நம் எண்ணங்களும் உணர்வுகளும் எப்படித் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கின்றது? நம்முடைய செயலை அது எப்படி மாற்றுகின்றது…?

நம் எண்ணங்களும் உணர்வுகளும் எப்படித் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கின்றது? “நம்முடைய செயலை… அது எப்படி மாற்றுகின்றது…?”

 

ஒரு ரேடியோ ஸ்டேசனில் உணர்வலைகள் சந்தோசமாகப் பேசிக் கொண்டிருக்கின்றது. சில நேரங்களில் காரசாரமான உணர்ச்சிகள் இன்னொரு அலைவரிசையில் வருகிறது என்றால் இதே அலை வரிசையில் வரப்படும் பொழுது இதிலிருந்து இந்த ஏரியல் வழி கூடித்தான் எடுக்கும்.

அந்த ஏரியலில் வரும் பொழுது இந்த அலை வரிசை அதிகமாகிவிட்டதென்றால் இதனின் அதிர்வலை “ஜிர்..ர்ர்..ர்ர்” என்று சப்தம் போடும்.

ஆகவே இதில் அலை வரிசையில் வரும் பொழுது எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் என்ற நிலையில் வந்தாலும் எலெக்ட்ரிக்கின் உணர்வலைகள் வரப்படும் பொழுது அந்த எலெக்ட்ரிக்கின் தொடர்பு கொண்டுதான் இங்கே இயக்குகின்றது.

அந்த உணர்வின் தன்மை எரியல் வழி கூடி அது வந்தாலும் இது எர்த் ஆன பின் இன்னொரு ஸ்டேசனை வலுவான நிலைகளை இழுத்து என்ன செய்கின்றது?

அந்த அதிர்வுகளையே காட்டுகின்றது. (நீங்கள் கேட்டிருப்பீர்கள் – இரண்டு ஸ்டேசன் ஒரே அலைவரிசையில் வந்தால் ரேடியோவாக இருந்தாலும் டி.வி.யாக இருந்தாலும் அதிர்வாகி இரைச்சலாகும்)

இதைப் போல

1.நம் உயிர் எலெக்ட்ரிக் என்றாலும்

2.ஒரு எதிர் உணர்வான எலெக்ட்ரிக் அந்த எலெக்ட்ரானிக்காக மாற்றப்படும் பொழுது

3.நம்முடைய சிந்தனை குலைந்து

4.நம்மை அறியாமலே தவறான சொல்களைச் சொல்லச் செய்து

5.தவறான செயல்களைச் செய்யச் செய்துவிடுகின்றது.

உதாரணமாக இரண்டு பேர் கடுமையாகச் சண்டை போடுவதைப் பார்க்கின்றோம். ஒருவன் மற்றொருவனை மிரட்டிப் பேசுகின்றான்.

1.அவன் உடலிலிருந்து வெளிவந்த அலைகள் இங்கே இருக்கின்றது.

2.அவனுக்குள் விளைந்திருக்கின்றது. அவனிடமிருந்து வெளி வருகின்றது.

3.நமக்குள் பதிவாகியிருக்கின்றது. அந்த அலைகளை நுகரச் செய்கின்றது.

4.அது அழிவதில்லை.

5.அதை (அந்த ஸ்டேசனை) அழிக்க வேண்டுமல்லவா…!

அது நமக்குள் இருக்கும் பொழுது என்ன செய்கின்றது?

நாம் சோர்வடையப்படும் பொழுது காரமான உணர்ச்சி கொண்டு நம்மை இயக்கச் செய்கின்றது. திடீரென்று நமக்குக் கோபம் வரும்.

அப்பொழுது எதை எடுத்தாலும் வேகம் வரும். ஒரு பொருளை எடுத்தாலும் அந்த வேகம் வரும். சோர்வடைந்த அந்த நேரத்தில் தூக்கி எறிவார்கள்.

ஒரு பலகாரம் சுட்டுக் கொண்டிருக்கும் பொழுது இந்த மாதிரி ஆகட்டும். உடனே என்ன செய்வார்கள்?

வடையை எணணெய்ச் சட்டிக்குள் மெதுவாகப் போடுவதற்குப் பதில் தூக்கி “டப்..” என்று போடுவார்கள். எண்ணெய் மேலே படும்.

செய்வது எது…? நாம் நுகர்ந்த அந்த உணர்வுகள் தான்.

இந்த மாதிரி நேரங்களில் எல்லாம் அந்த உணர்வுகள் நம்மை இயக்காது நாம் அதை அடக்க வேண்டும்.

சொல்வது உங்களுக்கு அர்த்தமாகின்றதா…?

ஆகவே நம்மை அறியாமல் இத்தகைய தீமைகள் இயக்கக்கூடிய நிலைகளிலிருந்து விடுபட வேண்டும் என்றால் “அருள் மகரிஷிகளின் பால்” நினைவைச் செலுத்த வேண்டும் “அந்த அலை வரிசையை…” எடுக்க வேண்டும்.

தீமையான உணர்வைக் கண்ட அடுத்த கணம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும். என்று தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

நம் உயிரிலே படும் இந்த அருள் உணர்வுகள் நம்மை இயக்கும் தீமையின் நிலைகளை உணர்த்தும். தீமையின் நிலைகளை அடக்கும். சிந்தனைத் திறனைக் கூட்டும். தீமையான உணர்வலைகள் நம் அருகிலே வராது தள்ளிவிடும்

அப்பொழுது நம் சொல்லில் இனிமையும் செயலில் தெளிவும் வரும். நமக்கும் நல்லதாகும் எல்லோருக்கும் நல்லதாகும்.

Leave a Reply