மகரிஷிகள் உணர்த்திய “தீமையை அடக்கியாளச் செய்யும் தியானம்”

Life meditation

மகரிஷிகள் உணர்த்திய “தீமையை அடக்கியாளச் செய்யும் தியானம்”

நாம் தங்க நகை செய்யும்போது அதிலே செம்பும் வெள்ளியும் இணைத்துத் தான் செய்கின்றோம். ஆனால் அடுத்த நகை செய்யும் போது திரவகத்தை ஊற்றிச் செம்பையும் பித்தளையையும் நீக்கித் தங்கத்தைப் பரிசுத்தமாக்குகின்றோம்.

இதைப் போன்று தான் நம் வாழ்க்கையில் நல்லதைச் செயல்படுத்த சந்தர்ப்பத்தால் பயம் கோபம் ஆத்திரம் அவசரம் சஞ்சலம் சோர்வு எரிச்சல் போன்ற எத்தனையோ உணர்வுகளைக் கவர்ந்துதான் நம் காரியத்தை முடிக்கின்றோம்.

நல்லதைச் செயல்படுத்தினாலும் அதனுடன் இரண்டறக் கலந்து வந்த பயம் கோபம் சஞ்சலம் போன்ற உணர்வுகளைச் சுத்தப்படுத்தாமல் விட்டு விட்டால்
1.அடுத்த காரியங்களை நாம் செய்யும் பொழுது
2.இந்த எரிச்சலும் கோபமும் வேதனையும் சேர்ந்தே வந்து விடுகின்றது.
3.சீராக நடக்காது அதுவே தடைப்படுத்திவிடுகின்றது.

இதை நிறுத்த வேண்டும் அல்லவா…!

ஆனால் மகரிஷிகள் தங்கள் வாழ்க்கையிலே தீமையை அகற்றிப் பழகியவர்கள். விண்ணின் ஆற்றலை எடுத்து ஒளியாக மாற்றும் திறன் கொண்டவர்கள்.

மகரிஷிகளின் உணர்வுகள் மிகவும் வலு பெற்ற சக்திகள் கொண்டது. குருநாதர் காட்டிய அருள் வழிகளில் அந்த உணர்வை நாம் நுகர்வதற்குண்டான தகுதியை ஏற்படுத்துவதே தியானம்.

எந்த ஆலயத்திற்குச் சென்றாலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற ஏக்கத்தின் தன்மை நாம் கொள்ளும் போது அதுவே சிறந்த தியானமாகின்றது.

அந்த உணர்வின் சக்திகளை நம் உடலுக்குள் செலுத்தப்படும் போது உடலை உருவாக்கிய நல்ல அணுக்களுக்கு உரமாகின்றது.

அப்பொழுது சந்தர்ப்பத்தால் நமக்குள் பிறரின் தீமையான உணர்வுகள் வந்தாலும் மகரிஷிகள் உணர்வை இதனுடன் இணைக்கப்படும் போது
1.அது (தீமையானது) அணுவாக வளர்வதற்கு முன்
2.அந்த அணுவையே நமக்குச் சாதகமான நிலையிலே மாற்றிவிடுகின்றோம்.

அதீமையை அடக்கும் உணர்வாக அணுவாக விளையச் செய்திடும் போது ஒவ்வொறு சந்தர்ப்பத்திலும் நமக்கு வலு கூடிக் கொண்டே வருகின்றது.

குற்றமாகச் சொல்லி விட்டான்… தவறாகப் பேசுகின்றான்…! அறிவு கெட்டதனமாக நடக்கின்றான்…! என்று இரண்டு தரம் நான்கு தரம் சொல்லி விட்டீர்கள் என்றால் அந்த உணர்வு வளர்ந்து விட்டது என்றால் நல்லது செய்த நிலைகள் வலு குறைந்து விடுகின்றது.

ஆனால் அடுத்த கணமே
1. மகரிஷிகள் அருள் சக்தி பெற வேண்டும் என்று
2.அந்த உணர்வுடன் இதை இணைத்து விட்டால்
3.அந்த அணு நாம் செல்லும் மெய் வழியில் இணைந்து விடும்.
4.அப்போது இது நமக்குள் நம்மைக் காக்கும் அந்த உணர்வின் அணுவாக விளையத் தொடங்கி விடுகின்றது.

Leave a Reply