ஞானிகள் சொன்ன சிரச்சேதமும்… அரசர்கள் செய்த சிரச்சேதமும்…!

Image

Punhment by rishis

ஞானிகள் சொன்ன சிரச்சேதமும்… அரசர்கள் செய்த சிரச்சேதமும்…!

1.மனிதனுக்குள் பண்பற்ற நிலைகள் செயல்படுவதை நிறுத்திவிட்டுப் பண்புடன் இயக்கப்பட வேண்டும்.
2,சகோதர உணர்வுகள் உருபெற வேண்டும்.
3.ஒருவருக்கு ஒருவர் இரக்கமான செயல்கள் கொண்டு வர வேண்டும்
4.மனிதன் என்ற பண்பில் இயங்க வேண்டும் என்று தான் மதங்கள் அனைத்துமே கூறுகின்றது. எதிலும் குறை இல்லை.
5.ஆனாலும் அன்று மகான்கள் கூறிய இந்தத் தத்துவங்களை அரசர்கள் தனித்தன்மை வாய்ந்ததாகக் கொண்டு சென்றார்கள்.

மகான்கள் ஒவ்வொரு நாட்டிலும் தோன்றி இருந்தார்கள். அந்த மகான்கள் காட்டிய நிலைகளை அரசர்கள் தன் மதம் என்ற நிலைகளில் உருவாக்கிக் கொண்டார்கள்.

அதே சமயத்தில் அந்த மகான்கள் செய்ததைக் (சொன்ன தத்துவங்கள்) காக்கப்பட வேண்டும் என்பதற்காக அதைத் தவறுவோர் எவரோ அவர்களுக்குக் “கடும் சிரச்சேதம்…! என்று உலக மதங்கள் எல்லாமே கூறுகின்றது.

“சிரச்சேதம்…” என்ற ஒரு தண்டனையை அன்று ஆண்ட அரசர்கள் பிறருக்குக் கொடுத்தார்கள் ஏன்…? ஞானிகள் சொன்ன சிரச்சேதம் எது…?

மனித வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் அறியாது வரும் தீமையை விளைவிக்கும் உணர்வுகளைத் தடுப்பதற்காக
2.மகான்கள் காட்டிய அறநெறியின் உணர்வை நமக்குள் உட்புகுத்தி
3.அந்தத் தீமைகளைச் செயலற்றதாக மாற்றுதல் வேண்டும்.
4.அந்தத் தீமைகள் நம்மை இயக்காது தடுத்தல் வேண்டும் என்று தான் சொன்னார்கள்.
5.இது தான் அந்த மகான்கள் கூறிய உண்மை நிலைகள். (அதாவது தீமையான உணர்வுகளுக்குள் மகானின் நல்ல உணர்வுகளைப் பாய்ச்சி அதைச் செயலற்றதாக – சிரச்சேதம் செய்யச் சொன்னார்கள்)

ஆனால் அவர்கள் சொன்னதை அரசர்கள் தனக்குள் பிடிவாதமாக வைத்துக் கொண்டு மகான்களின் செயலை மாற்றித் தன்னைச் சுகபோகவாசியாக அமைத்துக் கொள்ள அரசர்கள் பெரும் பிழைகளைச் செய்து விட்டார்கள்.
1..மக்களை நல்ல வழியில் வழி நடத்தும் அந்த ஞானத்தை அவர்கள் காக்கும் வழி அற்று
2.மற்றதைப் பழி தீர்க்கும் உணர்வாகக் கொண்டு சென்று அதைச் செயலாக்கினார்கள்.

மாற்று மதங்கள் (மதத்தினர்) வந்தால் அவர்கள் கடவுள் வேறு… நமது கடவுள் வேறு…! என்று இப்படித் திரிபு பண்ணி விட்டார்கள். சரித்திரத்தைப் பார்த்தாலே உங்களுக்குத் தெரியும்
1.மதத்தின் அடிப்படை வைத்துத் தான்
2.உலகப் போர்கள் அனைத்தும் நடந்து உள்ளது.

மதத்தை ஆதாரமாக வைத்துக் கொண்டு இந்த (எங்கள்) மதத்தில் நல்ல ஒழுக்கங்கள் உண்டு. இந்தக் கடவுள் எங்களுக்குச் சரியான உத்தரவு கொடுத்துள்ளார். அதன் வழிகளில் தான் நாங்கள் நடக்கின்றோம் என்று சொல்வார்கள்.

இப்படிச் சொல்லி அடுத்த நாட்டின் மக்களை எல்லாம் போர் முறையில் அடிமையாக்கிக் கொண்டு தன்னுடன் இணைந்து செயல்படுவதற்காக அந்தத் தத்துவத்தை அங்கே புகுத்துகின்றார்கள்.

இன்றைய உலகம் அந்த அரசர்கள் முன் மொழிந்த தத்துவத்தில் தான் அடிமைப்பட்டுக் கொண்டுள்ளது. ஞானிகள் சொன்ன தத்துவப்படி நல்ல பண்புகளை வளர்க்காதபடி மற்றவரை அடிமைப்படுத்தும் நிலையாகவே சென்று கொண்டுள்ளது.

இதிலிருந்தெல்லாம் விடுபட வேண்டுமா இல்லையா…? மகான்கள் காட்டிய வழியில் தெய்வீகப் பண்புகளை வளர்க்க வேண்டுமா… இல்லையா… என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்.

கெட்ட கனவு வந்தால் பலிக்குமா…? நல்ல கனவு ஏன் பெரும்பகுதி வருவதில்லை…?

Image

Astral divine powers

கெட்ட கனவு வந்தால் பலிக்குமா…? நல்ல கனவு ஏன் பெரும்பகுதி வருவதில்லை…?

கேள்வி:-
எதிர்மறையான செயல்கள் முன்னாடியே கனவாக வருகிறது. பின் நாளில் நிஜமாக நடக்கும் காரியத்தின் முடிவு (result) முன்னாடியே (நான் விரும்பாத செயல்கள்) கனவாக வருகிறது,

ஆனால் நான் விரும்பும் நேர்மறையான செயல்கள் பற்றிக் கனவு வராதது ஏன் எனத் தெரியவில்லை…? தீர்வு கொடுங்கள் ஐயா…

பதில்:-
எந்த ஒரு பொருளும் ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுதுதான் இயக்கச் சக்தியே கூடுகின்றது. இது இயற்கையின் நியதி. ஆண்டவனின் சக்தி என்று சொல்லப்படுவதே இது தான்.
1.அந்த மோதல் இல்லை என்றால் எதுவும் இயங்காது.
2.எல்லாமே சூனியமாகிவிடும்.

நம் வாழ்க்கையில் “நமக்குப் பிடிக்காதது…!” என்று ஒன்று வருகிறது என்றால் அது நம்முடன் இணையாது நம்மை அதனின் இயக்கத்திற்குச் சாதகமாக்கும் நிலைக்கு “இழுக்கிறது” என்று தான் அர்த்தம்.

அந்த இழு விசை இருக்கும் பொழுது நமக்குள் இருக்கும் எல்லாக் குணத்திலேயும் அந்த “அதிர்வு அலைகள்” இயக்கும்.
1.அந்தக் கெட்டது நம்மை ஒன்றும் செய்யாது.
2.என்னை ஒன்றும் செய்ய முடியாது
3.வருவதை இப்படி நாம் மாற்றி நல்லதாக்கி விடலாம் என்ற எண்ணத்தை நாம் எடுத்து விட்டால் அது உயர் ஞானமாகின்றது
4.அதாவது பிடிக்காததை விட்டு விட்டால் (பற்றாதபடி – SKIP) எதிர் மறை – “நேர்மறையாகிறது..!”

ஆனால் பிடிக்காததை… நான் பார்த்துக் கொண்டு சும்மா எல்லாம் இருக்க முடியாது… நான் எதாவது செய்ய வேண்டும்…! என்று எதிர்த்துப் போய் எதையாவது செய்தாலும் அல்லது பயந்து போய் எதையாவது செய்தாலும் போர் முறை வரும். அதாவது இயக்கம் அதிகமாகும்.

இயக்கம் அதிகமானால் அது ஜீவன் பெற்றுவிடும். மண்ணுக்குள் மறைந்த வித்து கண்ணுக்குத் தெரிவதில்லை. ஆனால் அதற்குண்டான சத்து கிடைத்துவிட்டால் மண்ணைப் பிளந்து வெளியே வந்து விடும்.

அது போல் பிடிக்காதது…! தீமை…! கெட்டது…! என்று எண்ணி அதனுடனேயே மோதி…மோதி… நம் இயக்கங்கள் ஆகப்படும் பொழுது நம் உயிரிலே அது அதிகமாகப் படும். நம் ஆன்மாவிலும் அதிகமாக அந்த அலைகள் சுழலும்.

எது நமக்கு முன்னாடி அதிகம் வருகின்றதோ அதைத்தான் சுவாசிக்க முடியும். சுவாசிக்க… சுவாசிக்க… நாம் அதுவாக ஆகிக் கொண்டேயிருப்போம். “தப்ப முடியாது…!”

அது மீண்டும் மீண்டும் எதிர்மறையாகி உயிரிலே படுவதனால் தான் இரவிலே தூங்கும் பொழுதும் தீமையான கனவாகத் தெரிகிறது.
1.ஆனால் அது உண்மை அல்ல.
2.பின்னாடி நடக்கும் சம்பவமும் அல்ல.
3.பின்னாடி நடப்பதை எல்லாம் யாரும் கனவாகக் காண முடியாது.

ஆனால் நீங்கள் கனவைக் கண்டதும் என்ன நினைப்பீர்கள்…? நாம் நினைப்பது போல் தான் கெட்டதாகிவிடுகிறது. கெட்டது நடக்கப் போவதால் தான் இப்படி வந்திருக்கின்றது. ஆகவே நம்மால் ஒன்றும் செய்ய முடியாது என்று அந்தக் கெட்டதுக்கு இணங்கிவிடுகின்றீர்கள். அந்த முடிவுக்கு வந்துவிடுகின்றீர்கள்.

அதாவது கெட்டதை உங்களுக்குள் சிருஷ்டிக்க உயிருக்கு ஆணையிடுகின்றீர்கள் என்று தான் அர்த்தம். இது தான் உள் உணர்வு என்பது. நம்முடைய உள் உணர்வுகள் என்றுமே தூய்மையாக வலுவானதாக இருக்க வேண்டும்.

அதற்குத்தான் ஆத்ம சுத்தியே செய்யச் சொல்கிறார் ஞானகுரு அவர்கள். இரவு படுக்கும் பொழுதும் காலையில் எழும் பொழுதும் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா… மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முடுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா… மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பார்க்கும் அனைவரும் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று இப்படி ஒரு பத்து நிமிடமாவது ஆத்ம சுத்தி செய்தால் “உள் உணர்வு…!” என்று சொல்வது பரிசுத்தமாகிவிடும்.

ஆனால் அதைத் தூய்மைப்படுத்தாமல் செம்மையாகக் கையாளாமல் விட்டு விட்டால்
1.வெளியிலிருந்து வரும் எல்லாமே
2.நம் உடலையும் நம் மனதையும் நம் ஆன்மாவையும் நம்மையும் இயக்கி
3.அதுவாகவே நம்மை மாற்ற ஆரம்பிக்கும்.

முதலில் சரியாகத் தெரியாது. ஆனால் நாம் ஒன்றும் இல்லை… ஒன்றும் இல்லை.. அப்படி எல்லாம் நடக்காது…! என்றே நினைப்போம். ஆனால் கடைசியில் (நீங்கள் கேள்வி கேட்ட மாதிரி) அந்தக் கெட்டது நடக்க வேண்டும் என்ற விதி இருப்பதனால் தான் எனக்குக் கனவாக வந்தது.

நாம் தான் அதைச் சரியாகக் கவனிக்கவில்லை என்று அந்தக் கெட்டதைச் சாதகப்படுத்திக் கொள்வீர்கள். பற்றாக்குறைக்கு மற்றவர்களிடம் சொன்னாலோ கேட்டாலோ அவர்கள் உன் நேரம் காலம் எப்படி என்று பார்… அங்கே போ… இங்கே போ…! என்று இன்னும் கொஞ்சம் ஆகாததைச் சொல்லும் பொழுது எதையும் நாம் தெளிவாக வலுவாக இயக்கும் நிலை இல்லாது போய்விடும்.

கீதையில் சொன்னது நீ எதை நினைக்கின்றாயோ நீ அதுவாகின்றாய்.
1.நீங்கள் நல்லது தான் எனக்கு நடக்கும் என்றும்
2.நல்லது தான் எனக்கு வேண்டும் என்றும்
3.எது நடந்தாலும் அதை நல்லதாக்குவேன் என்றும்
4.கெட்டது என்பதே நல்லதை எனக்குள் வலுப்படுத்துவதற்காகத்தான் வருகிறது
5.கெட்டது என்பது எதுவுமே இல்லை…! என்று இப்படி உங்கள் உயிருக்குள் கட்டளை இட்டீர்கள் என்றால்
6.எதிர்மறை எப்படிக் கனவாக வந்ததோ அதுபோல் நேர்மறை உங்கள் கனவாக வரும்
7.அதன்படி நீங்கள் செய்தால் உங்கள் வாழ்க்கையில் எல்லாமே நல்லதாகும்.
8.கெட்டது என்ற வார்த்தையே இல்லாமல் ஆக்கிவிடலாம்.

இது தான் என்னுடைய அனுபவம்…!

ஆண்டவனைக் காண்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது…!

Image

Where is God

ஆண்டவனைக் காண்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது…!

கோவில் என்ற புண்ணிய ஸ்தலத்தை அரசனும் சென்று வணங்கினான்… ஆண்டியும் சென்று வணங்கினான்.

கோவில் என்னும் இடத்தைப் புனிதமாக்கி அந்த நிலை கொண்டு மனிதர்களின் எண்ணமெல்லாம் ஒரே பக்தி நிலையாக… ஆண்டவன் என்ற அவ்வாண்டவனைத் துதிப்பதற்கு… ஒரே நிலை கொண்டு செல்வதற்காக… அன்று சித்தர்களால் மனிதர்கள் நிலைக்கெல்லாம் புரிவதற்காக அமைத்து வைத்த புண்ணிய ஸ்தலங்கள்தான் பல கோவில்களும்.

கோவில் என்னும் இடத்திற்குச் செல்ல செல்வந்தன்… செல்வமில்லாதவன்…! என்ற பாகுபாடெல்லாம் இல்லாமல் எல்லோரும் ஒரே பக்தி நிலை கொண்டு வணங்குவதற்காகத்தான் பல சித்தர்கள் அக்கோவிலில் உருவ வழிபாட்டினை அமைத்து வைத்தார்கள்.

1.நமக்கு மேல் ஒருவன் உள்ளான்…
2.அவன் நம்மைப் பார்த்துக் கொள்வான்… என்று பல நிலைகளை மக்களுக்கு உணர்த்துவதற்காக
3.தன் நிலையில் பெரும் தவமிருந்து அச்சக்தியில் இருந்து சகல அருளையும் தான் பெற்று
4.அக்கோவில் உள்ள இடத்தில் தானே கோவில் கொண்டு… வரும் பக்தர்களின் எண்ணத்தையெல்லாம் தன் நிலையில் ஈர்த்து
5.அவரவர்கள் வேண்டும் நிலைக்கு உகந்த செயல்களை எல்லாம் செய்வது
6.அச்சகல அருள் பெற்ற மகரிஷிகளும் சப்த ரிஷிகளும் ஞான ரிஷிகளும் தாம்.

இந்த உலகில் தோன்றிய மகரிஷிகளும் ஞானிகளும் அவரவர்கள் கோவில் கொண்ட இடத்திலேயே இன்றும் சூட்சம நிலைகளில் செயல்படும் செயல்களினால் தான்
1.மக்களின் மனதில் ஒரு ஒற்றுமை நிலையும்
2.தவறுக்குப் பயப்படும் நிலையும் (இன்றளவும்) இருந்து வருகின்றது.

அக்கோவில் இல்லாத நிலையும் ஆண்டவன் இல்லாத நிலையும் இருந்திருந்தால் இன்றுள்ளளவும் பக்தியும் நியாயமும் இருப்பதற்கு வழியில்லாமல்தான் நாம் எல்லாம் இருந்திருப்போம்.

நாம் செய்த பாக்கியம்… அன்று தோன்றிய
1.நம்முடனே கலந்துள்ள
2.நம்மையெல்லாம் காக்கும் தெய்வங்களாக
3.இன்றும் தெய்வத்தின் தெய்வமாக நம் மகரிஷிகள் தான் கலந்துள்ளனர்.

நம்மில் நாமே ஆண்டவனாக உள்ள பொழுது நமக்கு உயர்ந்தவர்… நமக்குத் தாழ்ந்தவர்…! என்ற பாகுபாடு ஏற்படுத்தி ஏன் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் நீங்கள் கொள்ளலாம்.

உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்பதெல்லாம் பொருளினாலேயோ ஜாதி மத இன வேறுபாட்டினாலேயோ வருவதில்லை.

நமக்கு மேல் உயர்ந்த எண்ணம் கொண்டு அவ் ஈஸ்வரன் சக்தியைப் பெற்று சகல நிலைக்கும் நம்முள் கலந்துள்ள
1.நாம் எண்ணும் நிலைக்கெல்லாம் நம்முள் வந்து நமக்கு அருள் புரியும்
2.உயர்ந்த ஞானம் பெற்ற அத்தேவர்களை வணங்குவது தான்
3.நம் உயிராத்மாவிற்கு நாம் சாந்தி பெறும் நிலையாக இன்றுள்ளது.

ஆண்டவனின் ரூபத்தையும் ஆண்டவனின் நிலையையும் அறிந்து சொல்லவோ உருவம் பார்த்து உணர்ந்து சொல்லவோ யாராலும் முடிந்திடாது.

“யாராலும்……..!” என்பது ஆண்டவன் என்பவன் எங்கிருக்கின்றான்..? அச்சக்தியின் ரூபம் என்ன…? அந்தச் சிவனின் ரூபம் என்ன…? என்று கண்டறிய ஆண்டவன் என்னும் ரூபம் கொண்டு நாம் வணங்கிடும் நமக்கு ரூபமளித்து இன்று பல நிலைகளை நமக்கு உணர்த்தி நம்முள் எல்லாம் கலந்து சூட்சும நிலைகொண்டு வாழும்
1.பல பெரியோர்களைக் கேட்டாலும்
2.எந்த ரிஷித்தன்மை பெற்றவர்களாலும்
3.எந்த ஞான நிலை பெற்றவரினாலும் ஆண்டவனின் ரூபத்தைக் கண்டறிய முடியாது,
4.சகலத்திலும் கலந்துள்ள அவ்வாண்டவன் என்பவனை அறிந்து காண அவ்வாண்டவனால்தான் முடிந்திடும்.

சக்தியின் அருள் பெற்று இஜ் ஜீவ உடலுடன் வாழ்ந்திடும் எல்லோருமே தன் நிலையில் அவரவர்கள் ஏற்கும் நிலை கொண்டு அவரவர்களும் தன் நிலையை உயர்த்திக் கொள்ள… உணர்ந்து கொள்ள… இவ்வாத்மாவை அழியா நிலை கொண்டு சித்தர்கள் ஞானிகள் மகரிஷிகள் பெற்ற நிலையைத் தான் பெற முடியுமே தவிர…
1.ஆண்டவனின் ரூபத்தையோ ஆண்டவனின் சொல்லையோ பார்த்தறிந்தவர் யார் உள்ளார்…?
2.ஆண்டவர் என்பவருக்கு ரூபமே இல்லை.
3.இல்லை என்று சொல்லுவதற்கும் நம் சக்தியில் பொருளில்லை.

நம் எண்ணம் கொண்டுதான் நம் சுவாச நிலையின் அருளால் நாம் உயர்ந்து வாழ்ந்திட முடியும். நம் எண்ணத்திற்குத் தகுந்த சக்தியை ஈர்த்து எடுக்கத்தான் இந்த உபதேசத்தின் நிலைகளும் தியானங்களும்.

எண்ணும் எண்ணத்திற்கு உகந்த நிலையில் உள்ளவன் அவ்வாண்டவன்.
1.அச்சக்தி நிலையை ஈர்த்து நல்வாழ்க்கை வாழ்ந்திடுங்கள்…!
2.சகல அருளையும் பெற்றிடலாம்…!

 

தீமைகளைச் சுட்டுப் பொசுக்கும் சக்தியை நம் கண்ணுக்கு முன்னாடியே காட்டுகின்றார்கள் ஞானிகள்…!

Image

akni mariyamman

தீமைகளைச் சுட்டுப் பொசுக்கும் சக்தியை நம் கண்ணுக்கு முன்னாடியே காட்டுகின்றார்கள் ஞானிகள்…!

 

ஓர் நண்பன் தனக்குத் தீங்கு செய்து விட்டால் அதை எண்ணி ஆழமாகப் பதிவு செய்து கொள்கிறோம். பாவி எனக்குத் தீங்கு செய்தானே…! அவன் உருப்படுவானா…? என்று கோபத்தின் எல்லை கடந்து வேதனையின் உணர்ச்சி பொங்க நாம் பேசுவோம்.

இவ்வாறு அந்தத் தீங்கு செய்பவனை எண்ணி அது உடலுக்குள் விளைந்து “அவன் தீங்கு செய்தான்…!” என்று நமக்குள் பதிவு செய்தாலும் யாரை எண்ணுகின்றோமோ அவனுக்குள்ளும் இந்தப் பதிவு உண்டு.

சாபம் இடும் இந்த உணர்வின் அலைகள் அங்கே சென்று அவனுக்குள் புரை ஓடி அவன் நற்குணங்களை எல்லாம் அழித்துவிடும். எப்போது எல்லாம் சாபம் இடுகின்றோமோ
1.பாவி எனக்குத் தொல்லை கொடுக்கிறானே…!” என்ற எண்ணத்தை எண்ணினால்
2.அவன் செயலாக்கங்களுக்கே தடையாகும்.

நண்பர்களுக்குள் ஒருவருக்கு ஒருவர் நன்றாகப் பழகினாலும் மிகவும் தெரிந்தவர்களாக இருந்தாலும் சந்தர்ப்பத்தால் வேதனைப்படும் நிலைகள் ஆகிவிட்டால்
1.சில நேரங்களில் புரை ஓடும்…
2.சாப்பாடு விழுங்கும் போதே விழுங்க முடியாது…!
3.எச்சில் விழுங்கும் போது கூடப் புரை ஓடும்…!
4.இவையெல்லாம் வெறுப்பின் உணர்வுகள் நமக்குள் வரும் போது நம் உறுப்பின் இயக்கங்கள் “தனி…!”

நண்பனாக இருக்கப்படும் போது நட்பின் தன்மை கொண்டு எனக்கு நன்மை செய்தான் என்றால் விக்கல் வருகின்றது. அப்போது தனக்குள் நீரின் தன்மை ஊற்றி அது தணித்து கொள்ளும் போது “மகிழ்ச்சி” என்ற நிலைகளே உருவாகின்றது.

இதெல்லாம் இயற்கையின் உணர்வின் இயக்கங்கள் மற்றோருவருடன் ஒன்றி இயக்கப்படும் இந்த நிலைகளே உருவாகும்.

நமது வாழ்க்கையில் பிறருடன் பழகிய நேரங்களில் தீமையின் உணர்வுகளை நமக்குள் பதியச் செய்யும் போது யாருடைய குணங்களைப் பதிவு செய்தோமோ அது நமக்குள் விளையத் தொடங்கி விடுகின்றது.

அந்தப் பற்றின் தன்மை வரப்படும் போது நமக்குள் தீங்கே விளைகின்றது.
1.பாசத்தாலோ பண்பாலோ அன்பாலேயோ பிறர்படும் துயரங்களைக் கேட்டு உணர்ந்தால்
2.அந்த உணர்வின் தன்மை நமக்குள் புகுந்து அந்த உணர்வின் வித்தாக விளைந்து
3.எந்த உடலில் இருந்து எது வெளிப்படுகின்றதோ அந்த அலைகளைக் கவர்ந்து
4.நமக்குள் நோயாகவே உருவாக்குகின்றது.

அதற்காக நாம் நல்லது செய்யாமல் இருக்க முடியுமா…? பிறருடைய கஷ்டங்களைக் கேட்காமல் இருக்க முடியுமா…?

சூரியன் சுழலும் போது அந்த வேக உணர்வின் தன்மை கொண்டு தன் உணர்வின் ஒளியால் பிரபஞ்சத்திலிருந்து வரும் மற்ற விஷங்களைத் தனக்குள் வருவதற்கு முன்னாடியே மோதி அதனின் நஞ்சைப் பிரித்து விடுகின்றது. பிரபஞ்சத்தையே ஒளியாக்குகின்றது.

இதேபோல மனிதன் தன் உணர்வின் செயலால் தீமை வரும் போது தன் உணர்வின் அலையால் தீங்குகளை அங்கே பிரித்து விட்டுத் தனக்குள் ஒளியின் சுடராக மாறுகின்றான்.
1.சூரியனுடைய செயலைப் போன்றே
2.மனிதன் உயிரின் தன்மை சூரியனாகின்றது.

கோளாகி நட்சத்திரமாகிப் பின் சூரியனாக ஆனது போல இந்த உயிரின் தன்மையும் பல கோடிச் சரீரங்களில் இருந்து எடுத்துக் கொண்ட உணர்வின் துணையால் மனிதனாக வளர்ந்து வந்தபின் ஒளியின் சரீரமாக மாறி அதனின் செயலாக்கங்களாக இன்று துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலங்களாகவும் இருந்து தீமைகளை வெகு தூரத்திலேயே சுட்டுப் பொசுக்குகின்றான்.

மனிதனாக வாழும் பொழுது வாழ்க்கையில் வந்த தீமையை அகற்றிடும் உணர்வுகளைத் தனக்குள் பெற்ற நிலை தான் அந்தத் துருவ நட்சத்திரமும் சப்தரிஷி மண்டலங்களும். அந்த மகரிஷிகள் அனைவருமே தீமையை வென்றவர்கள்.

இத்தகைய நிலையை உணர்த்துவதற்குத்தான் மாரியம்மன் கோயிலில் தீமைகளைச் சுட்டுப் பொசுக்கும் நிலைகளாக அக்னி குண்டமாக நெருப்பைக் காட்டுகின்றார்கள் ஞானிகள்.

எவ்வாறு…?

இங்கே வாழ்க்கையில் நாம் தீமைகளைக் கேட்டுணர்ந்தாலும் அது மாறி (மாரி) நமக்குள் வந்து தீமை செய்வது போல
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாம் பெற்று
2.அந்த மெய் ஞானிகளின் உணர்வுகள் நமக்குள் மாறி (மாரி)
3.அந்தத் தீமைகளைப் பொசுக்கும் சக்தியாக நமக்குள் வர வேண்டும்.

அதற்குத்தான் அங்கே மாரியம்மனுக்கு நெருப்பை வைத்துக் காட்டுவார்கள். சிலையை உற்றுப் பார்த்தால்… பார்க்கலாம் நீங்கள்…! நெருப்பைக் கிரீடமாக வைத்துக் காட்டியிருப்பார்கள்.