ஞானகுருவின் (சாமிகள்) ஒலி உபதேசம் பற்றிய மிகப் பெரிய பேருண்மைகள் – என்னுடைய அனுபவம்

சாமிகள் உபதேசம்

ஞானகுருவின் (சாமிகள்) ஒலி உபதேசம் பற்றிய மிகப் பெரிய பேருண்மைகள் – என்னுடைய அனுபவம்

 

சாமிகள் உபதேசம் (audio) கேட்பதைப் பெரும்பாலும் மற்றவர்கள் எப்படி வைத்திருக்கிறார்கள் என்றால்
1.கேட்க நேரம் இல்லை…! என்பார்கள்
2.எத்தனை தடவை கேட்டாலும் புரியவில்லை…! என்பார்கள்
3.நமக்குச் சம்பந்தமில்லாததை எல்லாம் சொல்கிறார்…! என்பார்கள்
4.அப்படியே கேட்டாலும் தூக்கம் வருகிறது… என்பார்கள்
5.கடைசியில் சொன்னதயே திரும்பத் திரும்பச் சொல்கிறார்…! என்பார்கள்.

ஆனால் என்னுடைய அனுபவத்தில் சாமிகளின் உபதேசத்தை (audio) உற்றுக் கேட்பதன் மூலம் தான்
1.எனக்குள் வரும் எல்லாக் கேள்விகளுக்கும் பிரச்சினைகளுக்கும்
2.உடனுக்குடன் விடை கிடைக்கிறது.
3.கிடைத்துக் கொண்டேயுள்ளது.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி காட்சியாகவும் உணர்வலைகளாகவும் வந்து கொண்டேயுள்ளது. மகா ஞானிகளுடன் எளிதில் தொடர்பு கொள்ளவும் முடிகிறது.

உபதேச உணர்வின் இயக்கத்தால் மற்றவர்களின் உணர்வுகளோ அல்லது எற்கனவே நடந்த தீமைகளைப பற்றிய எண்ணங்களோ என்னை இயக்குவதில்லை.

ஒவ்வொரு நாளும் சுறுசுறுப்பாக ஒரு புதிய மெய் உணர்வுடன் உத்வேகத்துடன் அருள் வழியில் முன்னேறிச் செல்லும் உணர்வுகள் தொடர்ந்து கிடைத்துக் கொண்டே வருகிறது.

சாமிகளின் உபதேச ஒலிகளுக்குள் அவ்வளவு பெரிய சூட்சம சக்திகள் மறைந்துள்ளது. சரியாகச் சொன்னால் ஞானிகளின் (அசைவுகள்) BODY LANGUAGE அதில் தான் உள்ளது.

ஞானியாக ஆக வேண்டும் என்றால் ஒலி உபதேசத்தை அவசியம் கேட்க வேண்டும். அதைக் கேட்க தனியாக என்று நேரம் ஒதுக்க வேண்டியதில்லை.

மற்ற வேலைகள் செய்து கொண்டிருக்கும் பொழுதே அதைக் கேட்டு எளிதில் நமகுள் வளர்க்க முடியும்.

சாமிகள் உபதேசத்தை நான் அதிகமாகப் பதிவாக்கும் நேரம்
1.காலை எழுந்ததிலிருந்து வேலைக்குச் செல்லும் அந்த ஒரு மணி நேரம் கேட்பேன்
2.அதன் பின் வேலைக்குச் செல்லும் வழியிலும் வீட்டுக்கு வரும் வழியிலும் ஒரு மணி நேரம் கேட்பேன். (HEAD SET மூலம் காதில் மாட்டிக் கேட்பேன்)

இந்தக் காதில் மாட்டிக் கேட்கும் பொழுது தான் மகரிஷிகளுடன் அதிகமான நெருக்கம் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

இது இன்று வரையிலும் இப்படித்தான் நடந்து கொண்டிருக்கின்றது.

சாமிகள் “AUDIO WEB LINK” கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கேட்க விரும்புவோர் பயன்படுத்திக் கொள்ளலாம். https://wp.me/P3UBkg-1rP

நம் நல்ல குணங்களைக் காக்கும் சக்தி எது…?

Scaffold

நம் நல்ல குணங்களைக் காக்கும் சக்தி எது…?

 

நாம் ஒரு கட்டிடத்தைக் கட்டுகின்றோம் என்று வைத்துக் கொள்வோம். கட்டும் போது அங்கங்கே முட்டுகள் (பொய்க்கால்) கொடுத்துத்தான் கட்டுகின்றோம்.

கட்டிடம் வலுவாக நின்ற பின் சிமெண்ட் நன்றாகக் காய்ந்துவிட்டதா என்ற பதத்தைப் பார்த்த பின் அந்த முட்டுகளை எடுக்கின்றோம். அப்புறம் முட்டு இல்லாமல் கட்டிடம் தன்னாலே நிற்கின்றது.

ஆகவே முட்டு இல்லாமல் எந்தக் கட்டிடமும் கட்ட முடியாது.

ஆனால் கட்டிடம் சரியாகக் காய்வதற்கு முன்னனாடியே முட்டைத் தட்டி விட்டோம் என்றால் என்ன செய்யும்? கீழே விழுந்துவிடும்.

சிமெண்ட் பாலை ஊற்றிக் கட்டிடத்தைக் கட்டிவிட்டு அடுத்தாற்போல் உடனே அந்த முட்டுகளைத் தட்டிவிட்டோம் என்றால் நம்மைத் தான் போட்டு அமுக்கும்.

இந்த மாதிரித் தான் வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் நமக்கு அணையாக‌ இருக்கக்கூடிய நல்ல உணர்வுகளைக் கழற்றி விட்டு விடக்கூடாது.

இப்போது மகரிஷிகளின் அருள் சக்திகளை உங்களுக்குள் பெறச் செய்கிறோம் என்று சொன்னால்
1.யாம் வலுவாகக் கொடுக்கும் அந்த முட்டுகளை (உபதேச உணர்வுகளை)
2.அந்த ஞானிகளின் அருள் சக்திகளைத் தட்டிவிடக் கூடாது.

நான் எல்லாச் சக்திகளையும் பெற்றுவிட்டேன் என்கிற வகையில் கொடுக்கும் ஞானிகளின் உணர்வைக் கழற்றி விட்டு விட்டு எல்லாவற்றையும் நானே பார்த்துக் கொள்வேன் என்று சொன்னால் என்ன ஆகும்?

இப்படிக் கொஞ்ச பேர் இருக்கின்றனர்.

தீமைகளிலிருந்தோ அல்லது துன்பங்களிலிருந்தோ விடுபட மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற்றுக் கொண்டிருக்கும் நிலையில்

1.அதிலிருந்து (உடனடியாக) “தப்ப முடியவில்லையே…” என்ற வேகத்தில்
2.எடுத்துக் கொண்டிருக்கும் மகரிஷிகளின் அருள் சக்திகளைத் தட்டிவிட்டு விடுகின்றார்கள்.

ஏனென்றால் இதையெல்லாம் அனுபவபூர்வமாகத் தெரிந்து நான் சொல்கின்றேன். குருநாதர் அனுபவத்தின் மூலமாகத் தான் பல ஆற்றல்மிக்க சக்திகளைப் பெறச் செய்தார்,

மனிதருடைய வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் பாச அலைகள் துன்ப அலைகள் மற்ற உணர்வுகள் எப்படித் தாக்குகின்றது…? இதிலிருந்து எப்படி மீள வேண்டும் என்று குருநாதர் உணர்த்தினார்.

உதாரணமாகப் பெண் குழந்தைகளுக்குச் சரியான நேரத்தில் திருமணம் நடக்கவில்லை.. சிறிது கால தாமதம் ஆகிறது என்றால் எப்படி எண்ண வேண்டும்…?

மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் குழந்தை உடல் முழுவதும் படர்ந்து
1.குழந்தையின் எதிர் காலம் நன்றாக இருக்க வேண்டும்

2.எந்தக் குடும்பத்திற்குப் போனாலும் நன்றாக வாழ வேண்டும்
3.நல்ல மாப்பிள்ளையாக வர வேண்டும். நல்ல வரனாக வர வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

“இந்த மாதிரிச் செய்யுங்கள்…!” என்று சொன்னால் எங்கள் பிள்ளைக்கு இப்படி நினைக்காமல் வேறு எப்படிங்கெ நினைப்போம்…! என்று எனக்கே திருப்பிச் சொல்கிறார்கள்.

நாங்கள் இப்படித்தான் நினைக்கின்றோம்…! ஆனால் எங்கெங்க மாப்பிள்ளை வருகின்றது…? என்று திருப்பி இதே ராகத்திலேயே சொல்லிக் கொண்டு போகிறார்கள்.

சற்று சிந்தித்துப் பாருங்கள். பாலில் சிறிதளவு நஞ்சை ஊற்றினால் எப்படி இருக்கும்..? அந்த விஷமான உணர்வு தான் அங்கே இயக்கும்.

இதைப் போல தான் மனிதனுடைய வாழ்க்கையில் நாம் ஒவ்வொருவரும் மீளாத் துயரத்தில் சுழன்று கொண்டு இருக்கின்றோம்.

எவ்வளவோ உயர்ந்த சரக்குகள் இருந்தாலும் அதில் நஞ்சினை கலந்தால் அந்த நஞ்சின் செயலாக்கம் எவ்வாறு இருக்குமோ அதைப்போல
1.உயர்ந்த குணங்கள் கொண்டோர் அனைவரும்
2.எத்தனையோ புயல்களிலேயும் அலைகளிலேயும் வாழ்க்கையில் இன்னல்களில் சிக்கித் தவிக்கின்றனர்.

ஒரு புயல் அடித்தால் என்ன நடக்கின்றது? எல்லாவற்றையும் அழித்துச் செல்லுகின்றது. புயல் ஓய்ந்த பின் பார்த்தோம் என்றால் இயல்பாக இருக்கும் அனைத்தும் காணாமல் போய்விடுகிறது.

இதைப் போல மனிதனின் உடலில் இப்படி பெரும் புயல் வீச ஆரம்பித்தால் “என்ன வாழ்க்கை…?” என்ற நிலையில் அனைத்தும் இருள் சூழச் செய்து தற்கொலைக்கே அழைத்துச் செல்கின்றது.

நாம் ஆசையுடன் தான் வாழ்கின்றோம். ஆனால் வாழ்க்கையில் சந்தர்ப்பபேதத்தால் வரும் இன்னல்களுக்குள் புயலில் சிக்கியது போன்று ஆகிவிட்டால் என்னென்ன ஆசைகள் இருந்ததோ அனைத்தும் நொறுங்கி விடுகின்றது. ஆகவே
1.புயலைப் போன்று வரும் இன்னல்களை
2.தீமையாக இயக்கும் கடுமையான அலைகளை
3.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் பிளந்து
4.நம் பயணத்தின் பாதையை அழியா ஒளிச் சரீரம் நோக்கிச் செலுத்துவோம்
5.அருள் ஞானிகள் வாழும் சப்தரிஷி மண்டலத்தை நம் எல்லையாக வகுப்போம்.

உடல் நலம் பெறச் செய்து மகிழ்ந்து வாழச் செய்யவே “அபிநயக் கலைகள்…”

Dance - natyam

உடல் நலம் பெறச் செய்து மகிழ்ந்து வாழச் செய்யவே அபிநயக் கலைகள்

 

நான் யாரையும் தவறாகவோ குறையாகவோ சொல்லவில்லை.

நமது பண்புகளை இழந்து ஏதோ நாகரீகம் என்ற நிலைகள் கொண்டு “இன்று… டான்ஸ்களை (DANCE) இரசித்துக் கொண்டிருக்கின்றோம்…!”

“தையா..தக்கா..,” என்று ஆணும் பெண்ணும் மோதுகின்ற மாதிரி ஆடுவது… கழுதை கத்துகின்ற மாதிரி கத்துவது…. குதிரை கத்துகின்ற மாதிரி குத்துவது…, அதாவது மிருகங்களுக்குச் சமமான நிலைகள் ஆட்டங்கள் ஆடுவது தான் “இன்றைக்கு டான்ஸ்…”

அங்கே ஆட்டங்கள் ஆடுவதைப் பார்ப்பவர்கள் இங்கே இருந்து கொண்டு “ஹேய்….. ஊய்…..” என்று எல்லோரையும் பைத்தியக்காரர்களாக ஆக்குவது இது தான் இன்றைக்கு நம் கலாச்சாரமாகப் போய்விட்டது.

ஆனால் ஞானிகள் காட்டிய நிலைகள் என்ன…?

மனிதனால் சோர்வடையும் போது உடல் உறுப்புகளும் சோர்வடைகின்றது. அதனால் பல நோய்கள் வருகிறது. உடலுக்குள் பல விஷ நீர்கள் உருவாகின்றது.

அதே சமயத்தில் திடீரென்று தும்மலாகிவிட்டால் உள் உறுப்புகளில் சிக்கல்களாகிவிடும். நுரையீரலில் சிக்கலாகிவிட்டால் இருமல்கள் வரும். ஏனென்றால் சரி வர நுரையீரல்கள் விரிவடையவில்லை என்றால் இருமலாக வரும்.

இதைப்போல இருந்து அது நாளடைவில் அதிகமாகி விட்டால் அந்த உறுப்புகளே பாழடைந்து விடுகின்றது.

இதைப் போன்ற நிலைகளை அகற்றுவதற்குத்தான் அன்று அபிநயம் என்று அங்கக்கலையாக அமைத்துக் கொடுத்தார்கள் ஞானிகள். அபிநயங்கள் கொண்டு மகிழ்ந்து வாழும் உணர்வுகளை நுகரச் செய்தார்கள் ஞானிகள்.

உணர்வின் இசை கொண்டு அங்கங்களை அசைத்து அதற்கு தக்க மகிழ்வான நிலைகள் கொண்டு அபிநயங்களை ஆட்டப்படும் போது
1.உடலிலுள்ள உள் உறுப்புகளின் இயக்கங்களைச் சீராகுவதும்
2.விஷ நீர்களை அகற்றுவதும்
3.உடல் நலம் பெறுவதற்காகச் செய்தார்கள்.

கலை அபிநயம் கொண்ட உணர்வின் தன்மை கொண்டு அங்கங்களை அசைத்து மகிழ்ச்சியின் உணர்வைத் தனக்குள் தோற்றுவிக்கும் போது
1.தன்னை அறியாத உணர்வின் நரம்பு பிடித்தலோ
2.உடல் உறுப்புகளினுடைய சிக்கலோ
3.அல்லது உள் உறுப்புகளில் உள்ள சிக்கலையோ நீக்குவதற்கு
4.நம் நாட்டில் தோன்றிய ஞானிகள் இயல்பாக உருவாக்கிக் கொடுத்தார்கள்

இப்பொழுது என்ன என்றால் தையாதக்கா என்று குதித்து தவறாக உணர்வுகளைக் காட்டி காம உணர்ச்சிகளை ஊட்டி கருத்தை இழக்கச் செய்து அநாகரீக நிலைகளை வளர்க்கச் செய்து மாடுகளைப் போல நம்மை ஆடும்படி வைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இது தான் கலாச்சாரமா…?

நம்முடைய கலாச்சாரம் என்ன ஆனது…? நன்றாக யோசனை செய்து பாருங்கள்.

மனப்பாடம் செய்துவிட்டு வந்து யாம் உபதேசிக்கவில்லை…!

gnana pokisham 2

மனப்பாடம் செய்துவிட்டு வந்து யாம் உபதேசிக்கவில்லை…! (ஞானகுரு)

 

தினசரி ஞானிகளைப் பற்றி யாம் (ஞானகுரு) உபதேசம் சொல்லிக் கொண்டே வந்தாலும்… அதைக் கேட்ட பின் “உபதேசம் மிகவும் நன்றாக இருந்தது…!” என்று ஒரே வரியில் சொல்கிறவர்களும் உண்டு.

நேற்று சொன்னதைத்தான் இன்றைக்கும் சொல்கிறார். திருப்பித் திருப்பி அதையே தான் சொல்கிறார் என்று சொல்பவர்களும் உண்டு.

ஆனால் நேற்று என்ன சொன்னார்…? அதற்கு அடுத்த நிலை என்ன சொன்னார்…? என்று கேட்டோம் என்றால் முழிக்கிறார்கள். ஏனென்றால் ஞானிகளைப் பற்றி உபதேசம் கொடுப்பது என்பது அவ்வளவு சாதாரணமானது அல்ல.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் யாம் (ஞானகுரு) உபதேசம் கொடுக்கும் போது
1.இங்கே எதையுமே நான் முதலில் நினைத்துக் கொண்டு வந்து உபதேசிப்பது இல்லை…!
2.மனப்பாடம் செய்தோ அல்லது மனதில் உருப் போட்டுக் கொண்டு வந்தோ உபதேசிக்கவில்லை..!
3.யார் யார் முன்னாடி வந்து “எதை அறிய வேண்டும்…!” என்று விரும்புகிறார்களோ
4.அதன் அடிப்படை ஆதாரமாக வைத்துத்தான் அந்த உபதேசமே அன்றைக்கு அங்கே வரும்.

ஒரு நூறு பேர் நினைத்திருக்கிறார்கள் என்றால் அந்த நூறு பேருக்குமே (விடைகள்) கிடைக்கும் அளவிற்குத்தான் எம்முடைய இந்த உபதேசம் இருக்கும்.
1.நான் நினைத்துக் கொண்டு வந்தேன்… சாமி சொல்லி விட்டார்…
2.நான் எதைக் கேட்க வேண்டும் என்று வந்தேனோ.. அதைச் சொல்லி விட்டார்.. என்ற
3.இந்த உணர்வு அந்த அத்தனை பேருக்கும் வருகிறது.

அத்தகைய நினைவு வந்தாலும் கூட ஞானிகள் உணர்வை ஆழமாகப் பதித்துக் கொண்ட நிலையில்
1.இந்த வாழ்க்கையை எவ்வாறு வழி நடத்த வேண்டும்…?
2.இந்தக் காற்றில் ஞானிகளின் சக்திகள் எவ்வளவு கலந்து இருக்கிறது…?
3.காற்றில் கலந்துள்ள ஞானிகளின் அருள் உணர்வுகளை எப்படிக் கவர வேண்டும்…?
4.அதை நமக்குள் சேர்க்கும் வன்மை (வலிமை) எப்படி நினைவுபடுத்த வேண்டும்…? என்பதை எல்லாம் அறிந்து கொள்வது ரொம்ப நல்லது.

உபதேசத்தைக் கேட்டுப் படித்துணர்ந்த பின் நாம் எந்தளவுக்கு மீண்டும் அதை உயர்த்திக் கொள்ள வேண்டும்…? அதை எப்படி வலு பெறச் செய்ய வேண்டும்…? ஒவ்வொரு நாளும் அருள் ஞானத்தை எப்படி வளர்த்துக் கொள்ள வேண்டும்..? என்பதற்குத்தான் வினாக்களை எழுப்பச் சொல்கின்றோம்.

சாமியிடம் வினாக்களைக் கேட்கின்றோமே என்று எண்ண வேண்டாம். இது வரையிலும் பல துறைகளிலேயும் பல முறைகளிலேயும் உபதேசத்தைக் கொடுத்து இருக்கிறோம்.

இதில் நீங்கள் எந்த அளவுக்குப் பதித்து வைத்திருக்கின்றீர்கள்…? உங்கள் மனோநிலை என்ன? அதிலிருந்து நீங்கள் எதை அறிந்திருக்கின்றீர்கள்…? எதை அறிய விரும்புகின்றீர்கள் என்பதற்காக வேண்டித் தான் கேள்விகளைக் கேட்கச் சொல்வது.

ஒருவர் வினா எழுப்பினால் மற்றவர்களுக்கும் இது பயனுள்ளதாக இருக்க வேண்டும். வினாக்களை எழுப்பும் போது ஒருவர் கேட்கும் வினாவை அனைவரும் அதைப் பகிர்ந்து கொள்ள இது உதவியாக இருக்கும். (விருப்பமுள்ளவர்கள் கேட்கலாம்…!)

பேருண்மைகளைச் சொன்ன அகஸ்தியனின் உணர்வுகள் இன்று யார் கையிலும் இல்லை…! திரிபு செய்து விட்டார்கள்…!

SAVE THE EARTH

பேருண்மைகளைச் சொன்ன அகஸ்தியனின் உணர்வுகள் இன்று யார் கையிலும் இல்லை…! திரிபு செய்து விட்டார்கள்…!

இராமாயணத்தில் படித்திருப்பீர்கள். இரண்டு அரக்கர்கள் மற்றவர்களைக் கொன்று புசிப்பதே அவர்களின் பழக்கம். வாதாபி என்ற அரக்கன் ஆடாக மாறுவான். அவனைக் கொன்று சமைத்து முனிவர்களுக்குப் பரிமாறுவான் அவன் சகோதரன்.

சாப்பிட்டு முடித்தவுடன் “வாதாபி… வெளியே வா…!” என்று கூப்பிடுவான். உண்டவரின் வயிற்றைக் கிழித்து கொண்டு வாதாபி வெளியே வருவான். பின் அவரை இருவரும் சேர்ந்து உணவாக உட்கொள்வார்கள். இது அவர்கள் வழக்கம்.

வாதாபி அகஸ்தியனைப் பார்த்த உடனே நீங்கள் எங்கள் விருந்தாளியாக வர வேண்டும். ஆட்டை வெட்டிச் சமைத்துக் கொடுக்கிறோம். நீங்கள் சாப்பிட வேண்டும் என்கிறான்.

நான் மாமிசம் சாப்பிடுவதில்லையப்பா…! என்று சொல்கிறார் அகஸ்தியர்.

அகஸ்தியர் மாமிசம் சாப்பிடுவதில்லை. ஆனால் அரக்கர்கள் நீங்கள் மாமிசம் சாப்பிட்டுத் தான் ஆக வேண்டும் என்று சொல்கிறார்கள். சாப்பிட்டுத்தான் ஆக வேண்டும் என்று ஆசையை ஊட்டுவதால் “சரி… நீங்கள் மிகவும் கட்டாயப்படுத்துவதால் சாப்பிடுகிறேன்…! என்று அகஸ்தியர் ஒத்துக் கொள்கிறார்.

வாதாபி ஆடாக மாறி விடுகிறான். அதை வெட்டிச் சமைத்துக் கொடுக்கிறான். அகஸ்தியர் உண்டு முடித்ததும் “வாதாபி வெளியே வா…!” என்று சகோதரன் அழைக்கிறான்.

வாதாபி அப்பொழுதே ஜீரணம் ஆகி விட்டான்…! என்று சொல்கிறார் அகஸ்தியர். உடனே உன்னை இப்பொழுதே கொன்று சாப்பிடுகிறேன் என்று சொல்கிறான் அந்த அரக்கன்.

அகஸ்தியன் தன் பார்வையால் அவன் உணர்வின் அலைகளைப் பொசுக்கி விடுகிறார். இது அகஸ்தியனின் சரித்திரம். ஆனால் இராமாயணம் மகாபாரதத்தில் எல்லாம் இதைப் “புலஸ்தியர்…” என்ற ஒரு ரிஷி சொன்னதாகச் சொல்வார்கள்.

புலையர்கள் அதாவது காட்டுவாசிகள் தங்களுடைய புலனறிவால் உண்மையை உணர்ந்தவர்கள் என்று காட்டுவதற்குப் பதில் புலஸ்தியர் என்று பெயரை மாற்றிவிட்டு உண்மையின் இயக்கங்களை மறைத்து உணர்வின் தன்மையை மாற்றி விட்டனர்.

அசுவமேத யாகம் நடத்தும் போது அங்கே என்ன செய்கிறார்கள்…? மாமிசங்களைத்தான் அதிலே போடுகிறார்கள். இராமன் காட்டுக்குள் போகும் போது என்ன செய்கிறார்…? மாமிசங்களைத் தான் விருந்தாக வைத்துச் சாப்பிடுவார். அப்படித்தான் படித்திருக்கின்றீர்கள் இல்லையா…?

அவர் சாந்தமானவர் மற்ற உயிரினங்களைக் கொல்ல மாட்டார் என்று சொல்கின்றனர். இப்படி அவர் மாமிசம் சாப்பிடுவார் என்று இதை இணைத்துக் கொண்டது யார்…? நன்றாக யோசனை செய்து பாருங்கள்…!

1.நாம் நுகரும் உணர்வுகள் எண்ணங்களாக எப்படி வருகிறது…?
2.அந்த உணர்வின் உணர்ச்சிகள் எப்படி இயக்குகிறது…?
3.உணர்வால் அந்த உடல்கள் எப்படி மாறுகிறது…? என்று காட்டியது அகஸ்தியன் தான்.

இப்போது சொல்வது உங்களுக்கு அர்த்தம் ஆகிறதா…? நன்றாகத் தெளிந்து பாருங்கள்…! இராமன் மாமிசத்தைச் சாப்பிட்டது என்று இதை இப்படி எடுத்து மாற்றிக் கொண்டது யார்…?
1.இயற்கையின் உண்மையின் மாற்றத்தை அரசியல் ரீதிக்கு மாற்றுகின்றார்கள்.
2.அரசனை வாழ வைப்பதற்காக வேண்டி அரசன் வழியில் மக்களுக்குப் போதித்தார்கள்.

அரசனின் கீழ் அடிமைப்படுத்தி அவனுக்குக் கீழ் மக்கள் வருவதற்கும் அசுவமேத யாகம் என்ற நிலைகளில் மந்திரங்களைச் சொல்லி ஒன்றோடு ஒன்றைக் கலக்கச் செய்து சோமபானம் என்ற மதுவைக் கொடுத்து மக்களைத் தன் வசப்படுத்திக் கொண்டார்கள் அன்றைய அரசர்கள்.

சோமபானத்தை ஊற்றி யாகத் தீயில் புகையை மூட்டி எந்த மந்திர ஒலியில் எதைப் பதித்தானோ எந்த இசைக் கருவிகளில் எதை இசைத்தானோ அந்த இசையின் தன்மை வரப்படும் போது எந்த உடலில் பதிந்ததோ அந்த உடலில் விளைந்த உணர்வுகளை எல்லாம் கவர்ந்து கொள்கிறார்கள்.

கவர்ந்த உணர்வுகளையும் ஆன்மாக்களையும் பில்லி சூனியம் ஏவல் என்று பயன்படுத்தி
1.அடுத்த நாட்டைப் பழி வாங்குவதற்கும்
2.ஒவ்வொரு குணங்களுக்கும் கடவுள் என்று பெயர் வைப்பதும் தெய்வம் என்ற நிலைகளை உருவாக்குவதும்
3.தெய்வத்தின் நிலை என்று சொல்லி இன்ன இன்னது செய்யும் என்று அதற்குண்டான பதார்த்தங்களைக் கொடுப்பதும்
4.யாகத்தீயில் போட்டு காளி மாரி சாமுண்டீஸ்வரி என்ற நிலையும்
5.மந்திர ஒலிகளை மாற்றி இசையின் தன்மையைக் கூட்டி இதன்வழி தான் அரச நியதிகளாகக் காட்டிவிட்டார்கள்.
6.இன்று நாம் அந்த வழியில் தான் வளர்ந்து வந்துள்ளோம்.

நம் நாடு மட்டும் அல்ல. உலகம் முழுவதற்குமே இந்த உடலின் இச்சைக்குத் தான் மாற்றிக் கொண்டோமே தவிர “உயிரின் இச்சை யாருக்கும் வரவே இல்லை…!”

உயிர் தான் நம்மை வளர்த்தது என்ற பேருண்மையை உணர்த்தி அந்த உயிருடன் ஒன்றிய ஒளியாக முழுமை அடைய வேண்டும் என்ற
1.உண்மையின் இயக்கத்தைச் சொன்ன அகஸ்தியன் உணர்வுகள்
2.இன்று யார் கையிலும் இல்லை.

பிறருடைய வேதனை உணர்வை நுகர்ந்தால் தீய வினையாகின்றது. வேதனையான அந்த உணர்வை நமக்குள் சதுர்த்தி – நிறுத்துதல் வேண்டும். நிறுத்த வேண்டும் என்றால் இந்த விஷத்தை நீக்குதல் வேண்டும். எப்படி…?

ஒருவர் திட்டியதைப் பதிவு செய்து கொண்டபின் மீண்டும் அவரை எண்ணும் போது இந்தக் காற்றிலுள்ள அந்தத் திட்டியவரிடமிருந்து வெளிப்பட்ட உணர்வினை நுகர்ந்து அதே உணர்ச்சி நம்மை இயக்குகின்றது.

அதைப் போல அகஸ்தியன் துருவனாகி துருவ நட்சத்திரத்திரமாகி அதிலிருந்து வருவதை சூரியனின் காந்தப் புலனறிவு கவருகிறது. காற்று மண்டலத்திலே துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை அலைகளாகப் பரவச் செய்துள்ளது.

அதை நாம் நினைவுக்குக் கொண்டு வந்து எடுக்க வேண்டும். அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் எளிதில் பெற முடியும்.

ஆகவே நமது ஆயுள் எதிலே இருக்க வேண்டும்…? முழுமை அடைந்த அந்தத் துருவ நட்சத்திரத்தில் ஆயுள் கால மெம்பராகச் சேர வேண்டும்.

ஆனால் ஆயுள் கால மெம்பராக இருந்து கொண்டு என்னைத் திட்டினார்கள். என்னைக் கேவலமாகப் பேசினார்கள்…! என்று சொல்லிக் கொண்டிருந்தால் ஆயுள் கால மெம்பராக இருந்து என்ன செய்வது…?

நான் நல்லதைத்தான் செய்கிறேன். ஆனால் எனக்கு எல்லோரும் தொல்லைகள் கொடுக்கிறார்கள் என்ற இந்த உணர்வை எடுத்தால் இந்த ஆயுள் கால மெம்பர் அப்படியே தான் இருக்கும்.

தேவை இல்லாததை எண்ணும் போது நாம் மீண்டும் இந்தப் பூமிக்குள் இன்னொரு உடலுக்குள் போய் வேதனையைத்தான் அனுபவிக்க நேரும்.

ஆகவே அதை மாற்ற வேண்டும் என்றால் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரம் ஆன அந்த அகஸ்தியனின் வழியைப் பின்பற்ற வேண்டும். தீமையை அகற்றி உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரம் பெற இதுவே சரியான மார்க்கம்…!