பல சக்திகளை யாம் பெற்றிருந்தாலும் நாயின் உணர்வு பயத்தை எப்படி ஊட்டுகின்றது…? நடந்த நிகழ்ச்சி

agathiyam-final

பல சக்திகளை யாம் பெற்றிருந்தாலும் நாயின் உணர்வு பயத்தை எப்படி ஊட்டுகின்றது…? நடந்த நிகழ்ச்சி

 

முந்தி யாம் நாயைப் பார்த்தோம் (ஞானகுரு உபதேசித்த வருடம் 1989) என்றால் என்னை “விரட்டு… விரட்டு…!” என்று விரட்டும். நாயைக் கண்டால் இப்பொழுதும் அந்தப் பயம் எனக்கு இருக்கின்றது.

நாயைக் கண்டவுடனே அந்த அதிர்வான எண்ணங்கள்… “நம்மைக் கடிக்குமோ…?”
1.எவ்வளவு தான் சக்தி எடுத்தாலும் கூட
2.அந்தப் பழைய உணர்வு… எனக்குள் பதிவு செய்தது அப்படி வருகிறது.

ஒரு தடவை மடிச்சேரி என்ற ஊருக்குப் போனோம். அங்கே நமக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் “எங்கள் வீட்டுக்குச் சாமி நீங்கள் வர வேண்டும்…” என்றார்.

சரி என்று சொல்லிவிட்டு இங்கிருந்து காரில் போனோம். இறங்கும் பொழுது பார்த்தால் ஒரு அல்சேஷன் நாய் அங்கிருந்து வருகிறது. நல்ல உயரமான பெரிய நாயாக இருக்கிறது. மாடு உயரத்தில் முக்கால்வாசி இருக்கும். அவ்வளவு பெரியது.

நன்றாகச் சாப்பாடு போட்டு வளர்த்திருக்கின்றார்கள், இறங்கியவுடனே என்ன செய்து விட்டது…? அங்கிருந்து அப்படியே “ஆ…ஆ…!” என்று வாயைத் திறந்து கொண்டே வந்தது.

ஆக யாரும் இறங்கவில்லை. ஏனென்றால் ஏற்கனவே அங்கே சொல்லி இருக்கிறார்கள்.

இங்கே பக்கத்து வீட்டில் ஒருவன் திருட வந்திருக்கின்றான். இந்தப் பக்கம் வந்து அவன் ஓடியிருக்கிறான். இந்த நாய் எப்பொழுதுமே வெளியில் (PUBLIC) அப்படியே இருப்பதால் ஓடி வந்து அவனைக் கந்து கந்தாகப் பிய்த்து எறிந்துவிட்டது.

இந்த விஷயத்தை ஏற்கனவே சொல்லி இருக்கிறார்கள் அல்லவா…! நாயைப் பார்த்ததும் அப்புறம் எந்த நினைவு வரும்…? நாய் மோப்பம் பிடித்துக் கொண்டு காரைச் சுற்றிச் சுற்றி வருகின்றது.

டிரைவர் இறங்க மாட்டேன் என்கிறார். நான் இறங்குகிறேன் என்று சொன்னேன். இது வேறு வம்பு சாமி… “நீங்கள் இறங்க வேண்டாம்…!” என்று அவர் இரண்டு தடவை அழுத்திச் சொன்னவுடனே எமக்குப் பயம் வந்து விட்டது. சரி பார்த்துக் கொள்ளலாம் என்று.

உள்ளே இருந்து ஒரு சிட்டான் (சிறு பையன்) வருகின்றான். ஏ…! பேசாமல் இரு…! என்று அந்த நாயிடம் சொல்கிறான்.

நீங்கள் சும்மா கதவைத் திறந்து வாருங்கள்… என்று சொன்ன பின்னாடி அங்கிருந்து இறங்கிப் போனோம்.

அவன் சொல்லி விட்டு போய்விட்டான் அல்லவா. நாங்கள் முன்னாடி போனோம். நாய் பின்னால் வந்து கொண்டே இருக்கின்றது. ஒன்றும் செய்யவில்லை.

உள்ளே போய் அங்கே உட்கார்ந்து பேசிக் கொண்டு இருக்கின்றோம். எங்களுக்கு முன்னாடி உட்கார்ந்து கொண்டது. பேசாமல் படுத்துக் கிடக்கிறது. ரொம்ப அமைதியாக இருக்கிறது. வீட்டிலுள்ளவர்கள் என்ன சொல்கிறார்களோ அதை அப்படியே கேட்கின்றது.

அவர்கள் முதலில் அந்த நாயைப் பற்றிச் சொன்ன நிலையில் அந்த இடத்திற்கு நான் போனதும் அந்தப் பயம் வந்து விட்டது என்று சொல்ல வருகிறேன். வேறு ஒன்றும் இல்லை.

சாமி எவ்வளவு தான் சக்தி பெற்றிருந்தாலும் கூட இந்த நிலை.

ஏனென்றால் குருநாதர் ஏற்கனவே மந்திர வித்தைகளைப் பற்றி எல்லாம் அனுபவம் கொடுத்திருக்கின்றார். அதை உபயோகப்படுத்தினால் நீ எந்த நிலை அடைவாய்… தெரியுமா…! என்று சொல்லியிருக்கின்றார்.

அதனால் இப்படிச் செய்தாலும் தவறு. இப்படி வந்தாலும் தப்பு. எதிலே போய் தப்புவது…? இப்படித் தான் பல நிலைகளில் இருந்து
1.ஒவ்வொன்றையும் அணு அணுவாகக் கொண்டு வந்து
2.பல அனுபவங்களைப் பெறச் செய்து
3.அந்த மெய் ஞானத்தின் ஆற்றலை எம்மைப் பெறச் செய்தார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கே இதைச் சொல்கிறேன்.

Leave a Reply