மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் தரிசனம் எப்பொழுது கிடைக்கும்…?

Divine Master Guru

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் தரிசனம் எப்பொழுது கிடைக்கும்…? 

மெய்ஞானிகள் காட்டிய அருள் வழியில் அந்த மகரிஷிகளின் அருள் ஒளி நாம் பெறவேண்டும் என்று இந்த உயிருடன் உராயச் செய்யும் பொழுதுதான் நமக்குள் பேராற்றல்கள் கூடுகின்றது.

1.இந்த வாழ்க்கையில் நாம் ஒவொருவரும் நம் உயிரைக் கடவுளாக மதிப்போம்.
2.அவனால் உருவாக்கப்பட்ட இந்த உடலை ஆலயம் என்று மதிப்போம்.
3.அனைத்தையும் அறிந்திடும் அறிவாக இருக்கும் நம் உயிரை ஆண்டவனாக மதிப்போம்.
4.ஆறாவது அறிவு கொண்டு தீமைகளை அகற்ற முடியும் என்ற வலு கொண்டு தியானிப்போம்.
5.நம்மை உருவாக்கிய தாய் தந்தையரைக் கடவுளாக மதித்து நம்மைக் காத்தருளிய தெய்வமாக மதிப்போம்
6.நல் வழி போதித்த நம் அன்னை தந்தையரை குருவாக மதித்து அவர்கள் அருளால் நாம் மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறுவோம்.
7.நம்மை வளரச் செய்த முன்னோர்களையும் குலதெய்வங்களையும் விண்ணிலே செலுத்தி அழியா ஒளிச் சரீரம் பெறச் செய்வோம்.
8.அவர்களின் துணை கொண்டு இந்த வாழ்க்கையில் வரும் இருளைப் போக்க முடியும் என்றும் மனிதன் என்ற முழுமை அடைய முடியும் என்ற நிலைகளில் நாம் பிரார்த்திப்போம். தியானிப்போம் தவமிருப்போம்.

மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் காட்டிய அருள் வழியில் அவர் அனுபவபூர்வமாக அறிவித்த இந்த உணர்வின் தன்மையை நாம் எல்லோரும் பெறமுடியும்.

குருநாதர் கண்டதை நாம் எல்லோரும் காண முடியும். வாழ்க்கையில் வரும் தீமைகளை நீக்க முடியும்.

கார்த்திகேயா என்று தெளிந்திடும் ஆறாவது அறிவு கொண்ட நாம் ஞானிகள் காட்டிய அந்த அருள் வழியில் தெளிந்திட வேண்டும் தெளிவான வாழ்க்கை வாழ்ந்திட வேண்டும்.

1.மகரிஷிகளின் அருள் சக்திகளை நீங்கள் பெற்று
2.தீமையிலிருந்து விடுபட்டு “தீமையிலிருந்து விடுபட்டேன்…” என்று எப்பொழுது சொல்கிறீர்களோ
3.அப்பொழுது அந்த இடத்தில் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் இருக்கின்றார் என்று அர்த்தம்.

உறுதியாக அதை உணரலாம்.

 

Leave a Reply