பகையை அகற்றி ஒற்றுமை உணர்வுடன் மகிழ்ச்சியாக வாழும் வழி முறை…!

mahatma-gandhi

பகையை அகற்றி ஒற்றுமை உணர்வுடன் மகிழ்ச்சியாக வாழும் வழி முறை…!

 

மக்களைக் காக்க வேண்டும் என்று மகாத்மா காந்திஜி எண்ணினார். உயர்ந்த பண்பான எண்ணங்கள் கொண்டு பகைமையற்ற உணர்வைத் தனக்குள் எடுத்து அவரின் ஆன்மா பிரிந்து சென்றாலும்
1.அதற்கு இருப்பிடம் தெரியாது போய்விட்டது.
2.இந்த உடலை விட்டுச் சென்ற பின் அவர் எல்லை எது…? என்ற நிலைகள் இல்லாது போய்விட்டது.
3.ஆகவே காந்திஜியின் உயிரான்மாவை நீ விண்ணுக்குச் செலுத்த வேண்டும்…! என்று குருநாதர் சொன்னார்.

நான் அவ்வளவு பெரிய சக்தியைக் கொடுத்து இருக்கிறேன். காந்திஜி மன உறுதி கொண்டு செயல்பட்டது போல உன் வாழ்க்கையில் இந்த அருள் சக்தியை நீ செயல்படுத்துவாயாக…! என்று மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்குக் காட்டினார்.

(ஏனென்றால் எனது (ஞானகுரு) குடும்பமும் அன்று அரசியலில் தான் இருந்தது. அதைப் போல அன்றிருந்த பெரும் பகுதியானவர்கள் எல்லாம் தேசிய அளைவில் அரசியலில் தொடர்புடையவர்கள் தான்.)

குருநாதர் அந்த உண்மையை எடுத்துக் காட்டி மக்களை நல்வழிபடுத்திய அந்த உயிரான்மாவை நீ எப்படி விண் செலுத்த வேண்டும் என்று அவர் சொன்ன முறைப்படி விண் செலுத்தி சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்தேன்.

இதை எதறாகச் சொல்கிறோம் என்றால் நம் உடலுக்குள் பல பகைமை உணர்வுகள் உண்டு. நம்மை அறியாமலே பகைமை உணர்வுகளைத் தூண்டிக் கொண்டிருக்கும் அந்தப் பகைமை உணர்வுகள் செயலற்றதாக மாற்ற வேண்டும் என்றால் காந்திஜியின் நினைவு கொண்டு நம் எண்ணத்தால் வலு கொண்டு செயல்படுத்தும் நிலைகளை நுகர்தல் வேண்டும்.

நமக்குள் பகைமையற்ற உணர்வுகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்கே இதை உபதேசிக்கின்றேன்.

கொடுமையான செயல்களையும் தவறு செய்வோரின் உணர்வுகளையும் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டு இருந்தால் அதை நுகர்ந்தறிந்த பின்
1.ஒரு பத்து நாளைக்குத் தொடர்ந்து கேட்டால் போதும்
2.அந்தத் தவறு செய்யும் உணர்வுகள் நம் உடலுக்குள்ளும் விளையும்.
3.நம்மைத் தவறுள்ளோர்களாக மாற்றி விடுகின்றது.

இதைப் போன்ற நிலைகளில் இருந்து மனிதன் விடுபட வேண்டும். மகான் என்ற நிலைகள் அன்று வாழ்ந்த காந்திஜியை நினைவு கொண்டு அவர் பெற்ற அரு:ள் ஞானத்தை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

1.தீமைகள் செய்யும் எண்ணங்களை நமக்குள் உருவாக்காதபடி
2.தீமை இல்லாத உடலாக நமக்குள் உருவாக்கி
3.தீமையற்ற உலகம் உருவாக வேண்டும் என்றும்
4.தீமையற்ற நாடு உருவாக வேண்டும் என்றும்
5.தீமையற்ற மக்கள் உருவாக வேண்டும் என்றும்
6.காந்திஜி வழியில் அவருக்குள் பிறக்கச் செய்த அருள் ஞானத்தின் நிலைகளை
7.நமக்குள் அருள் ஞானத்தின் சகதியாக உருவாக்குதல் வேண்டும்.

நமது குருநாதர் காட்டிய வழியில் அவர் பெற்ற அருள் சக்தியைப் பெற வேண்டும் என்பதற்கே இதை நினைவு கூறுகின்றோம்.

Leave a Reply