ஒவ்வொரு மனிதனையும் ஆண்டு கொண்டிருக்கும்… தில்லை அம்பலத்தாண்டவா…!

siva-nataraj

ஒவ்வொரு மனிதனையும் ஆண்டு கொண்டிருக்கும்… தில்லை அம்பலத்தாண்டவா…!

 

“நெருப்பில் இருந்து தான் நீர் தோன்றியது…!” என்று திருமூலர் அன்று உணர்த்தினார்.

ஆதியிலே எதுவுமே இல்லாது சூனியப் பிரதேசமாக இருந்தாலும் அந்த விஷம் விஷமற்றதைத் தாக்கும் பொழுது வெப்பம் உருவாகின்றது,

வெப்பத்தால் ஒன்றுடன் ஒன்று வேக வைக்கும் பொழுது அந்தச் சத்துகள் இரண்டற இணைந்த பின் ஆவிகள் வெளிப்படுகிறது.

ஆவிகள் அடர்த்தியாகும் பொழுது மேகமாக மாறி மேகத்திற்குள் மாறுபட்ட ஆவிகள் மோதும் போது நீராக வடிகின்றது என்ற நிலையைத் தெளிவாகத் திருமூலர் உரைத்துள்ளார்.

நீராக மாறி அடை கூடி நகரும் பொழுது மற்றதைத் தனக்குள் கவர்ந்து மீண்டும் வெப்பமாகி அது உறையும் பொழுது ஒரு திடப் பொருளாகின்றது.

ஆதியிலே எல்லையே இல்லாத பரந்த வெளியில் முதன் முதலில் ஒரு திடப்பொருள் உருவாகும் பொழுது அது பரம் பொருளாகின்றது. பொருளுக்குள் உள் நின்று இயக்கும் சக்தியைப் “பரமேஸ்வரா…!” என்று அழைத்தார்.

திருமூலர் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன் இதைத் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.

எல்லையே இல்லாத இடத்தில் பரம் பொருளாக (உலகம்) உருவாகின்றது. பெரிய கோளாக உருவாகும் போது இது சுழற்சியின் நிலைகள் கொண்டு நிற்காமல் ஓடுகிறது.
1.நிற்காமல் ஓடியதால் அதைத் “தில்லை நடராஜா…” என்று காரணப் பெயர் வைக்கின்றார்
2.அதாவது அது நிற்காமல் ஓடும் போது அரசனாக நின்று இந்த உலகை எவ்வாறு அது உருவாக்கியது என்ற நிலையை நிலைப்படுத்துகின்றார்.

அதிலே உருவான உணர்வின் தன்மை உயிரணு தனக்குள் நுகர்ந்த உணர்வுக்கொப்ப “தில்லை அம்பலத்தாண்டவா…”

1.உயிரினங்கள் தான் நுகர்ந்த அந்தந்த உணர்வுக்கொப்ப உரு அமைவதும்
2.அதற்கொப்ப அதனுடைய நாத ஒலிகளை எழுப்புவதும்
3.இந்த  உணர்வுக்கொப்ப ரூபங்கள் அமைவதும்
4.அவைகளின் நடை உடை பாவனைகளைப் பார்த்து ஆயிரத்தெட்டு நடனங்களைக் காட்டினார் திருமூலர்.
5.அதுவே மனிதனுக்குள் வரும் போது நூற்றியெட்டு நடனங்களாக காட்டினார்.

நடனக் கலை என்று இன்று நடராஜருக்கு நாட்டியாஞ்சலி செய்தால் நடராஜர் நமக்கு ஏதோ செய்வார் என்று இப்படி சாங்கியங்களைச் செய்து வரம் கேட்பவர்களாகத்தான் இன்று இருக்கின்றோம்.

இதை எல்லாம் தெரிந்து கொள்வது நல்லது.

அந்த ஸ்தலத்தில் சிதம்பரத்திலிருந்து அதை நாம் பெறவில்லை. அங்கே நாம் பூஜை செய்வதும் அதனுடைய வாரிசுகளுக்குக் கொடுத்து விட்டு அருள் வாங்குவது என்ற நிலையில் தான் இருக்கின்றோமே தவிர திருமூலர் உணர்த்திய பேருண்மையை அறிவதற்கு இல்லை.

அவரின் வாரிசுகளாவது இன்று சீராக இருந்து அவர்களாவது அந்த உண்மையைப் பெற்று இருக்கிறாரா என்றால் இல்லை.

கிடைத்த மட்டும் லாபம் என்ற நிலையில் இந்த வாழ்க்கையின் நிலைகளைத்தான் ஓட்டுகின்றாரே தவிர அந்த மகா ஞானி திருமூலர் காட்டிய மெய் வழியைப் பின்பற்றவில்லை.

அவர் பிறவியில்லா நிலைகள் அடைந்தார். அதைப் பெற வேண்டும் என்ற நிலை இல்லை. ஏனென்றால் விஞ்ஞான அறிவால் மனிதனுடைய எண்ணங்கள் முழுவதும் அழியும் இத்தருணத்தில் இதைத் தெளிவுபடுத்துகின்றோம்.

1.திருமூலர் காட்டிய நெறிகள் கொண்டு
2.மெய்ப் பொருளைக் கண்டுணர்ந்த அந்த மகரிஷிகள் உணர்வை நமக்குள் எடுத்தால்
3.வாழ்க்கையில் வரும் தீமைகளை நீக்க முடியும்
4.விஞ்ஞானப் பேரழிவிலிருந்து நம்மைக் காக்க முடியும்.

இந்த ஆலயம் வருவோர் அனைவரும் மகரிஷிகளின் அருள் உணர்வுகளைப் பெற வேண்டும். பொருள் காணும் நிலைகள் பெற வேண்டும். இந்த வாழ்க்கையில் மகிழ்ந்திடும் நிலை பெற வேண்டும். என்று எண்ணி இந்த முறைப்படி தியானியுங்கள்.

எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று அந்த ஆலயத்தில் தவம் இருங்கள்.

ஒவ்வொரு மனிதனும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும். அவர்கள் குடும்பங்கள் நலம் பெற வேண்டும் என்ற இந்த உணர்வை எடுத்தால் இது தான் தவம்.

ஆண்டவனை நான் காணப் போகின்றேன் அவன் அருளை நான் பெறப் போகின்றேன் என்று இருப்பது தவம் அல்ல.

ஒவ்வொரு மனிதனையும் ஆண்டு கொண்டு இருப்பது உயிர். அது தான் தில்லை அம்பலத்தாண்டவா…!
1.ஆண்டவனாக இயக்கிக் கொண்டு இருப்பதும
2.எண்ணியதை ஈசனாக உருவாக்கிக் கொண்டு இருப்பதும்
3.உணர்வின் அணுவை உடலாக்கிக் கொண்டு சிவனாக்கிக் கொண்டு இருப்பதும்
4.சிவத்துக்குள் சக்தியாக்கி  இயக்கிக் கொண்டு இருப்பதும் உயிரே.

ஆகவே அந்த உடலை ஆண்டு கொண்டிருக்கும் உயிர் வீற்றிருக்கும் ஆலயத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தச் செய்யும் போது அந்த ஆண்டவனின் அருளை நாம் பெற முடியும்.

எல்லோரும் மகிழ வேண்டும் என்று எண்ணினால் இது தவம். அந்த மகிழ்ச்சியின் தன்மை நமக்குள் போற்றும் நிலை வந்தால் அந்த தவத்தின் பலனை நாம் பெறுகின்றோம். ஆலயங்களில் இந்த முறைப்படி எண்ணிப் பெறுங்கள்.

அந்த மெய் ஞானிகள் காட்டிய வழிகளில் நாம் இதைச் செயல்படுத்துவோம். இந்தக் காற்று மண்டலத்தில் உள்ள நச்சுத் தன்மையை அகற்றுவோம். நமக்குள் அறியாது புகுந்த அந்த நஞ்சின் தன்மையை அதை வளராது தடுப்போம். உலக மக்களைக் காப்போம்.

அடுத்து வரும் சந்ததியினர் கருவில் வளரும் குழந்தைகளுக்கு ஞானியருடைய உணர்வைப் போதிப்போம். அதைப் பூர்வ புண்ணியமாக அமைப்போம்.

பிறந்த பின் உலகைக் காத்திடும் ஞானிகளாகக் காப்போம்… வளர்ப்போம்… அதைச் செயலாக்குவோம்.. என்று “உறுதி கொள்வோம்…!”

மகரிஷிகளின் அருள் வட்டத்தில் நாம் எப்படி வாழ்வது…? – அனுபவம்

Sabdharishis

மகரிஷிகளின் அருள் வட்டத்தில் நாம் எப்படி வாழ்வது…? – அனுபவம்

 

உதாரணமாக எல்லோருமே செல்ஃபோன் (MOBILE PHONE) உபயோகிக்கின்றோம். பக்கத்தில் பக்கத்தில் இருந்து ஃபோனில் தொடர்பு கொண்டாலும் இன்று அது விண்ணிலிருக்கும் செயற்கைக் கோளுக்குச் (SATELLITE) சென்று மீண்டும் அங்கிருந்து தான் கீழே வருகிறது.

பூமியின் எந்தப் பாகத்தில் எவ்வளவு தொலைவில் இருந்து பேசினாலும் அதே மாதிரித்தான் தொடர்பு கொள்ள முடியும்.

இதே மாதிரி இன்று செல்ஃபோனில் புளூ டூத், வைஃபை (BLUE TOOTH, WIFY) உபயோக்கின்றோம். இவையெல்லாம் பக்கத்திலேயே தான் தொடர்பு கொள்ள முடியும். தூரத்திற்குச் சென்று விட்டால் தொடர்பு கிடைக்காது. (இதெல்லாம் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள்)

அது போல் விண்ணிலிருக்கும் மகரிஷிகளுடன் தொடர்பு கொண்டு அந்த வட்டத்திற்குள் செல்ல வேண்டும் என்றால்
1.மகரிஷிகளின் அருள் சக்தி நான் பெறவேண்டும் ஈஸ்வரா…! என்று எண்ணினால் அது மிகச் சிறிய வட்டம்.
2.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா…! என்று எண்ணினால் அது அடுத்த வட்டம்.
3.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் குடும்பம் முழுவதும் பெறவேண்டும் ஈஸ்வரா…! அதற்கடுத்த வட்டம்.
4.மகரிஷிகளின் அருள் சக்தி ஊரில் உள்ளோர் நாட்டு மக்கள் பெறவேண்டும் ஈஸ்வரா…! என்று எண்ணி உலகம் முழுவதும் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும் என்றால் ஓரளவிற்கு இது பெரிய வட்டம்.

ஆனாலும் மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டம் என்பது சாமிகள் (ஞானகுரு) சொன்னதைப் பதிவு செய்து அதன் வழி சப்தரிஷி மண்டலத்தையும் துருவ நட்சத்திரத்தையும் எண்ணினால் சப்தரிஷி மண்டலத்திற்குள்ளும் துருவ நட்சத்திரத்திற்குள்ளும் நம் நினைவலைகள் ஊடுருவிச் செல்கிறது.

1.அங்கிருந்து சக்திகளை எடுத்து நம் ஆன்மாவில் இணைக்கும் பொழுதும்
2.அதை மற்றவர்களுக்கு இணைக்கும் பொழுதும் அது ஒரு சுழற்சி வட்டமாக நம் ஈர்ப்புக்கு வரும்.

அதே சமயம் சாமிகள் சொன்ன
1.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் உணர்வின் ஆற்றல்படி
2.2000 சூரியக் குடும்பம் என்ற நிலைகளை இணைத்து
3.நம் நினைவலைகளை அகண்ட அண்டத்துடன் இணைத்தால்
4.அதாவது மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் உணர்வுடன் கலந்து நம் நினைவினை அகண்ட நிலையில் செலுத்தினால்
5.அது மகரிஷிகளின் அருள் வட்டமாகும். மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டமாகும்.

அதற்குள் இணைந்து…
அதை நுகர்ந்து…
அதைக் கவர்ந்து…
அதைச் சுவாசித்து…
அதை நமக்குள் இழுத்தால்…
நம் ஈர்ப்பு மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இருக்கிறது என்று அர்த்தம்.

ஒவ்வொரு நொடிப் பொழுதும் இவ்வாறு அங்கிருந்து எண்ணினால் நாம் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்கிறோம் என்று அர்த்தம். அப்பொழுது நாம் புவியின் ஈர்ப்பில் இல்லை என்று உணரலாம்.

2014ஆம் ஆண்டு டிசம்பர் கடைசியில்… சப்தரிஷி மண்டலத்தைப் பார்க்க வேண்டும் என்று மிகவும் ஆர்வமாக நான் முயற்சி எடுத்துக் கொண்டிருந்த பொழுது மேலே (விண்ணிலே) என் நினைவுகள் சென்ற பொழுது குருநாதர் எனக்குச் சொன்னது…
1.மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்தில் நின்று கொண்டு
2.நான் அந்த அலைகளைக் கவர்ந்து பூமிக்குள் பரவச் செய்து கொண்டிருக்கின்றேன்.

சப்தரிஷி மண்டலத்தைக் கண்களால் பார்த்து நீ என்ன செய்யப் போகிறாய்…?

விண்ணிலிருந்து அலைகளை இழுத்துப் பூமிக்குள் நான் பாய்ச்சுவது போல்… நான் செய்வது போல்… “இந்த வேலையைச் செய்… போடா…! என்றார்.

என்னால் முடிந்தவரை அவர் சொன்ன வேலையைச் செய்து கொண்டுள்ளேன்…!

ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாக இருக்க எப்படித் தியானிக்க வேண்டும்…?

Blessed with divinity

ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாக இருக்க எப்படித் தியானிக்க வேண்டும்…? 

 

இந்த வாழ்க்கையில் நாம் நல்ல மனதுடன் நல்ல குணங்கள் கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருந்தாலும் கண்ணுக்கு முன்னாடி ஒருவன் வேதனைப்படுவதைப் பார்த்தாலோ அல்லது நம் குழந்தை வேதனைப்படுவதைப் பார்த்தாலோ அந்த உடலில் இருந்து வெளி வரும் உணர்வுகளை நாம் பதிவாக்கிக் கொள்கிறோம்.

அவர்கள் வேதனையுடன் வெளிப்படுத்தும் உணர்வலைகளை நம் கண்ணின் காந்தப்புலன் அறிவு கவர்கின்றது. உயிரிலே பட்டவுடன் அந்த உணர்ச்சிகள் எண்ணம் சொல் செயலாக இயக்குகின்றது.

அவ்வாறு இயக்கப்படும் பொழுது நம்மிடம் இருக்கும் மகிழ்ச்சியான எண்ணமும் வேதனையும் இரண்டையும் கலந்து நாம் சுவாசித்த பின் அது ஒரு புதுக் கருவாக உருவாக்குகின்றது.
1.அப்பொழுது இன்றைய செயல் நாளை இல்லை…!
2.இன்றைய செயல் நாளை…! (அதாவது வேதனை வேதனை என்று எண்ணினால் நம்மைச் சதா வேதனைப்படுபவராக அது மாற்றிவிடும்)

இன்றைக்கு நாம் சந்தோஷமாக இருக்கிறோம் என்று சொன்னால் நாளைக்கு நாம் சந்தோஷமாக இருக்க முடியுமா என்றால் முடியாது. எத்தனை பேர் தினமும் சந்தோஷமாகவே இருக்கிறார்கள் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்…!

இதை எதற்காகக் கேட்கிறோம் என்று சொன்னால்….
1.ஒவ்வொரு நிமிடமும் நம் உணர்வுகள் மாறிக் கொண்டே இருக்கும்.
2.அதை நாம் மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.
3.சந்தர்ப்பத்தில் நாம் நுகரும் உணர்வுகள் நம்மை மாற்றும்.
4.அதை மாற்ற மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் கொடுத்த உபாயத்தின் துணை கொண்டு
5.அருள் மகரிஷியின் உணர்வுகளை நாங்கள் பெற வேண்டும் என்ற உணர்வுகளை இணைத்து
6.வரும் தீமையின் வலுவை இழக்கச் செய்தால் அந்த மகரிஷிகளின் உணர்வின் அணுவாக நமக்குள் பிறக்கும். (தீமையை உருவாக்குவதற்குப் பதில் நன்மையை உருவாக்கும்)
7.அருள் உணர்வினை நமக்குள் பெறும் பொழுது அருளானந்தத்தை என்றுமே பெற முடியும்.

இப்போது சொல்வது உங்களுக்கு அர்த்தமாகின்றதா…?

இப்படி இணைக்காமல் சாமி (ஞானகுரு) எனக்கு ஆசீர்வாதம் கொடுத்தார் நடக்கவில்லையே… சாமி ஆசீர்வாதம் கொடுத்தார் நடக்கவில்லையே…! என்று சொன்னால் எப்படிச் சரியாகும்…!

இது மட்டுமல்லாமல் மற்றவர்களிடமும் சென்று “சாமி ஆசி கொடுத்தாரே… உங்களுக்கு நல்லது நடந்ததா…?” என்று இதே கேள்வியைக் கேட்பார்கள். இப்படிக் கேட்டதும் அவர்களும் ஆமாங்க…! எங்களுக்கும் ஒன்றும் நடக்கவில்லை…! என்பார்கள்.

ஆக இவர்கள் ஆசையை அடுத்தவருக்கும் கொட்டி இரண்டு பேருமே ஆசையை வளர்த்துக் கொண்டு போகும் ஞானப் பாதையைக் கெடுத்து மற்றவர்களையும் கெடுத்து அடுத்தவர்களையும் மெய் வழியைப் பெறாத நிலைகள் செய்கின்றது.

ஏனென்றால் லட்சங்களையும் கோடிகளையும் வைத்து எத்தனையோ சுகமாக இருங்கள். இன்னும் பல ஆயிரம் ரூபாயைச் செலவழித்துச் சுவையான பதார்த்தத்தை ரசித்துச் சாப்பபிடுங்கள்.

இந்த உடல் நிற்கிறதா…? இல்லையே…! கை நிறையச் சம்பாதித்தேன்… பணத்தைச் செலவழித்தேன்… நன்றாகச் சாப்பிட்டேன் என்ற பெருமை இருக்கும். ஆனால் அதே சமயத்தில்
1.வேதனைப்படுவோரை சிறிது நாம் உற்று நோக்கினால்
2.அந்த வேதனையான உணர்வை நுகர்ந்து விடுகின்றோம். (வேதனை என்பது விஷமான உணர்வு)

அந்த விஷத்தின் தன்மை நமக்குள் வளர்ந்த பின் சுவையாகச் சாப்பிட்ட உயர்ந்த சத்தையும் இது கெடுக்கின்றது. கெடுத்த பின் நம் உடல் நலிகின்றது. நலிந்த பின் மீண்டும் அந்த உயர்தர உணவைச் சாப்பிட முடிகிறதா…? முடியவில்லை…!

இருந்தாலும் சாப்பிடும் ஆசையை வளர்த்து அப்புறம் அந்த எண்ணத்தின் ஆசைகள் வளர்ந்து விட்டால் நாம் எதை சமைத்து ரசித்துச் சாப்பிட்டோமோ
1.உதாரணமாக உயிரினங்களை (ஆடு மீன் கோழி…) எதை அதிகமாக நேசித்துச் சாப்பிட்டுப் பழகினோமோ
2.அந்த எண்ணங்கள் வந்தபின் உடலை விட்டுச் சென்றால் அந்த உடலுக்குள் தான் நாம் போகின்றோம்.

ஆகவே நாம் எவ்வளவு தான் செல்வம் சேர்த்து வைத்து இருந்தாலும் இந்தச் செல்வம் நமக்குச் சொந்தமல்ல. இந்த உடலும் நமக்குச் சொந்தமல்ல.

ஆனால் இன்று நாம் சொந்தம் கொண்டாடும் இந்த உடலை வைத்துத் தான்
1.நல்ல குணங்களை – அருள் மகரிஷிகள் அவர்கள் எடுத்து ஒளியாக மாற்றிய உணர்வினை
2.நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இது தான் நமக்கு அழியாச் சொத்து. இதைப் பெற்றால் நாம் இந்தப் பிரபஞ்சத்தில் அழியாத நிலைகள் கொண்டு வேகா நிலை பெறலாம். ஒளியின் சரீரமாக என்றுமே பேரானந்த பெரு வாழ்க்கை வாழ முடியும்.

இல்லை… இன்றைய வாழ்க்கை தான் பிரதானமானது…! நாளை நடப்பதை யார் அறியப் போகிறார்கள்…? என்றால் அதன் வழியிலேயே செல்லலாம்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்குக் காட்டிய மெய் வழியை உங்களுக்குக் காட்டுகின்றோம். அதை வளர்த்தால் மகரிஷிகள் ஈர்ப்பு வட்டத்தில் இணையலாம்.