நம் கண்களை ஞானக் கண்ணாக மாற்றும் வழி

gnanaguru

நம் கண்களைச் சக்தி வாய்ந்த ஞானக் கண்ணாக மாற்றும் வழி – 1

 

சந்தர்ப்பவசத்தால் குடும்பத்தில் நடக்கக்கூடிய சில கடுமையான சம்பவங்களால் மீண்டும் மீண்டும் வேதனையை அதிகமாக நுகர நேர்ந்தால் அதை ஆழமாக எண்ணி உற்றுப் பார்ப்பதால் கண்களில் உள்ள கருமணிகளில் விஷம் ஒட்டிக் கொள்கின்றது. (வேதனை என்பது விஷம்)

கருமணிகளில் சேரும் இத்தகைய விஷம் அதிகமாகும் பொழுது கண் எரிச்சல்… கண் பார்வை மங்கல்… கண்களிலிருந்து நீர் வடிதல்… இதைப் போன்ற நிலைகளாகி கடைசியில் கண்களில் சுத்தமாகப் பார்வையே போகும் வாய்ப்புகள் உருவாகிவிடுகின்றது.

அதே சமயத்தில் அந்தக் கருமணிகளுடன் சேர்ந்த நரம்பு மண்டலத்திலும் விஷத் தன்மைகள் சேரத் தொடங்கும்.

இந்த நரம்பு (ELECTRIC WIRE போல்) வழியாகத்தான் நாம் பார்த்த செய்தி உடல் முழுவதும் பரவி அதற்குத்தக்க நம் உடலும் உடலின் அங்கங்களும் இயங்குகின்றது.

ஆனால் இந்தக் கருவிழியுடன் சேர்ந்த நரம்புகள் பலவீனமடைவதோடு மட்டுமல்லாதபடி
1.வேதனைப்படும் உணர்ச்சியையே தூண்டிக் கொண்டிருக்கும்
2.நம்மை நல்லதை அதிகமாக எண்ண விடாது.

அதற்காகத்தான் நாம் தியானம் செய்யும் போது துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் கண்களில் உள்ள கருமணிகளில் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று தியானிக்கின்றோம். கண்களில் அந்தச் சக்திகளை அதிகமாகப் படரச் செய்கின்றோம்.

அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நாம் அழுத்தமாக கண்களில் உள்ள கருமணிகளில் படரச் செய்யும் பொழுது அதில் படர்ந்துள்ள விஷத் தன்மைகள் கரைந்து விடுகின்றது. அதனுடன் ஒட்டிய நரம்புகளையும். தூய்மைப்படுத்துகின்றது.

இதனால் கண் பார்வை சீராகத் தெரிய வரும். மேலும் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் கண் கருவிழியுடன் தொடர்பு கொண்ட நரம்புகளில் ஆழமாகப் பதிவாகின்றது. அதனால்
1.அடிக்கடி அந்த மகரிஷிகளின் பால் எளிதில் நம் நினைவுகள் செல்லத் தொடங்கும்.
2.நம் கண்களுக்கும் வீரிய சக்தியாக (ANTENNA POWER) கிடைக்கும்.
3.விண்ணின் ஆற்றலை எளிதில் கவரும் சந்தர்ப்பமும் உருவாகின்றது.

அதற்காக வேண்டித்தான் சாமிகள் (ஞானகுரு) தன்னிடம் ஆசி பெறும் பொழுது அவருடைய கண்களைப் பார்க்க வேண்டும் என்று மிகவும் வலியுறுத்திச் சொல்கிறார்.
1.ஏனென்றால் நான் உங்களுக்கு அருள் உணர்வுகளை என் கண் வழியாக அதிகமாகப் பாய்ச்சுகின்றேன்.
2.அந்த நேரத்தில் நீங்கள் என்னை வணங்குவதையோ அல்லது வேறு எங்கோ பார்த்துக் கொண்டிருந்தால்
3.நான் கண் வழி கொடுக்கும் ஞான வித்தை நீங்கள் பெற முடியாது.

உங்களுக்குள் எப்படியாவது ஞானிகளின் அருள் வாக்கை ஊழ்வினையாக வித்தாக நான் பதிவாக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாலும் உங்கள் எண்ணம் (உங்கள் உயிரின் இயக்கம்) என்னை வணங்கும் நிலையில் அதில் கவனம் இருப்பதால் உங்களுக்குள் செலுத்தவும் முடிவதில்லை.

ஆகவே எந்த உயர்ந்த எண்ணத்தில் வருகின்றீர்களோ அந்த எண்ணத்தை வலுவாக்கி
1.என்னை நேராக நிமிர்ந்து பார்த்து
2.என் கண்களை உற்றுப் பார்த்து குருவின் அருள் சக்தி எனக்குக் கிடைக்க வேண்டும்
3.நாங்கள் எண்ணி வந்த காரியங்கள் ஜெயமாக வேண்டும் என்று எண்ணினால் அது நிச்சயம் நிறைவேறும்.

என்னை வணங்குவதில் முக்கியமாக இருப்பதாலும்… வணங்கினால் நான் அவர்களுக்குச் செய்வேன்…! என்றும் தான் நினைக்கின்றார்கள்.

1.நான் கண் வழி பாய்ச்சும் அருள் உணர்வை எவ்வளவுக்கு எவ்வளவு கூர்மையாக யார் உற்றுப் பார்க்கின்றார்களோ
2.அந்த அளவுக்கு ஞானிகளின் அருள் ஞான வித்துக்கள் ஆழமாகப் பதிவாகும்.
3.பதிவான வித்து வலுவான நிலையில் வளரும். அதன் வழி அனைத்தும் நீங்கள் பெற முடியும் என்று தான் சொல்கிறேன்.

(சாமிகள் பல பௌர்ணமி உபதேசங்கள் கடைசியில் இது சம்பந்தமாக குறைந்தது பத்திலிருந்து இருபது நிமிடம் பேசியுள்ளார்.)

என் குருநாதரிடம் நான் அடி வாங்கி உதை வாங்கித்தான் கற்றுக் கொண்டேன். ஒவ்வொரு அடிக்கும் ஒவ்வொரு விதமான மெய் உணர்வுகள் வரும்.
1.அடி வாங்கித்தான் நான் கற்றுக் கொண்டேன் என்று சொல்கிறார் என்றால்
2.அவர் ஈஸ்வராய குருதேவரை எப்படிக் கண்களால் பார்த்திருப்பார் என்று எண்ணிப் பாருங்கள்…?

நான்கு மறைத் தீர்ப்பு…! – வேதங்களின் மூலம் என்ன…?

vedic ages - sages

நான்கு மறைத் தீர்ப்பு…! – வேதங்களின் மூலம் என்ன…?

 

ஒரு மனிதன் வேதனைப்படுகின்றான் என்றால் அவனை உற்றுப் பார்த்து நுகர்ந்தோம் என்றால் நமக்குள் இருக்கும் நல்ல குணங்களை அது மாற்றி விடுகின்றது. அதாவது நாம் நுகர்ந்த அந்த வேதனை உணர்வுகள் நல்லதை அடக்குகின்றது – அதர்வண.

ஒரு மனிதனின் உடல் உடல் ரிக். அதிலிருந்து வெளிப்படும் உணர்வுகள் சாம இசை. வேதனைப்பட்டு அவன் எப்படி அம்மம்மா… அம்மம்மா…! என்று அவன் இசை பாடுகின்றானோ அந்த ஒலி அலைகளைக் கேட்டு உற்று நோக்கினால் நாம் நுகரக்கூடிய உணர்வுகள் நம் நல்ல குணத்தோடு இணைந்த பின் இந்த உணர்வுகள் அதர்வண.

நாம் சந்தோஷமாகச் சிரிப்பதை விடுத்து விட்டு அந்த வேதனையான உணர்வின் தன்மை கொண்டு அவருடன் சேர்ந்து நாமும் அழுவோம்.
1.அவன் அடிபட்டு… அதனால் வேதனைப்பட்டு அழுகின்றான்.
2.ஆனால் நாம் அடிபடாமலேயே நுகர்ந்த அந்த உணர்ச்சியின் உணர்வுகள் நம்மை அழுக வைக்கின்றது.., பதட்டம் வருகின்றது…
3.ஆகவே இது அதர்வண.

இந்த உணர்வுகளை நம் நல்ல குணங்களுடன் சேர்த்துக் கொண்ட பின் யஜூர் ஓர் வித்தாகி விடுகின்றது. நல்ல குணம் கொண்டு அந்த வேதனையின் உணர்வை நாம் நுகர்ந்ததால் மீண்டும் மீண்டும் அந்த வேதனைபட்ட மனிதனை எண்ண வைக்கின்றது.
1.அந்த வேதனை அணுக்கள் நமக்குள் பெருக்குகின்றது.
2.பின் வேதனைப்படும் உடலாக மாற்றுகின்றது.

அவன் எதனால் வேதனைபட்டனோ அது வேறு வகையாக (அடிபட்டதால்) இருப்பினும் நாம் நமது வாழ்க்கையில் தொடர்ந்து வரப்படும் போது
1.இந்தப் பிள்ளைக்கு இப்படி இருக்கிறதே… அவனுக்கு நோய் வந்து விட்டதே…!
2.நோயாகி விட்டால் நம் பொருள் போய்விடுமே…! என்ற இந்த ஆசைகள் வருகின்றது.
3.வேதனைப்பட்டவனின் உணர்வு நம்முடன் கலந்து இப்படிப் புது வித்தாக இங்கே உருவாகும்.

ஆக ஒரு மனிதன் ஒரு நோயால் இறந்தாலும் அந்த நோயின் தன்மையைக் கேட்டறிந்த மனிதன் இவருடைய உணர்வின் மாற்றத்திற்குத் தக்கவாறு இந்த விஷத்தின் உணர்வுகள் மாறி இவன் ஒரு ரூபத்திற்கு போவான்.

இதை எல்லாம் நேரடியாகவே குருநாதர் காண்பித்து ஒவ்வொரு எல்லைகளுக்கும் என்னைப் (ஞானகுரு) போகச் சொல்லித் தான் இருபது வருடம் பார்த்தேன்.
1.உண்மைகளை எல்லாம் அனுபவபூர்வமாகக் காட்டினார் உணர்த்தினார்
2.அதிலிருந்து விடுபடும் மார்க்கங்களையும் கொடுத்தார்.

சொல்வது அர்த்தம் ஆகிறதல்லவா…!

அதர்வண வேதங்களில் மூலங்களைப் புரிந்து கொள்…! என்றார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர். வேதங்கள் எப்படித் தவறான நிலைகளில் பயன்படுத்தப்படுகின்றது என்ற அதனை நீ உற்றுப் பார்… ஆனால் அந்தத் தவறின் தன்மைக்கு நீ போய்விடாதே…! என்றார் குருநாதர்.

வேதத்தைக் கற்றவர்களின் செயல் அதர்வண வேதம் என்ற நிலையில் இந்த உடலின் இச்சைக்குத்தான் கொண்டு வந்தார்களே தவிர பேரருள் பேரொளி பெற்று என்றும் பேரின்பமாக ஒளிச் சரீரம் பெறவேண்டும் என்ற நிலைகளுக்குச் செல்லவில்லை.

செத்த பின் என்ன செய்வது…? யாருக்குத் தெரியும் என்று தான் எண்ணுகிறார்கள். ஆனால் அதர்வண… யஜூர்… மீண்டும் சாம. வேதனையை எண்ணும் போது இறந்தவர்கள் உடலில் விளைந்த நோய்கள் இங்கே வருகின்றது. நம்மையும் வேதனைக்குத் தான் ஆளாக்குகிறது…!

மனித வாழ்க்கையில் எத்தனையோ வேதனைப்படும் உணர்வுகள் வருகின்றது. ஒரு காரியத்தை எண்ணிச் செய்யும் பொழுது நடக்கவில்லை என்றால் வேதனை உணர்வுகளச் சேர்த்து விடுகின்றோம் அதர்வண…! நம் நல்ல குணத்தை இங்கே அடக்குகின்றது.

கஷ்டப்படுபவர்களுக்கும் துன்பப்படுபவர்களுக்கும் நாம் நல்லதைச் செய்தோம். நல்லதைச் செய்தபின் அந்த அதர்வண என்ற நிலையில் அவர்கள் துன்பங்கள் நமக்குள் வந்து நம் நல்லதை மாற்றிவிடுகிறது.
1.அதற்குப் பிற்பாடு மீண்டும் நாம் நல்லதைச் சொன்னாலும் யாரும் கேட்க மாட்டார்கள்.
2.(ஆனால் முந்தி எல்லாம் கேட்டிருப்பார்கள்)

அப்பொழுது என்ன சொல்வோம்…? அன்றைக்கு என்னிடம் எல்லாம் இருந்தது… கேட்டார்கள். இன்றைக்கு என்னைத் தூற்றுகிறார்கள்… நம்மைக் கண்டாலே வெறுப்பு வருகின்றது…! என்போம். இந்த நினைவாற்றல் தான் நமக்குள் வருகின்றது.

இதைப் போன்ற நிலைகளை எல்லாம் மாற்றுவதற்காகத்தான் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் ஆற்றல் மிக்க சக்திகளை உங்களைப் பெறும் படி செய்கின்றேன். நீங்கள் எண்ணும் போது அதைக் கிடைக்கும்படியும் செய்கின்றேன்.

இதை விடுத்துவிட்டு இந்த உடலின் இச்சைக்கு நீங்கள் அதனுடன் இணைத்தால் அதைத்தான் உங்கள் உயிர் உருவாக்குமே தவிர வேறு நல்லது எதுவும் நடக்காது.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் என்னைக் காட்டுக்குள்ளும் மேட்டுக்குள்ளும் அலையச் செய்து… பல சிரமங்களை உண்டாக்கி…
1.இந்தத் தீமைகள் எப்படி உனக்குள் உருவாகின்றது…?
2.அதிலிருந்து நீ எப்படி மாற்ற வேண்டும் என்று அரும்பெரும் சக்தியைக் கொடுத்தார்
3.அதைத்தான் உங்களுக்கு வாக்காகக் கொடுத்துக் கொண்டு வருகின்றோம்
4.சிரமம் வரும் நேரமெல்லாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுக்கும்படிச் செய்கின்றோம்.
5,துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை நீங்கள் எடுத்தால் அது அதர்வண.. உங்களுக்குள் அறியாது இயக்கும் தீமைகளை அடக்கி
6.நஞ்சினை வென்றிடும் ஒளியான வித்தாக யஜூர்… உருவாக்கி
7.அதன் சொல்லாக செயலாக உங்களை ஞானியாக இயக்கும் சாம…!

வேதங்களில் இது தெளிவாக்கப்பட்டுள்ளது. நான்கு மறைத் தீர்ப்பு…!