அன்றாட வாழ்க்கையில் நாம் செய்ய வேண்டிய “சில கடமைகள்…!”

spiritual-path

அன்றாட வாழ்க்கையில் நாம் செய்ய வேண்டிய “சில கடமைகள்…!”

நம்மைச் சாராதவர்கள் அல்லது நமக்குப் பிடிக்காதவர்கள் கஷ்டப்பட்டார்கள் என்றால் நாம் என்ன சொல்கிறோம்…?

அவர்கள் செய்ததற்கெல்லாம் அவர்களுக்கு நடக்கின்றது…! துன்பத்தை அவர்கள் அனுபவிக்கின்றார்கள் என்று அவர்கள் படுகின்ற கஷ்டத்தைப் பார்த்து நாம் ரசிக்கின்றோம்.

உதாரணமாகப் பாம்பு என்ன செய்கின்றது…? விஷத்தைப் பாய்ச்சித் தன் உணவை ரசித்து உணவாக உட்கொள்கின்றது.

ஆகவே பிறருடைய வேதனையை நாம் ரசித்தோம் என்றால் அந்த விஷத்தின் தன்மை நமக்குள் கூடி மனிதனினுடைய சிந்தனைகள் அழிந்து இறந்த பின் பாம்பின் உருவத்தைத்தான் நாம் பெற முடியும்.

மற்றவர்கள் வேதனைப்படுவதைப் பார்த்து ரசிப்போம். இதே போல தன் குழந்தை மேல் பாசமாக இருக்கும் போது அவன் படும் வேதனையால் நாம் வேதனையின் உணர்வை அதிகமாக எடுக்கும் பொழுது கடைசியில் அதுவும் விஷத் தன்மை அதிகமாகி பாம்பின் ஈர்ப்புக்கே அழைத்துச் செல்லும்.

ஆகவே நாம் எந்தச் சூழ்நிலையிலும் பிறர்படும் கஷ்டங்களையும் துன்பங்களையும் கண்ணுற்றுப் பார்த்து அந்தத் தீமைகளை அறிந்தாலும்
1.அந்தத் தீமையினுடைய அணுக்கள் தனக்குள் விளையாதபடி
2.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா என்று ஒரு சில நொடிக்குள் அதை எண்ணி
3.மகரிஷிகளின் அருள் சக்தி உடல் முழுவதும் படர வேண்டும் என்று ஏங்கி விட்டு
4.எங்கள் பார்வை அனைவரையும் நல்லதாக்க வேண்டும்
5.எங்கள் சொல் அனைவரையும் இனிமையாக்க வேண்டும்
6.அனைவரும் வாழ்க்கையில் நலம் பெற வேண்டும் என்ற உணர்வினை எடுத்துக் கொண்டு
7.தீமைகளை நீங்கள் மாற்றி அமைத்துக் கொண்டு செல்லுங்கள்.

குழந்தை தவறு செய்கிறான்… அவனைச் சீர்படுத்த வேண்டும் என்றால்
1.எங்கள் குழந்தை மகரிஷிகளின் அருள் உணர்வு பெற வேண்டும்.
2.அவன் பொருள் கண்டுணர்ந்து செயல்படும் திறன் பெற வேண்டும்
3.சிந்தித்துச் செயல்படும் உணர்வுகள் அவனிலே விளைய வேண்டும் என்ற உணர்வினை நமக்குள் எடுத்துக் கொண்டு
4.அதன்பின் மகரிஷிகளின் அருள் சக்தியால் நீ ஞானியாக வருவாய் என்று சொல்லால் சொன்னால்
5.இந்த உணர்வுகள் அவன் திருந்த உதவும்.

அவ்வாறு இல்லையென்றால் அவன் மேல் வெறுப்பின் உணர்வுகள் வந்து “ஏன்டா இப்படிச் செய்கிறாய்…?” என்ற இந்த உணர்வின் தன்மை கேட்ப்படும் போது இது எதிர் நிலையை உருவாக்கும்.

இதுவே அவனுக்குள் வெறுப்பின் தன்மை ஊட்டும். அவனை வெறுக்கும் செயலைச் செய்ய வைக்கும். அவனைப் பார்க்கும் பொழுதெல்லாம் நமக்குள் மீண்டும் வெறுப்பின் தன்மையே வளரும்.

இதைப் போன்ற நிலைகளில் இருந்தெல்லாம் நாம் விடுபடுதல் வேண்டும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் அனுபவத்தைப் பெற்றவர்கள் அனைவருமே எந்த நிலையானாலும் இரவிலே படுக்கும் பொழுது “அந்த மகரிஷிகளின் அருள்சக்தி பெற வேண்டும்…” என்ற எண்ணத்துடனே உறங்குங்கள். இதை அதிகமாகச் சேர்த்துக் கொள்ளுங்கள்.

“குழந்தை கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறான்…” என்று அந்தக் கஷ்டத்தை எல்லாம் நினைத்து இதைச் சொன்னீர்கள் என்றால் முதலில் இது வரும். இது கலந்தவுடன் மறுபடியும் கலக்கங்கள் தான் வரும்.

அதே மாதிரி ஒருவன் நமக்கு இடைஞ்சல் செய்தான் என்றால் அந்த இடைஞ்சல் செய்தவனுக்கு அந்த மகரிஷிகளின் அருள்சக்தி பெற வேண்டும் அவன் திருந்த வேண்டும் என்று நினைத்தீர்களென்றால் இந்த விஷத்தோடு கலந்து மறுபடியும் இடைஞ்சல் செய்தவன் உணர்வுதான் நினைவுக்கு வரும்.

ஆகையினாலே அதை மறக்க அந்த மகரிஷிகளை எண்ணி
1.நாங்கள் பார்க்கும் அனைவரும் எங்களைப் பார்க்கும் அனைவரும்
2.நாங்கள் நினைக்கும் அனைவரும் எங்களை நினைக்கும் அனைவரும்
3.அந்த மகரிஷிகளின் அருள்சக்தி பெற வேண்டும்
4.அவர்கள் வாழ்க்கையில் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்று தவம் இருங்கள்.

இதை நாம் பழக்கத்திற்குக் கொண்டு வர வேண்டும்.

ஏனென்றால் குருநாதர் எமக்கு (ஞானகுரு) எந்த முறைப்படி சக்திகளைக் கொடுத்தாரோ அதே முறைப்படித்தான் உங்கள் நினைவாற்றலை மகரிஷிகளின்பால் செலுத்தச் செய்து ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதைப் பெறும் தகுதியை ஏற்படுத்துகின்றோம்.

ஆலயங்களுக்குச் சென்றாலும் அல்லது உறவினர் நண்பர்களுடைய குடும்பங்களுக்குச் சென்றாலும் அங்கே போய் அமர்ந்தவுடனே நாம் களைப்பால் “உஷ்ஷ்…ஷ்ஷ்.. அப்பா…! என்று பெரு மூச்சையும் சோர்வையும் வெளியிடுகின்றோம்.

அப்போது நாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நமக்குள் அதை எடுத்து,
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி இங்கே படர வேண்டும்.
2.மகரிஷிகளின் அருள் சக்தியால் மகிழ்ச்சியின் நிலைகள் இங்கே வளர வேண்டும்
3.இந்தக் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று நாம் எண்ண வேண்டும்.

நோயாளியைப் பார்க்கச் சென்றாலும் ஆத்ம சுத்தி செய்துவிட்டு
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி அவர் பெற வேண்டும்
2.அவர் உடல் நலம் பெற வேண்டும்
3.அவர்கள் குடும்பத்தில் மகிழ்ந்திடும் செயல்கள் உருவாக வேண்டும் என்று எண்ணுங்கள்.

இதைப்போல நாம் கடைப்பிடித்து நம் குருநாதர் காட்டிய அருள் வழிகளில் மகரிஷிகளின் அருளாற்றலைப் பெற்று எல்லோரும் மகிழ்ந்திடும் நிலை பெற நாம் தியானிப்போம்… தவம் இருப்போம்…!”

குரு பலம் பெறும் வழி

குரு பூஜை விழாவின் விளக்கம்

குருநாதர் ஒவ்வொரு நிலைகளுக்கும் சூட்சமமாக பல விளக்கங்கள் கொடுப்பார்

12 மாத காலத்தையும் வீணாக்காது அருள் ஒளியை மக்களைப் பெறச் செய் என்றார் குருநாதர்

குருநாதர் தன் மனைவியுடன் விண்ணுலகில் வாழும் நிலை

குருதேவரிடம் எதைக் கேட்க வேண்டும் ஆனால் எதைக் கேட்டார்கள்…?

குருநாதர் கொடுக்கும் ஞானப் பொக்கிஷம்

அருள் ஞானத்தை அனைவரையும் பெறச் செய்து பேரானந்தப்பட வேண்டும் என்று சொன்னார்

குருநாதர் எமக்கு உபதேசம் கொடுத்த முறை

குருநாதரை அணுகிய சிலர் தவறான வழியில் சென்று கொண்டுள்ளார்கள்

குருநாதர் என்னிடம் வேதனைப்பட்டுச் சொன்னது என்ன…?

குரு சூரியனாக இருந்து அவர் பெற்ற உணர்வைப் பெறும்படி செய்தார்

குருநாதர் கொடுக்கும் அண்டத்தின் உணர்வுகள் அளவு கடந்த நிலைகளில் உண்டு

குருநாதர் எனக்கு விண்ணின் நிலைகளைக் காட்டிய முறை

உங்களிடம் தான் நான் வரம் கேட்கின்றேன்

யாம் தொட்டுக் காட்டவில்லை என்று சிலர் எண்ணுகின்றார்கள்

நான் எத்தனையோ மோசமான ஆள் தான்… ஆனால் என்னைக் குருநாதர் ஆயுள் மெம்பராக இணைத்துக் கொண்டார்

பிரசாதத்தில் கொடுக்கும் காசை வைத்து உங்களுக்குச் சக்தி இருக்கிறதா இல்லையா என்று பாருங்கள்

குரு பூஜை அன்று ஒரு ஆவி பிடித்த பெண்ணை ஃபோன் மூலம் குணப்படுத்திய நிலை

மூன்றாவது வகுப்பு படித்த என்னால் எப்படி ஞானம் பேச முடிகின்றது

குருநாதர் (engineer) அருளால் இந்த உடலைக் காத்து உயர்ந்த உணர்வைக் கவரும் நிலை

உங்களிடமிருந்து தான் நான் சக்தியைக் கூட்டிக் கொள்கிறேன் – குரு காட்டியது

நான் பேசவில்லை, நாடாவில் பதிவானது போல் பதிவான குரு உணர்வே பேசுகின்றது 

சிறிது நாள் பழகிக் கொண்டால் ஆற்றல் மிக்க சக்திகளைப் பெற முடியும்

எமது குரு அருளை உங்களிடம் காண விரும்புகின்றேன்

குருநாதர் கொடுத்ததில் ஆயிரத்தில் ஒரு பங்கைத்தான் கொடுத்துள்ளோம்

நான் படிக்காதவன் ஜீரோ (zero)  – குரு உணர்வு இயக்குகின்றது…! படிக்காத மற்ற ஞானிகள் யார்…?

மிக உயர்ந்த ஆற்றல்மிக்க சக்தியைக் கொடுக்கின்றோம்

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் சரித்திரம்

ரிக் வேதத்தை சுருதி சுத்தமாகப் பாடிக் காட்டினார் குருநாதர் 

ரிக் வேதத்தை மேலிருந்து கீழ் கீழிருந்து மேல் நிதர்சனமாக உணர்த்தினார் குரு

குருநாதர் ஏன் பைத்தியமாக இருந்தார் – விளக்கம்

குருநாதர் யார் என்று கேட்டேன்…? நீ சீக்கிரம் தெரிந்து கொள்வாய் என்றார்

ஆசீர்வாதம் செய்யும்போது காசு எதற்காகக் கொடுக்கின்றோம்

தீமைளிலிருந்து விடுபடும் மக்களை வாக்கின் மூலம் உருவாக்கு என்றார் குரு – நோயை நீக்கி அல்ல

அண்டத்தையே அலசி சக்தி கொடுக்கின்றோம், நீங்களும் அண்டத்தை அலசி எடுக்க முடியும்

உயிரை எல்லோரையும் மதிக்கும்படி செய் என்றார் குருநாதர்

யாம் கொடுக்கும் தியானப் பயிற்சிக்குக் காசோ பணமோ செலவு இல்லை

நல்ல நேரம் கெட்ட நேரம், குரு அருளை யாம் கொடுக்கும் வழியும் மற்றவர்கள் கொடுக்கும் வழியும்

உபதேசத்தை யாரும் கேட்கவில்லை என்ற வேதனை கூடாது என்றார் குருநாதர்

குருநாதர் சொல்வதை யார் சீராகக் கடைப்பிடிக்கின்றார்களோ அவர்களுக்கு ஞானம் கிடைக்கும்

குருநாதர் எனக்கு எந்த மாதிரி இடத்தில் வைத்து உபதேசம் கொடுத்தார்

பல ஞானிகளின் அலைவரிசைகளைக் கொடுக்கின்றோம், TV போன்று திருப்பி வைத்துக் கொள்ளுங்கள் 

செடிகளின் தூரைக் கிளறி உரம் வைப்பது போல் அருள் உணர்வை இணைக்கின்றோம்

நான் உங்களுக்குக் கொடுக்கும் பாதுகாப்பு 

ஞானிகளின் உணர்வை இணைத்து எலெக்ட்ரானிக் கன்ட்ரொல் போல் தீமைகளைத் தடுக்கமுடியும்

உங்களுக்குள் அருளைப் பாய்ச்சும் பொழுது கதவை மூடிக் கொண்டால் என்ன ஆகும்

உங்களைச் சுற்றியிருக்கும் தீமைகளை அகற்றவே உபதேசிக்கின்றோம்

குருவின் உபதேசத்தைப் பதிவாக்க வேண்டிய முறை

குரு அருள் பெறும் வழி

நாம் படித்துவிட்டு வந்து உபதேசிக்கவில்லை

ஞானிகளின் உணர்வைப் பதிவாக்கும் முறை

எல்லோருக்கும் பொருந்தும்படியான உபதேசமாக எப்படி எம்மிடமிருந்து வருகிறது…?

அருள் வாக்கு வாங்கும் முறை

நாம் போகும் பாதையில் இடைமறிக்கும் நிலைகளைத் தடுத்துப் பழக வேண்டும் – அத்தடிபாட்சா

சாமி சொன்னார் நடக்கவில்லை என்பார்கள், அந்தப் பக்குவம் எது 

சாமி பெற்ற சக்தியை நம்மால் பெறமுடியுமா என்று எண்ணுவார்கள்

குருநாதர் கொடுத்த சக்தி சரியா தப்பா என்று அறிந்த பிற்பாடு தான் அதைக் கொடுக்கின்றோம் 

குரு துணையில்லாது விண்ணின் ஆற்றலைப் பெற முடியாது 

குரு அருளால் நடப்பதை எல்லாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றோம்

வியாழன் கோள் – உயிர் குரு – முருகன் குமரகுரு

துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெற்ற குரு அருளை நாம் பெறுவோம்

தபோவனத்தில் தியான வழி அன்பர்களின் செயல்கள் எப்படி இருக்க வேண்டும்

தபோவன எல்லைக்குள் வந்தாலே உங்கள் தீமைகளும் நோய்களும் அகலும்

குரு பீடத்தின் சூரியனைப் பார்த்துத் தியானித்து அனைவரையும் அதைப் பெறச் செய்யுங்கள்

தபோவனத்திற்குள் வந்தால் எப்படி இருக்க வேண்டும்…?

குரு பீடத்தைப் பார்த்துத் தியானியுங்கள், தீமைகள் அகலும்

கல்வி இல்லாதவருக்குப் பள்ளி என்பது போல் அருள் ஞானத்தைப் பெறுவதற்குத்தான் தபோவனத்திற்கு வருகின்றீர்கள்

மாமகரிஷிகள் காட்டிய வழியில் புதிய பூமி

நேற்றுச் சொன்னதைத்தான் சாமி சொல்கிறார் – கோவிலுக்கோ படிப்புக்கோ அப்படி எண்ணுகிறார்களா…?

சாமியிடம் விபூதி வாங்க வேண்டும் என்று தான் விரும்புகிறார்கள் சொல்வதைச் செய்வதில்லை

சாமி சொல்வது மிகவும் அற்புதம் என்று போற்றிவிட்டு சொன்னதைச் செய்யவில்லை என்றால் பலன் இல்லை

சாமி திரும்பத் திரும்பச் சொல்கிறார் போரடிக்கிறது என்கிறார் ஒருவர்

உங்கள் உணர்வுகள் மாறினாலும் அதை அருள் வழியில் திருப்பவே உபதேசிக்கின்றோம்

திரும்பத் திரும்ப உபதேசிக்கின்றோம் – என்னாலே திரும்பச் சொல்ல முடியாது – உணர்வின் நினைவாற்றல்

யாம் (ஞானகுரு) உபதேசம் எப்படிச் செய்கின்றோம்…?

என்னைப் பற்றி (ஞானகுரு) யாரும் தவறாகச் சொன்னால் அதை எடுப்பதில்லை

படிக்காதவன் தான் நான் சொல்கிறேன்

உங்களுக்கு யாம் நம்பிக்கையுடன் கொடுக்கும் உன்னதமான சக்தி

ஞானகுரு மவுன விரதம் தீமைகளை கேட்காமல், பேசாமல் இருப்பது

சொல்லித் தரும் ஆசிரியரே எல்லாவற்றையும் நமக்குச் செய்து தருவாரா…?

ஓசோன் திரையை அடைக்க என்ன செய்ய வேண்டும்…?

சாமிக்குச் சக்தி இருக்கிறதா என்று ரோசப்பட்டு நான் எதையாவது செய்ய முடியுமா…?

விதியின் இயக்கங்களைப் பற்றி அறிய குருநாதர் கொடுத்த நேரடி அனுபவம்

என் ஒருவனால் ஒன்றும் செய்ய முடியாது

குரு இட்ட கட்டளையைத்தான் நிறைவேற்றிக் கொண்டுள்ளேன் ஞானகுரு 

பிள்ளையைச் சுமக்கும் தாயைப் போல் ஞானத்தைச் சுமந்து ஞானக் குழந்தைகளை நமக்குள் உருவாக்குவோம்

.குரு நமக்குக் கொடுக்கும் அருள் வாக்கைப் பேணிக் காக்கின்றோமா…? 

சூறாவளிக்குள் இருந்து மீண்டு வந்த அனுபவம் – நடந்த நிகழ்ச்சி

third-eye-crystals

சூறாவளிக்குள் இருந்து மீண்டு வந்த அனுபவம் – நடந்த நிகழ்ச்சி

 

முந்தி எல்லாம் திருவிழாக் காலங்களில் வாண வேடிக்கை விடும் பொழுது ஒரு குழாய் வைத்திருப்போம். அந்தக் குழாயில் கந்தகத்தை எடுத்து வைத்து… அதற்கு என்று ஒரு கம்பியை வைத்து லேசாகத் தட்டினால் வெடிக்கும்.

ஏனென்றால் கந்தகத்தின் அழுத்தம் உஷ்ணத்தை உண்டாக்கக் கூடிய நிலைகள். கந்தகப் பாறைகள் எங்கிருக்கிறதோ அந்தப் பக்கமெல்லாம் தண்ணீர் மேலே ஓடி வந்தால் நெகட்டிவ் பாசிட்டிவ் (+/-) அது சுடு தண்ணீராக வரும்.

சுடு தண்ணீர் வருவதை முதன் முதலில் பம்பாயில் இருக்கும் கணேசபுரியில் தான் பார்த்தோம். நித்யானந்த சாமிகள் அங்கே ஒரு குகையில் சமாதியாகி உள்ளார். அந்த குகைக்கு நடந்து எல்லாம் போக முடியாது. படுத்துக் கொண்டே தான் போக முடியும்.

புலி போன்ற துஷ்ட மிருகங்கள் வராதபடி படுத்துக் கொண்டே குகைக்குள் சென்று பின் கல்லைக் கொண்டு மூடி மறைத்துக் கொள்வது. அங்கே உட்கார்ந்து தியானம் செய்வது என்ற நிலைகள் இருந்ததை எல்லாம் அங்கே போய்ப் பார்த்து விட்டு வந்தேன் (ஞானகுரு).

அங்கே சுடு தண்ணீர் கிணறு ஒரு பக்கம் உள்ளது. இன்னொரு பக்கத்தில் பாறை மேலிருந்து தண்ணீர் வருகிறது.

எந்த இடங்களில் எல்லாம் கந்தகப் படிவம் உள்ளதோ அங்கே பச்சைத் தண்ணீர் ஓடினால் தண்ணீரின் சூடு அதிகமாக இருக்கிறது. இதையெல்லாம் சுற்றுப் பயணத்தில் குருநாதர் (மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்) என்னை வலுக்கட்டாயமாக போகச் சொன்னார்.

இப்படி அந்தச் சந்தர்ப்பத்தை உண்டு பண்ணுகிறார். வீட்டிலேயும் சரி என்னைப் பார்க்கும் நண்பர்களும் உறவினர்களும் சரி எல்லோரும் என்னை வெறுக்கும் நிலையை உண்டாக்கி என்னை விரட்டி விட்டுக் கொண்டே இருக்கிறார்.

1.போகிற போக்கிலே எல்லாம் ஆசையை ஊட்டி
2.சரி… இதைப் பெருக்கலாம்..! இதைச் செய்து அப்படியே தப்பித்துக் கொள்ளலாம்…! என்ற எண்ணம் வருகிறது.
3.இப்படி ஒவ்வொரு எண்ணங்களை நான் எண்ணினாலும் என்னைத் துரத்தி விட்டு கொண்டிருந்தார்.
4.எல்லாமே தனியாகத் தான் சென்று அனுபங்களைப் பெற்று வந்தோம். யாருடைய உதவியும் இல்லை.

ஒரு சமயம் குருநாதர் என்ன செய்தார். அங்கே மலை மேலே ஒரு ஊற்று வருகிறது… அதை நீ போய்ப் பாருடா..! என்று சொன்னார். அங்கே போனேன்.

பார்த்து விட்டுக் கீழே இறங்கி வரும் பொழுது ஒரு பெரிய சூறாவளி வந்தது. ஏற்கனவே நாராயணசாமி அவர்கள் பம்பாய் செல்வதற்காக ரூபாய் அனுப்பி வைத்திருந்தார். அந்தப் பணத்தில் குடை வாங்கி வைத்திருந்தேன். காட்டிற்குள் செல்லும் பொழுது லேசாக தூறல் வந்தால் பிடித்து கொள்ளலாம் என்று இது “என்னுடைய ஆசை…!”

மலை மேலே ஏறிவிட்டு இங்கே வந்தேன். கீழே வரும் போது காற்றும் புயலுமாக வந்தது. விரித்த குடையைக் காணோம். கம்பி தான் என் கையில் இருக்கிறது. அந்த அளவுக்குக் காற்று.

சூறாவளிக் காற்றில் மரங்கள் எல்லாம் சட…சட…! என்று தாவுகள் எல்லாம் முறிந்து ஓடுகிறது. அப்போது மரத்தின் பக்கம் நான் போனால் ஆபத்து இருக்கிறது.

காற்று எப்படி அடிக்கிறது…? என்று அந்த நேரத்தில் ஒரு சிந்தனை வருகிறது. கூந்தப் பனை என்ற மரம் ஒன்று இருந்தது. அது பெரும்பாலும் கீழே அறுந்து விழாது. பறந்து கொண்டே தான் இருக்குமே தவிர ஒடியாது. ஏனென்றால் அதில் நார் பிடிப்பு அதிகமாக இருக்கும்.

காற்று என்னையவே அப்படியே தூக்குகிறது. அவ்வளவு புயல். ஓடிப் போய் என்ன செய்தேன்…? கூந்த பனையில் காற்றடிப்பதற்கு நேராக நின்று கொண்டேன். சாய்ந்தால் நம்மை அமுக்கி விடும்.

காற்றடிப்பதற்கு நேராக ஒரு வேளை அது சாய்ந்தாலும் கூட நாம் அப்படியே இருந்து கொள்ளலாம். “நம் மேலே விழாது…!” என்று இத்தனை சிந்தனையோடு அதைச் செய்தேன்.
1.அந்த இடத்தில் உணர்ச்சியை ஊட்டுகிறார்
2.நான் அல்ல…! குருநாதர் அந்தக் குரு வழியில் இதைக் கொடுக்கிறார்.

பார்த்தோம் என்றால் மற்ற மரத்தின் தாவுகள் எல்லாம் ஒடிந்து வந்து நான் நிற்கிற கூந்த பனையில் அடித்து அங்கே மேலே வரிசையில் அடுக்குகிறது.

ஆனால் கூந்தப் பனையில் மேலே உள்ள ஓலைகள் விழவில்லை. அது அப்படியே இருக்கிறது. மற்ற மரங்களின் தாவுகள் இதன் மீது ஒரு இரண்டு மூன்று அடித்து அடித்து சொத்…சொத்…! என்று கீழே விழுகிறது.

நான் இந்தப் பக்கம் இருக்கிறேன். என் மேல் விழுகவில்லை. அடி மரம் நன்றாகப் பருத்து வலுவாக இருக்கிறது மேலே ஒல்லியாக இருக்கிறது.

அந்த அடி மரத்தில் பேசாமல் உட்கார்ந்து விட்டேன். உட்கார்ந்து கொண்டு “ஈஸ்வரா… குருதேவா…! “ஈஸ்வரா… குருதேவா…!” என்று பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறேன். எனக்கு ஒன்றும் ஆகவில்லை.

இவ்வாறு அனுபவரீதியில் கடுமையான புயலைச் சந்தித்தாலும் மரங்கள் எல்லாம் ஒடிந்து போனாலும்….
1.ஆனால் குரு என்ன செய்கிறார்..?
2.இந்த இடத்தில் சிந்திக்க வைக்கிறார்.

இது எதற்காகச் சொல்கிறோம் என்றால் நமது குருநாதர் துருவ நட்சத்திரத்தின் உணர்வைத் தனக்குள் எடுத்திருக்கிறார். அந்த ஆற்றல்களைத் தனக்குள் பேரொளியாக உருவாக்கினார்.

அவர் வழியில் நாம் என்ன செய்கிறோம்…? அந்தத் துருவ நட்சத்திரத்தோடு குரு வழியில் இணைகிறோம். அதற்காக வேண்டித்தான் என்னை இப்படியெல்லாம் அனுபவம் பெறச் செய்தார்.
1.கண்ட அனுபவத்தை இங்கே விளைய வைத்துக் கொண்டிருக்கிறேன்.
2.இதை வித்தாக எடுத்து உங்களுக்குள் முளைக்க வைக்கின்றேன்.

இதை எடுத்து நீங்கள் வளரக்கூடிய பக்குவத்தில் ஒவ்வொரு நேரத்திலும் உங்களுக்குள் விளைய வேண்டும் என்ற ஆசையில் பல வகையிலும் சொல்கிறேன்.
1.இதையெல்லாம் புத்தகங்களில் எழுதி வைத்துக் கொடுக்க முடியாது
2.வாக்காகத் தான் (சொல்) கொடுக்க வேண்டும்.

ஏற்கனவே என்னிடம் வாக்கு வாங்கியவர்கள் எத்தனை பேர் வளர்கிறார்கள்…? எல்லோரும் இங்கே ஓடி வருவார்கள். அவர்கள் எதிர்பார்த்த நிலையில் என்னிடமிருந்து (ஞானகுரு) வரவில்லை என்றால் என்னத்தைச் செய்வது..? இன்னொரு சாமியாரைப் பார்க்கலாம் என்று போய்க் கொண்டிருப்பார்கள்.

அல்லது இங்கே இந்த மந்திரத்தைக் கொடுக்கின்றார்கள். மிகவும் எளிதாகக் (CHEAP) கொடுப்பார்கள் என்று அங்கே சென்று விடுவார்கள். ஜோசியக்காரரையும் தந்திரக்காரர்களையும் போய்ப் பார்க்கலாம் என்று அந்தப் பக்கம் போவார்கள்.

1.ஆகவே என்னிடம் கேட்ட வாக்கின் நிலைகள் என்ன செய்கிறது…?
2.உறுதிப்படுத்தும் உணர்வுகள் இங்கே இல்லாமல் போய் விடுகிறது.

இதுவரைக்கும் ஏன் இதைச் செய்யவில்லை என்று கூட நீங்கள் கேட்கலாம்.

1.உறுதியில் இது தேர்ந்தெடுத்து
2.சல்லடை போட்டுச் சலித்து எடுக்க வேண்டும்.
3.உறுதி கொண்ட நிலையில் எப்படி நம் வாழ்க்கையை நடத்த வேண்டும்…?
4.இந்த வாழ்க்கைக்குப் பின் நாம் பிறவியில்லா நிலையை அடைவது எப்படி…? என்ற
5.இந்தச் சிந்தனையைத் தூண்டும் உணர்வு உள்ளவர்கள் தான் இங்கே வரவேண்டும்.

சொல்வது அர்த்தமாகிறதல்லவா…?

அந்த உறுதி பெறச் செய்யும் நிலைக்காகத்தான் தான் அனுபவ வாயிலாகப் பெற்றதை உங்களிடம் அந்த ஒவ்வொன்றையும் சொல்லி அந்த ஒவ்வொரு உணர்வாகக் கொண்டு வருவது.

காரணம் நாம் கோடிக்கரையில் இருக்கின்றோம். தனுஷ் கோடியில் என்ன செய்கிறார்கள்…? உலகம் முழுவதும் சுற்றி விட்டு இங்கே இராமேஸ்வரத்திற்கு வருகிறார்கள். ஏன்…?

இராமன் என்ன செய்கிறான்…? நேரம் ஆகி விட்டது…! என்று மணலை எல்லாம் கூட்டுகிறான். சிவலிங்கத்தை உண்டாக்கிப் பூஜையை ஆரம்பித்து விடுகிறான். அப்படி என்றால் என்ன அர்த்தம்…?

இந்த உடலில் ஒவ்வொரு நிமிடத்திலும் தீமை என்ற உணர்வு வரும் போது அந்தத் தீமை என்ற உணர்வை மாற்றிட அருள் உணர்வை எடுத்து ஒவ்வொன்றையும் நல்லதாக மாற்றி நல்ல உணர்வின் தன்மையைச் சேர்த்து கொண்டே வருகிறோம். இது தான் தனுசு கோடி.

1.கோடிக்கரையில் இருந்து கொண்டு கடைசி நிமிடத்தில்
2.அன்றைக்கு… ஒரே நாளில் எல்லாத் தீமைகளையும் நீக்க முடியாது.

வாழ்க்கையில் சங்கடப்படுகிறார்கள் சலிப்புப் படுகிறார்கள் என்றால் அப்பொழுதெல்லாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து நமக்குள் ஆழமாகப் பதியச் செய்ய வேண்டும். மற்றவர்களுக்குள்ளும் இதைப் பதிவாக்க வேண்டும்.

ஏனென்றால் இதைப் போன்ற நஞ்சை எல்லாம் வேக வைத்தவன் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமாக ஆனது.

அந்த உணர்வை ஒவ்வொருவரும் எடுத்து நம் மனதைக் குவித்து எண்ணங்களை ஒன்றாக்கி இராமலிங்கமாக அழியாத வாழ்க்கையாக வாழ வேண்டும் என்று அங்கே தெளிவாகக் காட்டுகின்றார்கள்.