விநாயகரை வணங்காமல் ஆலயத்திற்குள் சென்றால் பலன் ஏதும் இல்லை…! ஏன்…?

Lord vinayaga

விநாயகரை வணங்காமல் ஆலயத்திற்குள் சென்றால் பலன் ஏதும் இல்லை…! ஏன்…?

நமது வாழ்க்கையில் நம் குடும்பத்தில் பையன் சீராக இருக்க வேண்டும் என்று எண்ணுவோம். ஆனால், அவன் மற்றவருடன் பழகும் பொழுது அவனை அறியாது தீமைகள் இவனைச் சாடி அவனின் நற்குணத்தை அழித்துவிடுகின்றது.

அப்பொழுது நாம் எண்ணியபடி நடக்கவில்லை என்றால் அவனை எண்ணி வேதனைப்படுகின்றோம். இதிலிருந்து நாம் தப்பிக்க வேண்டும்.

அதற்குத்தான் இந்த விநாயகர் ஆலயத்திற்குள் சென்றபின் எப்படி வணங்க வேண்டும்…? என்று காட்டியுள்ளார்கள்.

மண்ணுலகில் நஞ்சினை வென்று விண்ணுலகம் சென்ற இன்று இருளைப் போக்கிப் பொருள் காணும் உணர்வாக விளைந்து ஒளியின் சுடராக வாழ்ந்து கொண்டிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும் எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் என்று ஏங்கித் தியானிக்க வேண்டும். பின்,
1.எங்களை அறியாது சேர்ந்த இருள்கள் நீங்க வேண்டும்
2.மெய்ப்பொருள் காணும் ஆற்றல் நாங்கள் பெறவேண்டும்
3.நாங்கள் பார்ப்பதெல்லாம் நலம் பெறவேண்டும்
4.எங்களைப் பார்ப்பவர்கள் எல்லோரும் நலம் பெறவேண்டும்
5.எங்கள் சொல்லைக் கேட்போர் எல்லோரும் இனிமை பெறவேண்டும்
6.எங்களைப் பார்ப்போருக்கெல்லாம் மலரைப் போல மணம் பெறவேண்டும்
7.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் குடும்பம் முழுவதும் படரவேண்டும்
8.எங்களை அறியாது சேர்ந்த தீயவினைகள் அகல வேண்டும்
9.சாப வினைகள் நீங்க வேண்டும் பாவ வினைகள் நீங்க வேண்டும்.
10.பூர்வ ஜென்ம வினைகள் நீங்க வேண்டும்
11.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் குடும்பத்தில் படர்ந்து தீமைகள் அகல வேண்டும்
12.எங்கள் குழந்தை பொருள் காணும் சக்தி பெறவேண்டும்.
13.எங்கள் குழந்தை பொறுப்புணர்ந்து செயல்படும் திறன் பெறவேண்டும்.
14.எங்கள் பார்வை குழந்தையை உயர்ந்தவனாக்க வேண்டும்.
15.எங்கள் சொல் அவனை உயர்ந்தவனாக்க வேண்டும் என்று இதைத் தனக்குள் கூட்டிக் கொள்ள வேண்டும்.

பின் இதே போல அந்தக் குழந்தையையும் விநாயகரை வணங்கச் செய்தல் வேண்டும். விநாயகர் தத்துவத்தை முறைப்படி அவன் எண்ணத்தால் எண்ணித் தியானிக்கும்படி செய்தல் வேண்டும்.
1.என் அன்னை தந்தையரின் அருளாசி பெறவேண்டும்
2.என்னை அறியாது சேர்ந்த இருள்கள் நீங்க வேண்டும்
3.மெய்ப்பொருள் காணும் அருள் சக்தி நான் பெறவேண்டும் என்று அவனும் இங்கே எண்ணுதல் வேண்டும்.

இந்தப் பொருளை மையமாக வைத்துத்தான்.., குடும்பத்தில் தன்னை அறியாது சிக்கல் ஏற்படும் பொழுது அதை இங்கே வந்து நமக்குள் நிவர்த்தி செய்யும் நிலைக்காகத்தான் விநாயகரை வைத்தார்கள் ஞானிகள்.

ஆனால் நீங்கள் எண்ணுகின்ற மாதிரி அந்தக் கடவுள் செய்வார் என்றால் அது இல்லை. சாஸ்திர விதிப்படி நமது உயிர் கடவுள். “உள் நின்று..,” இயக்குகின்றது.

நாம் எண்ணிய உணர்வின் சத்தை ‘ஓ..,’ என்று ஜீவனாக்கி ‘ம்..,’ என்று உடலாகி நம்முள் நின்று அக்குணமே கடவுளாக இயக்குகின்றது என்ற பேருண்மையை அணுவின் ஆற்றலையும் அணுவின் இயக்கத்தையும் தெளிவாக அன்று எடுத்துரைத்தார் அகஸ்தியர்.

ஆகவே எண்ணியதை இயக்கிக் காட்டுவது உயிர்.

எண்ணிய உணர்வின் தன்மையை தன் உணர்வால் அது கடவுளாக இருந்து இந்த உணர்வின் சத்தை அந்த உடலுக்குள் சென்று அதனின் உணர்வின் தன்மை கொண்டு அது உடலாக மாற்றுகின்றது.

ஆகவே இதைத்தான் கடவுள் என்பது.

“உள் நின்று..,” நாம் கேட்பது பார்ப்பது அனைத்தையும் அணுவாக உருவாக்கி உடலாக உருவாக்கிக் கொண்டிருக்கும் இந்த வினைக்கு நாயகனான (நம் உயிரையும் உடலையும்) விநாயகனை வணங்காதபடி ஆலயத்திற்குள் நீங்கள் சென்றால் பலன் ஏதும் இல்லை என்று அதனால் தான் சொல்வார்கள்.

ஆக, அந்த ஞானிகள் காட்டிய உணர்வின் தன்மையை நாம் நமக்குள் எடுத்தால் “நம் உயிர்..,” தனக்குள் கவர்ந்து கொண்ட அந்த உணர்வின் செயலாக “நம்மை இயக்கும்”.

இதைத்தான், நீ எதை எண்ணுகின்றாயோ நீ அதுவாகின்றாய். நாம் எண்ணிய உணர்வின் தன்மை நமக்குள் ஆகி “தீமைகள் அகற்றும் உணர்வின் செயலாக..” “நாம் அதுவாக.., மாறுகின்றோம்”.

இவ்வாறு மாறவேண்டும் என்பதற்குத்தான் இதை அங்கே தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது.

Leave a Reply