தியானிக்க வேண்டிய முறை – Meditating Method

Image

1. துருவ நட்சத்திரத்தின் இயல்பு

சிறிதளவு விஷத்தைக் கண்டாலும் அதனுடைய செயலாக்கத்தை அடக்கி, எரித்துப் பொசுக்கி ஒளியாக மாற்றும் திறன் பெற்றது துருவ நட்சத்திரம்.
துருவ நட்சத்திரத்தின் அருகில் இன்றைய அணுகுண்டுகளோ, அணுக் கதிரியக்கங்களோ செல்ல முடியாது. அதை அடக்கிவிடும். அதன் செயலாக்கத்தைத் தணித்துவிடும். தனக்குள் ஒளிச் சுடராக மாற்றிவிடும்.
சூரியனே அழிந்தாலும், துருவ நட்சத்திரம் தன் செயலாக்கங்களை இழக்காது. அந்த துருவ நட்சத்திரம், அகண்ட அண்டத்தில் வரும் எத்தகைய நஞ்சினையும் ஒளியாக மாற்றிடும் திறன் பெற்றது.
ஆசைகளையும், குரோதங்களையும் வளர்க்கின்றவரிடத்தில் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் அணுகாது.
துருவ நட்சத்திரத்தின் பேரருளின் உணர்வுகளை வளர்த்தவரிடத்தில் ஆசைகளும் குரோதங்களும் அணுகாது.

2.“முதல் தெய்வங்களின்” (குரு) அருள் பெறவேண்டும்

உங்கள் தாய் தந்தையரை முதல் தெய்வங்களாக வணங்கி, அவர்கள் அருளாசி பெறவேண்டும் என்று முதலில் ஏங்குங்கள். அவர்களுடைய அருளால் குருவின் அருள் பெறவேண்டும் என்று ஏங்குங்கள்.
குரு அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று ஏங்குங்கள்.

3. துருவ நட்சத்திரத்திற்குள் ஊடுருவிச் செல்லவேண்டிய முறை (METHOD)

ஓ..ம் ஈஸ்வரா குருதேவா என்று உங்கள் உயிரை எண்ணி, கண்ணின் நினைவை புருவ மத்திக்குக் கொண்டு வாருங்கள்.
உங்கள் உடலில் உள்ள எல்லா எண்ணங்களையும் உணர்வுகளையும் குணங்களையும் ஒன்றாகத் திரட்டி (அழுத்தமாக) துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று ஏங்குங்கள்.
அவ்வாறு திரட்டிய உணர்வுகளை ஒன்றாகக் குவித்து ஒரு வில்லில் (தனுசு) அம்பை ஏற்றுவது போன்று நாணை நிதானமாக இழுத்து, பூமியின் வடகிழக்கு திசையில் விண்ணிலே இருக்கும் துருவ நட்சத்திரத்தை இலக்காகக் குறிவைத்து புருவ மத்தியிலிருந்து இழுத்து விடுங்கள்.
புருவ மத்தியிலிருந்து ஏக்கத்துடன் வீசும் நம்முடைய உணர்வுகள் துருவ நட்சத்திரத்திற்குள் நேரடியாக அம்பாகத் தைக்கின்றது.

4. துருவ நட்சத்திரத்தின் எதிர் அலை (“ECHO”) நீல நிற ஒளி நம் மீது மோதும்

ஒரு இசைக் கருவியை உதாரணமாக வீணையை நாம் தட்டினோம் என்றால் நாதம் எழும்பும். அதே சமயத்தில், அதனுடைய அதிர்வுகள் அலை அலையாக வரும்.
இதைப் போன்று, துருவ நட்சத்திரத்தில் மோதும் நம் உணர்வுகள் பாய்ந்து அதிர்வாகி, (ECHO) அங்கிருந்து துருவ நட்சத்திரத்தின் அலைகள் உயிரில் உள்ள காந்தம் ஈர்ப்பதால், திரும்ப வந்து புருவ மத்தியில் மோதுகின்றது.
ஆக, திரும்பத் திரும்ப நாம் நம் உணர்வுகளைக் குவித்து புருவ மத்தியிலிருந்து அம்பாக துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்த செலுத்த, அப்படி மோதும் உணர்வின் அதிர்வுகள் அலை அலையாக மாறி, அலைத் தொடர்பாக மாறி அலை வரிசையாகின்றது. (FREQUENCY).
இது தொடர் வரிசையாகி, துருவ நட்சத்திரத்துடன் நேரடித் தொடர்பு (LINK) நம் உயிருக்கு நமக்குக் கிடைக்கின்றது.
ஒரு வெல்டிங்கை (WELDING) தட்டினால் எப்படி “பளீர்” என்று வெளிச்சமாகின்றதோ, அதைப் போன்று துருவ நட்சத்திரத்துடன் நாம் மோதும் இத்தகைய உணர்வுகள் நம் உயிரிலே இளம் நீல நிறத்தில் ஒளி வீசும்.
அந்த சமயத்தில் புருவ மத்தி சிறிது கனமாகவும் இருக்கும். நாம் புருவ மத்தியிலிருந்து இழுத்து சுவாசிக்கும் பொழுது அலைகள் நமக்குள் “ஜிவ்., ஜிவ்.,” என்று இழுப்பதைப் பார்க்கலாம், உணரலாம்.
துருவ நட்சத்திரத்தின் பேரொளி இப்பொழுது உயிர் வழி சுவாசமாகி, அந்த உணர்வுகள் வாயிலே உமிழ்நீராகக் கரைகின்றது.

5. துருவ நட்சத்திரத்தின் பேரருளை உடலில் உள்ள அணுக்களின் முகப்பில் இணைக்க வேண்டும்

இவ்வாறு வரும் அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியினை கண்ணின் நினைவு கொண்டு எங்கள் ரத்தங்கள் முழுவதும் படர வேண்டும் என்று ஏங்குங்கள்.
இப்பொழுது நம் உடலில் இருக்கும் சுமார் 5 அல்லது 6 லிட்டர் ரத்தம் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் அலைகள் படர்கின்றது.
அடுத்து, ரத்தத்தில் இருக்கும் பல கோடி ஜீவ அணுக்களிலும், அறியாது உட்புகுந்த ஜீவ ஆன்மாக்களிலும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படரவேண்டும் ஈஸ்வரா என்று புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டுங்கள்.
இப்பொழுது, ரத்தத்தில் இருக்கும் பல கோடி ஜீவ அணுக்களின் முகப்புகளிலும் அந்த சக்தி இணைகின்றது.
அதே சமயத்தில் ஜீவ ஆன்மாக்களின் முகப்பிலும் அந்த சக்தி இணைகின்றது.
திரும்பவும், புருவ மத்தியிலிருந்து துருவ நட்சத்திரத்திற்கு அம்பு போன்று நினைவைச் செலுத்துங்கள். துருவ நட்சத்திரத்தில் மோதி, அங்கிருந்து வரும் எதிரலை (ECHO) அதை உயிரின் வழியாக இழுத்து சுவாசியுங்கள்.
கண்ணின் நினைவு கொண்டு உடல் முழுவதும் பரவச் செய்து, உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பாகச் செலுத்தி, துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அந்த உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் பெறவேண்டும் ஈஸ்வரா என்று உயிரான ஈசனிடம் வேண்டுங்கள்.

6. துருவ நட்சத்திரத்தின் பேரொளியை நம் ஆன்மாவிற்குள் கொண்டுவரும் முறை

திரும்பத் திரும்ப “நினைவு”
  1. புருவ மத்தியிலிருந்து துருவ நட்சத்திரத்திற்குச் செல்லவும்,
  2. துருவ நட்சத்திரத்திலிருந்து உயிர் வழி இழுத்து சுவாசிக்கவும்,
  3. கண்ணின் நினைவு கொண்டு அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உடலில் உள்ள அணுக்களில் இணைக்கச் செய்யவும்,
  4. அந்த சக்தி பெறவேண்டும் என்று மறுபடி புருவ மத்திக்குக் கொண்டு வந்து உயிரான ஈசனிடம் வேண்டுவதும்தான்

தியானம் செய்யவேண்டிய முறை:-

அதாவது வட்டம் போன்று (CIRCULATION) புருவ மத்தியில் ஆரம்பித்து புருவ மத்தியிலே முடிக்கும்போது அலை அலையாக இழுக்கும் பொழுது, துருவ நட்சத்திர சுவாசமானது உடல் முழுவதும் சுழன்று வருகிறது.
இப்படி சுழல சுழல, உடலின் வெப்பத்தால் கொதித்து அந்த துருவ நட்சத்திர அலைகள் உடலிருந்து மணங்களாக வெளிப்படத் தொடங்குகின்றது.
உடலிலிருந்து வெளிப்படும் துருவ நட்சத்திரத்தின் மணம் ஏற்கனவே நம் உடலைச் சுற்றியிருக்கும் ஆன்மாவில் உள்ள தீமை செய்யும் அலைகளைப் பிளந்து, நம் ஈர்ப்பு வட்டத்திலிருந்து கழற்றி வெளியே தள்ளிவிடுகின்றது.
நம் உடலைச் சுற்றியிருக்கும் காற்று மண்டலம், அதாவது நம் ஈர்ப்பு வட்டம் தான் “ஆன்மா”.
நாம் கண் வழி உற்றுப் பார்த்த உணர்வுகள் எலும்புக்குள் ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாகி, கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலன் அந்த உணர்வலைகளைக் கவரும் பொழுது நம் ஈர்ப்புக்கு வரும் உணர்வலைகள் நமது ஆன்மாவாக மாறுகின்றது.
நம் ஆன்மாவில், அதாவது நம் ஈர்ப்பு வட்டத்திற்குள் எதைக் கவர்கின்றோமோ அதைத்தான் நாம் மூக்கின் வழியாகச் சுவாசிக்கின்றோம். அது புருவமத்தியில் உயிரில் பட்டவுடன் நாதமாகி, எண்ணங்களாகி, சொல்லாகவும், செயலாகவும் இயக்கச் செய்கின்றது.
இப்படி உருவான அணுக்களின் மலம்தான் நம் உடலாக உருவாகியுள்ளது. அந்த உருவான அணுக்களுக்கு நம் உயிர் இந்த பூமியின் காற்று மண்டலத்திலிருந்து உணவை எடுத்து நம் ஆன்மாவாக மாற்றி தொடர்ந்து அதைச் சுவாசிக்கச் செய்கின்றது.
ஆக, எத்தனையோ விதமான இந்த உணர்வுகள் அனைத்தும் நம் ஆன்மாவாக மாறிவிடுகின்றது. அந்த ஆன்மாவில் உள்ளவற்றைத் தூய்மைப்படுத்தும் நிலைதான் உயிர் வழி சுவாசமான மேலே குறிப்பிட்டுள்ள தியானம் செய்யும் முறை.
இப்படி தியானிக்கும் பொழுது நம் ஆன்மாவில் துருவ நட்சத்திர அலைகள்தான் இருக்கும். பிற உணர்வுகள் நம் ஆன்மாவிக்குள் வர முடியாது. நம் ஆன்மா பரிசுத்தமாகின்றது.

7. துருவ நட்சத்திர ஈர்ப்பு வட்டத்திற்குள் நாம் வாழத் தொடங்குகின்றோம்

ஆகவே, துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை நம்முள் சேர்க்கும் பொழுது, நம்மிடமிருந்து வெளிப்படும் மணம் அனைத்து விஷங்களையும் வெல்லக் கூடியதாக இருக்கும்.
உயிர் வழி அதாவது புருவ மத்தியின் வழி விண்ணின் ஆற்றலைச் சுவாசித்துப் பழகிக் கொண்டால் நம் உணர்வுகள் அனைத்தும் உயிருடன் ஒன்றி ஒளியின் தன்மை அடைகின்றது.
நாம் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் இணைந்து வாழத் தொடங்குகின்றோம். நமக்கு இன்னொரு பிறவி (உடல்) இல்லை.
எந்தத் துருவ நட்சத்திரத்தைக் குறி வைத்து இழுத்து சுவாசிக்கின்றோமோ, அந்த மணம் நம் ஆன்மாவில் பெருகி, அதன் முலாமாக உயிரிலே சேர்ந்து யாருடைய ஈர்ப்பிலும் சிக்காது துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்கே நம்மை அழைத்துச் செல்லும் நமது உயிர்.
அங்கே சென்று பேரின்ப பெருவாழ்வு பெற்று, ஏகாந்தநிலை அடைந்து எத்தகைய இன்னலும் இல்லாது எதிர்ப்பும் இல்லாது, என்றும் பதினாறு என்ற அழியா ஒளி சரீரம் பெறமுடியும்.
இது இறுதியானதும், உறுதியானதும், மனிதன் நாம் எல்லோராலும் சாத்தியமாகக்கூடிய ஒன்றாகும்.
எமது அருளும், மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளும், எல்லா மகரிஷிகளின் அருளும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கப் பிரார்த்திக்கின்றேன்.
ஓ..ம் ஈஸ்வரா குருதேவா

 

audio – ஆத்ம சுத்தி

பிராணாயாமம் 
தீமைகளை உடலை விட்டு அப்புறப்படுத்தும் பயிற்சி
பல வகைகளில் வரும் தீமைகளை மாற்றும் நிலைகள்

கண்ணாடி அழுக்கைத் துடைத்தால் முகம் தெரியும், அதுபோல் ஆன்மாவைச் சுத்தப்படுத்துங்கள்

நாம் உருவாக்க வேண்டிய பாதுகாப்புக் கவசம்

உங்களுக்குள் பழமையில் சேர்ந்த உணர்வுகளை எப்படி நீக்கச் செய்கிறோம்

.ஆன்மாவைச் சுத்தம் செய்ய நேரம் இல்லை என்று சொல்கின்றார்கள்

எலெக்ட்ரானிக் போன்று ஞானி உணர்வை எடுத்துத் தீமைகளை ரிமோட் செய்யுங்கள்

தியானப் பயிற்சி, ஆத்ம சுத்தி பயிற்சி, தீமையை நீக்கும் பயிற்சி கொடுக்கின்றோம்

துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் அணுக்களாக விளையை வைக்கும் முறை

ஆன்மாவில் பட்ட எரிச்சலை நீக்க வேண்டும் என்றால் மகரிஷிகளின் அருள் சக்தி எடுக்க வேண்டும்

நம் உடலிலுள்ள தீமை என்ற ஓட்டைகளை அடைக்கும் வழி 

நம் சொல்லையும் செயலையும் புனிதமாக்கும் பயிற்சி 

மன பலம் எப்படிப் பெறுவது…?

தீமைகள் புகாது தடுக்கும் நரசிம்ம அவதாரம் 

தீமையான உணர்வுகளை வேக வைக்க வேண்டும்

வேகா நிலை – உயிரில் நஞ்சு அணுகாமல் காத்தவர்கள் மகரிஷிகள் 

நண்பர் மேல் பதிவாகும் நல்ல உணர்வும் குறை உணர்வும் குற்ற உணர்வும் மும்முனையாக இயங்கும் நிலை 

நம் நல்ல குணங்களை மறைக்கும் சிறு திரைகளைக் கிழித்தெறிய வேண்டும் 

நம்மால் நன்மை பெற்றவர்கள் நமக்கு எதிர்ப்பதமானால் என்ன செய்யவேண்டும் 

நான் ஒன்றும் உங்களை மாற்ற முடியாது – நீங்கள் தான் எடுத்து மாற்ற வேண்டும் 

தீமையான உணர்வுகள் நமக்குள் வினையாக… ஒரு வித்தாக… உருவாகாமல் தடுப்பது தான் “சதுர்த்தி…!” 

குறைகளைக் கேட்டால் எப்படி நடந்து கொள்ள வேண்டும்…?

நம் உடலில் உள்ள தீமைகளை முழுவதும் அழிக்க முடியுமா…?

தீமைகளைச் சமப்படுத்தி நல்லதாக மாற்றும் சக்தி 

ஜீவான்மாவைத் தூய்மையாக்கும் வழி 

நோயை நீக்கினாலும் ஊழ்வினை என்ற வித்தை மாற்ற வேண்டும்

பொருளறிந்து செயல்படும் சிந்தித்துச் செயல்படும் அருள் வழி 

தீமைகளை வென்றிடும் சூட்சமங்களை அறிந்து கொண்டால் உணர்வுகளை ஒளியாக்கிட முடியும்

மனிதன் இராமலிங்கமாக மாறும் வழி

நாம் விழித்திருக்க வேண்டும்..! என்று ஞானிகள் சொன்னதன் மூலக் கருத்து என்ன…?

எந்தத் தீமையும் நமக்குள் ஒட்டாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்…? 

துன்பமோ துயரமோ கோபமோ ஆத்திரமோ வந்தால் அடுத்த கணம் நம் எண்ணங்கள் எங்கே செல்ல வேண்டும்…?

ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தின் முக்கியத்துவம்

தீமைகள் வராது தடுக்கும் அருள் சக்தியைப் பெற வேண்டும் என்று தான் ஞானிகள் சொல்லியுள்ளார்கள்… தீமை செய்பவர்களைத் தாக்குவதற்கு அல்ல…!

நாம் மிகத் திறமைசாலியாக இருந்தாலும் அறியாமல் வந்து தாக்கும் தீமைகளிலிருந்து விடுபட நமக்கு ஒரு பயிற்சி வேண்டும்

உடலும் உடையும் சுத்தமாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றோம்… ஆன்மாவைச் சுத்தப்படுத்துகின்றோமா…?

அறியாைல் வரும் துன்பங்கமையும் தீமைகமையும் பிரிக்கக்கூடிய பயிற்சி

பிறருடைய கஷ்டத்தைக் கேட்டால் “ஆத்ம சுத்தி செய்வதை மறந்து” விட்டுவிடுகின்றோம்

சாந்தம் கொண்டு செயல்படுவதன் ஆற்றல்களைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்

பிறர் சொல் நம்மை இயக்காதபடி தடுக்கும் ஒரு பயிற்சி 

புருவ மத்தியில் நிலை நிறுத்த வேண்டியது எதை…?

நம் ஆன்மாவைச் சுத்தம் செய்யும் “ஆத்ம சுத்தி” – செயல் முறை 

நான் (ஞானகுரு) கொடுப்பதை நீங்கள் எண்ணி எடுத்தால் தான் அந்தச் சக்தி உங்களுக்குள் வளரும் 

செவி வழி கேட்டு… கண் வழி கவர்ந்து… உயிர் வழி மகரிஷிகளின் உணர்வைச் சுவாசித்தால் தான்… இன்றைய உலக விஷத் தன்மையிலிருந்து தப்ப முடியும்

அதர்மத்திற்குத் துணையாகப் போனால் அதனின் பின் விளைவுகள் எப்படி இருக்கும்…? என்று தெரிந்து கொள்ளுங்கள்…!

Image

Soul Alive

அதர்மத்திற்குத் துணையாகப் போனால் அதனின் பின் விளைவுகள் எப்படி இருக்கும்…? என்று தெரிந்து கொள்ளுங்கள்…!

 

சட்டம் படித்தவர்கள் தங்களுக்குள் உயர்ந்த பண்புகளை வளர்த்திட வேண்டும் என்ற நிலை இல்லாதபடி தீமைகளுக்குத் துணை போகின்றார்கள்.

“படித்துக் கொண்டேன்…!” என்ற நிலைகள் இருந்தாலும் தர்மத்திற்காக வாதிடவில்லை. அதர்மத்திற்காக வாதிடுகின்றார்கள். இது போன்ற நிலைகளில் எந்த அதர்மத்திற்காக வாதிடுகின்றோமோ
1.நியாயத்தை அழித்து வாதிடும் உணர்வுகளை நாம் சுவாசித்தால்
2.அந்தத் தீமையின் விளைவாக சாபமிடுவோரின் உணர்வுகள் நம்மைச் சாடும்.
3.தீமை செய்வோனை நியாயப்படுத்தியும்
4.தீமை செய்யாதவனை தர்மமற்றவன் என்று காட்டப்படும் பொழுது
5.அதிலே பாதிப்படுவோரின் ஆன்மாக்கள் (அவர்கள் இறந்தபின்) உடலுக்குள் வரத்தான் செய்யும்.

இந்தப் பாவி தான்… எனக்குத் துரோகம் செய்தான்…! இவனால் தான் நான் எல்லாமே அநியாயமானது…! என்ற எண்ணங்கள் கொண்டு குறி வைக்கின்றது கூர்மையாக…! வாதிட்டவரின் உருவைத் தன் உடலுக்குள் எடுத்து வளர்த்துக் கொண்ட பின் அவர்கள் மடிந்த பின்
1.வாதிட்டவர் எவ்வளவு பெரிய தைரியசாலியாக இருந்தாலும் சரி
2.அவருக்குள் புகுந்து அவரையும் துன்பத்திற்குள்ளாக்கும்.
3.தான் அனுபவித்த அதே வேதனையை அங்கே உருவாக்கி அந்த உடலையும் நிச்சயம் வீழ்த்தும்.

இப்படி அவனால் வேதனைப்பட்ட வேதனை அணுக்கள் வளர்ந்து இந்த உடலை விட்டு வெளி வந்த பின் இது பாம்பாகவும் தேளாகவும் தான் பிறக்கும்.

இன்று அதர்மத்திற்காக வாதிடலாம். பொருளும் சம்பாரிக்கலாம். புகழும் அடையலாம். ஆனால் சாப அலைகளின் பின் விளைவால் மறு பிறவியின் தன்மை விஷ ஜெந்துக்களாகத்தான் அமையும். இது எல்லாம் இயற்கையின் சில நியதிகள்..!

வக்கீலுக்குப் படித்த காந்திஜி இதைத் தெளிவாக உணர்ந்து கொண்டவர்.
1.ஒவ்வொருவரும் உயர வேண்டும் என்று நீ எண்ணு
2.உனக்குள் அந்த உயர்வின் தன்மை வரும்.

குடும்பத்தில் குறைகள் வந்தால் குறையை நீக்கும் மெய் ஞானிகளின் உணர்வை அந்த மகரிஷிகளின் உணர்வை நீ சுவாசி…
1.உனக்குள் ஞானங்கள் தோன்றும்.
2.பாசத்தின் நிலைகள் வளரும்.
3.உனக்குள் பண்பை வளர்க்கச் செய்யும்.
4.பகைமையை அகற்றச் செய்யும்…! என்ற பேருண்மையினுடைய நிலைகளைத் தெளிவாக்கினார் நம் காலத்தில் வாழ்ந்த காந்திஜி.

அவர் அரசியல்வாதி அல்ல. அவர் ஒரு அருள் ஞானி. உலக மக்கள் அனைவரும் ஒன்றே…! என்ற நிலையைப் பறை சாற்றியவர்.

இதை எல்லாம் நீங்கள் தெளிவாகத் தெரிந்து இந்த வாழ்க்கையில் அருள் உணர்வுகளை வளர்க்கக் கற்றுக் கொள்ளுங்கள். அருள் வாழ்க்கை வாழுங்கள். அருளானந்தம் பெறுங்கள். அதுவே அழியாத செல்வம்.

உடலுக்குப் பின் பிறவியில்லா நிலை அடைந்து அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் அழியாத நிலைகள் கொண்டு மகிழ்ந்து வாழுங்கள்.

தூசி வராமல் இருக்கக் கதவை அடைப்பது போல் தீமைகள் நமக்குள் புகாதிருக்கப் புருவ மத்தியில் அடைத்துப் பழக வேண்டும்…!

Image

Vali vadam - sukreevan

தூசி வராமல் இருக்கக் கதவை அடைப்பது போல் தீமைகள் நமக்குள் புகாதிருக்கப் புருவ மத்தியில் அடைத்துப் பழக வேண்டும்…!

 

1.அகஸ்தியன் துருவனாகி தன் பதினாறாவது வயதில் திருமணமான பின்
2.கணவனும் மனைவியும் வசிஷ்டரும் அருந்ததி போன்று வாழ்ந்து
3.நளாயினி போன்று ஒருவரையொருவர் மதித்து நடந்து
4.சாவித்திரி போன்று இரு உயிரும் ஒன்றி இரு உணர்வும் ஒன்றி
5.இல்லற வாழ்க்கையில் இருளை அகற்றி நஞ்சினை வென்று
6.பேரருள் பெற்று பேரொளியாகித் துருவ நட்சத்திரமாக இன்றும் பூமியின் வடதிசையில்
7.விண்ணிலே ஒளியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
8.அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று இதை வரிசைப்படுத்தி
9.நம் உடலிள்ள பல கோடி உணர்வுகளுக்கெல்லாம் ரெகார்டு (RECORD) செய்ய வேண்டும். அதாவது பதிவாக்கிக் கொள்ள வேண்டும்.

உதாரணமாக ஒரு இயந்திரத்தை உருவாக்குகின்றோம் என்றால் அதிலிருக்கும் ஒவ்வொரு பொருளையும் வரிசைப்படுத்தி இணைத்து மாட்டினால் தான் அந்த இயந்திரமே சீராக இயங்கும். மற்றதையும் இயக்கும்.

வரிசைப்படுத்தி மாட்டாமல் முன்னால் போடுவதை பின்னாடியும் பின்னால் போடுவதை முன்னாடி போட்டால் இடைஞ்சல் ஆகும் அல்லவா…! ஒன்றுடன் ஒன்றைப் பொருத்தி அதை இயக்க முடியாது.

அதைப் போலத்தான் வரிசைப்படுத்தி நாம் அந்த மெய் உணர்வின் தன்மையை நுகரச் செய்து அந்த உயர்ந்த சக்திகளை ஒவ்வொரு மனிதனும் பெறும் மார்க்கத்தை அன்று காட்டினார்கள். வாழ்க்கையில் அறியாது வரும் துன்பங்களிலிருந்து விடுபட வழி காட்டினார்கள் ஞானிகள்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடலில் படர வேண்டும். எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் பெற வேண்டும் ஈஸ்வரா என்று உயிரை வேண்டித் தன் உடலுக்குள் கண்ணின் நினைவைச் செலுத்த வேண்டும்.

ஏனென்றால் காலையில் இருந்து இரவு வரையிலும் பிறருடைய கஷ்டங்களையும் துயரங்களையும் எத்தனையோ கேட்டுணர்ந்துள்ளோம். அந்த உணர்வின் தன்மை நமக்குள் பதிவாகி உள்ளது.

அதை இழுக்காதபடி நம் உடலுக்குள் உட்புகாதபடி தடுக்க ஈஸ்வரா என்று கண்ணின் நினைவைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி அதனின்று வரும் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் ஈஸ்வரா என்று எண்ணி
1.இங்கே புருவ மத்திக்குக் கொண்டு வந்து
2.அந்தக் கதவை அடைத்தல் வேண்டும்.

புருவ மத்தியில் துருவ நட்சத்திரத்தின் உணர்வு கொண்டு அடைத்து விட்டு அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் ஜீவான்மா பெற வேண்டும் என்று கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தி
1.எங்கள் இரத்த நாளங்களிலே கலக்க வேண்டும்
2.எங்கள் உடல் முழுவதற்கும் அந்தத் நட்சத்திரத்தின் பேரருள் பெற வேண்டும் என்று சொல்லி
3.இப்படி அடைத்தவுடனே உள்ளுக்குள் வலுவாகிவிடும்.

உடலுக்குள் வலுவான பின் என்ன செய்யும்…?

கஷ்டப்பட்டதையோ துயரப்பட்டதையோ வேதனைப்பட்டதையோ இழுக்கக்கூடிய சக்தி இல்லை என்றால்
1.எதிலும் பிடிப்பு இல்லாத அந்தத் துன்பமான உணர்வின் அலைகளை
2.சூரியன் கவர்ந்து எடுத்துக் கொண்டு போய்விடும்.
3.நம் உடல்… நம் எண்ணங்கள்… நம் ஆன்மா… அனைத்தும் தூய்மையாகும்.

காற்றடிக்கும் பொழுது தூசி வீட்டுக்குள் வராமல் எப்படிக் கதவை அடைக்கின்றோமோ… அதைப் போல தீமைகள் நமக்குள் புகாதபடி நாம் புருவ மத்தியில் அடைத்துப் பழக வேண்டும்…! அவ்வளவு தான்…!