ஞானிகளின் உணர்வுடன் நாம் ஒட்டிக் கொள்ள வேண்டும்…! (நாம் கட்சி மாற வேண்டும்)

noble souls in astral plane

ஞானிகளின் உணர்வுடன் நாம் ஒட்டிக் கொள்ள வேண்டும்…! (நாம் கட்சி மாற வேண்டும்)

 

இன்று ஒட்டுச் செடிகளை வைத்து விவசாயத்தில் தேவையான மகசூலைப் பெறவும் விதம் விதமான உணவுப் பொருள்களையும் உருவாக்கியுள்ளனர்.

அதே போன்று உயிரினங்களிலும் ஒரு கருவுக்குள் மற்ற உயிரினங்களின் ஜீன்களை (GENE) எடுத்துப் புதுப் புது உயிரினங்களையும் உருவாக்கியுள்ளார்கள். குளோனிங் (CLONING) முறையிலும் ஒரே மாதிரி உயிரினைத்தை.. ஏன்… மனிதனையே கூட உருவாக்க முடியும் என்றும் கண்டுபிடித்துள்ளார்கள்.

ஆகவே நம் குருநாதர் காட்டிய அருள் வழிப்படி ஞானிகளின் உணர்வை நாம் நமக்குள் (ஒட்டுச் செடி போல்) ஒட்ட வைத்துக் கொள்ள வேண்டும். ஒட்ட வைத்துக் கொள்வது என்றால் நமக்குள் உள்ள எல்லா குணங்களுக்குள்ளும் ஒட்ட வைக்க வேண்டும்.

நல்லது… கெட்டது… பிடித்தது… பிடிக்காதது… வேண்டியது… வேண்டாதது… என்று எதையும் பார்க்காமல்
1.எல்லா எண்ணங்களுக்குள்ளும்
2.எல்லா உணர்வுகளுக்குள்ளும்
3.ஞானிகளின் உணர்வை ஒட்ட வைக்க வேண்டும்.

அதாவது ஞானிகளின் உணர்வை நமக்குள் (நமக்குள் என்றால் எல்லாம் சேர்த்துத்தான் “நாம்) கலக்கும் பருவத்தை ஏற்படுத்த வேண்டும். இது மிகவும் முக்கியமானது…!

ஒவ்வொரு அணுக்களிலும் இவ்வாறு ஞானிகளின் உணர்வை இணைத்துவிட்டால் ஞானிகளின் உணர்வுகள் கலந்து
1.புதுப் புதுக் கருக்களாகி
2.திரும்பத் திரும்ப எண்ணினால் முட்டையாகி
3.ஞானிகளையே எண்ணிக் கொண்டிருந்தால் அடை காத்தது போல் ஆகிவிடும்.

பின் ஞானிகள் அவர்கள் உடலில் விளைய வைத்தது போல் நமக்குள்ளும் ஆற்றல்கள் விளைந்து அதனின் பெருக்கம் அதிகமாகி நம் செயல்கள் ஞானிகளின் செயலாகவே மாறும்.

என்னிடம் அடிக்கடி ஈஸ்வரபட்டர் “நீ… கட்சி மாற வேண்டும்டா…” என்பார்.

கட்சி மாற வேண்டும்… என்றால் நாம் தவறு செய்தாலும் அல்லது எந்தத் தவறு நடந்தாலும் (தெரிந்தோ அல்லது தெரியாமலோ)
1.உடனடியாக ஞானிகளின் உணர்வுடன் ஒட்டிக் கொள்ள வேண்டும்.
2.அந்த ஞானிகளின் கட்சியாக மாற வேண்டும் என்பார் குருநாதர்.
3.அதை ஒட்டிய செயலாக நாம் மாற்றிப் பேச வேண்டும்… செயல்பட வேண்டும்…!

அதாவது நான் தவறு செய்துவிட்டேன். அந்தத் தவறு தேவையில்லை என்று உணர்ந்துவிட்டேன். அதனால் நான் ஞானிகள் சொன்னபடி நல்லதாக மாற்றிக் கொள்கிறேன் என்று அடுத்த கணமே
1.என் மனதை
2.என் எண்ணத்தை
3.என் உணர்வை
4.என் செயலை அப்படியே ஞானிகளுடன் ஒட்டிக் கொள்வது.

அதாவது
1.தவறு செய்ததில் அல்லது தவறு நடந்ததில் அதிகமக அழுத்தமாக நினைவைச் செலுத்தாதபடி
2.தவறு நடந்ததை வைத்து அல்லது தவறு செய்ததை வைத்து அதை உணர்ந்த நிலையில்
3.ஞானிகள் அருள் சக்தியை மிகவும் அதிகமாக ஒட்டிக் கொள்வது.

அப்படியே அவர்கள் செயலாகவே நான் இருக்க வேண்டும் என்று
1.எந்த அளவுக்கு அழுத்தமாகப் புருவ மத்தியில் எண்ணி
2.விண்ணிலே நினைவைச் செலுத்த முடியுமோ… செலுத்தி
3.துருவ நட்சத்திரத்திலிருந்தும் சப்தரிஷி மண்டலத்திலிருந்தும் வரும் பேரருள் பேரொளியை அப்படியே உறிஞ்சி எனக்குள் சேர்த்துக் கொள்வது.

சேர்த்துக் கொண்ட பின் தங்கத்தில் திரவத்தை ஊற்றிய பின் செம்பும் பித்தளையும் ஆவியாகி தங்கம் பரிசுத்தமாவது போல் சோப்பைப் போட்டு நுரையை ஏற்றிய பின் துனியிலுள்ல அழுக்குகள் பிரிந்து செல்வது போல்
1.எனக்குள் இருள் சூழச் செய்யும் சக்திகள் செயலிழந்து மனம் தெளிவாகின்றது.
2.மன பலமும் சிந்தித்துச் செயல்படும் ஆற்றல் கிடைக்கின்றது. எல்லாக் காரியங்களும் நல்லதாகின்றது.

இது என்னுடைய அனுபவம்…!

பட்டு வஸ்திரங்களை உடையாக உடுத்தும் பொழுது நம் உடலில் ஏற்படும் சில மாற்றங்கள்..!

deepavali greeting

பட்டு வஸ்திரங்களை உடையாக உடுத்தும் பொழுது நம் உடலில் ஏற்படும் சில மாற்றங்கள்..!

 

குளவி தன் உமிழ் நீரைப் பாய்ச்சி மண்ணை உருட்டி அதை எடுத்து வந்து கூட்டைக் கட்டுகின்றது. பின் தன் இனத்தைப் பெருக்க வேண்டும் என்ற உந்துதலால் புழுவைக் கொட்டுகின்றது.

கொட்டிய பின் மயக்கமாக இருக்கும் அந்தப் புழுவைக் கொண்டு வந்து தான் கட்டிய கூட்டுக்குள் அடைத்து விடுகின்றது. இப்படிப் பல புழுக்களைக் கொட்டி அதை எல்லாம் காற்றுப் புகாவண்ணம் கூட்டில் அடைத்து விடுகின்றது.

கொட்டிய விஷத்தின் தன்மை புழுவின் அணுக்களுக்குள் படப்பட்டு குளவியின் நினைவாகவே வரப்படும் போது உயிர் அதை விட்டு வெளி வராது புழுவை உருவாக்கிய அணுக்களே மாறுபட்டு குளவியை உருவாக்கும் அணுக்களாக உருப்பெற்று (குளவியின்) அந்த விஷத்தின் தன்மையால் புழுவே குளவியின் ரூபமாக மாறுகின்றது.

ஆனால் குளவி கொட்டாமலேயே சில புழுக்கள் கூட்டைக் கட்டி அதற்குள் அடைப்பட்டுவிடுகிறது. பட்டுப் புழுக்கள்… பட்டுப் பூச்சிகள் என்று சொல்வோம்.

கூடுகட்டி உள்ளுக்குள் போய்விட்டது என்று சொன்னால் அந்த உணர்வுகள் எடுத்துக் கொண்ட பின் தனக்குள் எப்படியோ இதற்குள் அடைபடும் போது புதிதாக எண்ணங்கள் தோன்றுகின்றது.

1.அடைபட்டு விட்டோமே… என்ற நிலையில்
2.தன்னை மறந்து தான் தான் தான் சிக்கி கொண்டோம் என்ற நிலை இல்லாதபடி
3.தான் கட்டிய கூட்டுக்குள்ளேயே அடைபட்டு வெளியே செல்ல வேண்டும்… பறக்க வேண்டும்…! என்ற உணர்வுகள் புதிதாகத் தோன்றுகின்றது.

அந்த உணர்வுகள் தோன்றி வளரப்படும் பொழுது இதற்கு வலுவான எண்ணங்கள் வருகின்றது. வெளியிலே வர வேண்டும் என்ற உணர்வுகள் ஆன பின்
1.நீளமாக இருக்கக்கூடிய புழு இது குறைந்து
2.இந்த சத்தெல்லாம் சுருங்கி இறக்கைகள் முளைத்து
3.பல் வலு பெற்று கூட்டை உடைத்துக் கொண்டு வெளியில் வருகிறது பட்டுப் பூச்சியாக.

இது எல்லாம் இயற்கையின் சில உண்மை நிலைகள்.

ஆனால் பட்டுப் புழுவிலிருந்து பட்டு நூலை எடுப்பதற்காக வேண்டி மனிதன் என்ன செய்கிறான்..? அதற்குண்டான இரைகளைப் போடுகிறோம். அதனுடைய மலத்தைக் கூடாகக் கட்டுகின்றது.

இது கூடு கட்டி உள்ளே போய்விட்டது. என்றால் தண்ணீரில் போட்டு அலசி அதனுடைய கடைசி மலத்தை நூலாக எடுத்துக் கொள்கிறான்.

உடனடியாக நூலை எடுப்பதற்காகச் சுடு தண்ணீரில் அந்தப் புழுக்களை (கூட்டுடன்) போடுவார்கள். அதைத் தான் காந்திஜி சொன்னார். நீ சுடு தண்ணீரில போட்டு அதைக் கொதிக்க வைக்காதே…! என்றார்.

சுடு தண்ணீரில் போட்டு எடுத்த நூல் கொண்டு நெய்த பட்டுச் சேலையையோ அல்லது அந்த உடையை யார் உடுத்தினாலும் பார்க்கலாம்.

அந்தப் புழுக்கள் சுடு தண்ணீரில் வேகும் பொழுது பட்ட எரிச்சல் எல்லாம் அந்தப் பட்டு சேலையை கட்டியவர்கள் உடலில் காந்தல் நிச்சயம் வரும்.

ஆனால் அதே புழுக்களை சாதாரண நீரில் போட்டு எடுத்த நூலில் நெய்த பட்டுச் சேலையைப் போட்டுப் பாருங்கள். அதில் ஒரு விதமான குளிர்ச்சி வரும்.

சுடு தண்ணீரில் போட்டு அதை உடனடியாகக் கொன்றால் அந்த எரிச்சலான உணர்வுகள் நூலில் கலக்கின்றது. அதை உடுத்தினால் நமக்கும் இன புரியாதபடி உடலில் ஒரு காந்தல் (எரிச்சல்) வரும்.

இதை எல்லாம் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றார். இயற்கையின் இயக்கங்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இதைச் சொல்கிறோம்.