குருநாதரின் கட்டளைப்படி ஒரு சேவகனாகத்தான் அருள் சேவை செய்து கொண்டிருக்கின்றேன்…!

Gnanaguru Prayer

குருநாதரின் கட்டளைப்படி “ஒரு சேவகனாகத்தான்” அருள் சேவை செய்து கொண்டிருக்கின்றேன்…!

மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் அருளிய அருள் வழிப்படி நாம் அனைவரும் ஐக்கிய உணர்வாக எண்ணி அந்த மெய் உணர்வின் சத்தைப் பெற வேண்டும்.

குருநாதர் ஏனோ… எதற்கோ.. எதுவோ சொன்னார்…! என்ற நிலைகள் வேண்டாம்.
1.இவ்வழியை எவர் ஒருவர் சீராகப் பெறுகின்றாரோ… நீ பெறச் செய்கின்றாயோ…
2.அங்கே நீ என்னைக் காணலாம்…! என்று தான் எனக்கு (ஞானகுரு) ஒரு கட்டளை இட்டார் .

ஆகையினால் அவர் பெற்ற ஆற்றல் மிக்க சக்தியை அவர் எனக்கு உபதேசித்த உணர்வின் ஆற்றலை உங்களுக்குள் பருகச் செய்து… பெறச் செய்து… பதியச் செய்து கொண்டே வருகின்றோம்.

எந்த அளவிற்கு இதை நீங்கள் ஏங்கிப் பெற்று வளர்த்துக் கொள்கின்றீர்களோ…
1.எங்கள் வாழ்க்கையில் அறியாது சேர்ந்த தீமைகளை எங்களால் நீக்க முடிந்தது…
2.எங்கள் சொல்லால் பிறருடைய தீமைகளும் அகன்றதைத் பார்க்கின்றோம் என்று எப்பொழுது சொல்கின்றீர்களோ
3.அங்கே குருநாரை உங்கள் ரூபமாகப் பார்க்கின்றேன்.

எத்தகைய தீமை உள்ளவர்களைப் பார்த்தாலும்
1.நாங்கள் பார்த்த பின் தீமைகள் அங்கே அகன்றது.
2.எங்கள் நினைவாற்றலால் குடும்பத்தில் உள்ள சிக்கல்கள் நீங்கியது.
3.எங்கள் பார்வையால் தொழிலும் விவசாயமும் செழித்தது என்று
4.இதைப் படித்துணர்ந்தோர் உணர்வுகளில் இதைப் பெறும்படி நீ செய்ய வேண்டும் என்று தான் குருநாதர் சொன்னார்.

ஆகவே நீங்கள் எல்லோரும் அந்தத் தகுதி பெறவேண்டும் என்று உங்களைத் தான் நான் தியானிக்கின்றேன் .
1.உங்கள் உயிரைத் தான் கடவுளாக மதிக்கின்றேன்.
2.உங்கள் உணர்வைத்தான் தெய்வமாக எண்ணுகின்றேன்.
3.உங்கள் உடலைத் தான் சிவமென்று மதிக்கின்றேன்
4.உங்களுக்கு வழி காட்டும் கண்களைக் கண்ணனாக மதிக்கின்றேன்.
5.உங்கள் உடலுக்குள் சர்வத்தையும் கவர்ந்து வளர்த்திடும் சக்தியை மகா லட்சுமியாக மதிக்கின்றேன்.
6.உங்களுக்குள் சர்வத்தையும் அறிந்திடச் செய்யும் சக்திகளை மகா சரஸ்வதி என்று குருநாதர் காட்டிய அருள் வழியில் காணுகின்றேன்.

இந்த உபதேசத்தைப் படித்துணர்ந்த நீங்கள் ஞானிகளின் உணர்வை எங்களுக்குள் வளர்த்துக் கொண்டோம்… மகிழ்ந்து வாழும் அருள் சக்தி பெற்றோம்… எங்கள் பார்வையால் சொல்லால் செயலால் எல்லோருக்கும் நல்லதானது…! என்று நீங்கள் அனுபவபூர்வமாகச் சொன்னீர்கள் என்றால் அங்கே ஈஸ்வராய குருதேவரை நான் காணுகின்றேன்.

மனிதனாக இருக்கும் நாம் அனைவருமே படைத்திடும் ஆற்றல் பெற்றவர்கள். நாம் அனைவரும் ஒருக்கிணைந்த நிலையில் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற்று நம் மூதாதையர்கள் அனைவரையும் விண் செலுத்தி இந்த விஞ்ஞான அறிவால் வரும் பேரழிவிலிருந்து நாம் மீளவேண்டும்… மற்ற மக்களையும் காக்க வேண்டும்…!

அந்த நிலையைப் பெறச் செய்ய குருநாதர் இட்ட கட்டளைப்படி அவரின் சேவையாக இதைச் செய்து கொண்டிருக்கின்றேன். உங்கள் ஒவ்வொருவரது உயிரையும் கடவுளாக மதிக்கின்றேன்.

உங்களை அறியாது சூழ்ந்த தீமைகளைத் தூய்மைப்படுத்தும் நிலையாக குரு காட்டிய அருள் வழியில் உங்களை நான் தியானிக்கின்றேன். நீங்கள் எல்லோரும் மெய் ஞானிகளாக வளர வேண்டும் என்று எல்லா மகரிஷிகளையும் வேண்டிப் பிரார்த்திக்கின்றேன்.

ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…!

தமிழ் சித்தாந்த முறைப்படி “ஆடி… ஆடிப்பெருக்கு…!

Image

12 rasi

தமிழ் சித்தாந்த முறைப்படி “ஆடி… ஆடிப்பெருக்கு…!

 

விஷத்திற்கே அதிக இயக்கம். ஒவ்வொரு உயிரின் தன்மையும் 27 நட்சத்திரங்களில் ஒன்றின் ஆற்றல் கொண்டது தான். நட்சத்திரங்களிலும் ஆண் பெண் என்ற நிலை உண்டு.

ஒரு நட்சத்திரத்திற்குள் இருக்கும் விஷத்தின் இயக்கச் சக்தி குறைந்துள்ள மற்றொன்றை எதிர்த்துத் தாக்கும் போது இது பெண்பால் கொண்ட நட்சத்திரத்தின் ஆற்றலும் ஆண்பால் கொண்ட நட்சத்திரத்தின் ஆற்றலும் இணைக்கப்பட்டு
1.ஆண் பெண் என்ற நிலைகளில் இந்த உணர்வு ஒன்றுடன் ஒன்று மோதி
2.துடிப்பின் நிலை வரும் போது தான்
2.தனக்குள் கவரும் சக்திகளை அணுக்களாக மாற்றும் திறன் பெறுகின்றது.

ஆடி மாதம் பலமாகக் காற்று வீசுவதைப் பார்க்கின்றோம். அப்படி உருவாகும் அந்தக் காற்றினால்
1.இந்தப் புவிக்குள் இருக்கும் ஒவ்வொன்றும் ஒன்றுடன் ஒன்று மோதி அசைந்து செல்லும் பொழுது
2.அது அது நுகர்ந்த உணர்வுகளைத் தனக்குள் வளர்த்து
3.அதனின் வளர்ச்சிகள் அது பெருகிப் பெருகிப் பெருகி…!
4.நாம் எப்படி மனிதனாக வளர்ந்து வந்தோம் என்ற நிலையை உணர்த்தும் நாளாகவும்… உணரும் நாளாகவும்…
5.”ஆடிப் பெருக்கு…!” என்று அமைக்கின்றார்கள் ஞானிகள்.

ஆடி மாதத்தில் அணுக்களின் அசைவின் நிலைகள் கொண்டு காற்றலைகள் ஒன்றுடன் ஒன்று அதிகமான எதிர்மறையான நிலைகளில் சக்தி ஒவ்வொன்றும் ஆட்டி அசைத்துப் படைக்கின்றது.

இதைப்போல எதிர்மறையான அணுக்களின் தன்மை மோதும் போது அந்த உணர்வின் அசைவின் இயக்கங்களும் தன் தன் இசைக்கொப்ப ஆடுவதும் சுழற்சியாவதும் போன்ற நிலைகள் ஏற்படுகின்றது.

ஆடி மாதத்தில் பார்க்கலாம் எதிர்மறையான வழிகளில் காற்று வரப்படும் போது ஒரு சமயம் இந்தப் பக்கம் தள்ளும்… ஒரு சமயம் அந்தப் பக்கம் தள்ளும்… சுழன்றாடும் தன்மைகள் வரும்…!

அதனால் தான் இதற்குத் தமிழ் சித்தாந்த முறைப்படி “ஆடி…!” என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. ஏனென்றால் காரணப் பெயரை வைத்துத் தான் இந்த உயிர்களின் இயக்கமும் பன்னிரண்டு இராசிகளின் தன்மையும் தெளிவாக்கியுள்ளார்கள்.

இந்தப் பன்னிரண்டு இராசிகளிலும் அதாவது ஒவ்வொரு மாதத்திலும் நாம் எதனை அறிந்து கொள்ள வேண்டும்…? எதனை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்…?

தொழில் நிமித்தமாகவோ அல்லது வாழ்க்கையின் நிமித்தமாகவோ அன்றாடம் எத்தனையோ வேலைகளைச் செய்து வந்தாலும்
1.இந்தப் பூமியின் உணர்வின் இயக்கங்களையும்
2.பல கோடிச் சரீரங்கள் பெற்று பல பல உணர்வுகள் மாற்றமாகி அதனுடைய பெருக்கமாகி
3.நம்மை மனிதனாகப் பெருக்கியது எது…? என்ற நிலைகளை ஒவ்வொருவரும் சிந்தித்து
4.அடுத்து இந்த மனித உடலிலிருந்து நாம் பெருக்க வேண்டிய நிலைகள் எது…? என்ற நிலைகளை உணர்த்துவதற்காகத் தான்
5.அன்றைய ஞானிகள் ஆடிப் பெருக்கை வைத்தார்கள்.

மனித உடலில் விண்ணின் ஆற்றலைச் சேர்த்து மெய் ஒளி மெய் ஞானத்தைப் பெருக்கும் நிலையாக ஞானிகள் காட்டினார்கள்.

ஒவ்வொரு மாதமும்…
பனிரெண்டு ராசிகளிலும்…
வருடம் முழுவதற்கும்…
மனித குலத்தை உய்விக்கும் நிலையாக நல்ல உணர்வுகளைப் பெறுவதற்காகச் சாஸ்திரங்களைக் காட்டினார்கள் ஞானிகள்.

ஆனால் ஆடி மாதம் கல்யாணம் செய்யக் கூடாது…! பொண்ணு மாப்பிள்ளைக்கு ஆகாது…! ஆடி மாதம் நல்ல காரியங்களே செய்யக் கூடாது என்று அதைச் “சாங்கிய சாஸ்திரமாகத் தான்… தலை கீழாக மாற்றி வைத்திருக்கின்றோம்…!”

சற்று சிந்தித்துப் பாருங்கள்…!