இராமாயணத்தில் இராவணன் சீதாவிற்குச் சில நாள் அவகாசம் கொடுக்கின்றான் – விளக்கம்

Ravana Sita

இராமாயணத்தில் இராவணன் சீதாவிற்குச் சில நாள் அவகாசம் கொடுக்கின்றான் – விளக்கம்

இராமாயணம் மகாபாரதம் கந்த புராணம் இவை எல்லாம் நம்மை நாம் அறிந்து நடப்பதற்குத் தான் ஞானிகள் இந்தக் காவியத்தை அமைத்தார்கள். ஆனால் அந்தக் காவியத்தை நம் சுயநலத்திற்காக மாற்றி வாழ்கின்றோம்.

ஞானிகள் மனிதர்கள் நாம் எப்படி வாழ வேண்டும் என்று நமக்குக் காட்டினார்கள். அதையே தலை கீழாக மாற்றி சீதா காட்டுக்குள் போய்க் கஷ்டப்பட்டது. இராமன் எத்தனையோ வேலைகளைச் செய்தான். இராவணன் பல கெடுதல்களைச் செய்தான் என்று நாம் சொல்கின்றோம்.

வேதனைப்படும் உணர்வுகளை நாம் நுகர்ந்து உடலுக்குள் போனால் வாலியாகி விடுகின்றது. வேதனைப்படுபவரை நாம் பார்த்தவுடனே அது வாலி. அதனுடைய வலிமை நமக்குள் அதிகமாகிவிடுகின்றது.

நம்மிடம் இருக்கும் நல்ல குணத்துடன் வேதனைப்படுபவருக்கு உதவி செய்ய வேண்டும் என்று விரும்புகின்றோம். அவன் உடலில் பட்ட வேதனையான உணர்வுகளை நாம் நுகர்ந்தவுடனே நம் உயிரிலே படுகின்றது.

1.அந்த வேகமான உணர்வுகள் நம் உயிரிலே பட்டுப் பிரணவமாகி
2.“ஓ…” என்று உணர்வின் ஒலி அலைகளை எழுப்புகின்றது.
3.“சங்கு..” அந்தச் சப்தம்… உடலுக்குள் பரவுகின்றது.
4.அதாவது அந்த வேதனையான உணர்ச்சிகள் நம் உடல் முழுவதற்கும் பரவுகின்றது.

உதாரணமாக மின்சாரத்தைப் பயன்படுத்தி விளக்குகளைப் பொருத்துகின்றோம். அந்த இணைப்பில் எந்த வகைப் பல்பைப் (விளக்கு) போடுகின்றமோ உடனே அதனதன் நிறமான வெளிச்சமாக மாற்றுகின்றது.

அதே மாதிரித்தான் ஒருவன் வேதனைப்படுவதைப் பார்த்தவுடனே நம் உடலிலுள்ள வேதனை அணுக்களுக்கு ஒரு உற்சாகம் வந்து விடுகின்றது. வேகமாக இழுக்கின்றது.

ஏனென்றால் நம் உயிர் எலக்ட்ரிக். மின் ஆற்றல் கொண்டது. அதில் நமக்குள் இழுத்துக் கொண்ட உணர்வுகளை எலக்ட்ரானிக்காக உணர்ச்சிகளாக மாற்றுகின்றது.

அதாவது உயிருக்குள் நாம் எந்த உணர்வை இணைக்கின்றமோ அந்தச் சப்தம் நிச்சயம் அதை இயக்கச் செய்கின்றது.

அதை எல்லாம் வலு சேர்த்து உடலுக்குள் கொண்டு போகின்றது. கொண்டு போனவுடனே இது வாலி. நம் உடலுக்குள் போனவுடனே கெட்ட அணுக்கள் எல்லாம் வலுவாகின்றது.

அதற்குப் பக்கத்தில் இருக்கின்ற நல்ல அணுக்கள் எல்லாம் என்ன செய்யும்…? ரொம்பப் பலவீனம் அடையும். அதனுடைய பலம் குறைந்து விடும்.

கெட்ட அணுக்கள் பலமானவுடனே நல்ல அணுக்களைச் சாப்பிடுகின்றது. வேதனை என்ற உணர்வுகளை எடுத்து அது உடலாகிவிட்டால் அதன் வலுவின் தன்மை கொண்டு உடலுக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்களைக் கொன்று சாப்பிடும்.

1.இராவணன் என்ன சொல்கின்றான்…?
2.உடலுக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்களைத் தான் சொன்னபடி கேட்கவில்லை என்றால்
3.“கொன்று தின்றுவிடுவேன்…!” என்கின்றான்.

இராவணன் – அதாவது தசப்பிரியன். நம் உடல் என்ன செய்கின்றது…? இந்த அரக்க குணம் வரப்போகும் போது இராவணனாக மாற்றுகின்றது.

ஏனென்றால் விஷத்தின் தன்மை ஆன பிற்பாடு அதையே (வேதனையையே) வளர்ப்பதற்குத் தசப்பிரியனாகின்றது. இதற்கு இராவணன் என்று காரணப் பெயர் வைக்கின்றார்கள்.

அந்த வேதனைப்படும் உணர்வை நம் உடல் முழுவதும் பரவ விட்டால் அது மற்ற குணங்களைக் கொன்று சாப்பிடும் இரண்யனாக மாறி அந்த உணர்வு உடலாக்கப்படும் போது இராவணனாக மாறுகின்றது. அதுதான் தசப்பிரியன். உடலை வளர்க்கும் தன்மை வந்து விடுகின்றது.

எதன் விஷத்தின் தன்மை வருகின்றதோ நல்ல குணங்களை எல்லாம் கொன்றுவிடும். பின் மனிதனல்லாத உருவைத்தான் பெற முடியும்.

இராமாயணத்தில் இராவணன் சீதாவிடம் சொல்வான். உனக்குக் கொஞ்ச நாள் அவகாசம் தருகின்றேன். என் ஆசைக்கு இணங்கிவிடு.

நான் சொன்னபடி கேட்கவில்லை என்றால்… அதாவது விஷத்திற்கு இணங்கவில்லை என்றால் உன்னைக் கொன்று சாப்பிட்டு விடுவேன் என்று சொல்கிறான்.

இதையெல்லாம் நமக்குப் புரிகிற மாதிரித் தான் இராமயாணக் காவியத்தில் கொடுக்கின்றார்கள்.

ஆகவே வேதனைப்படுவோர் உணர்வுகளை நமக்குள் உட்புகாதபடி தடுத்துப் பழகுதல் வேண்டும். அதற்குத் தான் குருநாதர் காட்டிய அருள் வழியில் உங்களுக்குத் துருவ நட்சத்திரத்தைப் பற்றி உபதேசித்து வருகின்றோம்.

அகண்ட அண்டத்தில் சிறிதளவு விஷம் வந்தாலும் அதைத் துருவ நட்சத்திரம் ஒளியின் சுடராக மாற்றும் ஆற்றல் கொண்டது.

1.வேதனைப்பட்டோருக்கு நாம் உதவி செய்தாலும்
2.அடுத்த கணம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நுகர்ந்து
3.சிறிதளவு உடலுக்குள் சென்ற வேதனை உணர்வு அணுவாக உருவாகாதபடி தடுக்க வேண்டும்.
4.அதை ஒளியாக மாற்ற வேண்டும்.

அதைப் பழக்கப்படுத்தி விட்டால் இந்த உடலுக்குப் பின் இனி பிறவி இல்லை என்ற நிலை அடையலாம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.