க்கலாம்.
3.ஒவ்வொருவரும் வெளிப்படுத்தும் உணர்வின் ஒலிகளுக்கொப்ப
4.அந்தத் தசைகளின் அமைப்பும் கண் விழியின் பார்வைகளும் முகத்தின் தோற்றங்களும் இருக்கும்.
5.இதெல்லாம் உணர்வின் ஒலி அலைகளின் இயக்கங்கள்.

ஆக இயற்கையின் உருமாற்றங்கள் எப்படியெல்லாம் நிகழ்கிறது என்ற இந்தப் பொது விதிகளை எல்லாம் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

நாத விந்துகள் ஆதி நமோ நமோ…
வேதமந்திர ஸ்வரூபாய நமோ நமோ…
வெகு கோடி…! என்று அருணகிரிநாதர் இதைத் தெளிவாகக் கூறியுள்ளார்.

நாம் எடுத்துக் கொண்ட “ஆதி…” யின் சக்தி நம் உணர்வாக நமக்குள் சேர்கின்றது. அதாவது ஆதியிலே தோன்றிய அந்த உணர்வின் ஒலிகளைச் சுவாசிக்கும் போது உடலாகச் சேர்த்துக் கொள்கிறோம்.

வேத மந்திர சொரூபாய… நமோ நமோ…, வேகு கோடி… சுவாசிக்கும் உணர்வுகளுக்கொப்ப பல பல ரூபமாக… வெகு கோடியாக… ஆகின்றது. சுவாசிக்கும் நிலைகளைப் பற்றி அறிந்து கொள்ள இங்கே வெகு கோடி என்ற இந்தத் தத்துவத்தை அவர் வெளிப்படுத்துகின்றார்.

நாம் கவர்ந்து வெளிப்படுத்தும் உணர்வின் ஒலிகளுக்கொப்பத்தான் நம் உருவத்தின் மாற்றம் என்பதைத் தெளிவாக அறிந்து கொள்ளுங்கள்…!

அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நாம் அடிக்கடி எடுத்துக் கொண்டே வந்தால் அதற்குத் தக்க நமக்குள் மாற்றங்களாகி ஒளியின் ரூபமாக நம்மை மாற்றும்…!

கலியில் வாழும் மனிதர்களின் மன நிலை பற்றியும் கல்கிக்குச் செல்ல வேண்டிய அவசியம் பற்றியும் ஈஸ்வரபட்டர் சொன்னது…!

spiritual treasure - soul

கலியில் வாழும் மனிதர்களின் மன நிலை பற்றியும் கல்கிக்குச் செல்ல வேண்டிய அவசியம் பற்றியும் ஈஸ்வரபட்டர் சொன்னது…!

 

ஜீவன் பிறந்து அந்த ஜீவன் வளர்வதற்கு அந்த ஜீவனுக்கு ஆகாரம் தேவை. எல்லா ஜீவராசிகளுக்குமே ஆகாரம் தேவை. மற்ற ஜீவராசிகள் எண்ணமெல்லாம் தன் ஆகாரத்தை எந்த நிலையில் பெறுவது என்ற ஒரே குறிதான். ஜீவன் எடுத்து முடியும் வரை அதன் எண்ணமெல்லாம் அதன் ஆகாரத்தை எடுத்துப் புசித்து உண்டு வாழ்ந்து மடிவதுவே.

ஆறறிவு படைத்த ஜீவனுள்ள மனிதனுக்கு அவ்வாகாரத்தை அடைவதற்குத் தன் அடுத்த அறிவைப் பயன்படுத்துகின்றான் என்கிறார்கள். அடுத்த அறிவு என்பது ஜீவராசிகளுக்கு உள்ள அறிவைவிட மனித அறிவு உயர்ந்தது ஐந்தறிவு ஆறறிவு என்று சொல்கின்றார்கள்.

எறும்பிற்கும் ஐந்து அறிவுதானா…? யானைக்கும் ஐந்து அறிவு தானா…? இவர்கள் சொல்வது போல் ஜந்துக்களுக்கு ஐந்து அறிவும் அல்ல.. மனிதனுக்கு ஆறு அறிவுமல்ல…!

அவனவன் செய்த பாவ புண்ணியங்களில் எடுத்திட்ட பிறப்பிற்கு இவன் மனிதனாகின்றான். அது செய்த பாவ புண்ணியத்திற்கு ஏற்ப மிருகமாகின்றது மற்ற ஜீவராசியாகிறது. மனித உடலில் உள்ள எல்லோருமே அவர்களுக்கு அளித்த ஆறு அறிவைப் பயன்படுத்துகிறார்களா…?

ஆறறிவு படைத்த மனிதன் என்பதெல்லாம் மனிதனில் இருந்து மாறுபடும் ஜீவராசிகளுக்கு மனிதனின் நிலை மாறுபடுகின்றதல்லவா…? மற்ற ஜீவனுக்கும் மனிதனுக்கும் உள்ள நிலை பிரித்துக் காட்டிடப் பகிர்ந்திட்டேன் இவையெல்லாம்.

மனிதன் ஜீவிப்பதற்கு அவனுடைய ஜீவாதாரம் மிக முக்கியம். மனித நிலையும் மிருகத்தின் நிலையும் மாறுபடுகின்றது என்றேன். மனிதனின் நிலையில் இருந்து அவன் வாழ்வதற்கு ஜீவனுள்ள ஜீவாதாரத்திற்குப் பொருள் முக்கியம். இன்றுள்ள மனிதர்களுக்கு பொருள் முக்கியம்.

ஆதியில் மனிதன் அன்னம் புசித்திடவில்லை. தன் இனத்தை தன்னைத்தானே அடித்தும் உண்டிட்டான். இராமாவதாரத்திற்கு முன்பு மனிதர்களெல்லாம் மிருக நிலையில் இருந்தவர்கள்தான். ஒன்றை ஒன்று அடித்துத் தன் பசியைப் போக்கிக் கொண்டவர்கள் பிறகு ஒரு நிலையில் தன் இனத்தைத் தவிர மற்ற இனத்தை அடித்துப் புசித்திட்டார்கள்.

அதற்கு அடுத்த நிலையில் வந்தவர்கள் தன்னிச்சையில் வளர்ந்த காய்கறிகள் இலைளைப் பறித்துப் புசித்திட்டார்கள். அந்நிலையில் ஒரு உலகம் சுழன்று கொண்டிருந்தது. அவ்வுலக நிலை மாறித்தான் அந்நிலையில் இருந்து மீண்டவர்கள் இராமாவதாரத்தில் வந்து தேவர்கள் என்ற பெயருடன் புதிய உலகம் கண்டார்கள்.

இராமாவதாரத்தின் சுழற்சியில் வந்த கடைசிக் கலி இது. இக்கலியின் தன்மை மாறி கல்கி சுழலப் போகின்றது. இராமாவதாரத்தில் இருந்துதான் இந்த ஜீவாதாரத்திற்குப் பொருள் தேடி தன் வழியில் அப்பொருளைத் தேடிப் பக்குவம் செய்து புசித்திட்டான்.

இராமாவதாரத்தில் இருந்த நிலை பெரும் நிலையப்பா. காலப் போக்கில் கிருஷ்ணாவதாரத்தில் வந்ததப்பா பெரும் கஷ்டங்கள் எல்லாம். ஆதியில் மனிதன் மனிதனையே அடித்துப் புசித்திட்டான். இராமாவதாரத்தில் இருந்த உலகத்தில் தப்பி வந்தவன் தான் கிருஷ்ணாவதாரத்தில் உதித்திட்டான்.

அந்நிலையில் ஜென்மங்கள் மாறி கிருஷ்ணாவதாரத்தில் வந்தவர்கள் எல்லாரும் ஒருவனை ஒருவன் வஞ்சனையாலும் பெரும் சூழ்ச்சியினானும் சிக்க வைத்துப் பொருளைச் சம்பாதித்து மகிழ்ந்தான்.

கிருஷ்ணாவதாரத்தில் வந்தவர்கள் எல்லாரும் தன் நிலையை உயர்த்திட…
1.உயர்த்திட என்பது அவர்கள் வழியில் பொருளைச் சேர்த்து வைத்திட
2.பெரும் புதையல் பொக்கிஷம் புதைத்து வைக்கும் நிலையை உண்டு பண்ணினார்கள்.
3.அந்நிலையில் இருந்து வந்த இக்கலி மனிதர்கள்தான் செயற்கை யுகத்தைக் கலந்திட்டார்கள்.
4.காலப்போக்கில் அச்செயற்கையின் தன்மைக்குப் பொருளைத் தேட மிக முக்கியமான ஜீவாதாரத்தின் வழியையே மாற்றிவிட்டார்கள்.

ஜீவன் தோன்றி வளர்வதற்கு அப்பொருள் முக்கியமப்பா. தன் ஜீவனை வளர்த்திடத் தன் வாழ்க்கைக்கு வேண்டியதை எண்ணுவதில்லை இம் மனிதர்கள். பெரும் செயற்கையின் காலத்தில் தள்ளுகிறார்கள் இம் மனிதர்கள்.

இச்செயற்கை ஆசையின் உந்தலினால்தான் ஜீவாதாரத்தின் தன்மையையே மாற்றி தான் மகிழ என்ற நிலையையும் எடுக்கின்றார்கள்.

ஜீவாதாரத்தை மறந்து மதம் மதம் என்று செயற்கையுடன் கலக்கி விட்டார்கள்.
1.தான் பிழைக்கும் வழிக்குத்தான் எல்லாமே…! என்கின்றார்கள்.
2.தான் பிழைக்கும் வழிக்குப் பெரும் சொத்தைச் சேர்க்கின்றார்கள்.
3.பிழைக்கும் வழிக்குச் சொத்து எதற்கப்பா…?
4.சொத்து என்று சேர்ப்பது என்னப்பா…?
5.அவர்கள் வழியில்… பணம் காசு தான் “சொத்து…!” என்கின்றார்கள்.
6.பெரும் சொத்து… அதுவல்லப்பா…!

தான் பிறந்து வளரும் நிலையில் தன் ஜீவாதாரத்தில் “போதும்…!” என்ற நிலையில் பெற்ற பயனை எடுத்து
1.மறற மக்களுக்கு நல்லறிவைப் புகட்டி தர்ம நியாயம் அளிப்பவனும்
2.தான் பெற்ற மக்களை நல்லுணர்வுடன் வளர்ப்பவனும்
3.தான் என்றால் யார்…! என்று புரிந்து நடப்பவனும் அடைந்த சொத்துத்தானப்பா பெரும் சொத்து.

இக்கலியில் அந்நிலையில் வாழ்வது பெரும் அரிது. அரிதப்பா அரிது. இக்கலியில் இருந்து தப்புவது அரிது. கலியில் உள்ள மனநிலையெல்லாம் மற்றவனைப் பார்த்துத்தான் தன் நிலையில் வாழ்கின்றான். இது புரிந்ததா…?

மற்றவர்களைப் பார்த்து அவன் அந்நிலையில் வாழ்கின்றானே… தன் நிலை அப்படி இல்லையே…! தானும் அவனைப் போல் வாழ்ந்திட முடியவில்லை என்கிற பொழுது அவனைப் பார்த்துத் துவேஷ எண்ணமும் தன் நிலையில் பெரும் சோர்வும் அடைகின்றான்.

இந்நிலையில் உள்ளவனின் நிலைதான் இக்கலியில் உள்ளவர்கள் நிலையெல்லாம். ஜீவாதாரத்திற்கு ஆசை வேண்டுமப்பா. ஆனால் பெரும் பேராசைக்காரன் அப்பா இக்கலியின் மனிதன்.

இவன் விட்ட சுவாசத்தினால் இக்காற்று மண்டலமே பெரும் கரியாகிவிட்டதப்பா…! இந்நிலையில் வளரும் பயிர்களை உண்டவன் அவன் எப்படி அப்பா இருப்பான்…?

இவன் விட்டிடும் நஞ்சுக் காற்றுடன் சுற்றிடும் உலகம் வேறு எப்படியப்பா இருந்திடும்? ஜீவாதாரத்தையே மாற்றி விட்டான்…! ஜீவனுக்கே பெயர் வைத்துவிட்டான்… ஆறறிவு ஐந்தறிவு என்று…! பாட நிலை புரிந்ததா…!

கல்கி அவதாரத்தில் ஆரம்பித்துக் கலிக்கு வரும் உலகம் காலம் மாறி மீண்டும் இதே சுற்று நிலை வரும். கல்கியில் வந்த உலகம் சுற்றும் நிலையில் கல்கிக்கே வருகின்றது. இந்நிலையில் வடிகட்டி வந்தவர்கள்தான் கல்கியில் அவதரிக்கின்றார்கள். இந்நிலையில் கல்கியில் அவர்கள் நிலையை வைத்துத்தான் பிறகொரு உலகம் வந்திடுமப்பா.

அந்நிலையில் மண்டலங்களின் தன்மை மாறுபடுகின்றன. உலகத்தன்மையில் உணர்வெல்லாம் இவ்வுலகத்திற்கும் கல்கியில் வரும் உலகத்திற்கும் மாறுபடுகின்றது.

மனிதனின் எண்ணமும் செயலும் மாறுபடுகின்றன. அந்நிலையில் வாழ்பவர்கள் உயர்ந்த எண்ணத்தில் அந்நிலையை எய்திடத்தான் இப்பாடங்கள் எல்லாம் கல்கியில் வரும் அவதாரங்கள்தான்.

இந்த வாழ்க்கையில் வரும் அற்ப ஆசைகளை மறந்துவிட்டு பெரு நிலையை எய்திடப்பார்…! அந்நிலையில் பெருநிலையை எண்ணிவிட்டால் பெற்றிடுவான் இந்நிலையில் பெருநிலையை…!
1.நான் வாழ்ந்தென்ன பயன்… நான் வாழ்ந்தென்ன பயன் என்கின்றார்கள்…!
2.வாழ்ந்த பயனையெல்லாம் கல்கியில் கண்டிடலாம்.

பெருநிலையை எய்திடவே என்பது இவ்வுலக வாழ்க்கையில் சுற்றி வந்தவர்களெல்லாரும் பெரு நிலை எய்திக் கல்கிக்கு வருபவர்களே. எல்லாச் சித்தர்களும் ஞானிகளும் காலகாலமாகத் தவமிருந்த தவசிகளும் பெருநிலையை எண்ணித்தான் கல்கிக்கு வருகின்றார்கள். அவர்களுடன் கலந்திடலாம்.

இக்கலியில் இப்பொழுது வாழும் மனிதர்களில் முதல் ஜென்மத்தில் விட்ட குறையை இந்த ஜென்மத்தில் எய்திவிட்டால் அப்பெருநிலையான கல்கியில் நாமும் கலந்திடலாம் பலகோடித் தேவாதி தேவர்களுடனும். பாட நிலை புரிந்ததா…?

விடிய விடியக் கேட்டுவிட்டு விக்கல் நிற்க என்ன மருந்து என்று கேட்டால் நினைவின் எண்ணத்தில் வருவதுதான் அவ்விக்கல். அவ்விக்கலுக்கே மருந்து தேடினால் விக்கலுக்கு ஏதப்பா மருந்து…?

1.விக்கலுக்கு மருந்து இல்லை
2.எண்ணும் எண்ணத்திற்கும் மருந்தில்லை.
3.விடியும் விடிவிற்கும் மாற்றில்லை.
4.ஈசனின் சக்தியில் உதித்ததப்பா உனக்குள்ளே அவ்வெண்ணம்.
5.புருவ மத்தியில் இருக்கும் உயிரான ஈசனுடன் ஒன்றிய நிலையில் ஜெப நிலையில் மனநிலையைக் கலந்திடப்பா.
6.உன் நிலைக்கே புரிந்துவிடும் உன் நிலை என்ன என்று…?