வியாபாரம் செழிக்க என்ன செய்ய வேண்டும்…?

வியாபாரத்தில் நஷ்டம் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் 

மனித வாழ்க்கையில் நாம் பெற வேண்டியதும் பெறக் கூடாததும் 

பேரரசர்கள் சம்பாரித்த சொத்து இன்று இருக்கின்றதா…?

வியாபரத்தில் கூட இருக்கும் நண்பன் மேல் தொழில் இர்கசியம் என்று சந்தேகப்பட்டால் அதன் விளைவுகள்

.தொழில் செய்யும் இடங்களில் குறைபாடுகளை நீக்க ஆத்ம சுத்தி செய்யும் முறைகள் 

கடையில் வியாபாரம் ஆகும் பொழுது பக்கத்துக் கடை வியாபாரத்தை எப்படிப் பார்க்கின்றோம்…? 

கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் நமக்கு நோய் எப்படி வருகின்றது…?

கடன் வாங்கியவர் கொடுக்கவில்லை என்றால் எப்படித் தியானிக்க வேண்டும் 

தொழிலில் முதலாளியின் உணர்வு வேலை செய்பவர்களை எப்படி இயக்குகின்றது 

செல்வம் அதிகம் உள்ள குடும்பத்தில் வரும் தொல்லைகள் 

நீங்கள் வளர்க்கும் அருள் சக்தியை யாராலும் அழிக்க முடியாது 

தொழில் செய்வோர் தெரிந்து கொள்ள வேண்டியது

தொழில் செய்யும் இடங்களில் மற்றவர்களால் தொல்லைகள் ஏற்படும் பொழுது அதை எப்படி நல்லதாக்குவது…?

தொழில் செய்யும் பொழுது வரும் வேதனைகளைத் தடுக்கும் வழி 

நாம் எண்ணியபடி வாழ்க்கை நடக்கவில்லை என்றால் கடைசியில் உடலுக்குள் என்னென்ன மாற்றங்கள் ஆகிறது…?

மனித உடலுக்குள் மறைந்திருக்கும் ஆற்றல்களையும் சக்தியையும் நாம் தெரிந்து கொள்வது நல்லது…!

powers-of-human

மனித உடலுக்குள் மறைந்திருக்கும் ஆற்றல்களையும் சக்தியையும் நாம் தெரிந்து கொள்வது நல்லது…!

இன்று விஞ்ஞான அறிவில் எங்கிருந்தோ ஒலி/ஒளிபரப்பக் கூடிய அந்த உணர்வின் காந்த அலையை அந்த உணர்வு கொண்டு இங்கே சுவிட்சைப் போட்டவுடன் TV RADIO காற்றிலிருந்து இழுத்து நமக்குக் காட்டுகின்றது.

இது யார் செய்தது..? மனிதன் தான்.

1.இந்த காந்த இயக்கத்தின் சக்தியினுடைய தன்மையை
2.நாம் உணர்ந்தறிந்து செயல்படும்… உரு பெறும்… உருவாக்கச் செய்யும்…
3.ஆறாவது அறிவின் தன்மை அது நம் உடலுக்குள் நின்று தசைகளை இயக்கினாலும்
4.நாம் எண்ணக்கூடிய உணர்வுகளைச் சுவாசித்தவுடன்
5.நம் உயிரிலே பட்டு – அந்த எண்ணங்களுக்குத் தக்கவாறு (நம்) உடலை இயக்குகின்றோம்.
6. அந்த உணர்வின் ஆற்றல் வலுவானது…! அதை நாம் பயன்படுத்தும் முறைகளை அறிந்து கொள்ள வேண்டும்.

நான் படிக்கவில்லை…
1.சாமி (ஞானகுரு) என்னமோ சொல்கிறார்…! என்று விரக்தியாக இருக்க வேண்டாம்
2.சாமி சொல்வது “அர்த்தமாகவில்லையே…!” என்று எண்ண வேண்டாம்
3.சாமி சொல்வதைப் “புரிந்து கொள்ள வேண்டும்…!” என்ற ஏக்கத்தில் இருந்தால் போதும்
4.இந்த உணர்வின் ஆற்றல் உங்களுக்குள் பதிவாகிவிடுகின்றது.

டேப் செய்யப் பயன்படும் “ஒலி நாடா” ஒன்றுமே அறியாதது. ஆனால் அந்த நாடாவில் பதிவு செய்து மீண்டும் அதை இயக்கினால் அந்த ஆனந்தமான பாடல்களைக் கேட்டு இரசிக்கின்றோம்.

அபூர்வமான படங்களையோ மற்ற எத்தனையோ ஆச்சரியத்தக்க அளவில் பல நிலைகளை நாம் கண்டு மகிழ்கிறோம்.

அதைப்போன்று தான் நம் எலும்புக்குள் இருக்கக்கூடிய காந்த சக்தியினுடைய நிலைகள் எந்த உணர்வை நாம் ஆழமாகப் பதிவாக்கிக் கொள்கின்றோமோ அது ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாக்கிக் கொள்கின்றது.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் மெய் ஞானிகளின் ஆற்றல் மிக்க நிலைகளை இந்த உபதேசத்தின் மூலமாகப் பதிவாக்குகின்றோம்.

இதைப் படிக்கும் பொழுது அந்த உணர்ச்சிகள் தூண்டப்பட்டு மகரிஷிகளின் உணர்வைச் சுவாசிக்க நேர்கின்றது. அது உமிழ் நீராக மாறி உடலுக்குள் சத்தாக மாறுகின்றது.

நெருப்புடன் ஒரு கட்டையைப் போட்டவுடன் அந்தக் கட்டையில் இருக்கக் கூடிய சத்தை மாற்றி அதை ஒளியாக மாற்றுகின்றது.

நம் உயிர் ஒளியாக நின்று உடலுக்குள் அணுவின் திசுவை இயக்கி அந்த உணர்வின் சக்தியை அறியச் செய்து அந்த அறிவின் நிலையில் இயக்குகின்றது. ஆகவே நம் உணர்வுகளை உயிரைப் போன்றே ஒளியாக மாற்ற வேண்டும்.

நாம் கட்டைகளை எரித்து அதன் சக்தியை மற்ற ஆக்கப் பணிகளுக்குப் பயன்படுத்தி இரும்பையோ மற்றவைகளையோ உருக்குகின்றோம். அதைப் போன்று
1.நம் உடலை உருவாக்கிய இந்த உணர்வைக் கட்டையாக வைத்து,
2.அந்த மகரிஷிகளின் அருள் ஒளியை நமக்குள் கூட்டிச்
3.சிறுகச் சிறுக இந்த உணர்வின் சக்தியை உயிராத்மாவில் மாற்ற வேண்டும்.

அப்படி மாற்றிய பின் விண்ணிலே தோன்றக் கூடிய கடும் விஷமானாலும் அதனின் சக்தியை ஒளியாகத் தனக்குள் கூட்டி ஒளியின் சிகரமாக விண்ணிலே சென்றடைவது தான் “மனிதனின் கடைசி நிலை….!”

இந்த மனித உடலுக்குள் நின்று அந்த உணர்வின் சக்தியை நாம் சிருஷ்டிக்கும் வலிமை மிக்கதாக நாம் செயலாக்க வேண்டும். அவ்வாறு செயலாக்கப்படச் செய்வதற்குத்தான் இந்தத் தியானத்தின் வழி.

மகரிஷிகளின் அருள் சக்தியை நீங்கள் பெறவேண்டும் என்று ஏங்கும் பொழுது அதை உங்களுக்குக் கிடைக்கச் செய்து வாழ்க்கையிலே மகிழச் செய்யும் இந்த உணர்வின் ஆற்றலை உங்களுக்குள் பெருக்கச் செய்கின்றோம்.

விஞ்ஞானிகள் ஒரு பொருளின் தன்மையை உருவாக்கி இராக்கெட் மூலம் விண்ணிலே செல்லக்கூடிய ஆற்றல் பெற்றிருக்கிறார்கள்.

அன்று மகரிஷிகளோ விண்ணை நோக்கி ஏகி விண்ணின் ஆற்றலைத் தான் இருந்த இடத்திலிருந்தே பெற்றுத் தனக்குள் அதைக் கூட்டி அந்த உணர்வின் சத்தை ஜீரணிக்கச் செய்து உணர்வுகளை ஒளியாக மாற்றிச் சப்தரிஷி மண்டலமாக இன்றும் சுழன்று கொண்டுள்ளார்கள்.

அவர்கள் கண்ட மெய் உணர்வுகளைத்தான் இராமாயணம், மகாபாரதம் கந்தபுராணம் சிவபுராணம் என்று தோற்றுவித்து அதைத் சாதாரண மக்களுக்கும் தெரியப்படுத்தும் விதமாகக் காவியமாகப் படைத்துச் சென்றார்கள்.

மகரிஷிகளின் உணர்வுடன் அவைகளை மீண்டும் படித்துப் பார்த்தால் அதற்குள் மறைந்த மூலங்களை அறிய முடியும்.
1.இந்த உடலில் வாழும் இக்காலத்திலேயே
2.ஒளியின் சரீரம் பெறும் நிலையை நாம் உருவாக்க வேண்டும்.

குழந்தை இல்லாவதவர்களுக்கு அன்றைய மெய் ஞானிகள் தன் பார்வையாலே ஒளியைப் பாய்ச்சி… “புத்திர பாக்கியம்” பெறச் செய்தார்கள்…!

mother-and-child-care

குழந்தை இல்லாவதவர்களுக்கு அன்றைய மெய் ஞானிகள் தன் பார்வையாலே ஒளியைப் பாய்ச்சிப் “புத்திர பாக்கியம்” பெறச் செய்தார்கள்

 

இன்று விஞ்ஞான அறிவின் வளர்ச்சியைப் பார்க்கின்றோம். ஒரு மிருகத்திலுள்ள அணுக்களை எடுக்கின்றான். மற்ற மிருகங்களினுடைய விந்துக்களில் இதைக் கலக்கிறான். அது வேறு விதமாகப் போகின்றது.

ஒரு மாட்டின் விந்தை எடுக்கின்றான். இன்னொரு இன விந்திலே இதைக் கொடுக்கிறான். இதனுடைய அடைப்பிலே பாதுகாப்பாகக் கவசம் பண்ணி அந்த மாட்டின் ரூபத்தையே மாற்றி விடுகின்றார்கள்.

நாயோ ஆடோ கோழியோ அதிலுள்ள செல்களைப் பிரித்து எடுக்கின்றான். மற்ற உணர்வுகளை மாற்றி அதனுடன் இணைக்கும் பொழுது கோழியின் ரூபம் மாறுகின்றது. குருவிவியின் நிறம் மாறுகின்றது. மயிலின் நிறம் மாறுகின்றது. பல விதமான நாய்கள் உருவாகின்றது பல தரப்பட்ட கோழிகள் உருவாகின்றது.

இப்படியெல்லாம் உருக்கள் மாறுகின்றது. விஞ்ஞானிகள் உருவாக்கிய இந்த நிலைகளை எல்லாம் நாம் பார்க்கின்றோம்.

இனச் சேர்க்கையின் பொழுது வேறொரு சீமை மாடுடன் இணையும் பொழுது அந்த விந்து இதிலே அந்த மாடாக மாற்றுகின்றது.

அது உணர்வது பாதுகாப்பாகப் போகின்றது. இதே மாதிரித் தான் மனிதனுடைய கருக்களிலும் ஒரு மாட்டின் விந்தினை எடுத்து விட்டால் அதே மாட்டின் நிலையே தான் இங்கு மாற்றும்.

ஏனென்றால் இது ஒரு பாதுகாப்புக் கவசமாகின்றது.

இப்பொழுது விஞ்ஞான அறிவிலே கொண்டு வருகின்றார்கள்.

ஒருவருக்குக் குழந்தை இல்லை என்றால்…
1.கருப்பைக்கு அப்புறம் இதற்கென்று இயற்கையிலே செய்யப்பட்ட இந்தக் கருவின் அணுக்களை வைத்து
2.(இன்னொரு) தாயின் வெப்பத்தை வைத்து
3.இந்தக் கரு முட்டையை வளர்க்கின்றான்.
4.அதிலே குழந்தைகள் பிறக்கின்றது.

அதாவது ஜீவ அணுக்களை வளர்த்ததை மற்ற உடலிலிருந்த அணுக்களைப் பிரித்து இப்படிச் செய்கின்றார்கள். இது விஞ்ஞான அறிவு.

ஆனால் அன்று வாழ்ந்த மெய் ஞானிகள் என்ன செய்தார்கள்?

புத்திர பாக்கியம் ஏற்படாததன் காரணம் என்ன என்றால் புத்திர பாக்கியத்தை உண்டாக்கும் அணுக் கருக்கள் உடலில் வீரியம் பெறாத நிலைகளினால் தான்.

ஏனென்றால் பல சந்தர்ப்பங்களில் சுவாசித்த எண்ண உணர்வுகள் “எதிர்மறையான அணுக்களாகி” உடலில் புத்திர பாக்கியம் உண்டாக்கும் அணுக் கருக்களை அழித்துவிடுகின்றது.

அந்த அணுக்களின் குறைவு எதுவோ அந்த அணுக்களுக்குத் தேவைப்பட்டது எதுவோ அதை மெய் ஞானி “தன் பார்வையால்…” அந்த உணர்வின் சத்தை அவர்களுக்குப் பாய்ச்சுகின்றான்.
1.ஒருவருக்குக் குழந்தை இல்லை என்றால்
2.தன் எண்ணத்தால் குழந்தை கொடுக்கின்றான்.

கணவன் மனைவி இருவரும் சேர்ந்து துருவ நட்சத்திரத்தின் அருளாற்றல் பெறவேண்டும் என்று ஒருவருக்கொருவர் தினசரி காலை மாலை இரவுகளில் தியானித்து வர வேண்டும்.

1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகள் பெருகப் பெருக
2.புத்திர பாக்கியம் உண்டாக்கும் அணுக் கருக்களை அழிக்கும் அணு செல்களில்
3.துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகள் படர்ந்து
4.அதனின் செயலாக்கம் வலுவிழக்கின்றது.

புத்திர பாக்கியம் நிச்சயம் உண்டு… என்ற நம்பிக்கை கொண்டு மன வலுவுடன் தியானித்தால் “உறுதியாகக் குழந்தை பாக்கியம் கிடைக்கும்….!”

துருவ நட்சத்திரத்தின் சக்தியையும் சப்தரிஷி மண்டலங்களின் சக்தியையும் “நேரடியாகப் பெறச் செய்யும் பயிற்சி…!”

Menbership

துருவ நட்சத்திரத்தின் சக்தியையும் சப்தரிஷி மண்டலங்களின் சக்தியையும் “நேரடியாகப் பெறச் செய்யும் பயிற்சி…!”

 

நமது தினசரி வாழ்க்கையில் எத்தனை வகையான குணங்களைத் தெரிந்தோ தெரியாமலோ எண்ணி எடுத்திருப்போம். அது அத்தனையும் அதற்குத்தக்க அணுக்களாக நம் உடலுக்குள் விளைந்திருக்கும்.

நாம் நல்ல குணங்கள் கொண்டு இருப்பினும் பிறருடைய தீமைகளை உற்றுப் பார்த்துக் கேள்வியுற்று இருந்தால் அந்த நேரத்தில் இந்த உணர்வுகளை நுகர்ந்திருப்போம். அப்பொழுது நம் நல்ல குணங்களின் முகப்பில் இது அடைபட்டு இருக்கும்.
1.அதனால் நல்ல குணங்கள் செயல்படாத நிலைகளில் தடைபட்டு அது நலிந்து கொண்டு இருக்கும்.
2.நல்ல குணங்கள் வளர்வதற்கு ஈர்ப்பு சக்தி குறைந்து இருக்கும்.
3.அது வளர்ச்சி குன்றும் போது நாம் நல்ல குணங்களால் வளர்க்கப்பட்ட நம் உடலில் சோர்வின் தன்மை உண்டாகும்.

நாம் நல்லதை எண்ணி நல்லதைச் செய்ய வேண்டும் என்கிற போது பிறருடைய தீமைகளை எல்லாம் கேட்டு உணர்கின்றோம். அப்போது
1.நம் உயிரிலே பட்டுத் தீமை என்ற நிலைகள் உணர்ந்தாலும்
2.இந்த உணர்வுகள் நம் உடலுக்குள் பரவப்படும் போது
3.நாம் எந்த நல்ல குணங்களை வைத்திருந்தோமோ அதன் வழியில் முன்னோட்டமாக அடைபட்டு விடும்.
4.அதாவது தீமை என்று நமக்கு அறிவித்தாலும் நல்லதுக்கு முன்னாடி இது வந்து அடைத்துக் கொள்கின்றது.
5.அதை மாற்ற வேண்டும் அல்லவா…! அது எப்படி…?

சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உங்கள் உயிரை எண்ணி ஏங்கித் தியானியுங்கள்.

இப்போது இதை யாம் (ஞானகுரு) சொல்லும் போது உங்கள் உடலுக்குள் ஆழமாகப் பதிவாகின்றது. பதிவு செய்து கொண்ட பின் அடுத்து உங்கள் நினைவினைப் புருவ மத்தியில் எண்ணினால் அந்தச் சக்திகளை எளிதில் பெற ஏதுவாகும்.

உங்கள் நினைவு அனைத்தையும் சப்தரிஷி மண்டலங்களையும் துருவ நட்சத்திரத்தினையும் எண்ணிச் செலுத்துங்கள். இவ்வாறு செலுத்தப்படும் பொழுது அதனின்று வெளிப்படும் உணர்வுகளை நீங்கள் எளிதில் நுகர்ந்தறிய இது உதவும்.
1.ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…! என்று உங்கள் உயிரான ஈசனிடம் வேண்டி
2.விண்ணிலே நினைவினைச் செலுத்தி அந்தச் சக்தி பெறவேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

இப்பொழுது உங்கள் நினைவெல்லாம் வான மண்டலங்களில் சென்றிருக்கும். தீபாவளிக் காலங்களில் ஒரு மத்தாப்பு பொருத்திய பின் பொறிகள் எப்படிக் கிளம்புகின்றனவோ அது போல
1.வான மண்டலத்தில் பல கலர்கள் கொண்ட உணர்வலைகள் பரவிக் கொண்டிருப்பது உங்கள் உணர்வுகளில் தோற்றமளித்திருக்கும்.
2.அந்த உணர்வுகள் அனைத்தும் உங்கள் உடலுக்குள் பரவுகின்றது.

துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்பட்ட உணர்வுகளை நீங்கள் நுகரப்படும் பொழுது அது அனைத்தும் வைரத்தைப் போல “இளம் நீல நிறமாக… இருக்கும்…!”

சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வெளிப்பட்ட உணர்வுகளை நீங்கள் நுகரப்படும் பொழுது அது அனைத்தும் பல வித வண்ணங்களில் இருக்கும். ஏனென்றால் பல கோடி மகரிஷிகள் அந்த ஒவ்வொரு மகரிஷியும் அவரவர்கள் எடுத்துக் கொண்ட உணர்வுகள் கலந்த வண்ணம் பல வர்ணங்களில் இருக்கும்.

சப்தரிஷி மண்டலங்களில் இருந்து வருவது மத்தாப்பு போல பல வண்ணங்களில் ஒளிக்கற்றைகளாக இந்த உணர்வுகள் தெரிந்து இருக்கும்.

ஆனால் உங்களுக்குள் இது தெரியவில்லை என்றாலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் உங்கள் உடல்களிலே பாய்ந்து
1.உங்கள் உடலில் ஒரு சக்கரம் போன்று சுழன்று கொண்டு வருவதை உணர்ந்திருக்கலாம்.
2.ஏனென்றால் சுவாசித்து உங்கள் உடல் முழுவதற்கும் ஒரு ரவுண்டு வரும்.

இந்த உணர்வுகள் அனைத்தும் உங்கள் உடலிலுள்ள அணுக்களில் அவை அனைத்திற்கும் செடிகளுக்கு உரம் போட்ட மாதிரி அந்த அணுக்களின் முகப்புகளில் இது பூராம் போய்ச் சேரும்.

உதாரணமாக நீங்கள் மாவை எடுத்துப் பிசைகின்றீர்கள். அது நல்ல சுவை உள்ளது தான். ஆனால் அதில் வேறொரு பொருளைப் போட்டால் எதன் சுவை வரும்…?
1.அந்த நல்ல மாவுடன் நாம் எதைக் கலக்கின்றமோ அது மேலோட்டமாக இருந்தால்
2.அதனுடைய சுவை தான் முன்னணியில் இருக்கும்.

அதைப் போன்று தான் நம் நல்ல குணங்கள் செயலற்றதாக்கி வரும் போது இதை அகற்றிய அருள் ஞானிகளின் உணர்வுகளை நம் உடலுக்குள் இப்படிச் சுழலச் செய்ய வேண்டும்.

நாம் எப்படிச் செடிகளுக்கு உரம் போடுகின்றோமோ அதைப் போல் மகரிஷிகளின் உணர்வை உடலுக்குள் சுழலச் செய்யும் பொழுது அது வலு கொண்டு ஊடுருவிப் பாயும் தன்மை பெற்றது.

அது ஊடுருவிப் பாய்ந்து நம் நல்ல குணங்களில் கலக்கப்படும் பொழுது அந்த நாம் கேட்டறிந்த தீமையின் நிலைகள் செயலிழந்து விடுகின்றது.

உங்கள் வாழ்க்கையில் அறியாது வரும் தீமைகளைச் செயலற்றதாக்கி அதனின் வலுவை இழக்கச் செய்வதற்குத்தான் இந்தப் பயிற்சியைக் கொடுக்கின்றோம். பயன்படுத்திக் கொள்ளுங்கள்.