உடலை விட்டுப் பிரிந்து சென்ற முன்னோர்கள் உறவினர்கள் நண்பர்களின் உயிரான்மாக்களை விண் செலுத்த வேண்டிய முறை

இறந்தவர்களை விண் செலுத்த வேண்டியதன் அவசியம்

பௌர்ணமி தியானத்தின் சிறப்பு

சேட்டிலைட் போல் முன்னோர்களை விண் செலுத்த முடியும் 

உடலை விட்டுப் பிரியும் ஆன்மாக்களைக் கரைக்க வேண்டிய இடம் 

ஆன்மாக்களை விண் செலுத்தினால் ஒரு கல்லில் இரண்டு மாங்காய்

குடும்பத்திலுள்ளோர் எங்கிருந்தாலும் குறித்த நேரம் தியானித்து ஆன்மாக்களை விண் செலுத்துங்கள்

முன்னோர்களை விண் செலுத்திப் பேரானந்த நிலை அடையுங்கள்

காசைக் கொடுத்து முன்னோர்களை விண் செலுத்த முடியாது

இரயில் பயணத்தின் போது பாசத்தால் பழகி உடலை விட்டுப் பிரியும் ஆன்மாவின் இயக்கங்கள்

தலைக்காவிரியில் இருந்து.. காந்திஜி, இராமகிருஷ்ணர், விவேகாநந்தர் ஆன்மாக்களை விண் செலுத்தினேன் – ஞானகுரு 

உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்களை சாஸ்திரப்படி விண் செலுத்தவேண்டும்

முன்னோர்களின் உயிரான்மாக்கள் யார் உடலிலிருந்தாலும் வெளி வரும் பொழுது விண் செலுத்தலாம் 

மக்களுக்கு நல் வழி காட்டிய மகான்களை யாரும் விண் செலுத்தவில்லை – நீ செலுத்து என்றார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் 

எப்படி என்றாலும் இந்த உடலை விட்டுப்  போய்த்தான் ஆகவேண்டும்

உடலைவிட்டுப்பிரியும் ஆன்மா செல்வதைக் காட்டினார் (மனிதன் மிருகம்), மிருக வாயில் உணவு கரையும் நிலை

மறதிப்பூடு, மிருக இனங்கள் இறந்த இடத்தில் உருவாகும் தாவர இனத்தின் மணத்தின் இயக்கங்கள்

தற்கொலையின் நிலைகள் – பாம்பாகப் பிறக்க நீங்கள் தயாரா 

விபத்து நடந்த இடத்தில் பதிவான இறந்த மனிதனின் உதிரத்தின் உணர்ச்சிகள் 

நண்பர்களுக்குள் பற்று கொண்டு மருந்தைக் குடித்து இறந்தால் என்ன நடக்கின்றது

தற்கொலை செய்து கொள்பவர்களின் உணர்வு தொடர்ந்து குடும்பத்திற்குள் இயக்கும் நிலைகள் 

வான்வீதியில் சூட்சமத்தில் சுழலும் மெய்ஞானிகள் யாரும் உடலுடன் இல்லை

உடலுடன் யாரும் சொர்க்கம் அடைய முடியாது 

உடலுக்குப் பின் எங்கே செல்ல வேண்டும் என்று நிர்ணயம் செய்து கொள்ளுங்கள் 

எந்த மெய்ஞானியும் இன்று உடலுடன் இல்லை 

பிறவிக் கடனை அறுத்துச் சென்றவர்கள் ஞானிகள் 

தற்கொலை செய்த ஆன்மாக்களை விண் செலுத்தும் முறை

இறந்தபின் யாருக்கும் ஒன்றும் தெரியாது என்பார்கள், தெரிந்து கொள்ளுங்கள் 

உடலை விட்டுப் பிரியும் ஆன்மாக்களின் நிலைகள்

நம் உயிர் பக்கம் வரும் பிற உயிரான்மாக்களின் இயக்கங்கள்

நினைவு நாள் என்றால் என்ன…? – விளக்கம் 

உடலை விட்டுப் பிரிந்தவர்களுக்கு நினைவு நாள் எப்படிக் கொண்டாட வேண்டும்…? 

அமாவாசைக்கு முன்னோர்களுக்குச் சாப்பாடு வைக்கலாமா…?

மனிதனான பின் இன்னொரு உடல் நமக்கு வேண்டாம் 

இறந்தவர்களைப் பாசத்துடன் எண்ணலாமா…?

குடும்பப் பாரம்பரியத்தில் நம் சந்ததிகளைக் காக்கும் வழி 

முன்னோர்களை விண் செலுத்துவதை உறுதிப்படுத்தும் முறை

உடலை விட்டுப் பிரிந்த உயிரான்மா விண் சென்ற நிலை – நடந்த நிகழ்ச்சி

குருநாதர் மீது நம்பிக்கை நமக்கு நிறைய இருந்தாலும் குருநாதர் நம்மை ஏன் கைவிடுகிறார்…! நம் காரியங்கள் ஏன் தோல்வி அடைகிறது…?

sivalingeswaran guru

குருநாதர் மீது நம்பிக்கை நமக்கு நிறைய இருந்தாலும் குருநாதர் நம்மை ஏன் கைவிடுகிறார்…! நம் காரியங்கள் ஏன் தோல்வி அடைகிறது…?

 

கேள்வி:-
பல பேர் விரும்பிய இலக்கு (தொழில் குடும்ப நிகழ்வு) இதை எல்லாம் நிர்ணயித்துச் செயல்படும் போது தோல்வி அடையும் சூழலில் குருவை வணங்கித் திரும்பவும் அதைப் பெற முயற்சிக்கின்றார்கள்.

அப்படி முயற்சித்தாலும் மீண்டும் பல தோல்விகளைச் சந்திக்கும் போது குருவின் மேல் ஆதங்கப்படுகிறார்கள். குருவை விட்டு விலக மனமில்லாமல் குரு ஏன் நம்மைக் கை விடுகிறார் என ஆதங்கப்படுகிறார்கள்.

பல முறை குருதேவரிடம் காரியம் வெற்றி பெறப் பிரார்த்தனை செய்தும் காரியம் தோல்வியாகவே முடிந்தால் நம்பிக்கை தானாகவே குறைகின்றது.

இதற்குத் தீர்வு கூறுங்கள்…!

பதில்:-
இந்தக் கேள்வியில் குருவிடம் கேட்டோம் குருதேவரிடம் கேட்டோம் என்று தான் உள்ளது. அதே சமயத்தில்
1.புருவ மத்தியில் இருக்கும் தன் உயிரான குருவிடம்
2.கேட்கவே இல்லை என்பதும் மிகவும் தெளிவாக உள்ளது.

இது எப்படி இருக்கிறது என்றால் உதாரணமாக ஃபோனில் உபயோகப்படுத்தும் சிம்மைக் (SIM) காசு கொடுத்து வாங்கி அதன் மூலம் பேசுவதற்கும் செய்தி அனுப்பவதற்கும் பெறுவதற்குரிய பணத்தையும் கட்டி விட்டு
1.என்னால் பேச முடியவில்லை
2.என்னால் செய்திகளை அனுப்பவோ பெறவோ முடியவில்லை என்று சொல்வது போல் தான் உள்ளது.

அந்த சிம்மை (SIM) ஃபோனில் அதற்குரிய சரியான இடத்தில் பொருத்திய பின்பு அதைச் செயலாக்கத்திற்குக் கொண்டு வரும் ஆணையை இடவில்லை என்றால் நாம் எப்படிப் பேச முடியும்…?

சிம்மை ஃபோனில் போட்டு “ACTIVATE…!” செய்தால் தானே அது வேலை செய்யும்…!

சிம் (SIM) என்னைக் கை விட்டு விட்டது. ஆனால் நாங்கள் அதன் மீது இன்னும் நம்பிக்கை நிறைய வைத்துள்ளோம் என்று சொன்னால் அது எப்படிச் சரியாகும்…?

SIMஐ ACTIVATE செய்வது மிகவும் முக்கியம்.

அது போல் தான் நீங்கள் எதை விரும்பினாலும் புறக்கண்ணால் குருவிடமும் குருதேவரிடமும் கேட்டாலும்
1.அதை அகக் கண்ணாக இருந்து புருவ மத்தியில் இருந்து இயக்கிக் கொண்டிருக்கும்
2.நம் உயிருடன் இணைத்துக் கொண்டு வரவில்லை என்றால்
3.எந்தத் தகவலும் பெற முடியாது… அனுப்பவும் முடியாது… நம் சக்தியும் கூடாது…!
4.உயிருக்கு வெளியிலே தான் அந்தச் செய்திகள் எல்லாம் நிற்கும்.

ஏனென்றால் நம்முடைய உள் மனதில் எண்ணும் எண்ணங்களும் உணர்வுகளும் மிக மிகச் சக்தி வாய்ந்தது. நம் உயிர் அதற்குத்தான் அதிகமாகச் சக்தி கொடுத்து வளர்க்கும்… அதைக் காக்கும்…!

வெளி மனதில் இருப்பது சிறிது நேரமோ அல்லது காலமோ இருக்கும். பின் மறந்து போகும். அல்லது வலிமை இருக்காது.

1.உள் மனது என்பது ஆழமாகப் பதிவாகும் வித்து.
2.வெளி மனது என்பது சாதாரணமாக மண் மீது போட்ட வித்து போன்றது.

நாம் பல கோடிச் சரீரங்களில் பெற்ற உணர்வுகளும் இந்தச் சரீரத்தில் பெற்ற உணர்வுகளும் ஆழமாகப் பதிவாகியுள்ளது. ஆனால்
1.மகரிஷிகளைப் பற்றிய உணர்வும் குருவைப் பற்றிய உணர்வும் மண் மீது போட்ட வித்தாக இருக்கும் பட்சத்தில்
2.அதை ஆழமாகப் புருவ மத்தியிலிருக்கும் உயிருடன் மீண்டும் மீண்டும் ஒன்றச் செய்யாத பட்சத்தில்
3.அது வலுவாக இயக்காது… இயக்கவும் முடியாது.

மீண்டும் மீண்டும் மகரிஷிகளின் அருள் சக்தியைப் புருவ மத்தியின் வழியாக இழுத்துச் சுவாசித்தால் தான் அகக் கண்ணான உயிரின் இயக்கம் மாறும். (இது மிகவும் முக்கியம்.)

குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு நீங்கள்
1.குருவை எத்தனை முறை நினைக்கின்றீர்கள்…?
2.மகரிஷிகளை எத்தனை முறை நினைக்கின்றீர்கள்..?
3.மற்றதை எல்லாம் எத்தனை முறை நினைக்கின்றீர்கள்…?
4.நல்லது நடக்கவில்லை… என்று எத்தனை முறை நினைக்கின்றீர்கள்..?என்று கொஞ்ச நேரம் சிந்தித்துப் பாருங்கள்.

இந்த எண்ணிக்கையைக் காட்டிலும் அதிக அளவில் புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் உங்கள் நினைவின் எண்ணிக்கை அதிகமாகச் சென்றிருந்தால்… உயிரிடம் கேட்டிருந்தால் அல்லது பேசியிருந்தால்
1.உங்கள் தொடர்பு (ACTIVATION) மிகவும் சரியாக இருக்கும்.
2.அப்பொழுது குருதேவரும் நீங்களும் சரியான தொடர்பில் இருக்கின்றீர்கள் என்று அர்த்தம்.

அந்த எண்ணிக்கையே இல்லை என்றால் குரு உங்களைக் கைவிடவில்லை… “நீங்கள் தான் குருவைக் கைவிட்டுவிட்டீர்கள்…!” என்று அர்த்தம்.

சொல்வது உங்களுக்கு அர்த்தமாகின்றதல்லவா…!

உயிருடன் ஒன்றிய உணர்வுகள் அனைத்தையும் ஒள்யின் சுடராக மாற்றி என்றும் பதினாறாக வாழ்ந்து கொண்டிருக்கும் மகரிஷிகளுடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்றால் நாமும் நம் உயிருடன் ஒன்றியே இருக்க வேண்டும். உயிருடன் ஒன்றி வாழ வேண்டும்.

புறத்திலிருந்து வரும் உணர்வில் நம் நினைவுகளை எல்லாம் செலுத்தி விட்டால் உயிர் அதற்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கும். ஏனென்றால் நெருப்பில் எந்தப் பொருளைப் போடுகின்றோமோ அது தான் இயக்கும்.

நீங்கள் மகரிஷிகளின் உணர்வை உயிரான நெருப்பில் போட்டால் தான் அந்த வாசனை நிச்சயம் வரும். அந்தச் சத்தை உயிர் இயக்கி நமக்குள் படைக்கும்.

1.குரு வெளிப்படுத்துகின்ற ஆற்றல் மிக்க சக்திகளை நமக்குள் படைத்தால் தான் நமக்கு நல்லது நடக்குமே தவிர
2.குரு வந்து நமக்குச் செய்து தர முடியாது.
3.அப்படிச் செய்தால் அது அவருக்குத் தான் நன்மையாக முடியும் நமக்கு எந்த நன்மையும் கிடைக்காது.

உங்கள் சாப்பாட்டை நீங்கள் சாப்பிட்டால் உங்கள் பசி அடங்கும். உங்கள் சாப்பாட்டை குரு சாப்பிட்டால் அவர் பசி தான் அடங்கும். உங்கள் பசி அடங்கவே அடங்காது.

புருவ மத்தியில் அமர்ந்து தியானியுங்கள்.. தவமிருங்கள்…!
உங்கள் உயிருடன் நேருக்கு நேர் உரையாடுங்கள்…!
அவன் உருவாக்கித் தருவான் நீங்கள் எண்ணியதை எல்லாம்…!

செய்து பாருங்கள்…!

வாழ்க்கைக்குத் தேவையானவற்றைத் தியானத்தின் மூலம் பெற முடியுமா…?

eternal blissful life

வாழ்க்கைக்குத் தேவையானவற்றைத் தியானத்தின் மூலம் பெற முடியுமா…?

 

கேள்வி:-
லௌகீக வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படையான விஷயங்களை (வீடு வேலை குழந்தைகள் படிப்பு) தியானத்தின் மூலம் பெற நினைப்பது சரியா…?

பதில்:-
லௌகீக வாழ்க்கைக்கு என்று தனியாக எதையும் தேட வேண்டியதில்லை. பசிக்கும் பொழுது உணவைத் தேடுகின்றோம். உணவை உட்கொள்கிறோம். அது உடலுக்கு அவசியம் தான்..!

ஆனால் உடலை உருவாக்கிய உயிரின் அருள் பசியைப் போக்க நாம் என்ன செய்கிறோம். உடல் பசியைத் தினமும் மூன்று வேளை போக்குகின்றோம். ஆனால் அருள் பசியைத் தினமும் தணிக்கின்றோமா…? இல்லையே…!

அதை விடுத்துவிட்டு நம் உடலுக்கு… இந்த லௌகீக வாழ்க்கைக்குத் தேவையான எல்லாம் பெற்றிருந்தாலும் மனிதனல்லாத உடலுக்குள் சென்ற பின் நம்முடைய நிலை என்ன…?

அருள் வாழ்க்கை வாழ்ந்தால் பொருள் நம்மைத் தேடி வரும். பொருளை மட்டும் தேடிக் கொண்டிருந்தாலோ அல்லது பொருள் இருந்தால் தானே அருளைப் பெற முடியும் என்று சொல்லிக் காலம் தாழ்த்திக் கொண்டே இருந்தாலோ பொருள் கிடைக்கும். ஆனால்
1.நம் ஆயுள் முடிந்து மீண்டும் இன்னொரு சரீரத்திற்குள் சென்று
2.மறுபடியும் அதே பொருளையே தேடிக் கொண்டிருக்க வேண்டியது தான்.
3.ஒவ்வொரு சரீரத்திலேயும் பொருளையே தேடலாம்.
4.இதை முடிவு செய்து கொண்ட பின் தியானிக்கலாம்…!

ஆகவே தியானம் என்றால் என்ன என்று முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்…! இது மிகவும் முக்கியம். இதைத் தெரிந்து கொண்டால் கேள்விக்குண்டான பதில் உங்களுக்கே தன்னாலே வரும்.

ஒன்றை மீண்டும் மீண்டும் மீண்டும் எண்ணிக் கொண்டிருப்பதே தியானம் ஆகும். எதை எண்ணுகின்றோமோ அதை அடுத்தவர்களிடத்தில் சொல்லிக் கொண்டேயிருந்தால் அல்லது அதைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தால் அதற்குப் பெயர் ஜெபம் ஆகும். அதாவது ஜெபித்தல் என்று பொருள்.

மனிதன் என்றாலே மனது உள்ளவன்… அதாவது எண்ணத்தின் ஆற்றல் பெற்றவன்… எண்ணியதைச் செயல்படுத்துபவன்…! என்று பொருள்.

1.நாம் எதை எண்ண வேண்டும்…?
2.நாம் எதைச் செயல்படுத்த வேண்டும்…?
3.நாம் எதைத் தியானிக்க வேண்டும்…?
4.நாம் எதை ஜெபிக்க வேண்டும்…? என்பதைத் தீர்மானித்தாலே நாம் பெறவேண்டியதை எளிதில் பெறலாம்.

நாம் நல்லதை எண்ணுவோம். அதைச் செயல்படுத்துவோம் ஆனால் நடக்கவில்லை என்ற உடனே நல்லதை எண்ணுவதை விட்டு விட்டுச் சோர்வடைவோம்… கோபப்படுவோம்… ஆத்திரப்படுவோம்…! ஒன்றும் முடியவில்லை என்கிற பொழுது கடைசியில் வேதனைப்படுவோம்.

நடக்கவில்லை… நடக்கவில்லை…! என்று அதையே தியானித்து விட்டு குடும்பத்திலும் சரி நண்பர்களிடமும் சரி பார்க்கும் அனைவரிடமும் அந்த வேதனையைச் சொல்லி மீண்டும் மீண்டும் ஜெபித்துக் கொண்டே இருப்போம்.

நல்லதை முதலில் நினைத்திருந்தாலும் கடைசியில் தியானிப்பது வேதனையைத்தான்…! வேதனைப்பட்டால் எந்தக் காரியத்தையும் சீராகச் செய்ய முடியுமா…?

ஆனால் நல்லது நடக்கவில்லை என்றால்… அது எப்படி வேதனைப்படாமல் எப்படி இருக்க முடியும் என்பார்கள்…! வேதனை என்பதே விஷம். கோபம் என்றால் காரம். விஷத்தையும் காரத்தையும் வாயிலே போட்டால் எப்படி நல்ல சுவை வரும்…?

நல்ல சுவை வேண்டும் என்றால் விஷத்தை வேக வைக்க வேண்டும். காரத்தைத் தணிக்க வேண்டும். நல்ல சரக்குகளை இதனுடன் இணைக்க வேண்டும். இதைச் செய்யாதபடி நல்ல சுவை வராது.

அதைப் போன்று தான் நம்முடைய வாழ்க்கையில் வரும் தீமைகளை அதாவது விஷத்தை வேக வைப்பதற்காக மகரிஷிகளின் உணர்வுகளை எடுத்துத் தான் ஆக வேண்டும். அதை எடுக்காதபடி நல்லதைப் பெற முடியாது.

அதை எடுத்து வலுவாக ஆக்கிக் கொண்ட பின்
1.எந்த நல்லது நடக்க வேண்டுமோ
2.அது மகரிஷிகள் உபதேசித்த அருள் வழிப்படி நடக்க வேண்டும் என்று சீராக எண்ணினால்
3.அதைச் செயல்படுத்தும் ஞானமும் வழி முறைகளும் தன்னாலே வரும்.

ஆனால் மகரிஷிகளின் உணர்வுகளை எடுத்து விஷத்தை அடக்காதபடி விஷத்தையே மீண்டும் மீண்டும் சேர்த்தால் முடிவில் சுவை வராது.
1.தியானமிருக்கும் பொழுது முதலில் நடந்தது
2.இப்பொழுது நடக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டியதிருக்கும்.

முதலில் ஆர்வ உணர்வுகள் இயக்கும் பொழுது நம் எண்ணம் சீராகவும் வலுவாகவும் இயக்கும். ஆர்வம் தணியும் பொழுது எண்ணம் சீராக இருப்பதில்லை… வலுவாகவும் இருப்பதில்லை.

எண்ணம் வலுவாகவும் சீராகவும் இருந்தால் தான் இயக்கம் தெளிவாக இருக்கும். அந்த எண்ணம் வலுவாகவும் சீராகவும் இருக்க வேண்டும் என்றால் மகரிஷிகளின் அருள் சக்திகளை நமக்குள் எடுத்துச் சேர்த்து வலுவாக ஆக்கிக் கொண்டே வர வேண்டும்.

ஏனென்றால் வாழ்க்கையில் நாம் எண்ணியபடி நடக்கவில்லை.. கிடைக்கவில்லை… என்ற நிலை ஆனவுடன் நம்மை அறியாமலே சோர்வும் கோபமும் ஆத்திரமும் வேதனையும் நமக்குள் வரத் தொடங்குகிறது.
1.அதற்குச் சிறிதளவு இடம் கொடுத்தால் என்ன ஆகும்…?
2.நம் உயிர் அதை இயக்கத் தொடங்கும். அந்த உணர்ச்சிகளை ஊட்டும்.

நாம் சாப்பிடும் உணவில் சுவையற்ற பொருள் இருந்தால் சாப்பாட்டை எப்படி வெறுக்கின்றோமோ அதே மாதிரி உடனே நமக்கு வெறுப்பு வரும். வெறுப்பு வந்தால் அடுத்து நம்முடைய தியானம் எதுவாக ஆகின்றது என்று சிந்தித்துப் பாருங்கள்…!

ஞானிகள் உணர்வை நெருங்க வேண்டும் என்றால் இந்தத் தெளிவு நமக்குள் வர வேண்டும். இத்தகைய தெளிவுடன் ஞானிகளின் உணர்வை எடுத்தால் அருள் ஆனந்த வாழ்க்கை நிச்சயம் வாழ முடியும். அருளைப் பெற்றால் இந்த லௌகீக வாழ்க்கையும் அதன் வழியிலே எளிதாகச் செல்லும்.

உடலை விட்டுப் பிரிந்தால் மீண்டும் எந்த உடலின் ஈர்ப்புக்குள்ளும் செல்லாது நேரே துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் உள்ள சப்தரிஷி மண்டலத்துடன் ஐக்கியமாகலாம்.

தியானம் செய்து செய்து என்னத்தைக் கண்டேன்…? ஒன்றும் நடக்கவில்லையே… கிடைக்கவில்லையே…! என்றால் அதன் காரணம் என்ன…?

Lightning souls

தியானம் செய்து செய்து என்னத்தைக் கண்டேன்…? ஒன்றும் நடக்கவில்லையே… கிடைக்கவில்லையே…! என்றால் அதன் காரணம் என்ன…?

 

விவசாயப் பண்ணைகளில் பல பல உணர்வினை இணைத்துப் புதுப் புது வித்தினை உருவாக்குகின்றார்கள். அவர்கள் கொடுத்த அந்த வீரிய வித்துக்களை வாங்கி நிலத்தில் ஊன்றுகின்றோம்.

அந்தப் பயிர்களைச் சீராக வளர்க்கும் பக்குவப்படுத்தும் முறைகளையும் உபாயத்தையும் அவர்களே கொடுக்கின்றார்கள். அவர்கள் சொன்ன வழியில் செயல்படுத்தும் போது பயிர் செழிப்பாக வளர்கின்றது. நல்ல மகசூலையும் கொடுக்கின்றது.

ஆனாலும் அந்தப் பயிர் இனங்களைப் பக்குவப்படுத்தி வளர்க்கும் போது இடைமறித்துக் களைகளும் முளைக்கின்றது. களைகளை அகற்றவில்லை என்றால் எவ்வளவு உயர்ந்த தர வித்துகளாக நாம் விதைத்திருப்பினும் அதனுடைய செயலாக்கங்கள் இழக்கப்படுகின்றது. பயிரின் விளைச்சல் குன்றி மீண்டும் தரமான வித்துக்களை உருவாக்க முடியாது.

இதைப் போன்று தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியுல் மெய் ஞானிகளின் அருள் வித்துக்களை உங்களுக்குள் அடிக்கடி உபதேசத்தின் மூலம் பதிவாக்குகின்றோம். வளர்க்கும்படி செய்கிறோம்.
1.உங்களுக்குள் அருள் ஞான வித்தாக விளைய வைத்ததை
2.ஒவ்வொரு நிமிடமும் நீங்கள் பாதுகாத்தல் வேண்டும்.

ஏனென்றால் நம்முடைய இந்த மனித வாழ்க்கையில் பெரும்பகுதி உடலின் இச்சைகளுக்கே நம் எண்ணத்தைச் செலுத்தி வாழ்ந்து வருகின்றோம்.

இதை எதற்குச் சொல்கிறோம் என்றால் தியானம் இருக்கும் பொழுது எதை எல்லாம் நாம் எதிர்பார்க்கின்றோம் என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்.

நான் செய்யும் இந்தத் தியானத்தின் மூலம்
1.என் உடல் நலம் பெற வேண்டும் என்றும்
2.எனக்குத் தொழில் வளம் பெருக வேண்டும் என்றும்
3.நான் எண்ணியது எல்லாம் இந்த உடலின் வாழ்க்கைக்கு நடக்க வேண்டும்…! என்றும் ஏங்குகின்றோம்.

அது கிடைக்கவில்லை என்றால் “என்னத்த… நான் தியானத்தைச் செய்தேன்…! தியானம் செய்து செய்து எனக்கு என்ன கிடைத்தது…? ஒன்றும் நடக்கவில்லை…! என்று இந்தச் சோர்வான உணர்வினை எடுத்துக் கொள்கிறார்கள்.

அது மட்டுமல்ல. அவர்கள் பெறவில்லை என்றாலும்… தியானம் செய்யும் அடுத்தவர்களிடமும் சென்று “இத்தனை காலமாக நீங்கள் தியானம் செய்கிறீர்கள் அல்லவா…! அதில் என்ன பெற்றீர்கள்…?” என்று இவர்களே கேட்கத் தொடங்குகின்றார்கள்.

தான் எதிர்பார்க்கும் நிலைகளுக்கு…
1.இந்த உடலின் இச்சையை வளர்ப்பதற்குத் தான் தியானம் இருக்கிறோம் என்ற எண்ணங்களில் இருக்கின்றோமே தவிர
2.இந்த மனித உடலை விட்டுக் கடந்தால் எங்கே செல்ல வேண்டும்…?
3.அதற்கு எந்தச் சக்தியைச் சேர்க்க வேண்டும்…? என்ற எண்ணமே இல்லை.

உடல் பெறும் உணர்வுகளை மாற்றி என்றுமே அழியாத ஒளி உடலை நாம் வளர்க்க வேண்டும் என்பதைத் தான் யாம் (ஞானகுரு) சொல்லிக் கொண்டு வருகின்றோம்.
1.இதை வளர்க்க வாழ்க்கையில் வரும் அனைத்துத் துன்பங்களும் அகலும்.
2.(சீராகக் கடைப்பிடிப்பவர்கள் இதை நிச்சயம் உணரலாம்)

அதை விடுத்து விட்டு சாமி (ஞானகுரு) சொல்கிறார். தியானத்தையும் செய்தோம். அப்படியானால் ஏன் இது நடக்கவில்லை…? என்பார்கள்.

இது ஏன் என்றால் இரண்டு ஆசை இருக்கும். எப்படி…?

அதாவது பிள்ளைக்கு நல்ல இடத்தில் கல்யாணம் நடக்க வேண்டும் என்று நினைக்கிறோம். அதற்குண்டான நிலைகளை செய்து கல்யாணம் நடந்து முடிகின்றது.

திருமணம் முடிந்தாலும் யாம் உபதேசத்தின் வாயிலாகச் சொல்லி வந்த ஞானிகளின் அருள் உணர்வுகளை வாழ்க்கையில் நடக்க வேண்டிய அந்தப் பக்குவத்தை குழந்தைகளுக்கும் கண்டிப்பாக எடுத்துச் சொல்ல வேண்டும்.

அதைச் செய்வதில்லை. பிள்ளை மேல் மிகுந்த பாசமாக இருந்து கொண்டு மருமகன் தன் பிள்ளையை ஏசி விட்டால் போதும்…!
1.நல்வழியில் நடக்கும் உணர்வுகளை ஊட்டுவதற்குப் பதில்
2.எதிர்ப்பு உணர்வு கொண்டு வெறுக்கும் உணர்வுகளையே வளர்க்க நேர்கின்றது.

அப்படி வளர்த்துக் கொண்ட பின் சாமி சொன்ன வழியில் நாம் தியானம் இருந்தோமே… இப்பொழுது என்ன ஆனது…? சாமி ஆசீர்வாதம் செய்து தானே திருமணம் நடத்தினார்…!

அப்படியானால் மகளுக்கும் மருமகனுக்கும் ஏன் ஒருவருக்கொருவர் சண்டை வருகிறது…? என்ற வினாக்களை எழுப்பி புவியின் ஈர்ப்பின் பற்றுதலுக்கே நாம் வந்து விடுகின்றோம்.

வெறுக்கும் உணர்வையும் தியானத்தின் உணர்வையும் இது இரண்டையும் இணைத்து “நல்லது நடக்கவில்லையே…!” என்ற இந்த உணர்வினை நாம் நுகரப்படும் போது ஓ…ம் நமச்சிவாய…! அதைத்தான் நமக்குள் உருவாக்கிக் கொள்கிறோம்.
1.எந்த வெறுப்பையும் கோபத்தையும் எண்ணி இந்த உணர்வை நுகர்ந்தோமோ
2.அந்த அணுவாக உருவாக்கிவிடுகின்றோம்.

இந்த உணர்வின் சத்தை வளர்த்து அதை உணவாக நம் உடலிலுள்ள அணுக்களுக்குக் கொடுக்கும் பொழுது அது அந்த இனத்தைத் தான் பெருக்கும்.

அப்புறம் நீங்கள் எங்கேதான் போனாலும் கூட உயர்ந்த சக்தியைப் பெறுவதற்கு மாறாக தன்னையே இழி நிலைச் சரீரம் பெறும் நிலைக்கே இழுத்துக் கொண்டு போகும். எண்ணியது நடக்கவில்லை எனறால் வேதனை என்ற உணர்வை நுகர்ந்து விஷத்தின் தன்மையைத் தான் வளர்க்க முடியும்.

முதலில் சாதாரணமாக இருக்கும் போது அந்த விஷம் வேறு. ஆனால் தியானமும் செய்துவிட்டு தான் எண்ணியபடி நல்லதைப் பெற முடியவில்லை என்ற ஆசையின் நிலைகளில் செல்லும் பொழுது கடும் வேதனையாகின்றது.

இத்தகைய உணர்வுகளை உருவாக்கப்படும் போது முதலில் இருந்ததைக் காட்டிலும் விஷத்தின் தன்மையை அதிகமாக வளர்த்து விஷப் பூச்சியாக நம்மை மாற்றும் தன்மையைத்தான் பெறுகின்றோம் என்பதை யாரும் மறந்து விட வேண்டாம்.

ஆகவே இந்த உடலின் இச்சைக்குள் தான் இந்தத் தியானத்தைக் கொண்டு வருகின்றோமே தவிர
1.இந்த உடல் நமக்குச் சொந்தமல்ல.
2.எத்தனை காலம் இந்த உடலில் நாம் வாழ்கின்றோம்…! வளர்கின்றோம்…? என்ற தெளிவான எண்ணங்கள் இல்லை.

உடலை விட்டுப் பிரிந்தால் இனிப் பிறவி இல்லா நிலைகள் அடைய வேண்டும் என்பதற்குத்தான் நாம் இதைச் செயல்படுத்துகின்றோம்.
1.இந்த உடலில் நீங்கள் கோடி சுகத்தைப் பெறுங்கள்
2.(முதலில்) டாக்டரை வைத்தாவது இந்த உடலில் உள்ள எல்லா நோயையும் நீக்கிக் கொள்ளுங்கள்…!
3.அப்புறம் எத்தனை காலம் இந்த உடல் வாழுகின்றது…? சற்று சிந்தித்துப் பாருங்கள்.
4.ஒரு சில காலத்திற்கே வாழுகின்றது. பின் இந்த உணர்வின் தன்மை முதிர்வாகி இறந்து விடுகின்றது.
5.இதை இல்லை என்று யாராவது மறுக்க முடியுமா…?

மகரிஷிகளும் ஞானிகளும் இந்த உடலை விட்டுப் பிரிந்தனர். பிரிந்தாலும் அவர்கள் அனைவரும் ஒளியின் சரீரமாக இன்றும் சப்தரிஷி மண்டலமாக இருக்கின்றனர்.

நாம் அவர்கள் சென்ற வழியில் அதைப் பற்றுடன் பற்றிடல் வேண்டும்.
1.அதைப் பற்றினால் அந்த எல்லையை அடைய
2.இந்த உடல் வாழ்க்கைக்கு எது தேவையோ அது தானாக வரும்.
3.எது நடந்தாலும் நன்மை பயக்கும் செயலாகவே அது முடியும்.
4.நமக்கு எந்த வேதனையும் வராது. வெறுப்பும் வராது. ஏகாந்தமாக வாழ முடியும்…!
5.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்குக் காட்டியது இதைத்தான்…!