தன்னை அறிந்து பத்தாவது நிலையாக கல்கி –  ஒளியாக மாற்றி  கொள்ளும் நிலை தான் விஜய தசமி

kalki - lights

தன்னை அறிந்து பத்தாவது நிலையாக கல்கி –  “ஒளியாக மாற்றி  கொள்ளும் நிலை தான் விஜய தசமி”

 

 

விஜய தசமி என்பது உங்களை நீங்கள் அறிந்து கொள்ளும் நிலை தான். என்னை நான் (ஞானகுரு) அறிந்து கொள்ளும் நிலை தான்.

 

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அந்த நிலைகள் கொண்டு என்னை நான் அறிந்து கொண்டேன். என்னை நான் அறிந்து கொண்ட நிலைகளை உங்களுக்கும் சொல்லுகின்றோம்.

 

அதே மாதிரி நீங்களும் அறிந்து கொண்டு வளர வேண்டும்.

 

அறியாது சேர்ந்த தீமைகளை நீக்கும் மெய் ஒளியான அந்த மகரிஷிகளின் அருள் சக்தி உங்களுக்கெல்லாம் கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற குருவின் ஆணைப்படி இதை உபதேசிக்கின்றோம்.

 

அதை நீங்கள் பெறவேண்டும் என்று எண்ணினால் உங்களுக்குக் கிடைக்கின்றது. எனக்குள்ளும் வளர்கின்றது.

 

உதாரணமாக இங்கு ரோட்டில் இருக்கக்கூடிய குப்பைகளை அப்புறப்படுத்திச் சுத்தப்படுத்த வேண்டும் என்று எண்ணினால் தான் அங்கு சுத்தப்படுத்தும் நிலைகள் வருகின்றது.

 

குப்பையாக இருக்கின்றது…! சுத்தப்படுத்த வேண்டும்… சுத்தப்படுத்த வேண்டும்… என்று “வெறும் வார்த்தையால்…” சொல்லிக் கொண்டே இருந்தால் அது சுத்தமாகாது.

 

1.எப்பொருளானாலும் செயல் படுத்தும் எண்ணம் முதலில் உருவானாலும்

2.அந்தச் செயல் படுத்தும் உணர்வின் தன்மை நமக்குள் செயல்படும் பொழுது

3.அந்த உணர்வுகள் விளைந்தே அந்த உணர்வின் தன்மை செயலாக

4.நம்மைச் செயல்படுத்துகின்றது.

 

மெய் ஞானிகள் பெற்ற அருள் உணர்வுகளை எல்லோருக்கும் பெறச் செய் என்று குருநாதர் எனக்குச் சொன்னார். அதைக் கூர்ந்து கவனித்தேன்.

1.இந்த உணர்வு எனக்குள் “வித்தாகப் பதிந்தது…”

2.குருநாதர் சொன்னதை மீண்டும் மீண்டும் நினைக்கின்றேன்.

3.இந்த உணர்வின் அலைகள் எனக்குள் பெருகுகின்றது.

4.பெருகிய நிலைகள் கொண்டு “அந்த வித்து” எனக்குள் விளைகின்றது.

 

ஞானமாக எனக்குள் விளைந்த வழியைத்தான் நான் உங்களுக்குள் சொல்லுகின்றேன்.

 

ஏனென்றால் இந்த ஞான வித்து குருநாதர் கொடுத்தது. அந்த வித்து பலவாறு பல நிலைகள் விளைந்தது. அதிலே அருள் ஞான வித்தின் நிலையைத் தான் உங்களுக்குள் ஆழமாக பதியச் செய்கின்றோம்.

 

பதிந்த வித்தின் நிலைகளை வளர்க்கத் தீமைகள் வரும் பொழுதெல்லாம் யாம் சொன்ன பக்குவப்படி (நீர் ஊற்றுவதும்)

1.”மகரிஷிகள் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் என்ற

2.இந்த எண்ணங்களை நீங்கள் நினைவு படுத்திக் கொண்டு வந்தீர்கள் என்றால்

3.ஞானிகளின் உணர்வுகள் உங்கள் உடலுக்குள் விளைந்து

4.உங்களை அறியாது சேர்த்த விஷத்தின் தன்மையை முறிக்க இது உதவியாக இருக்கும்.

 

என்னைப் போல் நீங்களும் ஞானியாக முடியும்.

Leave a Reply