“யாமிருக்க பயமேன்…!” என்று ஞானிகள் கொடுத்த சாஸ்திரங்கள் சொல்கிறது – அதன்படி வணங்குகிறோமா…?

Murugu - Karthi

“யாமிருக்க பயமேன்…!” என்று ஞானிகள் கொடுத்த சாஸ்திரங்கள் சொல்கிறது – அதன்படி வணங்குகிறோமா…?

 

 

ஆலயத்தின் பண்புகளைப் பற்றி அந்த ஞானிகள் எல்லா வகையிலும் சொல்லியிருக்கின்றார்கள்.

 

இப்பொழுது தற்காலத்தில் 4000 ஆண்டுகளுக்கு முன்னாடி வியாசக பகவான் சொன்னது சாஸ்திரங்களில் சட்டங்களாக இருக்கின்றது. தெளிவாக இருக்கின்றது.

 

ஆனால் இப்போது என்ன செய்கிறார்கள்?

 

துவைதம் – வேள்விகளைச் செய்து சாமிக்கு நெய்வேத்யம் செய்து எல்லா அபிஷேகமும் ஆராதனையும் செய்து விட்டால் சாமி பார்த்துக் கொள்ளும் என்று தான் எண்ணிக் கொள்கின்றார்கள்.

 

1.நாம் எடுக்கும் அருள் உணர்வுகள் எல்லாவற்றையும்

2.நம் உயிரான ஈசனுக்குள் (புருவ மத்தியில்)இதற்குள்ளே போட்டோம் என்றால்

3.இவன் பார்ப்பான் என்று நினைக்கவே மாட்டேன் என்கிறார்கள்.

 

அங்கே வெளியிலே தான் பார்க்கின்றோமே தவிர நம் உயிருக்குள் உயிராக இருந்து நம் உயர்ந்த எண்ணங்கள் எடுத்து இங்கே அபிஷேகிக்கப் போகும் போது நம் உயிர் உருவாக்கிக் கொடுப்பான் என்று எண்ணவில்லை.

 

அருள் ஞானிகளின் உணர்வெல்லாம் எடுத்து நமக்குள் சொத்தாகச் சேர்த்து

1.நல்ல குணங்களுக்கு அதை அமுதாகக் கொடு

2.உடலான சிவனுக்கும் அமுதாகக் கொடு

3.தெய்வத்தைப் பார்க்கும்போது இந்த நினைவினை நீ இப்படி எடு என்று தான் ஞானிகள் சொன்னார்கள்.

 

கோயிலுக்குப் போனால் இன்றும் நாம் என்ன செய்கின்றோம்?

 

அந்தக் கல்லைக் கடவுளாக்கி விட்டோம். நம் மனதைக் கல்லாக்கி விட்டோம். நம் மனதைக் கல்லாக்கி விட்டுச் சிலையைக் கடவுளாக்கிக் கொண்டு அதைத் தான் நாம் தெய்வமாக்கி வைத்திருக்கின்றோம்.

 

கோவிலுக்குள் போகும் பொழுது ஓ…ம் போட்டு இருப்பதனால் ஓ…ம் முருகா என்று சொல்லி விட்டு கை எடுத்துக் கும்பிடுகின்றோம். அதோடு சரி.

 

1.நீ ஓ…ம் ஓ…ம் என்று சொல்லி கொண்டே இரு.

2.அவன் எல்லாவற்றுக்கும் உனக்குள் ஜீவன் ஆகின்றான் என்கிறான்.

3.ஓ..ம் என்று சொல்லி ஓ…ம் நமச்சிவாய என்று சொல்லு

4.உனக்கு அபாயம் இல்லை சொல்லி விடுகின்றார்கள்.

 

இப்படி ஒரு மந்திரம்.

 

ஓ..ம் நமச்சிவாய ஓ…ம் நமச்சிவாய என்று சொல்லிக் கொண்டே வந்தாய் என்றால் எல்லாம் அவன் பார்த்துக் கொள்வான் என்கின்றனர்.

 

ஓ…ம் நமச்சிவாய என்றால் என்ன?

 

நாம் எதை எண்ணுகின்றமோ ஓ…ம் (நமதாக) நமச்சிவாய நாம் எண்ணுகின்ற குணமெல்லாம் நமக்குள் சிவமாக உடலாக மாறி விடுகின்றது. ஓ…ம் நமச்சிவாய என்று சொல்லிக் கொண்டிருந்தால் அபாயம் ஒன்றும் இல்லை என்றால் அது எப்படி வரும்?

 

அந்த மகரிஷிகளின் அருள்சக்தி நாங்கள் பெற வேண்டும் என்கின்ற போது

1.நம் உயிர் “ஓ… ம்…” – ஓ…ம் நமச்சிவாய

(உயிரிலே பட்டவுடன் மகரிஷிகளின் உணர்வுகள் ஜீவனாகின்றது)

2.அந்த உணர்வுகளை நாம் நுகர்ந்தால் அபாயம் இல்லாமல் அவைகளைக் காப்பாற்றும்.

3.எது…? – நம் உயிர்.

 

இங்கே விநாயகரைக் கும்பிடாமல் நீ கோயிலுக்குப் போனால் பலன் எதுவும் இல்லை. முருகன் (ஆறாவது அறிவு கொண்டு) கெட்டதை நீக்கினான் என்று இருக்கின்றது.

 

விநாயகன் என்ன செய்கின்றான்?

 

ஏனென்றால் இந்த உண்மையைக் காட்டியவன் அந்த மகரிஷி. அந்த மகரிஷியின் அருள்சக்தி பெற வேண்டும் என்ற அந்த நல் வினையைச் சேர்த்துக் கொண்டவன் அவன்.

 

அதே மணத்தின் தன்மை கணங்களுக்கு அதிபதியாக்கிக் கொண்டவன் மகரிஷி.

1.மகரிஷியின் அருள்சக்தி நாங்கள் பெற வேண்டும்.

2.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவாத்மா பெற வேண்டும் என்று எண்ணி

3.அதை நம் கணங்களுக்கு அதிபதியாக்கி இந்த நிலைகளில் செயல்படுத்த வேண்டும் என்று சொல்வது.

4.இது நரசிம்ம அவதாரம்.

 

இப்படி எண்ணும் போது மகரிஷிகள் அருள் சக்தி நம் உயிரிலே மோதும்போது ஓ…ம் அப்போது அந்த ஞானியின் உணர்வுகள் நமக்குள் ஜீவனாகின்றது.

 

நல்ல குணம் கொண்ட நாம் ஒருவர் கஷ்டப்பட்டார் என்றால் அதைக் கேட்டறிந்து உதவியும் செய்கின்றோம். ஆனால் கஷ்டமான உணர்வுகள். எனக்குள் சேர்ந்து விட்டது. அதைத் துடைக்க வேண்டும் அல்லவா…!

 

அந்த ஞானியின் சக்தி எடுத்துத்தான் அதைத் துடைக்க வேண்டும் அதைக் காட்டுவதற்குத்தான் விநாயகனைக் காட்டுகின்றார்கள்.

 

ஞானியின் உணர்வை வினைக்கு நாயகனாக்கி வாழ்க்கையில் முன்னாடி கேட்டறிந்த நஞ்சான உணர்வுகளைத் துடைக்க வேண்டும்.

 

1.நல்லதைக் காக்க வேண்டும் என்ற நிலையில்

2.உனக்குள் உன்னைக் காப்பாற்றிய நல்ல தெய்வம் இந்த ஆறாவது அறிவு என்கின்ற நிலையில்

3.நீ பக்குவப்படுத்திப் பார்…!” என்று ஞானிகள் தெளிவாகவே காட்டியுள்ளார்கள்.

 

நல்ல குணத்துடன் இருக்கின்றோம். கஷ்டப்படுகின்றவர்களைப் பற்றி கேட்டறிகின்றோம். அவர்களுக்கு வேண்டிய உதவிகளும் செய்கின்றோம். அவர்கள் கஷ்டப்பட்டது ஆறாவது அறிவில் இங்கே வந்து சேர்ந்து கொள்கின்றது.

 

அப்பொழுது இதைச் சேர்த்தால் வேதனையான எண்ணம்தான் வருகின்றது. வேதனைப்படும்போது யார் காப்பாற்றுவது? இந்த ஆறாவது அறிவில் கலந்ததைச் சுத்தப்படுத்துவது யார்?

 

ஓ…ம் முருகா – பிரம்மாவைச் சிறைப் பிடித்தான் முருகன் என்று ஞானிகள் காட்டுகின்றார்கள். முருகனைப் பார்க்கப்படும் போது எதை எண்ண வேண்டும்?

 

இந்த உண்மையை உணர்த்திய

1.மகரிஷியின் அருள்சக்தி நாங்கள் பெற வேண்டும்.

2.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவாத்மா பெற வேண்டும் என்று

3.இந்த ஆறாவது அறிவின் துணை கொண்டு தன்னைக் காத்திடும் நிலையாகத் துடைக்க வேண்டும்.

 

இப்படி எண்ணினோம் என்றால் ஓ…ம் நமச்சிவாய. இந்த ஆறாவது அறிவின் தன்மை நமக்குள் அதைப் வலுப்படுத்தும் சக்தியாக தீமைகள் நம் உடலுக்குள் உருவாகாதபடி பிரம்மாவைச் சிறைப் பிடித்தான் என்று செயல்படுகின்றது.

 

வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் வரும் தீமைகள் விளையாது அந்த ஞானியின் உணர்வை நமக்குள் விளையச் செய்ய வேண்டும் என்று அதைச் சொல்லியிருக்கின்றான்.

 

யாராவது இப்படிச் செய்கின்றோமா?

 

ஓ..ம் முருகா ஓ…ம் முருகா ஓ…ம் முருகா என்று சொல்லிக் கொண்டு நான் அந்த முருகனைத்தான் வணங்குவேன். வேறு யாரையும் வணங்க மாட்டேன் என்பார்கள். ஆனால் அந்த முருகன் யார் என்று கேட்டால் தெரியாது…!

 

ஓ…ம் முருகா என்று சொன்னால் நான் இருக்கின்றேன்.. உனக்கேன் பயம்…? யாம் இருக்க உனக்கேன் பயம் என்று முருகன் சொல்கிறார் என்று காட்டுகிறார்கள்.

 

1.இந்த ஆறாவது அறிவு தான் – யாம் இருக்க உனக்கேன் பயம்.

2.இந்த ஆறாவது அறிவு கொண்டு நாம் எப்படிச் செயல்பட வேண்டும் என்று ஞானிகள் தெளிவாகச் சொல்லி இருக்கின்றார்கள்.

 

(சூட்சமம் – கண்ணுக்குப் புலப்படாதது; துவைதம் – கண்ணுக்குப் புலப்படக்கூடியது)

 

ஏனெனில் சூட்சமத்தில் நடப்பதைத் துவைதமாக்கி அந்த உணர்வில் ஆறாவது அறிவு மறைந்திருக்கின்றது.

1.இதை நினைவு கொண்டு இது பிரணவம் – ஜீவனாக்கு

2.அந்த உணர்வின் தன்மையை உன் உடலில் சிவமாக்கு.

3.ஆறாவது அறிவின் தன்மை கொண்டு உன் உணர்வின் தன்மை ஒளியாக்கு – கார்த்திகேயா…!

4.கார்த்திகேயா என்றால் வெளிச்சம்.

5.கெட்டதை நீக்கி நீ இதை இப்படிச் செய்ய வேண்டும் என்று

6.ஞானிகள் சாதாரண பாமரனுக்கும் புரியும்படி தெரியப்படுத்துகின்றர்கள்.

 

முருகா..! அழகா…! “முருகு…” என்றால் மாற்றி அமைக்கும் திறன் கொண்டது.

 

சிலையாக அந்தச் சூட்சமத்தில் இருப்பதை நாம் காண முடியவில்லை. சிலையாக வடித்து அந்தத் தெய்வம் எதைச் செய்ததோ அந்த நிலைகள் நாம் பெற வேண்டும் என்று எண்ணி ஓ…ம் நமச்சிவாய இதை உடலாக ஆக்க வேண்டும்.

 

தூல காரணம் துவைதம். சூட்சம காரணம் அத்வைதம். தூலத்திற்குள் அணுவின் இயக்கம் விசிஷ்டாத்வைதம். (தூலம் – உடல்; பொருள்)

 

“நீ தெய்வமாக ஆகு…! என்பதையே சிலை வடிவில் உருவ நிலையில்  வைத்துத் துவைத நிலைகளில் மெய் உணர்வை ஆலயங்கள் மூலமாக உணர்த்தினர் ஞானிகள்.

Leave a Reply