குழந்தைகள் தாய் தந்தையருக்குக் கொடுக்க வேண்டிய பேரானந்தப் பெரு மகிழ்ச்சி..!

Image

School children

குழந்தைகள் தாய் தந்தையருக்குக் கொடுக்க வேண்டிய பேரானந்தப் பெரு மகிழ்ச்சி..!

 

தாய் தந்தையர் எத்தனையோ சிரமத்திற்கு மத்தியில் உங்களைப் பள்ளியில் சேர்த்து நல் ஒழுக்கத்தைக் கற்பிக்கும் நிலையையும் எதிர்காலத்தைச் சிந்தித்து செயல்படும் கல்வி அறிவினையும் புகட்டும் நிலையாக அனுப்பி உள்ளார்கள்.

உங்கள் அன்னை தந்தை உங்களுக்கு உடையும் உணவும் கொடுத்துக் கல்விக்கு வேண்டிய வசதியும் செய்து கொடுக்கின்றார்கள்.

ஆகவே பள்ளியிலே படிக்கும் குழந்தைகளாக இருப்போர் நீங்கள் அனைவரும் உங்கள் அன்னை தந்தை கொடுக்கும் வாக்கினை மதித்து நடந்து அவர்களை மகிழச் செய்யும் நிலையாக வளர்ந்து காட்ட வேண்டும்.

1.அந்தத் தாய் தந்தையரை நினைவில் கொண்டு அவர்களை மகிழச் செய்தால்
2.உங்கள் ஊர் மக்களை மகிழ்ந்திடும் நிலையாக உருவாக்குவீர்கள்.
3.உங்கள் ஊர் மகிழ்ந்திடும் நிலைகள் பெற்றால்
4.இந்த உலக மக்களும் மகிழ்ந்திடும் நிலையாக உங்கள் செயல்கள் அமையும்.

தாய் தந்தையரை மகிழ்ந்திடச் செய்ய வேண்டும் என்றால் குழந்தைகளாக இருக்கும் உங்களுக்குள் பகைமை உணர்வை ஊட்டும் தீமையான உணர்வுகள் அனைத்தையும் நீங்கள் அடக்கிட வேண்டும்.

1.தீமைகளை அடக்க வேண்டும் என்றால் உங்கள் தாயின் பேரன்பை நீங்கள் பெற வேண்டும்.
2.தாயின் பேரன்பைப் பெற்றால் மகரிஷிகளின் அரும் பெரும் சக்திகளை நீங்கள் எளிதில் பெற முடியும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற்று உங்கள் வாழ்க்கையில் அறியாது சேர்ந்த தீய உணர்வுகளை அடக்கி மெய் ஞானிகள் காட்டிய அருள் நெறிகளைக் கடைப்பிடித்து
1.உங்கள் அன்னை தந்தையரைப் பேரானந்த நிலை பெறச் செய்யும் நிலையையும்
2.உங்கள் அன்னை தந்தையரைப் பேரின்ப நிலைகள் பெறச் செய்யும் நிலையையும்
3.பள்ளியில் படிக்கும் குழந்தைகள் நீங்கள் செயல்படுத்துதல் வேண்டும்.

உங்கள் அன்னை தந்தை பேரானந்தம் கொண்டு மகிழ்ந்திட்டால் அவர்கள் விடும் நல்ல மூச்சலைகளும் இந்த பூமியில் படர்கின்றது.

நமது தாய் தந்தையருக்கு எவ்வளவு அன்புடன் சேவை செய்கின்றோமோ அவர்கள் எவ்வளவு மகிழ்ச்சி அடைகின்றனரோ
1.அந்த மகிழ்ச்சி அடையும் உணர்வுகளும் நாம் மகிழ்ந்திடச் செய்த உணர்வுகளும் இதே சூரிய பகவானால் கவரப்பட்டு
2.நமது பூமித் தாய்க்கு மகிழ்ந்திடும் உணர்வாகப் பரப்புகின்றது.
3.குழந்தைகளாகிய நீங்கள் அவ்வாறு செய்வீர்கள். இந்த உலகைக் காத்திடும் மெய் ஞானிகளாக வளர்வீர்கள்.
4.நிச்சயம் நீங்கள் செயல்படுத்துவீர்கள் என்ற நம்பிக்கையில் இதைச் சொல்கிறேன் (ஞானகுரு).

ஆகவே உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஊரையும் உலகையும் காத்திடும் அரும் பெரும் சக்தியாக நீங்கள் வளர வேண்டும் என்று எல்லா மகரிஷிகளையும் வேண்டிப் பிரார்த்திக்கிறேன்.

நம்மை வாழச் செய்த பூமிக்கு ஏதாவது சேவை செய்திருக்கின்றோமா…..?!

mother earth day

நம்மை வாழச் செய்த பூமிக்கு ஏதாவது சேவை செய்திருக்கின்றோமா…..?! 

ஓர் விஷக் குண்டைத் தூவினால் தூவிய அந்த நச்சுத் தன்மைகள் பூமிக்குள் பரவப்படும் போது அதைச் சுவாசிப்போர் அனைவரும் மடிகின்றனர்.

அவர்கள் மடிவது மட்டுமல்லாதபடி அந்த விஷத் தன்மை கொண்ட உணர்வுகள் வீசப்படும் போது பூமியில் எல்லாப் பகுதிலும் பரவுகின்றது. மற்றவர்கள் அதை நுகரப்படும் போது அவர்கள் நல்ல சிந்தனைகளை இழக்கச் செய்து ஒருவருக்கு ஒருவர் தாக்கிடும் உணர்வுகளே வளர்ச்சியாகின்றது.

ஆகவே நாம் வாழும் இந்தத் தாய் பூமிக்குச் சேவை செய்வது எவ்வாறு இருக்க வேண்டும்…? என்ற நிலைகளில் சற்று சிந்தித்துப் பாருங்கள்.

மகரிஷிகளின் அருள் சக்திகளை நமக்குள் புகுத்தி நமக்குள் நின்று தீமையை விளைவிக்கும் தீமையான உணர்வுகளை அடக்கி அந்த உலக மக்கள் அனைவரும் நாம் ஒன்றென்ற நிலையில் நாம் வாழ்ந்து காட்டிடல் வேண்டும்.

நாம் பிறந்த தாய் நாட்டைக் காக்க எண்ணுகின்றோம். தாய் நாடாக இருப்பினும் இந்த நாட்டில்தான் நாம் வளர்ந்தோம் என்று இருப்பினும்
1.இந்தப் பூமி தான் நமக்குத் தாய்…!
2.எந்தெந்த நாட்டிலே… ஊரிலே… நாம் பிறந்திருந்தாலும் நமக்குத் தாய் இந்தப் பூமியே…!

நாம் மகிழ்ச்சியூட்டும் நல்ல செயல்களைச் செயல்படுத்தினால் நம்மைப் பெற்றெடுத்த தாய் அதை நுகர்ந்தறியப்படும் போது அந்தத் தாயின் உடலிலும் மகிழ்ச்சி தோன்றுகினறது. அதைப் போன்று தான்
1.நாம் ஒவ்வொருவரும் வெளிப்படுத்தும் மகிழ்ச்சியான மூச்சலைகள் அனைத்தும்
2.நம் தாய் பூமியில் படரப்படும் போது நம் தாய் நாடும் மகிழ்ந்திருக்கும்.
3.நம் பூமித் தாயும் மகிழ்ந்து இருக்கும்.

ஒரு குடும்பத்தில் இருக்கும் பிள்ளைகள் அனைத்தும் ஒருக்கிணைந்து ஒற்றுமையான உணர்வுடன் தாயுடன் நாம் அரவணைத்துச் செல்லும் போது அதைக் காணும் நம் தாய் நம்மை வாழ்த்துகின்றது… வளர்க்கின்து…!

அதைப் போன்று நாம் வாழும் இந்தப் பூமித் தாயுடன் அணுகிய நிலைகள் கொண்டு இதிலே வாழும் மக்கள் நாம் அனைவரும் சகோதரர்கள் என்று எத்தகைய பேதமில்லாது வாழ்ந்திடலே எல்லோருக்கும் நன்மை பயப்பதாக அமையும்.

1.எண்ணில் அடங்காத மக்கள் வாழ்ந்து கொண்டு இருக்கும் இந்தப் பூமியில்
2.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியைக் கடைப்பிடித்து
3.நாம் வெளிப்படுத்தும் மகரிஷிகளின் அருள் உணர்வுகள் இந்தப் பூமி முழுவதும் நறுமணங்களாகப் படர்ந்து
4.நம் எல்லோரையும் மகிழச் செய்யும்.

அனைவரும் சகோதரர்கள் என்று ஒருவருக்கொருவர் மகிழ்ந்து வாழ்ந்திடச் செய்யும் சாம்ராஜ்யமே… “இராம ராஜ்யம்…!”

Image

Rama Rajyam

அனைவரும் சகோதரர்கள் என்று ஒருவருக்கொருவர் மகிழ்ந்து வாழ்ந்திடச் செய்யும் சாம்ராஜ்யமே… “இராம ராஜ்யம்…!”

 

மனிதனுக்குள் கோப குணம் குரோத குணம் சலிப்பு குணம் சஞ்சல குணங்கள் இப்படி எத்தனையோ குணங்கள் இருப்பினும் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் அவன் எடுத்துக் கொண்ட நிலைகளுக்குத் தக்கவாறு அது அது முன்னணியில் இருக்கும்.

1.ஒவ்வொரு மனிதனுக்கும் அப்படிப்பட்ட குணங்கள் முன்னணியில் இருந்தாலும்
2.அதை எல்லாம் தணிக்க சாந்தம் என்ற நிலைகள் கொண்டு அனைத்தையும் சாந்தமாக்கி
3.”சகோதர உணர்வுகள் வளர வேண்டும்…!” என்று அந்த உணர்வின் வேட்கையைக் கூட்டிவர் தான் மகாத்மா காந்திஜி.

இந்த உலக மக்கள் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் அடிமைப்படாது ஒவ்வொரு உயிரையும் கடவுளாக மதித்து அந்த உடலில் உள்ள அந்த நல்ல உணர்வின் தன்மையைச் சகோதர உணர்வுடன் வாழ்ந்திடச் செய்ய வேண்டும் என்பதற்குத் தான் “இராம ராஜ்யம்…!” என்றார் காந்திஜி.

நம் உடலுக்குள் இருக்கும் தீமையை விளைவிக்கும் கோபமோ குரோதமோ சலிப்போ சஞ்சலமோ சங்கடமோ வேதனையோ கோபமோ ஆத்திரமோ இதைப் போன்ற உணர்வுகள் அனைத்தும் நாம் எடுக்கும் உயர்ந்த குணங்கள் எதுவோ அவை அனைத்தும் மகிழ்ந்திடும் செயலாகச் செயல்படுத்தும் போது அந்த மகிழ்ச்சியான உணர்வுகளை எண்ணும் போது நமக்குள் ஒருக்கிணைந்நு நம்மை மகிழ்விக்கச் செய்கின்றது. இதான் இராம ராஜ்யம் என்பது.

(இராமன் என்றால் எண்ணங்கள். நம் எண்ணங்கள் மாறுபட்ட நிலையில் இல்லாது ஒன்றுக்கொன்று இணைந்த நிலையில் ஒன்றாக இணைக்கப்படும் பொழுது மன அமைதியும் மன மகிழ்ச்சியும் ஏற்படுகின்றது)

1.ஆகவே அப்பொழுது நம்முடைய எண்ணமே (இராமன்)
2.நமக்குள் இருக்கும் தீமைகளை அடக்கி
3.மகிழ்ந்திடும் செயல்களைச் செயல்படுத்துகின்றது என்ற நிலையை
4.அன்று மகாத்மாஜி தெளிவாக எடுத்துரைத்தார்.

ஏனென்றால் நமக்குள் எத்தனையோ கோடிக்கணக்கான எண்ணங்கள் உண்டு. பகைமை உணர்வுகள் உண்டு. தீமைகள் செய்விக்கும் உணர்வுகள் உண்டு.

ஆனால் அதைப் போன்ற தீமை செய்யும் உணர்வுகளை வளர விடாது உயர்ந்த எண்ணங்கள் கொண்டு அனைவரையும் மகிழ்ச்சி என்ற நிலைகள் பெறச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் நாம் செயல்பட்டால் அந்த எண்ணம் தான் ராம ராஜ்யம் என்பது.

ஒவ்வொரு மனிதனும் மகிழ்ச்சிப்படுத்தும் அந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் எடுத்து வளர்க்கப்படும் போது பகைமை உணர்வு இல்லாது “மகிழ்ந்திடும் சாம்ராஜ்யமாக…!” அத்தகைய உணர்வுகள் வருகின்றது.

1.மத பேதம் இன பேதம் மொழி பேதம் அரசியல் பேதம் இல்லாத நிலைகள் கொண்டு
2.நாம் அனைவருமே சகோதரர்கள் என்ற ஒருக்கிணைந்த வலு கொண்டு
3.மகிழ்ந்திடும் உணர்வின் சொல்லாக நாம் சொல்லும் பொழுதும் அதை நினைவாக எண்ணும்போதும்
4.உலக மக்கள் அனைவரும் நாம் அந்த சாம்ராஜ்யமாக “இராம ராஜ்யமாக…!” வாழ்ந்திட முடியும்.