தியானம் ஒரே சீராகச் செல்ல நாம் கையாள வேண்டிய முறை

Maharishis frequency

தியானம் ஒரே சீராகச் செல்ல நாம் கையாள வேண்டிய முறை 

அன்பு ஆசை என்ற பிணைப்பான நிலைக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டு
1.அதிக அன்பினால் வரும் வினையையும்
2.அதிக ஆசை கொண்ட பேராசைக் குணத்தையும் வழிப்படுத்திடாமல்
3.தீமை செய்யும் குணத்தின் ஆணிவேரைச் சமப்படுத்தும் பக்குவத்தைப் பெறும் நிலையாக நம்முடைய தியானம் அமைதல் வேண்டும்.

அன்பே தெய்வம்…! அன்பே சத்தியம்…! என்ற அன்பு வெறிக்கு அடிமைப்பட்டாலும் நமக்குள் ஞானத்தின் நிலை கூடுவது கடினம். அதாவது நம் எண்ணமெல்லாம் இந்த உலகுடன் கலந்துள்ள அலைகளில் உள்ள
1.நல்ல அலைகளை மட்டும் சேமிக்கும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும்.
2.தீய அணுக்கள் என்று ஒதுக்கியும் வெறுத்தும்
3.நான் நல்லவன்…! என்ற ஒரே வெறி கொண்ட நிலை பெற்றாலும்
4.நம் ஆத்ம சக்தி வளர்வது கடினம் தான்.

பல நாட்களாக நாம் தியானித்து எதிர் நிலையான உணர்வின் இயக்கங்களைத் தடைப்படுத்தி வைத்து நாம் சீராக இருக்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம்.

பிறருடன் நண்பராகப் பழகும் பொழுது அவருடன் நம் உணர்வுகள் ஒத்துப் போனாலும் மற்றொருவர் செய்யும் தவறை இவர் சுட்டிக் காட்டும் பொழுது அவர் சுவாசித்த அந்தத் தவறின் உணர்வுகளை நாமும் சுவாசிக்க நேர்கின்றது.

அப்பொழுது
1.நாம் தடைப்படுத்துப் பழகிய உணர்வுகளின் இயக்கம் மாறி
2.அந்த எதிர் அலையின் உணர்வுகள் சாடி
3.நம்மையும் அதே உணர்வுடன் (தவறின்) நம்மைப் பேசச் செய்யும்.

அப்பொழுது நாம் எடுத்த தியானம் என்ன ஆனது…?

இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால் முதலில் நாம் பிறர் வெளிப்படுத்தும் சொல்லுக்கோ எண்ணத்திற்கோ நம் நினைவினை அடிமைப்படும் நிலையாக அடிபணியச் செய்து விடக்கூடாது.

ஞானத்தின் பாதையில் பரிபக்குவ நிலையில் சீராகச் சென்று கொண்டிருந்தாலும்
1.மற்றவர்கள் நம்மிடம் சொல்லக் கூடிய நிலையை வைத்தோ
2.அல்லது அவர்கள் செய்வதைப் பார்த்தோ
3.அல்லது அதைப் பற்றி நாம் தெரிந்து கொண்ட நிலையை வைத்தோ
3.அந்த உணர்வுகள் நம் மீது மோதும் நிலையில் நம் எண்ணத்தைச் சிதற விடக் கூடாது.

ஏனென்றால் ஒவ்வொரு நிமிடத்திலும் நாம் சுவாச நிலை எடுத்து வெளிப்படுத்தும் நிலைகளில் அந்தந்தச் சுவாசத்திற்கொப்ப உணர்வின் அலைகளாக
1.உயிரில் உராய்ந்து கொண்டே தான் உள்ளது.
2.அதை உயிர் அதை இயக்கிக் கொண்டே தான் இருக்கும்
3.நமக்கு அதை உனர்ச்சிகளாக உணர்த்திக் கொண்டே தான் இருக்கும் என்பதனை நாம் உணர வேண்டும்.

நாம் புதிய வீட்டை அழகாக கட்டியிருந்தாலும் அதைத் தினசரி தூய்மைப்படுத்துகின்றோம். அதே போல சில காலங்கள் கழித்து பராமரிப்பு வேலைகளும் செய்ய வேண்டியது உள்ளது.

அதைப் போல நம் மீது (உயிரிலே) மோதும் உணர்வுகளை அப்படியே இயக்கவிடாது
1.அருள் மகரிஷிகளின் உணர்வுகளை அதனுடன் இணைத்து
2.அதை நம்முடன் நல்லதாகச் சேர்த்து ஆக்கபூர்வமானதாக மாற்றிக் கொண்டே வேண்டும்.
3.இது மிகவும் முக்கியம்…!

விண்ணின் ஆற்றலைப் பெறச் செய்யும் விநாயகர் தத்துவம் – “மகரிஷிகளின் தொலைத் தொடர்பு…!” (NETWORK)

Image

Riverside vinayaga

விண்ணின் ஆற்றலைப் பெறச் செய்யும் விநாயகர் தத்துவம் – “மகரிஷிகளின் தொலைத் தொடர்பு…!” (NETWORK)

 

ஒருவர் செல்வச் செழிப்புடன் மகிழ்ச்சியாக வாழ்கின்றார். அதே சமயத்தில் இரக்கம் கொண்டு ஈகை கொண்டு பிறர்படும் துயரத்தை அவர் கேட்டறிந்து வேதனைப்படுவர்களுக்குப் பொருளைக் கொடுத்து மற்ற உதவிகளைச் செய்து அவர்களையும் சாந்தப்படுத்த எண்ணுகிறார்.

இப்படிப் பல உதவிகள் செய்தாலும் அவர்கள் பட்ட துயரத்தைக் கேட்டு நுகர்ந்தறியும் பொழுது வேதனைப்பட்டோர் உடலிலே விளைந்த தீமையான கசப்பான உணர்வுகள் இவருக்குள் புகுந்துவிடுகின்றது.

கசப்பு இவருக்குள் புகுந்த பின் இவர் நன்மை செய்யும் உணர்வை நீக்கி அதை வெளியே அனுப்பி விடுகின்றது. அப்பொழுது நல்லது அங்கே செயலற்றதாக மாறுகின்றது.

இதைப் போன்ற நிலையில் அன்றாட வாழ்க்கையில் தினசரி எத்தனையோ பேரைச் சந்திக்கின்றோம். அவர்களுடைய நிலைகளைக் கேட்டு அறிந்து கொள்கிறோம். அதிலே சில சந்தர்ப்பங்கள் கசப்பான நிலையாகி விடுகின்றது.

நல்லதையே நுகர்ந்து நல்லதைச் செய்து வந்தாலும் அந்தக் கசப்பின் நிலைகள் நமக்குள் சிறுகச் சிறுகச் சேரத் தொடங்குகின்றது. அந்தக் கசப்பால் வாழ்க்கையில் ஏற்பட்ட வெறுப்பை நாம் அகற்றுகின்றோமா…?

இதை உணர்த்துவதற்குத்தான் அரசையும் வேம்பையும் ஸ்தல விருட்சமாக வைத்து விநாயகருக்கு வைத்தார்கள் ஞானிகள்.

விநாயகரை மேற்கே பார்க்க வைத்து நாம் விநாயகரைப் பார்க்கும் பொழுது கிழக்கே பார்த்து இந்த அந்தத் தத்துவ ஞானி அகஸ்தியன் கொடுத்த நிலையைக் கவரும்படிச் செய்தார்கள்.

அன்று வாழ்ந்த அகஸ்தியன்
1.இதைப் போன்ற நஞ்சான இந்தக் கசப்பினை அகற்றித்
2.தன் உணர்வின் தன்மை ஒளியாக மாற்றி
3.பாழடைந்த இடமான துருவத்தை (வட துருவம்) அடைந்து
4.விண்ணில் வரும் நஞ்சினை அகற்றி நஞ்சினை ஒடுக்கி
5.ஒளியின் சிகரமாகத் துருவ நட்சத்திரமாக இன்றும் இருக்கின்றான்.

அவன் உணர்ந்த நிலையை சாதாரண மக்களும் நுகர்ந்து தனக்குள் அறியாது உட்புகுந்த தீமைகளை அகற்றிட வேண்டும் என்பதற்கே விநாயகரைக் காட்டியுள்ளார்கள்.

உதாரணமாக அமெரிக்காவில் நடக்கக்கூடிய சம்பவங்களை அங்கிருந்து செயற்கைக் கொள் மூலம் ஒளிபரப்பு செய்தாலும் சக்தி வாய்ந்த ஆன்டெனாவை வைத்து நாம் இங்கிருந்து கவர்ந்து இருந்த இடத்திலேயே டி.வி. மூலம் காண முடிகின்றது அறிய முடிகின்றது.

இதைப் போன்று தான் சாதாரண மனிதர்கள் பேசிய உணர்வுகள் அனைத்துமே சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாகப் படரச் செய்து கொண்டேயுள்ளது. (நாம் சிறு வயதிலிருந்து பேசிய உனர்வுகள் அனைத்துமே நமக்கு முன் உள்ள காற்று மண்டலத்தில் உண்டு)

ஒவ்வொரு நிமிடமும் நமக்குள் தோன்றும் உணர்வின் நினைவலைகளுக்குத் தக்க கண்ணிலே செலுத்தப்படும் போது
1.உதாரணமாக ஒரு தீங்கு உள்ளவனை நினைத்தோம் என்றால்
2.அந்த அலைகள் நம் சுவாசத்திற்குள் வந்து உயிரிலே பட்ட பின்
3.அவனுக்கு எப்படியும் தீங்கு செய்ய வேண்டும் என்ற உணர்ச்சியைக் காட்டுகின்றது.

அந்தத் தீங்கு செய்யும் உணர்வு நமக்குள் வந்ததும் அதே உணர்வின் நிலைகள் இயக்கி அந்தத் தீங்கு செய்தவனுக்கு மீண்டும் சரியான பதில் சொல்ல வேண்டும் என்ற நினைவைக் கூட்டுகின்றது.

இதே போலத் தான் விநாயகரைப் பார்க்கும் பொழுதெல்லாம்
1.அந்த மெய் ஞானிகள் கண்டுணர்ந்த காவியப் படைப்பின் நினைவினைக் கூட்டி
2.அந்த நினைவைக் கண்ணுடன் இணைத்து உயிருடன் ஒன்றச் செய்து
3.விண்ணை நோக்கி ஏகி இந்த உண்மைகளை உணர்த்திய மகரிஷிகள் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று ஏங்கி
4.அதை விண்ணிலிருந்து கவரும்படி அன்று செய்தார்கள் ஞானியர்கள்.

இவ்வாறு அங்கே விண்ணிலே ஏகி (விஞ்ஞானத்தில் செலுத்திய செயற்கைக் கோள் போல) நம் நினைவின் ஆற்றலை அங்கு கூட்டும் போது தீமையை அகற்றி நஞ்சினை வென்ற அந்த மகரிஷிகள் உடலில் விளைந்த உணர்வுகள் இங்கே பூமிக்குள் படர்ந்துள்ளதைக் கவரும்படி செய்தார்கள்.

அதைக் கவர்ந்து இந்த மனித வாழ்க்கையில் தனக்குள் அறியாது புகுந்த இந்தக் கசப்பான நிலைகளை நீக்குவதற்கு நமக்கு உணர்த்திச் சென்றார்கள் அந்த மகரிஷி.

இந்த விநாயகர் தத்துவத்தைத் தெளிவாகத் தெரிந்து அதைக் கடைப்பிடித்தால் நாம் விண் செல்வது உறுதியாகும்.

ஒரு நிமிடத்திற்குள் உங்களுக்குள் ஆற்றல்மிக்க நல்ல சக்திகளைப் பெறச் செய்யும் பயிற்சி…!

om-shanti-brahma

ஒரு நிமிடத்திற்குள் உங்களுக்குள் ஆற்றல்மிக்க நல்ல சக்திகளைப் பெறச் செய்யும் பயிற்சி…!

பசிக்கு உண்ணுகின்றோம். அதற்குகந்த “காலம் வரட்டும்” என்று பசித்திருப்பவர் காத்திருப்பதில்லை.

அதே போல் எந்தச் செயல் செய்பவராக இருந்தாலும் எந்தச் சூழ்நிலையில் சிக்குண்டிருந்தாலும் உடலில் இயற்கையாக வெளிப்படும் கழிவை வெளியேற்றக் “காலம் வரட்டும்” என்று பொறுத்திருக்க முடிகின்றதா…? இல்லை…!

இப்படி உடலுக்காக உண்டு கழித்து வாழும் நாம் இந்த உடலுக்குப் பின் அடைய வேண்டிய நிலையை அந்த உயர் ஞானத்தைப் பெறுவதற்காக மட்டும் கால நிலையையும் வயது வரம்பையும் நீட்டிக் கொண்டே வருகின்றோம்.

கடைசியிலே பெறாமலே மீண்டும் வேதனைப்பட்டே வாழும் இன்னொரு உடலுக்குள் தான் போகின்றோம். பேரின்பப் பெரு வாழ்வு எனும் அழியாத நிலையாகப் பிறவியில்லா நிலை அடைவதில்லை.

அந்த நிலையைச் சாதாரணமாகவே பெறுவதற்காகத்தான் உங்கள் எண்ன நிலையைச் சீராக்கி
1.இந்த வாழ்க்கையில் வாழும் காலத்தில்
2.அவ்வப்பொழுது மோதும் ஒவ்வொரு எண்ணத்திலும் ஒவ்வொரு உணர்விலும்
3.மகரிஷிகளின் அருள் உணர்வைச் சேர்க்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்…! உங்கள் வாழ்க்கையே தியானமாக்குங்கள்…! என்று சொல்லிக் கொண்டே வருகிறோம்.

ஒரு நிமிடத்திற்குள்ளேயே இந்தச் சக்தியை எடுத்துக் கொள்ளலாம். அமைதியான இடமோ பூஜை அறையோ ஒன்றும் தேவையில்லை.

நீங்கள் எந்த இடத்தில் எந்த நிலையில் எந்த வேலை செய்து கொண்டிருந்தாலும்
1.புருவ மத்தியில் ஈஸ்வரா…! என்று உங்கள் உயிரை எண்ணுங்கள்
2.பூமியின் வடக்குத் திசையில் விண்ணிலே நினைவைச் செலுத்துங்கள்
3.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் ஈஸ்வரா என்று ஏங்குங்கள்
4.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று உடலுக்குள் தலையிலிருந்து கால் வரை நினைவைச் செலுத்துங்கள்.
5.சர்குலேசன் (CIRCULATION) மாதிரி திரும்பத் திரும்ப இதைச் செய்யுங்கள்.
6.ஒரு நிமிடத்திற்குள் எத்தனையோ தடவை இந்த மாதிரிச் செய்து ஆன்மாவையும் மனதையும் உடலையும் தூய்மைபடுத்த முடியும்.

இதைப் பழக்கப்படுத்திக் கொண்டாலே போதுமானது. உங்களுக்கு வேண்டிய மன பலம் கிடைக்கும் மன அமைதி கிடைக்கும். மகிழ்ச்சி தன்னாலே வரும்.

பிறகு பசி வந்ததும் உணவை உட்கொள்வது போல் துன்பமோ துயரமோ கஷ்டமோ தீமைகளோ மற்ற எது வந்தாலும் உடனடியாக நீங்கள் எடுத்துப் பழக்கப்படுத்திய துருவ நட்சத்திரத்தின் நினைவுகள் முன்னாடி வந்து நிற்கும்.

அந்தச் சக்தியை அதிகமாகக் கவரச் செய்யும். உயர் ஞானம் உங்களுக்குள் விளையத் தொடங்கும். நீங்கள் அதுவாக மாறுவீர்கள். உடலுக்குப் பின் அகஸ்தியனைப் போன்ற மெய் ஞானியாவது நிச்சயம்.