நாம் பார்ப்பதோ வேடிக்கை…! ஆனால் சாப அலைகள் நமக்குள் வந்து என்னென்ன வேலைகள் செய்கிறது… என்று தெரிந்து கொள்ளுங்கள்…!

curse-quarrel

நாம் பார்ப்பதோ வேடிக்கை…! ஆனால் சாப அலைகள் நமக்குள் வந்து என்னென்ன வேலைகள் செய்கிறது… என்று தெரிந்து கொள்ளுங்கள்…!

காலையில் எழுந்து நல்ல காரியங்களைச் செய்திருப்பினும் நாம் ரோட்டில் போகும் பொழுது சந்தர்ப்பம் ஒருவன் சாபமிடுவதைப் பார்க்க நேருகின்றது.

ஒருவன் இன்னொருவரை ஏசிப் பேசுகின்றான். உன் குடும்பம் நாசமாகப் போகும்… உன் வியாபாரம் எல்லாம் நஷ்டமாகும்…! என்று சாபமிடுகின்றான். அவன் பேசிய உணர்வலைகள் அனைத்தையும் சூரியனின் காந்த சக்தி கவர்கின்றது. அலைகளாக மாற்றிப் படரச் செய்கின்றது.

ஏசுவோனுடைய பேச்சைக் கேட்டதும் அடுத்தவனும் எதிர் பதிலைக் கொடுப்பான். ஒருவருக்கொருவர் ஏசிப் பேசும் பொழுது அதற்கு ஈடாக அடுத்தவர் பேசும் பொழுது அதனின் வலு அங்கே பெறுகின்றது.

ஆனால் சாதாரணமாக நாம் வேடிக்கை பார்த்தாலும்
1.அப்பொழுது அந்த இரண்டு பேர் ஏசுவதையும் சாபமிடுவதையும் நாம் நுகர்ந்து கொள்கின்றோம்
2.அது கடும் தீமைகளை விளைய வைக்கும் சாப அலைகளாக நமக்குள் படர்ந்து விடுகின்றது.
3.நம்மை அறியாமலே இந்தச் சாப அலைகள் நமக்குள் வந்த பின்
4.அவர்கள் சாபமிட்ட உணர்வலைகள் நம் ஆன்மாவில் (நம்மைத்) தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.
5.சாபமிட்ட உணர்வுகள் நம் உடலுக்குள் விளையத் தொடங்கும்.

விளைந்த பின் அவர்கள் எப்படிச் சாபமிட்டார்களோ அதைப் போன்று ஒரு சிறு குறையைக் கண்டாலும்… “தொலைந்து போகிறவனே…! ஏண்டா… இப்படிச் செய்து கொண்டிருக்கின்றாய்…?” என்று தான் சொல்ல வேண்டி வரும்.

சாபமிடும் உணர்வுகள் நமக்குள்ளும் வளரத் தொடங்கி நல்ல குணங்கள் நமக்குள் சீர் கெடும் நிலைகள் ஆகி அது தொலைந்து போகும் நிலைக்கே வருகின்றது. இதைப் போன்ற உணர்வுகள் நமக்குள் அழுக்காகச் சேர்கின்றது.

சாதாரண மனிதன் கேட்கும் பொழுதே இப்படி என்றால் கர்ப்பிணிப் பெண்கள் இத்தகைய சாபமிடும் உணர்வுகளைக் கேட்க நேர்ந்தால் அந்தக் கருவிலே இருக்கக்கூடிய குழந்தைக்குள் அந்த உணர்வின் தன்மை ஆழமாகப் பதிந்து விடுகின்றது.

விஞ்ஞான ரீதியாக ஒரு செடியின் வித்துக்குள் மற்ற தாவர இனச் சத்தை இணைத்து இரண்டறச் சேர்த்து வீரிய வித்தாக உருவாக்குகின்றார்கள். அது போல கருவுற்றிருக்கும் தாய் எதை உற்று நோக்குகின்றதோ அது கருவுக்குள் இணைந்து உருவாகத் தொடங்கி விடுகின்றது.

யாம் ஞானிகளைப் பற்றி உபதேசிக்கின்றோம். அந்த உயர்ந்த ஞானியின் சொல்லை ஒரு கர்ப்பிணி உற்றுக் கேட்டால் அந்தத் தத்துவத்தின் உணர்வுகள் கருவிற்குள் விளையும் பருவம் பெறுகின்றது. பின் அந்தக் குழந்தை பிறந்த பின் தத்துவ ஞானியாகவே வளரத் தொடங்கி விடுகின்றான்.

ஆனால் அதே சமயத்தில் வாழ்க்கையின் சந்தர்ப்பத்தில் மற்றவர்கள் சாபமிடும் உணர்வுகளைத் கர்ப்பிணித் தாய் உற்றுப் பார்த்தால் தாய்க்கு ஊழ்வினையாகச் சேர்கின்றது. கருவிலிருக்கும் குழந்தைக்கோ பூர்வ புண்ணியமாக அமைந்து விடுகின்றது.

கண் தெரியாது குருடாக கை கால் முடமாகிவிடும் என்று ஒருவன் சாபமிடுகின்றான் என்றால் அவனுக்குள் விளைந்த இந்த உணர்வுகளைக் கர்ப்பமாக இருக்கும் தாய் உற்றுப் பார்த்து நுகர்ந்ததென்றால் அந்தக் கருவிலிருக்கக்கூடிய குழந்தைக்குப் பதிவாகி விடுகின்றது.

விஞ்ஞான அறிவு கொண்டு ஒரு ஒலி நாடாவில் பதிவு செய்கின்றார்கள். அதைக் கம்ப்யூட்டரில் இணைத்துக் கொண்ட பின் எலெக்ட்ரானிக் முறையில் மற்ற இயந்திரங்களை இயக்கத் தொடங்கி விடுகின்றார்கள்.

எதை ஆணையிடுகின்றானோ அந்த உணர்வின் தன்மைகள் அந்த ஒலிப் பேழைக்குள் (CHIP) கொண்டு அதனதன் தருணத்தில் அந்த இயந்திரங்களை ஓட்டுகின்றது.

இதைப் போன்று தான் மனிதன் தனக்குள் விளைய வைத்த உணர்வின் சத்து கருவிலே இருக்கக்கூடிய குழந்தைக்கு இந்தச் சொல்லின் உணர்வுகள் அங்கே பதிந்துவிடுகின்றது.

கடுமையாகச் சொல்லும் உணர்வுகளைக் கேட்கும் பொழுது நம்மைக் கோப நிலைகளுக்கு ஆளாக்கி நல்ல குணங்களுக்கு எதிர்மறையாக நாம் இயங்கத் தொடங்குகின்றோம்.

இதைப் போல சாபமிடும் பொழுது உன் கை கால்கள் முடமாகிவிடும் என்று சொன்னால் “நீயும் அதுவாகத்தான் ஆகின்றாய்…! என்று அதே உணர்வின் தன்மையை நாமும் திருப்பிப் பேசுகின்றோம்.

இப்படி எதிர்மறையாகப் பேசும் பொழுது சிறுகச் சிறுக விளைந்து இது கொடூர நிலைகளாக வாத நோய்களாகக விளையும்.

அதே சமயம் இப்படிப்பட்ட சாப உணர்வுகள் கருவிலே இருக்கக்கூடிய குழந்தைக்குப் பதிவானால்
1.குழந்தையாகக் கருவுற்றுக் கண்களும் உடலும் உருவாகும் பொழுது
2.நுகர்ந்த உணர்வுக்கொப்ப உறுப்புகளை மாற்றியமைத்து விடுகின்றது.
3.கண்கள் குருடாகவும் முடமான குழந்தையாகவும் அது விளைந்து விடுகின்றது.

ஆனால் குழந்தை தவறு செய்யவில்லை. தாயும் தவறு செய்யவில்லை. உலகில் இயக்கும் உணர்வுகளை உற்றுப் பார்க்கும் பொழுது அந்த உணர்வின் சத்து உடலுக்குள் பதிவாகி விடுகின்றது.

இதைப் போல கருவிலே இருக்கப்படும் பொழுது கடுமையான நோயுற்றவரை அந்தத் தாய் உற்றுப் பார்க்குமே என்றால் அது தாய்க்கு வினையாகச் சேர்கின்றது. ஆனால்
1.கருவிலே இருக்கும் குழந்தைக்கு இது பதிவாகி
2.எந்த வயதில் நோயுற்ற நிலைகளை இங்கே உற்றுப் பார்த்ததோ
3.அதே வயதின் பருவம் குழந்தைக்கு வரும்போது அதே நோய் வந்துவிடும்.
4.குழந்தை எந்தத் தவறும் செய்யவில்லை.

ஆக இவை எல்லாம் மனிதனாக வாழும் நாம் மனிதனான பின் வந்து சேர்ந்ததுமல்ல. ஆனால் கருவிலே விளையும் பொழுது சேர்ந்த உணர்வுகள் அதன் தொடர் வரிசையிலே பூர்வ புண்ணியத்தில் அமைந்தது தான் இந்த வாழ்க்கையில் அழைத்துச் செல்லும்.

பூர்வ புண்ணியமாக அமைந்ததை அது நாம் நுகரும் அனைத்துமே வினையாகச் சேர்த்து வினைக்கு நாயகனாக உருவாக்கி இந்த உணர்வின் செயலாக உருவாக்குகிறது என்பதனை மகரிஷிகளால் விநாயகர் தத்துவத்தில் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

நல்ல மனிதனாகவும் பண்பு கொண்ட மனிதனாகவும் நாம் இருப்பினும் இந்த நிலைகள் தொடர் வரிசையிலே தான் நம்மை இயக்குகிறது.

நாம் எத்தனையோ கோடிச் சரீரங்களில் தீமைகளிலிருந்து மீட்டிடும் உணர்வைச் சேர்த்துச் சேர்த்துத் தீமையை அகற்றிடும் சக்தியாக மனிதனாக வந்தாலும் நம் வாழ்க்கையின் சந்தர்ப்ப பேதத்தால் மற்ற தீமைகளைக் கேட்டுணர்ந்து பார்த்துணர்ந்த பின் இந்த உணர்வுகளே நமக்குள் அதிகமாக விளைந்து விடுகின்றது.

ஆக நாம் காலையிலிருந்து இரவு வரையிலும் தீமைகளைத்தான் பார்க்க முடிகின்றது. நாம் உற்றுப் பார்த்த உணர்வுகள் வினையாகச் சேர்கின்றது. நம் உடலிலே அழுக்குகள் சேர்ந்து கொண்டே வருகின்றது.

இதிலிருந்து எவ்வாறு மீள்வது…? என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்…!

எம்முடைய உபதேசத்தைப் படித்துப் பதிவு செய்தாலே (கண்களால்) பல அற்புதங்களை நீங்கள் காணலாம்…!

hare-krishna-hare-krishna

எம்முடைய உபதேசத்தைப் படித்துப் பதிவு செய்தாலே (கண்களால்) பல அற்புதங்களை நீங்கள் காணலாம்…!

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் நல்லது செய்வதாக எண்ணி ஒரு மனிதன் வேதனைப்படுபதைப் பார்த்து நுகர்ந்து அறிந்து கொள்கின்றீர்கள். அதன் பிறகு அவருக்கு நீங்கள் நல்ல உதவிகளைச் செய்கின்றீர்கள்.

ஆனாலும் உங்கள் நல்லது செய்யும் எண்ணத்திற்குள் அவர் வேதனைப்பட்ட அந்த வேதனையான விஷமான உணர்வுகள் இணைந்து
1.உங்கள் நல்ல அறிவை மறக்கச் செய்கின்றது.
2.இதான் சிறு திரை… சித்திரை…!
3.அந்தச் சிறு திரையை உடனே நீக்க வேண்டும்.

நாம் வேதனைப்படுவோரைப் பார்த்தாலும் அந்த வேதனையான உணர்வுகள் நம் நல்ல எண்ணங்களில் இணைந்திடாது தடுக்க அடுத்து என்ன செய்ய வேண்டும்…?

1.அந்த மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உயிரான ஈசனிடம் வேண்டி
2.இந்த உணர்வினை நம் நல்ல அறிவில் இணைத்து நம் நல்ல அறிவு மங்கிடாது
3.எதனையுமே தெளிவாக அறிந்திடும் தெரிந்திடும் அந்த அறிவை நாம் வளர்த்திடல் வேண்டும்.

இல்லையென்றால் வேதனையான விஷத்தின் தன்மை நல்ல அறிவில் கலந்து விட்டால்
1.மற்றவர்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தாலும் அதை உங்களால் நுகர முடியாது.
2.நுகர்ந்தாலும் உங்கள் வேதனையை நிவர்த்திக்க முடியாது.

ஒரு வேதனைப்பட்ட மனிதனின் உணர்வுகள் நம் நல்ல அறிவை மறைத்த பிற்பாடு இன்னொரு மனிதன் மகிழ்ச்சியாக இருப்பதைப் பார்த்து இதை மாற்ற முடியாது.

அப்படி அதை மாற்ற வேண்டும் என்றால் வேதனையான நஞ்சினை நீக்கிய அந்த மகரிஷியின் உணர்வை நீங்கள் ஏங்கிப் பெற்று இதனுடன் இணைக்க வேண்டும். இணைத்தால் அந்த நஞ்சு ஒடுங்கும்..!

ஆகவே அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறும் தகுதியை ஏற்படுத்தவும் உங்கள் நினைவாற்றலை மகரிஷிகளின் பால் கொண்டு செல்வதற்கும் தான் இந்த உபதேசமே செய்கின்றோம்.

இப்பொழுது இதை நீங்கள் படித்துக் கொண்டு இருக்கும் போதே
1.உங்கள் நினைவாற்றலை மகரிஷிகளுடன் இணைத்துக் கொண்டால்
2.அந்த வேதனையான உணர்வுகளை நுகர்வதைத் தவிர்த்து
3.அருள் உணர்வை நுகர முடியும். மகிழ்ச்சியை உண்டாக்க முடியும்.

தீமைகளை வென்று நஞ்சினை வெல்லும் ஆற்றலை வலு பெறச் செய்வதற்காகத்தான் உங்களுக்குத் தெரியாமலேயே இந்த உபதேசத்தின் வாயிலாக மகரிஷிகளின் சக்தி வாய்ந்த உணர்வுகளை உங்களுக்குள் சேர்ப்பிக்கின்றோம்.

உங்கள் நல்ல அறிவைக் காக்க இது உதவும். இதைப் படித்துப் பதிவு செய்த பின் மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா பெற வேண்டும் என்ற நினைவினைச் செலுத்தினாலே போதும்.

மகரிஷிகளின் அருள் சக்தி உங்களுக்குள் ஊடுருவி உடலுக்குள் சென்று உங்கள் நல்ல அறிவை மறைத்துக் கொண்டு இருக்கும் அந்த நஞ்சான இருளை நீக்கி ஒளியாக மாற்றும்.

திரும்பத் திரும்பச் சொல்கிறோம் என்று எண்ண வேண்டாம். மீண்டும் உங்களை ஞாபகப்படுத்தி அந்த ஆற்றலைப் பெறச் செய்கின்றோம். திருப்பித் திருப்பிச் சொன்னால் தான் உங்களுக்குள் அந்த அர்த்தத்தை உணர முடியும்.

அதாவது தீமைகளையும் துன்பங்களையும் வேதனைகளையும் கண் கொண்டு பார்த்ததும் உங்கள் நல்ல அறிவு இருண்டு விடுகின்றது. உங்கள் செயலாக்கங்கள் மாறுகின்றது. இது வளர்ந்து விட்டால் அந்த நல்ல அறிவின் செயலே முழுமையாக இழந்து விடுகின்றது.

அது எப்படிக் கண்கள் வழியாக உங்களுக்குள் புகுகின்றதோ அதே போல இந்த உபதேசத்தின் வாயிலாக
1.மகரிஷிகளின் உணர்வலைகளை உங்கள் கண்ணின் நினைவலைகளுக்குக் கொண்டு வரச் செய்து
2.உங்கள் கண்ணின் வாயிலாகவே பதியச் செய்து கொண்டிருக்கின்றோம்.
3.உங்களை அறியாமலே பதியச் செய்கின்றோம்.
4.மீண்டும் எண்ணும் போது உங்களை அறியாமலே உங்களுக்குள் பல அற்பதங்கள் நடக்கும்.
5.தீமைகளை அடக்கும் அந்தத் தீமைகளை நீக்கிடும் ஆற்றல் நீங்கள் பெறுகின்றீர்கள்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் இட்ட் கட்டளைப்படி உங்களுக்குள் மெய் ஞானிகளின் உணர்வைத் தூண்டச் செய்து அதைப் பெறச் செய்து கொண்டிருக்கின்றோம். அதை நீங்கள் ஏங்கிப் பெற்று ஒவ்வொரு நொடியிலேயும் உங்கள் நல்ல அறிவைத் தெளிவாக்கிக் கொண்டு வர முடியும்.

அவ்வாறு தெளிவாக்கிக் கொண்ட பின் உங்கள் வாழ்க்கையில் இது முழுமை பெற்றால் பூரண நிலாவாக இருப்பது போல் உங்கள் உடலிலுள்ள உணர்வுகள் அனைத்தும் ஒளியின் சிகரமாக மாறி பிறவியில்லா நிலை அடைய முடியும்.

ஆகவே
1.அந்த நிலையைப் பெறச் செய்வதற்கும்
2.இந்த வாழ்க்கையில் அறியாமல் வரும் தீமைகளை அகற்றி
3.தீமையற்ற செயலாக உடலுக்குள் வளர்த்து
4.நம் எண்ணத்தால் தீமையற்ற செயல்கள் வராதபடி தடுத்து
5.நம்மை அது செயலாக்காதபடி காத்துக் கொள்ள வேண்டும் என்பதற்குத் தான் இதை உபதேசிக்கின்றோம் (ஞானகுரு)…!