காவடி ஆட்டங்களில் உள்ள சில உண்மையின் நிலைகள்

kaavadi

“காவடி ஆட்டங்களில்…” உள்ள சில உண்மையின் நிலைகள்

 

ஒவ்வொரு ஆலயத்திலும் மக்கள் நலம் பெற வேண்டும் என்று தன்னையே அர்ப்பணித்து மக்களின் நலனுக்காகவே தன் எண்ணத்தை ஒன்றச் செய்து சில தவயோகிகள் ஜீவனை விட்டுள்ளார்கள்.

அவர்கள் செய்த அற்புதம்தான் சிலர் உடல்களிலே அத்தகைய ஆன்மாக்கள் புகுந்து கொண்ட பின்
1.நாக்கை அறுத்து கொண்டார்.
2.என்ன அதிசயம்..! “உடனே ஒட்டிக் கொண்டது…” என்று எல்லாம் சொல்வார்கள்.

அதாவது எந்தத் தவத்தை அவர்கள் செய்தார்களோ அதைப் போல் பக்தி கொண்ட நிலையில் மந்திரங்களைச் சொல்பவர்கள் உடலில் அந்த ஆன்மாக்கள் புகுந்தபின் இப்படி அதிசயம் வருகின்றது.

பழனியில் எடுத்துக் கொண்டால் மச்சக்காவடி எடுப்பார்கள். மச்சக்காவடி எடுத்துக் கொண்டு இங்கே போவார்கள் அங்கே போவார்கள் இதைச் செய்வார்கள்.

ஏனென்றால் முருகன் கந்த சஷ்டியைப் படிக்கும் போது மந்திர ஒலிகளைச் சொல்லித் தனக்குள் அதை உருவாக்கிக் கொள்வார்கள். மணலை எடுப்பார்கள் கல்கண்டாக வரும்.

இதைப் போல பல நிலைகளைச் செய்து முருகன் எனக்குத் திருவருள் கொடுத்தான் என்பார்கள். மாந்ரீகத் தன்மைகள் வரப்போகும் போது தெய்வீகப் பண்பில் இதையும் இவ்வாறு செய்கின்றார்கள்.

மச்சக்காவடி சேவல் காவடி புறாக் காவடி என்று மஞ்சளைக் கலந்து எல்லாம் வைத்துக் கொண்டு வருவார்கள். பின் இந்த உணர்வுகள் எல்லாம் சுற்றி வந்த பின்
1.ஒரு குறிப்பிட்ட மந்திரத்தைச் சொல்லும் போது
2.மீண்டும் இந்தப் புறா வரும்.

இன்றும் சில இடங்களில் பார்க்கலாம். “ஒரு மனிதனைப் பெட்டிக்குள் அடைத்து வைத்து…!” அதற்கு வேண்டிய பாதுகாப்பினைக் கொடுத்து விட்டு
1.அடுத்து நான் இந்த ஊரில் வந்து எழுந்திருக்கின்றேன் என்று
2.தண்ணீருக்குள் மூழ்க வைத்து விடுகின்றார்கள்.

இங்கே எந்த நேரத்தில் தண்ணீருக்குள் மூழ்க வைக்கின்றார்களோ அதே நேரத்தில் இன்னொரு இடத்தில் இத்தனை மணி என்று கடிகாரப்படி சொன்னது போல எழுந்து வருவார். உருவத்தை வைத்து அரசு மூலமாகக் கேரளாவில் காட்டுகின்றனர்.

இதே மாதிரி மேஜிக் வேலை செய்யும் போது ஒரு கட்டிடத்தைக் கட்டுகின்றான்.

கட்டிடத்திற்குள் இருக்கும் அதே மனிதன் அடுத்த நிமிடம் பார்க்கும் போது இவன் வெளியில் ரோட்டிலிருந்து நடந்து வருகின்றான். மனிதன் தான் அவ்வாறு செய்கின்றான்.
1.இந்த உணர்வின் ஒலியைக் கற்றுக் கொண்ட பின்
2.ஆவியின் நிலையாக மாற முடியும்.
3.மீண்டும் அதை இன்னொரு இடத்தில் குவிக்கவும் முடியும்.

இதைப் போன்று மந்திர ஒலிகளைப் பற்றி அறிந்தோ அறியாமலேயோ ஒருவர் கற்று உணர்ந்து இருப்பார்.

நான் முருகனை நினைத்துக் கற்றேன். அவன் எனக்கு திருவருள் கொடுத்தான் என்று இப்படியே வாழ்ந்து கடைசியில் அவர் மடிந்து இருப்பார்.

அவர் சொன்ன அதே மந்திர வாக்கியத்தை அடுத்தவரும் சொல்லி ஜெபித்தார்கள் என்றால் அந்த ஆன்மா இங்கே வரும்.

இவருக்குத் தெரியாமலே அவர் செய்த செயலை எல்லாம் இவரும் செய்ய ஆரம்பிப்பார். ஆஹா…! முருகன் எனக்குள் பல அற்புதங்களைச் செய்கிறான். மணலைக் கற்கண்டாக வர வைத்தான் என்றெல்லாம் சொல்வார்கள்.

இதைத்தான் “அற்புதம்…!” என்று நாம் எண்ணுகின்றோம்.

ஆனால் அந்தக் கற்கண்டு எவ்வளவு சுவையோ அதைப் போல
1.அந்த அருள் ஞானிகளின் உணர்வை நமக்குள் எடுத்து வளர்த்து
2.நம் சொல்லால் மற்றவர்களை மகிழச் செய்ய வேண்டும்
3.அந்தச் சக்தி நாங்கள் பெறவேண்டும் யாரும் நினைப்பது இல்லை.

இந்த மச்சக் காவடிக்காக வேண்டி சுற்றி சுற்றி சுற்றிப் பார்த்தேன் அப்புறம் கடைசியில் ஒரு இடத்தில் மீன் வந்தது. சேவல் காவடி எடுத்து கொண்டு வந்தார்கள், அதுவும் எப்படி என்கின்ற வகையில் ஆர்வத்துடன் பார்க்கப் போவேன்.

ஏனென்றால் ஆரம்பத்தில் நான் முருகனைப் பற்றி மிகவும் புகழ்ந்து பேசுவேன். ஏனென்றால் நான் (ஞானகுரு) மதுரைக்காரன். பழனியில் சம்பந்தம் செய்து கொண்ட இடம்.

விழா நேரத்தில் எல்லாக் காவடியையும் சுற்றிச் சுற்றிச் சுற்றிப் பார்ப்பேன், அது எத்தனையோ நாள் ஆகும். அதையே நான் சுற்றிக் கொண்டிருப்பேன். (சரியாக வீட்டிற்குச் சென்று சாப்பிடுவதில்லை)

நேர நேரத்திற்குச் சாப்பிட்டுவீட்டு அப்புறம் போய்க் காவடியைப் பார்க்கலாம் அல்லவா என்று வீட்டிலே சண்டை பிடிப்பார்கள். இல்லை… அதை எப்படியும் பார்த்து விட்டுத்தான் வருவேன் என்று நான் சொல்லிக் கொண்டு இருப்பேன்.

ஏனென்றால்
1.தெய்வீகப் போர்வை கொண்டு மனிதனை நம்ப வைப்பதும்
2.அந்த தெய்வீகப் போர்வையில் பிறருடைய ஆசைகளை ஊட்டுவதும்
3.அதை வணங்கினால் “நமக்குப் பொருள் கொடுப்பான்…!” என்ற நிலைகளில் தான் உருவாக்கி வைத்துள்ளார்கள்.

அந்தக் காவடி எடுக்கும் நிலையில் விளம்பரப்படுத்தி நீ இன்னென்னதைச் செய்தாய் என்றால் முருகன் உன்னைக் காப்பாற்றுவான். செல்வத்தைக் கொடுப்பான் என்று உடல் இச்சைக்குத் தான் மாற்றி வைத்துள்ளார்கள்.

ஆனால் நாம் இச்சைப்பட வேண்டியது எது…?

வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற்று மகிழ்ந்து வாழ முடியும் என்றுதான் ஞானிகள் காவடி ஆட்டத்தைக் காட்டினார்கள்.

1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற நாம் இச்சைப்பட வேண்டும்.
2.அந்த உணர்வின் சக்தியை நமக்குள் கிரியையாக்க வேண்டும்.
3.அந்த ஞானிகள் எந்த மெய் ஒளியைப் பெற்றார்களோ
4.அந்த ஞானத்தின் சக்தியாக நம் உடலை இயக்க வேண்டும்
5.மெய் உணர்வுகளை நமக்குள் விளைய வைத்து மகரிஷிகள் வாழும் அந்த “விண்ணுலகை அடைய வேண்டும்…!”

Leave a Reply