நமது கடைசி எல்லை “அகஸ்தியன் வாழும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டம் தான்..!”

Membership

நமது கடைசி எல்லை அகஸ்தியன் வாழும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டம் தான்..!

 

காட்டில் வாழும் மிருகங்களோ உயிரினங்களோ பெரும்பகுதி இரவிலே தான் தன் இரையைத் தேடி நுகர்ந்தறிந்து செல்லும் திறன் பெற்றது.
1.தன் இரைக்காக ஏங்கும் போது
2.குறைந்த பட்சம் ஒரு மைல் தூரமாவது தன் உணர்வைச் செலுத்துகின்றது,

அவ்வாறு செலுத்தி நுகர்ந்த பின் அந்த உணர்வுகள் உயிரில் மோதி உணர்ச்சிகள் இயக்கப்பட்டு தனக்கு இரை “இன்ன இடத்தில் இருக்கிறது…!” என்று நகர்ந்து சென்று தன் இரையை உட் கொள்கிறது.

அப்படிச் சென்றாலும் எதிரி என்ற உணர்வுகள் கொண்டு தன்னைத் தாக்கிப் புசிக்கும் வலுவான மிருக இனங்களின் மணத்தை நுகர்ந்து
1.அது அருகிலே வர வர தன் மணத்தால் நுகர்ந்தறிந்து
2.அந்தச் சாந்தமான மிருகங்கள் அனைத்தும் குகைகளிலோ அல்லது மற்ற இடங்களிலோ பதுங்கும் நிலைகளைப் பெற்று விடுகிறது.

பதுங்கினாலும் தன் உணவுக்காகத் தேடும் அந்த வலுவான மிருக இனங்கள் இது பதுங்கும் இடங்களை நுகர்ந்து அதைக் கொன்று புசித்து தன் உணவாக உட்கொள்கிறது.

இதனால் புல் போன்றவற்றை உணவாக உட்கொள்ளும் அத்தகைய சாந்த மிருகங்கள்
1.தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் உணர்வுகளை நுகர்ந்து நுகர்ந்து
2.அதனின் உணர்ச்சிகள் அதன் உடலிலே சேர்க்கப்பட்டு
3.அதன் உணர்ச்சிகள் அதனை இயக்கி அதற்குத் தகுந்த எண்ணங்களும்
4.தப்பிக்கும் உணர்வு கொண்டு உடலினை இயக்கும் சக்தியை அது பெறுகிறது.

எந்த வலிமையான உயிரினத்தைக் கண்டு அஞ்சியதோ “அதனிடமிருந்து தப்பிக்க வேண்டும்…!” என்று அது நுகர்ந்த உணர்வுகள் அனைத்தும் தன் இரத்த நாளங்களில் கலப்பதை அது அறிவதில்லை. ஆனால் தாக்க வரும் மிருகத்திடமிருந்து தப்பிக்க பெரும் நிலைகள் படுகின்றது.

உதாரணமாக புழுவை ஒரு குளவி கொட்டியபின் விஷம் அதன் உடலிலுள்ள அணுக்களுக்குள் பாய்கின்றது. பாய்ந்த பின் அந்த உணர்ச்சியின் வேகத் துடிப்பு கொண்டு புழுவை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் விஷத்தின் துடிப்பால் குளவியின் ரூபம் பெற்று அந்தக் குளவியாகவே மாறுகின்றது.

இதைப் போன்றுதான் சாந்தமான அந்த மிருக இனங்கள் வலிமையான மிருகங்கள் தன்னைத் தாக்கும் பொழுது அதனின் உணர்வுகளை நுகர்ந்து தன்னைக் கொன்று புசிக்கும் அந்த மிருகத்தின் ரூபத்தைப் பெறுகின்றது.

நரியோ புலியோ அதைக் கொன்று புசிக்கும் போது அதன் உடல் ஈர்ப்புக்குள் சென்று விடுகிறது சாந்தமான மிருகத்தின் உயிரான்மா.
ஆனால் அவ்வாறு சேருவதற்கு காரணம் எது இதைத் தாக்கியதோ
1.அந்த உணர்வு – தன் நினைவு அனைத்துமே
2.கொன்று புசிக்கும் அந்த மிருகத்தின் மேல் வருகிறது.
3.புலி என்றால் புலியின் உடலுக்குள் செல்லுகிறது.

எது இதைக் கொல்கின்றதோ அதன் உடலுக்குள் சென்று அதன் உணர்வை நுகர்ந்து இந்த உயிர் அதன் உணர்வில் கரு முட்டையாக மாறி அதன் வளர்ச்சியில் தன் இனச் சேர்க்கையில் கரு முட்டையில் இரண்டும் ஒன்றாக இணைந்து வளரும் பருவமும் வளர்த்திடும் பருவமும் பெறுகிறது.

அந்த உணர்வின் உணர்ச்சிகளை ஊட்டி அந்த உணர்வுகொப்ப உடலை மாற்றுகின்றது. இது இயற்கையின் சில நியதிகள். அவ்வாறு வளர்ச்சி பெற்ற அந்த உயிரினங்கள் தான் பரிணாம வளர்ச்சியில் இன்று நம்மை மனிதனாக உருவாக்கி இருக்கிறது.

மனிதனாக உருவான பின் நம்மை ஒரு நரியோ நாயோ கொன்று புசித்தால் அதன் நினைவே வரும். ஒரு வெறி பிடித்த நாய் ஒரு மனிதனைக் கடித்து விட்டால் நாயின் விஷத் தன்மை மனித உடலுக்குள் புகுந்த பின் வெறி பிடித்த நாய்க்கு எப்படி எச்சில் ஒழுகியதோ அதே போல அந்த மனிதனும் அதே நிலை ஆகி இந்த மனிதன் அந்த நாயின் ஈர்ப்புக்குள் சென்று நாயாகப் பிறக்க நேரும். எந்த வைத்தியங்களாலும் அது சரி செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது.

இதே போல ஒரு விஷம் கொண்ட பாம்பினால் தாக்கப்படும் போது பாம்பின் நினைவாற்றல் வந்து மற்றது எதுவும் நினைவில் வராது ஒருமித்த உணர்வுகள் அந்த விஷத்தின் தன்மை பெற்ற பின் எத்தனையோ கோடி சரீரங்களைக் கடந்து வந்த மனிதன் பாம்பின் ஈர்ப்புக்குள் செல்கிறான், பாம்பாகத் தான் அடுத்து பிறக்கின்றான்.

தேன் கூட்டிலிருந்து தேனை எடுக்கச் செல்கிறார்கள் என்று வைத்து கொள்வோம். விஷம் அதிகமாக இருக்கும் நூறு தேனீக்கள் அந்த மனிதனைக் கொட்டினால் மரணமே ஏற்பட்டு விடுகிறது.

தேனீ தன்னைக் கொட்டியது என்ற உணர்வு வரப்படும் போது இத்தனை பெரிய மனித உடலை உருவாக்கிய அணுக்கள் அந்தத் தேனீயின் ஈர்ப்புக்குள் சென்று அதன் உணர்வின் வழிப்படி இயக்கும் சக்தியைப் பெற்றுத் தேனீயின் உடலைப் பெறுகிறது மனிதனின் உயிரான்மா.

இதையெல்லாம் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் யாம் (ஞானகுரு) காடு மேடெல்லாம் சுற்றி அலைந்து அறிந்து கொண்டோம்.

ஆகவே மனிதனாக இருக்கும் நாம்
1.நம் சந்தர்ப்பத்தில் எதை வலுவாக நுகர்கின்றோமோ
2.அதனின் உணர்வாகத்தான் அடுத்த உடல் பெறுகின்றோம் என்பதை
3.தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது மிக மிக அவசியம்.

இதைப் போன்ற மனித வாழ்க்கையில் வரும் தீமைகளை எல்லாம் வென்றவன் அகஸ்தியன். இந்தப் புவியில் உடல் பெறும் உணர்வுகளை மாற்றி ஒளி உடல் பெற்றவன் அகஸ்தியன்.

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி இந்தப் பூவுலகில் நஞ்சினை வென்ற உணர்வின் தன்மை பெற்று நஞ்சினை ஒளியாக மாற்றிடும் சக்தியாக இன்றும் துருவ நட்சத்திரமாக வாழ்ந்தும் வளர்ந்து கொண்டும் உள்ளார்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் பெற்றால் அகஸ்தியனைப் போன்றே இந்த உடலுக்குப் பின் அழியாத நிலைகள் பெறலாம். ஆகவே அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உங்கள் புருவ மத்தியில் எண்ணி ஏங்குங்கள்.

உங்கள் உயிரான ஈசனிடம் வேண்டி அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியையும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியையும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்குங்கள்.

இவ்வாறு ஏங்கி இருப்பதன் நோக்கமே
1.நாம் எதைப் பெற வேண்டும் என்று ஏங்குகிறோமோ அவை அனைத்தையும்
2.நமது உயிர் “ஓ…” என்று ஜீவ அணுவாக மாற்றும் அந்தச் சக்தியைப் பெறச் செய்கிறது.
3.ஒளியான அணுக்களாக நம் உடலுக்குள் விளைகிறது. நம் உயிராத்மா ஒளியாகின்றது.
4.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வாழத் தொடங்குகின்றோம்.
5.நம்முடைய கடைசி எல்லை அது தான்..!

அகஸ்திய மாமகரிஷியும் துருவ நட்சத்திரமும் சப்தரிஷி மண்டலங்களும்

அனைத்தும் அரவணைத்து ஒளியாக இருக்கும் துருவ நட்சத்திரம் – இராமாயணம்

அகஸ்தியனின் தத்துவங்கள் காலத்தால் எப்படி மாற்றப்பட்டது

அகஸ்தியன் 27 நட்சத்திரத்தின் சக்தியை ஏன் எடுத்தான் 

அகஸ்தியராக ஒவ்வொரும் மாறுங்கள்

அகஸ்தியன் நுகர்ந்த பச்சிலை மணங்கள் அருள் தாவர இனச் சத்துக்கள் மூலிகைகள்

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமாக உருவான ஆற்றல்கள்

புலஸ்தியர் வம்சத்தில் வந்த அகஸ்தியர்

துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து உணர்வுகளை உடனடியாக ஒளியாக மாற்றுங்கள்

இருபத்தியேழு நட்சத்திரமும் அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக ஆன நிலைகளும்

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக ஆனதன் உண்மை நிலைகள்

துருவ நட்சத்திரத்தின் சக்தியை நமக்குள் சேர்க்க வேண்டிய முறை

வசிஷ்டர் அருந்ததி நட்சத்திரம் – சப்தரிஷி மண்டலம்

சப்தரிஷி மண்டல ஈர்ப்பு வட்டத்துடன் இணைய வேண்டிய வழி

இராமலிங்கம் – துருவ நட்சத்திரம்

இராமேஸ்வரம் கோடிக்கரை தனுஷ்கோடி துருவ நட்சத்திரம்

தீமைகளை நீக்கி ஒளியாக மாற்றச் செய்யும் அகஸ்தியமாமகரிஷியின் கூட்டமைப்பு

மகரிஷியும் நானும் – அவன் தான் நான்… நான் தான் அவன்…!

அகஸ்தியன் கண்டுணர்ந்த அகண்ட அண்டத்தினை ஒவ்வொருவரும் காண முடியும்… அந்த ஆற்றலைப் பெற முடியும்…!

அகஸ்தியன், துருவ மகரிஷி, துருவ நட்சத்திரம், சப்தரிஷி மண்டலம் – நான்கும் சேர்த்து பிரம்மம்

துருவ நட்சத்திரத்தின் ஆயுள்கால மெம்பராகச் சேர்ந்தவர்கள் நாம் எப்படி இருக்க வேண்டும்…? 

அகஸ்தியன் அமர்ந்த இடங்களின் அதிசயங்கள் – நெய்யை விட்டால் வெண்ணையாக மாறும் 

ஆயுள் மெம்பரின் இயக்கங்கள் எப்படி இருக்க வேண்டும்…?

27 நட்சத்திரங்களின் ஆற்றலை எடுத்த அகஸ்தியன் பெற்ற நிலையை குருநாதர் எல்லோரையும் பெறச் செய்கின்றார் 

அகஸ்தியனைப் பின்பற்றி நாமும் பூமியைச் சமப்படுத்துதல் வேண்டும் 

கணவன் மனைவி ஒன்றாக உயிர் பிரிந்தால் அடுத்த உடல் எப்படி இருக்கும் – அகஸ்தியன் தாய் தந்தையர் 

அகஸ்தியன் பாதம் பட்ட இடங்களில் பதிந்துள்ள ஆற்றல்களையும் அகஸ்தியர் பெற்ற பச்சிலைகள் மணங்களையும் பெறும் வழிகள் 

அகஸ்தியன் தன் இளம் வயதில் பெற்ற விண்ணின் ஆற்றல்கள் – வெள்ளிக் கோள் – வியாழன் கோள் – ஒளியான உணர்வு 

அகஸ்தியன், துருவ நட்கத்திரம், சப்தரிஷி மண்டலம்

நாகரத்தினத்திற்கும் வைரத்திற்கும் வித்தியாசம் – இளம் நீல நிறத் துருவ நட்சத்திரம் 

கணவன் மனைவி சேர்ந்து மின்னலை நுகரலாம், துருவ நட்சத்திரத்துடன் இணைந்து வாழும் சப்தரிஷி மண்டலம் 

வேதனையை ஒடுக்கச் செய்யும் துருவ நட்சத்திரத்தின் நீல ஒளிக்கற்றைகள் 

மழை பெய்யச் செய்யும் ஆற்றல்கள் 

சப்தரிஷி மண்டலத்தில் இருக்கும் ஒளியான உயிராத்மாக்கள் 

அகஸ்தியன் வெளிப்படுத்திய உண்மையான சக்திகளை உங்களுக்குக் கொடுக்கின்றோம் 

துருவ நட்சத்திரத்தின் உணர்வை ஓ…ம் நமச்சிவாய…! என்று நம் உடலாக மாற்றவேண்டும்

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நுகர்வதால் கிடைக்கும் பேறுகள் 

அகஸ்தியன் கண்டுணர்ந்த நட்சத்திரத்தின் ஆற்றல்கள்

அகஸ்தியன் நுகர்ந்த பச்சிலை வாசனைகளும் மலர்களின் மணங்களும் கனிகளின் வாசனைகளையும் நுகரும் பயிற்சி 

மின்னல்களை எல்லாம் ஆனந்தமான நிலைகளில் கவர்ந்தவன் தான் அகஸ்தியன் 

.அகஸ்தியமாமகரிஷியின் அருள் சக்திகளை உணவாக உட்கொள்ளும் பயிற்சி தியானம்

விநாயகரை வணங்காமல் ஆலயத்திற்குள் சென்றால் பலன் ஏதும் இல்லை…! ஏன்…?

Lord vinayaga

விநாயகரை வணங்காமல் ஆலயத்திற்குள் சென்றால் பலன் ஏதும் இல்லை…! ஏன்…?

நமது வாழ்க்கையில் நம் குடும்பத்தில் பையன் சீராக இருக்க வேண்டும் என்று எண்ணுவோம். ஆனால், அவன் மற்றவருடன் பழகும் பொழுது அவனை அறியாது தீமைகள் இவனைச் சாடி அவனின் நற்குணத்தை அழித்துவிடுகின்றது.

அப்பொழுது நாம் எண்ணியபடி நடக்கவில்லை என்றால் அவனை எண்ணி வேதனைப்படுகின்றோம். இதிலிருந்து நாம் தப்பிக்க வேண்டும்.

அதற்குத்தான் இந்த விநாயகர் ஆலயத்திற்குள் சென்றபின் எப்படி வணங்க வேண்டும்…? என்று காட்டியுள்ளார்கள்.

மண்ணுலகில் நஞ்சினை வென்று விண்ணுலகம் சென்ற இன்று இருளைப் போக்கிப் பொருள் காணும் உணர்வாக விளைந்து ஒளியின் சுடராக வாழ்ந்து கொண்டிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும் எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் என்று ஏங்கித் தியானிக்க வேண்டும். பின்,
1.எங்களை அறியாது சேர்ந்த இருள்கள் நீங்க வேண்டும்
2.மெய்ப்பொருள் காணும் ஆற்றல் நாங்கள் பெறவேண்டும்
3.நாங்கள் பார்ப்பதெல்லாம் நலம் பெறவேண்டும்
4.எங்களைப் பார்ப்பவர்கள் எல்லோரும் நலம் பெறவேண்டும்
5.எங்கள் சொல்லைக் கேட்போர் எல்லோரும் இனிமை பெறவேண்டும்
6.எங்களைப் பார்ப்போருக்கெல்லாம் மலரைப் போல மணம் பெறவேண்டும்
7.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் குடும்பம் முழுவதும் படரவேண்டும்
8.எங்களை அறியாது சேர்ந்த தீயவினைகள் அகல வேண்டும்
9.சாப வினைகள் நீங்க வேண்டும் பாவ வினைகள் நீங்க வேண்டும்.
10.பூர்வ ஜென்ம வினைகள் நீங்க வேண்டும்
11.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் குடும்பத்தில் படர்ந்து தீமைகள் அகல வேண்டும்
12.எங்கள் குழந்தை பொருள் காணும் சக்தி பெறவேண்டும்.
13.எங்கள் குழந்தை பொறுப்புணர்ந்து செயல்படும் திறன் பெறவேண்டும்.
14.எங்கள் பார்வை குழந்தையை உயர்ந்தவனாக்க வேண்டும்.
15.எங்கள் சொல் அவனை உயர்ந்தவனாக்க வேண்டும் என்று இதைத் தனக்குள் கூட்டிக் கொள்ள வேண்டும்.

பின் இதே போல அந்தக் குழந்தையையும் விநாயகரை வணங்கச் செய்தல் வேண்டும். விநாயகர் தத்துவத்தை முறைப்படி அவன் எண்ணத்தால் எண்ணித் தியானிக்கும்படி செய்தல் வேண்டும்.
1.என் அன்னை தந்தையரின் அருளாசி பெறவேண்டும்
2.என்னை அறியாது சேர்ந்த இருள்கள் நீங்க வேண்டும்
3.மெய்ப்பொருள் காணும் அருள் சக்தி நான் பெறவேண்டும் என்று அவனும் இங்கே எண்ணுதல் வேண்டும்.

இந்தப் பொருளை மையமாக வைத்துத்தான்.., குடும்பத்தில் தன்னை அறியாது சிக்கல் ஏற்படும் பொழுது அதை இங்கே வந்து நமக்குள் நிவர்த்தி செய்யும் நிலைக்காகத்தான் விநாயகரை வைத்தார்கள் ஞானிகள்.

ஆனால் நீங்கள் எண்ணுகின்ற மாதிரி அந்தக் கடவுள் செய்வார் என்றால் அது இல்லை. சாஸ்திர விதிப்படி நமது உயிர் கடவுள். “உள் நின்று..,” இயக்குகின்றது.

நாம் எண்ணிய உணர்வின் சத்தை ‘ஓ..,’ என்று ஜீவனாக்கி ‘ம்..,’ என்று உடலாகி நம்முள் நின்று அக்குணமே கடவுளாக இயக்குகின்றது என்ற பேருண்மையை அணுவின் ஆற்றலையும் அணுவின் இயக்கத்தையும் தெளிவாக அன்று எடுத்துரைத்தார் அகஸ்தியர்.

ஆகவே எண்ணியதை இயக்கிக் காட்டுவது உயிர்.

எண்ணிய உணர்வின் தன்மையை தன் உணர்வால் அது கடவுளாக இருந்து இந்த உணர்வின் சத்தை அந்த உடலுக்குள் சென்று அதனின் உணர்வின் தன்மை கொண்டு அது உடலாக மாற்றுகின்றது.

ஆகவே இதைத்தான் கடவுள் என்பது.

“உள் நின்று..,” நாம் கேட்பது பார்ப்பது அனைத்தையும் அணுவாக உருவாக்கி உடலாக உருவாக்கிக் கொண்டிருக்கும் இந்த வினைக்கு நாயகனான (நம் உயிரையும் உடலையும்) விநாயகனை வணங்காதபடி ஆலயத்திற்குள் நீங்கள் சென்றால் பலன் ஏதும் இல்லை என்று அதனால் தான் சொல்வார்கள்.

ஆக, அந்த ஞானிகள் காட்டிய உணர்வின் தன்மையை நாம் நமக்குள் எடுத்தால் “நம் உயிர்..,” தனக்குள் கவர்ந்து கொண்ட அந்த உணர்வின் செயலாக “நம்மை இயக்கும்”.

இதைத்தான், நீ எதை எண்ணுகின்றாயோ நீ அதுவாகின்றாய். நாம் எண்ணிய உணர்வின் தன்மை நமக்குள் ஆகி “தீமைகள் அகற்றும் உணர்வின் செயலாக..” “நாம் அதுவாக.., மாறுகின்றோம்”.

இவ்வாறு மாறவேண்டும் என்பதற்குத்தான் இதை அங்கே தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது.

நம்மிடம் மரியாதையாக நடக்க வேண்டும் என்று எல்லோரிடமும் எதிர்பார்க்கின்றோம்… ஆனால் நமக்கு எது மரியாதை…?

Respect

நம்மிடம் மரியாதையாக நடக்க வேண்டும் என்று எல்லோரிடமும் எதிர்பார்க்கின்றோம்… ஆனால் நமக்கு எது மரியாதை…?

 

“பிறர் நம்மைத் திட்டுகிறார்கள்…! கேவலமாகப் பேசுகிறார்கள்..! என்றெல்லாம் நாம் எண்ணுகிறோம். அதனால் ஆத்திரப்படுகின்றோம்… வேதனையும் படுகின்றோம்.

ஆனால் “இந்த உடலைத்தான் திட்டுகிறார்கள்… கேவலப்படுத்துகிறார்கள்… நம்மை அல்ல…!” என்று ஞானகுரு சொல்கிறார்.

எப்படி…?

அதாவது மனிதனாக இருக்கும் நாம் ஒவ்வொருவருமே மற்றவரிடம் அதிகமாக எதிர்ப்பார்ப்பது என்ன..?

என்னிடம் “மரியாதையாகப் பேச வேண்டும்… மரியாதைக் குறைவாக நடக்கக் கூடாது…!”. மரியாதை இல்லாமல் பேசினால்… ஏதாவது செய்தால் எனக்குக் கோபம் கடுமையாக வரும்…! என்று எல்லோருமே தாராளமாக இப்படித்தான் நினைப்போம்.

இருந்தாலும்… உடலை விட்டு உயிர் போய்விட்டால் இந்த உடலுக்கு நாம் எந்த மரியாதை கொடுக்கின்றோம்…? சற்று சிந்தித்துப் பாருங்கள்.
1.உடனே அந்த உடலை அழிக்க வேண்டும் என்பதிலே தான் குறியாக இருக்கின்றோம்.
2.ரொம்ப நேரம் இறந்த உடலை வீட்டிலே வைத்திருக்கக் கூடாது என்பதை “மிகவும்…….!” வலியுறுத்திச் சொல்கிறோம்.

யாராவது இல்லை என்று மறுக்க முடியுமா…? அப்பொழுது எங்கே செல்கிறது… “நாம் எதிர்பார்க்கும் நமக்குக் கிடைக்க வேண்டிய மரியாதை…?!”

அதனால் தான் ஞானகுரு சொல்கிறார்…! ஒருவர் நம்மைப் பழித்துப் பேசவோ திட்டவோ தவறாகவோச் சொல்கிறார் என்றால்
1.அது என்னை அல்ல…!
2.அழியக் கூடிய இந்த உடலைத்தான் சொல்கிறார்கள்…! என்று தெளிவாகப் பிரித்துக் காட்டுகிறார்.
3.அழியப் போகும் உடலுக்கு எந்த மரியாதையும் தேவையில்லை. இது உண்மை.

ஆனால் கிடைக்காத அந்த மாரியாதைக்காக நாம் எவ்வளவு கௌரவம் பார்க்கிறோம்….? எப்படி எல்லாம் உடலை அழகு பார்க்கிறோம்…? உடலுக்காக இன்னும் என்னென்னவோ பல சிரமங்களை ஒவ்வொரு நிமிடத்திலும் படுகின்றோம்.

ஆனால் அதற்குப் பதிலாக ஒவ்வொரு நொடிப் பொழுதும் நாம் அந்த மகரிஷிகளின் உணர்வைச் சேர்த்துக் கொண்டே வந்தால் அதை உயிருடன் ஒன்றிய நிலையாக விளைய வைத்துக் கொண்டே வந்தால்
1.அதற்குரிய மரியாதை இந்த உடலை விட்டுச் சென்ற பின்
2.அழியாத நிலையாக என்றுமே உயிருடன் ஒன்றி வாழ முடியும் என்று உணர்த்துகிறார் குரு.

உடலுக்குக் கொடுக்கும் அல்லது எதிர்பார்க்கும் மரியாதையை விட மகரிஷிகளின் அருள் சக்தியைச் சேர்ப்பதில் நமக்குக் கிடைக்கும் மரியாதையே என்றும் நிலைத்ததாகும்.

ஆகவே பிறரின் உணர்வுகளை நமக்குள் சேர்த்தால் நல்லதோ கெட்டதோ எதுவாக இருந்தாலும் அது மரியாதை கிடையாது. மகரிஷிகளின் அருள் சக்தியை நமக்குள் சேர்த்தால் தான் நமக்கு (உயிராத்மாவிற்கு) மரியாதை.

மிக மிக நுண்ணிய நிலைகளையும் அறியக்கூடிய “பேரண்ட மகரிஷிகளின் ஆற்றல்களை” நாம் ஒவ்வொருவரும் பெற வேண்டும்

ULTIMATE POWER OF AGSTYA

மிக மிக நுண்ணிய நிலைகளையும் அறியக்கூடிய பேரண்ட மகரிஷிகளின் ஆற்றல்களை நாம் ஒவ்வொருவரும் பெற வேண்டும்

 

ஈ… கொசு… மனிதனின் தலை முடி… இவைகளில் ரேடியத்தைத் தடவி அன்று வல்லரசுகள் எப்படி ஒருவருக்கொருவர் அடுத்த நாட்டு இராணுவ இரகசியங்களை வேவு பார்த்தனர்…?

இரகசியமாக நடக்கும் கூட்டங்களில் அங்கே அவர்கள் பேசுவதைப் பல மடங்கு பெருக்கி அவர்கள் பேசுவதை எல்லாம் எப்படி அறிந்து கொண்டார்கள்…? என்று
1.அவர்கள் வேவு பார்ப்பதை நம் ஞானகுரு உணர்ந்துள்ளார்.
2.அவர் படிக்காதவர் தான்…!
3.ஆனால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் எத்தகைய நுண்ணிய நிலைகளையும் அறியும் ஆற்றலை வளர்த்துக் கொண்டார்.

அறியாமல் இயக்கும் அத்தகையை தீமைகளிலிருந்து விடுபட அவர் பெற்ற அந்த அருளாற்றல்களை எல்லாம் நாமும் பெறும் வண்ணமாக அருள் ஞான உபதேசங்களாகப் பதிவு செய்கின்றார்கள். இதைப் பதிவாக்கி வளர்த்துக் கொண்டால்
1.நாமும் 2000 சூரியக் குடும்பத்துடன் தொடர்பு கொண்டு
2.அந்தப் பேரண்ட மகரிஷிகளின் அருள் ஆற்றலை வளர்த்து அவர்களுடன் தொடர்பு கொண்டு
3.விஞ்ஞானத்தால் வரும் எத்தகைய விஷத் தன்மைகளையும்
4.எத்தகைய நுண்ணிய நிலைகளில் அவர்கள் செயல்பட்டாலும் அதை அகஸ்தியன் உணர்வைப் பாய்ச்சி முறியடித்து
5.நம்மையும் காத்து உலகுக்கு வழி காட்டியாகவும் நாம் ஒவ்வொருவரும் வளர முடியும்.

இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால் அத்தகைய வேவு பார்க்கும் உணர்வுகள் (ELECTRONIC) வளர்ச்சி அடைந்து வளர்ச்சி அடைந்து அதிக அளவில் பெருகி இன்று டி.வி… கம்ப்யூட்டர்… ஃபோன்… மூலம் மனித இனத்தையே புத்தி பேதமாக்கும் அலைகளைப் பரவச் செய்துள்ளார்கள்.

அதிலிருந்து விடுபட வேண்டும் என்பதற்கே இதை ஞானகுரு அவர்கள் தெளிவாக உணர்த்துகின்றார்கள்.