ஈஸ்வரபட்டரைக் குருவாகப் பெற்றது உங்களுடைய அதிர்ஷ்டம்… அவர் மனிதரல்ல…! என்றார் வேத பாட ஆசிரியர்

eswaraya-gurudevar

ஈஸ்வரபட்டரைக் குருவாகப் பெற்றது உங்களுடைய அதிர்ஷ்டம்… அவர் மனிதரல்ல…! என்றார் வேத பாட ஆசிரியர்

ஒரு முறை குருநாதர் ரிக் வேதத்தைத் தெளிவாகப் பாடிக் காண்பித்தார். பின் அதை அப்படியே திருப்பித் தலை கீழாகப் பாடிக் காண்பித்தார்.

வேதங்கள் என்றால் என்ன என்று தெளிவாக விளக்கிக் கூறினார். குருநாதரும் (ஈஸ்வரபட்டர்) ஒரு பிராமணர்தான்.

நானும் (ஞானகுரு) குருநாதர் எங்கள் வீட்டுக்கு எதிரில் தெருவில் நின்று பேசிக் கொண்டிருக்கும் பொழுது ரிக் வேதத்தைப் பாடமாக சொல்லித்தரும் ஆசிரியர் ஒருவர் அந்தப் பக்கமாக வந்தார்.

சாலையில் சென்று கொண்டிருந்த ஆசிரியரை “இங்கே வாடா…!” என்று தலை முடியைப் பிடித்து இழுத்துக் கொண்டு வந்தார் குருநாதர்.

எமக்கு முன்னாலேயே ஆசிரியருக்கு ஓங்கி ஒரு அறை கொடுத்தார் குருநாதர். “ஏன்டா அங்கே தவறு செய்தாய்…?” என்று கேட்டார்.

ரிக் வேத ஆசிரியர் முழித்தார்…!

“அந்த இடத்தில் இந்த மந்திரத்தைச் சொன்னாயே…, அது எப்படி என்று எனக்குச் சொல்…” என்று கேட்டார் குருநாதர்.

பிறகு குருநாதரே அந்த மந்திரங்களைத் தலை கீழாகச் சுருதி மாறாதபடி பாடிக் காண்பித்தார்.

ரிக் வேத ஆசிரியரோ… “திரு…திரு…”வென்று முழித்தார்.

எமக்கு இவர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள்… பாடிக் கொள்கிறார்கள் என்று தெரியவில்லை. அவர்கள் பேசுவது அவர்களுக்கு மட்டுமே புரிகின்றது.

“இனி இது மாதிரித் தவறு செய்யாதே…!” என்று ரிக் வேத ஆசிரியரை அடித்து “போ…” என்று கூறி விட்டார். ரிக் வேத ஆசிரியர் அங்கிருந்து போனால் போதும் என்று வேகமாகப் போய்விட்டார்.

பிறகு குருநாதர் எம்மிடம்… இவன் திருடன்… காசு வாங்குவதற்காக மந்திரத்தையே தவறாகச் சொல்கிறான்…! என்று சொன்னார்.

மறு நாள் குருநாதரிடம் அடி வாங்கின ரிக் வேத ஆசிரியர் எம்மைத் தேடி வந்தார். குருநாதரைப் பற்றி எம்மிடம் சொல்லத் தொடங்கினார்.
1.இவர் மனிதரே இல்லை… ஒரு “ரிஷி பிண்டம்…!”
2.இந்த வேதத்தை யாரும் இப்படிச் சொல்லவே முடியாது
3.ஆனால் சொல் பிழையில்லாதபடி சரியான சுருதியுடன் சொல்கிறார்.

அவர் என்னை அடித்த அடியில் நான் செய்த தவறுகள் எல்லாம் ஓடியே போய்விட்டது. இனி பாடம் சொல்லித் தரும் வேலைக்கே செல்ல மாட்டேன்.

என்னுடைய ஊர் உடுப்பி. நான் என் ஊருக்குச் சென்று அங்கு வேறு ஏதாவது வேலை பார்த்துப் பிழைத்துக் கொள்கிறேன்.
1.உங்களுடைய அதிர்ஷ்டம்… நீங்கள் அவரை குருவாக பெற்றிருக்கிறீர்கள்.
2.நீங்கள் எனக்கு “ஆசீர்வாதம் செய்யுங்கள்…!” என்று கேட்டார்.

எனக்குச் சமையல் தொழில் தெரியும். என்னுடைய சமையல் ருசியாக அமைய வேண்டும் என்று ஆசீர்வாதம் கொடுங்கள் என்று கேட்டார்.

யாம் ஒரு ரூபாயைக் கையில் கொடுத்து, ஆசீர்வாதம் கொடுத்து போய் வரச்சொன்னோம். இது நடந்த நிகழ்ச்சி.

1.உலகில் எத்தனை நிலைகள் இருக்கின்றதோ – அத்தனையையும்
2.எந்தெந்த வழியில் எமக்கு உணர்த்த வேண்டுமோ அத்தனை வழிகளிலும் எமக்கு உணர்த்தினார் குருநாதர்.

அதே சமயத்தில் மின் கம்பத்தை அடிப்பார். தொலைபேசிக் கம்பத்தை அடிப்பார். மின் கம்பத்தை அடித்துக் கொண்டே
1.இந்த லைன் (LINE) அந்த லைன் என்பார்.
2.டேய்…! மிளகாய் ஒரு லட்சம்… காரம் கோடி…கோடி… என்பார்.

எமக்கு ஒன்றுமே புரியாது. பைத்தியம் பிடித்தது போன்று பேசிக் கொண்டே வருவார். குருநாதர் எல்லா பாஷையிலும் பேசுவார். “கோடி கோடி” என்பார்.

சாமி கோடி இங்கே இருக்கிறது என்போம்.

அந்தக் கோடி இல்லைடா…! என்பார். “ஈகோடி…!” மிளகாய் கோடி… காரம் கோடி…” என்பார். இன்னும் என்னென்னவோ கோடி என்பார். அர்த்தம் ஒன்றுமே புரியாது.

பிறகு சொல்வார்…! ஒரு நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வுகள் ஒன்றோடொன்று கலந்து கலந்து “கோடி கோடி” உணர்வுகளாக மாறுகின்றது என்பதை விளக்குவார்.

நட்சத்திரங்களிலிருந்து வெளிப்படும் உணர்வுகள் மின்னலாகப் பாயும் பொழுது அதனின் உணர்வுகள் எப்படிச் சேர்கின்றது…? எப்படி மாறுகின்றது…? என்பதைச் சொல்லாகவும் உள்ளுணர்வாக உணர்த்தவும் செய்தார்.
1.முதலில் சொல்லிவிடுவார் (நான் புரியவில்லையே…! என்று எண்ணுவேன்)
2.பின்னர் அதை அப்படியே அனுபவபூர்வமாகப் புரிய வைப்பார்.

குருநாதர் எமக்குக் கொடுத்த அருளுணர்வுகளை யாம் உங்களிடத்தில் அப்படியே பதிய வைக்கின்றோம்.
1.சந்தர்ப்பம் வரும் போது இதன் நினைவு உங்களிடம் வரும்.
2.அப்பொழுது இதன் உணர்வுகள் உங்களிடத்தில் தீமைகளை அகற்றக்கூடிய சக்தியாக இயங்கும்
3.குருநாதரை எண்ணித் துருவ நட்சத்திரத்தை எண்ணினால் யாம் பதிவு செய்த நிலைகள் அத்தனையும் உங்கள் நினைவுக்கு வரும்.

வேட்டைக்குச் சென்ற என்னைக் “கறி சாப்பிடும் பழக்கத்தையே” விடச் செய்தார் குருநாதர் – எப்படி…!

Image

Great sage Agastya Rishi

வேட்டைக்குச் சென்ற என்னைக் “கறி சாப்பிடும் பழக்கத்தையே” விடச் செய்தார் குருநாதர் – எப்படி…!

 

ஆரம்பத்தில் நான் (ஞானகுரு) என்ன செய்வேன் தெரியுமா..? வேட்டைக்குப் போவேன். வேட்டைக்குப் போனால் இரண்டு மூன்று நாட்கள் அங்கே தங்கி இருப்போம்.

போகும் பொழுது கோழி புறா எல்லாம் கொண்டு போவோம். ஏனென்றால் வேட்டை ஒன்றும் கிடைக்கவில்லை என்றால் கொண்டு சென்ற கோழியை வேக வைத்துச் சாப்பிடுவது.

பச்சைப் புறாவில் சத்து நிறைய இருக்கிறது என்று சொல்லி அங்கேயே அடித்துச் சாப்பிடுவது. வீட்டிற்குக் கூட கொண்டு வருவது இல்லை.

எல்லோரும் எனக்கு உனக்கு என்று கேட்பார்கள்…! இந்த மாதிரி நன்றாகச் சாப்பிடுவது தான் என்னுடைய பழக்கமாக இருந்தது.

பின்னாட்களில் குருநாதர் சொன்னார். ஏண்டா..! இத்தனை பறவைகளையும் கொன்று சாப்பிட்டு இருக்கிறாய். அதெல்லாம் மனிதனாகப் பிறக்கப் போகிறது.

ஆனால் நீ எங்கே போய் அடுத்துப் பிறப்பாய் தெரியுமாடா…? என்று கேட்டார்.

மானைச் சுட்டுச் சாப்பிட்டாய். அது எத்தனை இம்சைப்பட்டு இது உனக்குள் வந்திருக்கிறது தெரியுமா…! அது இம்சைப் பட்டதனால் அந்த உயிர் உன்னிடம் வந்தது.

அது அணுக்களாகி நீ செத்த பிற்பாடு உன் சிநேகிதனின் ஈர்ப்புக்குள் அடுத்து அதன் வழியில் மனிதனாகப் பிறக்கப் போகிறது. நீ மானாகவோ புறாவாகவோ கோழியாகவோ தான் பிறப்பாய் என்றார்.

இப்படிச் சொல்கிறார் குருநாதர். எனக்கு ஒன்றும் புரியவில்லை.

அப்புறம் நிறையச் சாப்பிடுடா…! என்றார்.

நிறையச் சாப்பிட்டால் அந்த உடலாகப் போவேன் என்று சொன்னீர்களே என்றேன் நான்.

அப்படியா உனக்குப் பிடிக்க வில்லை என்றால் விட்டு விடு. விட்டுவிட வேண்டும் என்று நீ நினைத்தாய் என்றாலும் உன் உடலில் விளைந்த அணுக்கள் அதற்கு அந்த ருசி வேண்டும். அது ஆசையைத் தூண்டும்.

நீ சாப்பிடாமல் இருந்தாலும் கறி சாப்பிட முடியவில்லையே என்ற அந்த (எண்ணம்) ஏக்கம் வந்தால் போதும்…! ஒரு கிலோ சாப்பிடுவதற்குப் பதில் பத்து கிலோ சாப்பிட்ட மாதிரி ஆகும். காற்றிலிருந்து அந்த சக்தி உனக்குள் வரும் என்றார் குருநாதர்.

இப்படிக் குருநாதர் சொல்வது எல்லாவற்றையும் பார்த்தவுடனே “ஏன்டா இவரிடம் சிக்கினோம்…!” என்று எனக்குப் பயம் ஜாஸ்தியாகி விட்டது.

இவ்வளவு விஷயங்கள் சொல்கிறார். கடைசியில் நாம் ஆடாகவோ மாடாகவோ கோழியாகவோ மீனாகவோ பிறந்தால் என்ன செய்வது?

ஆகவே நீ கறி சாப்பிடுவதை நிறுத்திவிட வேண்டும் என்று நினைத்தாலும் கூட பார்த்தாலோ அல்லது அந்த வாசனையை நுகர்ந்தாலோ சாப்பிட வேண்டும் என்ற ஆசை உனக்கு வருகிறதல்லவா…!
1.டேய்…! நீ பத்து கிலோ கறி சாப்பிடுகிறாயடா…! என்பார்.
2.எனக்கு இப்படி அனுபவபூர்வமாகக் கொடுத்தார்.
3.அதைத் தடுக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்? என்று வினா எழுப்புகின்றார் குருநாதர்.

நம் உடலில் ஒரு நோய் வந்துவிட்டால் அதைத் தடுக்க அதற்கு மாறான நிலைகள் கொண்ட ஒரு மருந்தைத் தயார் செய்து அதை உட்கொள்கின்றோம்.

அதற்குச் சக்தி கொடுத்து உடலுக்குள் போனவுடனே உடலில் நோயின் அணுக்களை மறித்து அதை வளரவிடாது செய்து நல்ல அணுக்களைப் பெருக்குகின்றது. அப்போது அது “தனி…”

இதைப் போல அனைத்து விஷங்களையும் வென்றவன் அகஸ்தியன். உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாகித் துருவ நட்சத்திரமாக இன்றும் இருக்கின்றான்.

அந்த உணர்வை நீ எடுத்தால் கறியை உட்கொள்ளும் அந்த விஷமான உணர்வுகள் அது கொஞ்சம் கொஞ்சமாக மாறும். விஷத்தை வென்ற அகஸ்தியனின் உணர்வு வரும் போது உன் உடலிலுள்ள விஷத்தை அடக்கி விடும் என்கிறார் குருநாதர்.

அகஸ்தியன் உணர்வை உனக்குள் எடுத்து வளர்த்துக் கொண்ட பின் கறி சாப்பிட வேண்டும் என்று நீ நினைத்தாலும் கூட அது உனக்கு ஒத்துக் கொள்ளாது.

நோய்க்கு மருந்து சாப்பிட்டவுடன் நோயின் அணுக்களின் செயலாக்கங்கள் ஒடுங்கி நோய் விலகுகின்றதோ அது போல அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி உனக்குள் அதிகமாகும் பொழுது மாமிசம் சாப்பிடும் உணர்வின் விஷங்கள் ஒடுங்கிவிடும்.
1.அந்தப் பழக்கம் தன்னாலே அகலும்…
2.அந்த ஆசையே வராது…!

அதற்கப்புறம் அதைப் பார்த்தாலோ மாமிசத்தின் மணத்தை நுகர்ந்தாலோ “ஒதுக்கித் தள்ளும் உணர்வு தான் (வாந்தி) வரும்…” என்று தெளிவாக்கினார்.

மதங்களைப் பற்றிய உண்மை நிலைகள் – மெய் ஞானிகள் அன்று சொன்னது

Image

நாம் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள்

மதங்களைப் பற்றிய உண்மை நிலைகள் – மெய் ஞானிகள் அன்று சொன்னது

 

ஞானிகள் கொடுத்த சாஸ்திரங்களில் உள்ள உண்மைகள் காலத்தால் மறைந்துவிட்டது. எல்லாம் சாங்கிய சாஸ்திரமாகிப் போய்விட்டது.

விநாயகருக்கு அருகம்புல்லை மட்டும் இரண்டு வைத்தால் போதும்…! ஏற்றுக் கொள்வார். அதுவும் முடியாவிட்டால் பக்தியோடு பக்கத்தில் இருக்கும் தழைகளைப் போட்டு “இந்தாப்பா உனக்குச் சாப்பாடு…!” என்று சொன்னால் அதையும் ஏற்றுக் கொள்வார் என்று இப்படி மாற்றி அமைத்துவிட்டார்கள்.

அரசன் தான் வாழ உருவாக்கிய நிலைகளில் “சரணாகதி தத்துவமாகத்தான்…” இன்று இயக்கப்பட்டு அதைக் காக்கும் நிலைகளில் தான் எல்லா மதங்களுமே செயல்பட்டுக் கொண்டுள்ளது.

அதைப் பாதுகாக்கும் குருமார்களாகத் தான் இருக்கிறார்களே தவிர மெய் ஞானிகள் காட்டிய நிலைகளில் இந்து என்றோ முஸ்லீம் என்றோ கிறிஸ்துவன் என்றோ அல்லது மற்ற நிலைகளிலோ எதுவுமே கிடையாது.
1.உணர்வுக்கொப்ப உணர்ச்சியும்
2.உணர்ச்சிக்கொப்ப இயக்கமும் (சொல் செயல்) என்ற நிலைகள் தான் ஞானிகளால் உணர்த்தப்பட்டது.

ஆண்டவன் இப்படிச் சொல்லி இருக்கிறார் என்று ஒரு சாரார் உணர்வைப் பதிவு செய்கிறார்கள். அடுத்து கடவுள் எங்களுக்கு இப்படிச் சொல்கிறார் என்று இன்னொரு சாரார் சொல்கிறார்கள்.

இந்த உணர்வை எடுத்துக் கொண்ட பின் இந்த இருவருக்கும் ஒத்துக் கொள்வதில்லை.

கர்த்தர் வான் வெளியில் இருந்து எடுத்துக் கொண்டு வந்தார் என்று சொல்கிறார்கள். அந்த மெய் ஞானிகளின் உண்மை வழிப்படி நமது உயிரே கர்த்தராகிறது.

“ஆண்டவா…” என்று சொல்கிறார்கள். எதனின் உணர்வை எடுத்தோமோ அது நம் உடலாகிறது.
1.இந்த உடலை ஆள்வது யார்?
2.நமது உயிர் தான் – “ஆண்டவா…!”

கட + உள் = கடவுள் – ஆகவே உள் நின்று நம்மை இயக்கி உணர்வை உடலாக உருவாக்குவது “கடவுள்…” உருவாக்குவதால் ”ஈஸ்வரா…” என்று உயிரைச் சொல்கிறார்கள்.

உருவாக்கிய உணர்வுக்குள் நம்மை ஆளும் ஆண்டவனாக இருக்கிறான். நம்மை ஆள்வது அவன் தான்.

நாம் எண்ணிய உணர்வை நுகர்ந்து அந்த உணர்வின் தன்மையை இரையாக்குகிறார்.
1.இரையின் உணர்வு உடலாகிறது.
2.உணர்வின் இயக்கம் செயலாகிறது… “தெய்வமாகிறது…!” என்று
3.ஆதியிலே தோன்றிய “அகஸ்தியன்” தெளிவாகக் கூறியுள்ளார்.

இதைச் சீராகப் புரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் அந்த மெய் ஞானிகள் சொன்ன உணர்வுகளை இணைத்து இணைத்து நீங்கள் பார்த்தீர்கள் என்றால் எல்லாம் ஒன்று போல் வரும்.

கார்… ரேடியோ… போன்ற உபகரணங்களில் அதற்குள் இருக்கும் உறுப்புகளைத் தனித் தனியே செய்கின்றார்கள். அதில் இந்தெந்த உறுப்புகள் (பாகங்கள்) இந்தெந்த வேலைகள் செய்யும் என்று உருவாக்கி வைத்து விடுகிறார்கள்.

அதைச் சேர்த்து இணைத்து முழுமையாக ஆன பிறகு அது அது அதனதன் வேலைகளைச் செய்யும். அந்த உபகரணம் சீராக இயங்கும்.

உதாரணமாக ஒரு மைக் (MIC) வைத்துப் பேசினால் அங்கே சப்தம் வெளி வருகிறது. ஒலியைப் பெருக்கும் ஆம்ப்ளிபையர் (AMPLIFIER) ஒன்றோடொன்று சேர்த்து ட்ரான்சாக்சன் (TRANSACTION) செய்யும். ஆனால்
1.அதிலே கொஞ்சம் (அழுத்தமாகி எதிர் நிலையானால்) ரிப்பேர் ஆனால்
2.“கரா… புரா… உஸ்ஸ்ஸ்… உய்ய்ய்…” என்று சப்தம் எழுப்பிவிடும்
3.மைக்கில் யார் பெசினாலும் கேட்க முடியாது அர்த்தமும் ஆகாது
4.மீறிக் கேட்டாலும் எரிச்சலாகிவிடும்

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்கு (ஞானகுரு) உணர்த்திய அருள் வழிப்படி அந்த ஞானிகளும் மகரிஷிகளும் கண்டுணர்ந்த இயற்கையின் உண்மையின் நிலைகளை உங்களுக்குள் தெளிவாக்கிக் கொண்டே வருகின்றோம்.

ஆனால் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

நாம் சாமியை இப்படிக் கும்பிட்டோம்…! “இவர் என்ன இப்படிச் சொல்கிறாரே…?” என்று நினைத்தால் “கரா…புரா…” ஆகிப் போய் விடுகிறது.

நாம் விநாயகரைக் களிமண்ணால் செய்து (விநாயகர் சதுர்த்தி அன்று) எப்படியெல்லாம் கும்பிட்டோமே…, “இவர் இப்படிச் சொல்கிறாரே” என்று
1.இரண்டையும் கிராஸ் (CROSS) பண்ணி நினைத்தீர்களானால்
2.நான் சொல்வதை நீங்கள் CROSS பண்ணிக் கொண்டே..
3.”கரா..புரா…” என்று பண்ணிக் கொண்டே இருப்பீர்கள்.
4.அர்த்தமே உங்களுக்கு ஆகாது.

அகவே இயற்கையின் உண்மையின் நிலைகளை நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். மெய் ஞானிகளின் உணர்வுகளை முதலில் பதிவு செய்துக் கொள்ளுங்கள்.

அதைப் பதிவு செய்த பின் உங்கள் வாழ்க்கையில் எது… எப்படி…? என்ற நிலைகள் தெளிவாகத் தெரியும். நான் இப்போது சொல்வதை அப்படியே கிரகித்து (RECORD) செய்து கொள்ளுங்கள்.

அதன் பிறகு உங்கள் உடலில் இருக்கக்கூடிய நிலைகள்
1.உங்கள் வாழ்க்கையின் சந்தர்ப்பங்களில் எந்தெந்தக் குணங்கள்
2.ஏன் அப்படி வந்தது என்று சிந்தித்துப் பார்த்தால்
3.இது கெட்டது… இது நல்லது…! என்று உங்களால் அறிய முடியும்.

உங்களை நீங்கள் அறிந்து கொள்ளத் தான் இதையெல்லாம் கூறுகிறேன். ஏனென்றால் இயற்கை எப்படி நம்மை வளர்க்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

ஞானிகளும் மகரிஷிகளும் சொன்ன சாஸ்திரப்படி நாம் வாழ்ந்தால் என்றுமே அழியா நிலையாக மரணமில்லாப் பெரு வாழ்வாக ஒளியின் சரீரமாக வாழ முடியும்.