உடல் உறுப்புகளுக்குச் செய்ய வேண்டிய பயிற்சி…!

eye sight meditation

உடல் உறுப்புகளுக்குச் செய்ய வேண்டிய பயிற்சி…!

நாம் சண்டை இடுவோரை வேடிக்கை பார்க்கும் போது அவர்கள் கோபமான உணர்வுகள் நாம் வெளிப்படுத்துவதை நாம் கூர்ந்து கவனிக்கும் போது நம் கண்கள் அதைக் கவர்ந்து நம் உடலுக்குள் பதிவு செய்கின்றது. அதனால் நம் நல்ல குணங்கள் மறைந்து நமக்குள் கோபமோ அல்லது பயமோ வேதனையோ உருவாக்குகின்றது.

தங்கத்திற்குள் செம்பும் பித்தளையும் இணைத்தால் அது நகையாகின்றது. அது அழகாக இருக்கின்றது. ஆனால் அந்தச் செம்பையும் பித்தளையும் பிரித்துத் தூய்மைப்படுத்திய பின் தான் மீண்டும் அடுத்த நகையைச் செய்கின்றோம்.

அதைப் போல பிறருடைய துன்பத்தைக் கேட்டறிகின்றோம். துன்பப்படுவோர் நம்மிடம் வந்து துன்பத்தைத் துடைத்துக் கொள்வதற்காகச் சொல்லும் வார்த்தைகளைக் கூர்மையாகக் கேட்டுணரும் பொழுது தங்கத்திற்குள் செம்பும் பித்தளையும் கலப்பது போல நம் நல்ல குணத்தில் கலந்து விடுகின்றது.

துன்பத்தைக் கேட்டறிந்து உதவி செய்தாலும் நமக்குள் வந்த அந்தத் துன்பமான உணர்வை உடனுக்குடன் துடைக்க வேண்டும் அல்லவா…! ஏனென்றால்
1.நம்மைக் கேட்டுக் கொண்டு நம் உடலில் அழுக்குகள் சேர்வதில்லை.
2.இருந்தாலும் நாம் தெரிந்தே தான் தினசரி குளித்து சோப்பைப் போட்டு
3.அந்த உடலில் பட்ட அழுக்கை அப்புறப்படுத்துகின்றோம்.

இதைப் போன்று தான் பிறரை நாம் பார்க்கப்படும் போது அவர்களிடம் பழகும் பொழுது நம்மை அறியாதபடி நம் நல்ல மனதில் நம் ஆன்மாவில் தீமையான உணர்வுகள் அழுக்காகப் பிணைந்து கொள்கின்றது.

அத்தகைய அழுக்கைப் போக்குவதற்காக மகரிஷிகளின் அருள் ஆற்றல் மிக்க சக்தியை நாம் நுகர்ந்து நம் உடலுக்குள் செலுத்தி நம் மனதைத் தூய்மையாக்க வேண்டும். அதற்குத்தான் இந்தத் தியானம்.

ஒவ்வொரு நிமிடமும் உங்களுடைய வாழ்க்கையில் சலிப்போ சஞ்சலமோ சங்கடமோ வெறுப்போ வேதனை வரும் போதெல்லாம்
1.ஈஸ்வரா என்று புருவ மத்தியில் உங்கள் உயிரை வேண்டி
2.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்.
3.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்.
4.எங்கள் ஜீவாத்மா பெற வேண்டும் என்று உங்கள் உடலுக்குள் நினைவைச் செலுத்தி
5.ஒரு இரண்டு நிமிடம் இவ்வாறு தியானித்தால்
6.உங்கள் ஆன்மாவில் பட்ட உணர்வில் பட்ட அழுக்குகள் உடனுக்குடன் துடைக்கப்படுகின்றது

இதற்கு முன் நம் உடலுக்குள் அறியாமல் சேர்ந்த தீமையான உணர்வுகள் வாத நோய் இரத்தக் கொதிப்பு இருதய நோய் சர்க்கரைச் சத்து உப்புச் சத்து போன்ற நிலைகளாக விளைந்த நிலையில் இருக்கின்றது.

அதை எல்லாம் இந்தப் பயிற்சியின் மூலம் குறைக்க முடியும். எத்தகைய நோய் இருந்தாலும் அது நீங்க வேண்டும் என்று தான் எண்ண வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து அந்த மகரிஷியின் அருள் சக்தியால் எங்கள் உடலில் உள்ள நோய்கள் நீங்கி எங்கள் உடல் நலம் பெற வேண்டும் என்று நினைவினை உடலுக்குள் செலுத்தித் தியானிங்கள். கண்களைத் திறந்தபடியே ஒரு இரண்டு நிமிடம் இவ்வாறு தியானியுங்கள்.

பின் அதே போன்று கண்களை மூடி மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள நோய்கள் நீங்க வேண்டும் என்று எண்ணி ஏங்கித் தியானியுங்கள்.

இப்போது கண்களைத் திறங்கள். உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான நோய்கள் இருக்கும். அதைப் போக்க அவரவர் நோய் போக வேண்டும் என்று தியானிக்க வேண்டும்.

உதாரணமாக உப்புச் சத்து இருக்கிறது என்றால் மகரிஷியின் அருள் சக்தி எங்கள் சிறுநீரகம் (KIDNEY) முழுவதும் படர்ந்து அந்த உறுப்பு சீராக இயங்கி எங்கள் உடல் நலம் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானிங்கள்.

இந்த உணர்வுகள் உடலுக்குள் செல்லும் பொழுது சிறுநீரகம் சுறுசுறுப்பாக இயங்குவதைப் பார்க்கலாம்.

சர்க்கரைச் சத்து உள்ளவர்கள் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் சிறுநீரகம் முழுவதும் படர்ந்து அந்தக் கிட்னியை உருவாக்கிய அணுக்கள் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று அந்த உறுப்பைச் சீராக இயக்கி எங்கள் உடலில் உள்ள சர்க்கரைச் சத்துக்கள் நீங்கிட அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.
1.உப்புச் சத்திற்கும் சர்க்கரைச் சத்திற்கும் இந்த இரண்டுக்குமே
2.நம் கிட்னிக்குள் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறச் செய்ய வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் இரத்தத்தைச் சுத்திகரிக்கும் உறுப்புகள் சரியாக இயங்கி நாங்கள் உடல் நலம் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று நினைவினை உங்கள் உடலுக்குள் செலுத்தித் தியானிங்கள்.

மன நிலை (மன வலு) குறைவாக உள்ளவரும் பயமும் அதிர்ச்சியும் கொண்டு சிந்தனைத் திறன் குறைவாக உள்ளவரும் மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் மன பலமும் மன வளமும் தெளிந்த நினைவும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று அந்த அருள் உணர்வுகளை உங்கள் உடலுக்குள் பாய்ச்சுங்கள்.

நீங்கள் தொழில் செய்யச் செல்கிறீர்கள் என்றால் யாரைச் சந்திக்கச் செல்கின்றீர்களோ அவரை எண்ணி
1.மகரிஷிகளின் அருள் சக்தி அவர் பெற வேண்டும்
2.எனக்கு நன்மை செய்யும் எண்ணம் அவருக்கு வர வேண்டும்
3.எங்களுக்குள் சகோதரப் பாசங்கள் வளர வேண்டும்
4.நாங்கள் எடுத்துக் கொண்ட காரியம் தடையின்றி அது செயல்பட வேண்டும் என்று எண்ணினால்
5.உங்களுக்குள் அந்த மன பலம் கிடைக்கின்றது.

நீங்கள் இவ்வாறு எடுத்துக் கொண்ட அந்த மகரிஷிகளின் உணர்வின் எண்ணமே உங்கள் உடலுக்குள் ஊடுருவி உங்கள் ஆன்மாவாக மாறி அந்த உயர்ந்த எண்ணங்கள் உங்களுக்குப் பாதுகாப்பாகவும் தொழிலைச் சீராகச் செயல்படுத்தும் தன்மையும் வருகின்றது.

உங்கள் வாழ்க்கையில் எத்தகைய நிலை ஏற்பட்டாலும் இதைப் போல மகரிஷிகளின் அருள் சக்தியை உடலுக்குள் செலுத்திச் சுத்தப்படுத்தக் கற்றுக் கொள்ள வேண்டும். அப்பொழுது தான்
1.விஞ்ஞானத்தின் உணர்வால் வெளிப்படும் நஞ்சின் தன்மை உங்களைத் தாக்காத வண்ணம் காத்துக் கொள்ளவும்
2.இந்த வாழ்க்கையில் என்றுமே மன பலத்துடன் தொடர்ந்து செயல்படும் திறனும் உங்களுக்குக் கிட்டும்.

Leave a Reply