அருளைத் தேடினால் பைத்தியம்… பிழைக்கத் தெரியாதவன்… வாழ்க்கையை அனுபவிக்கத் தெரியாதவன் என்கிறார்கள்…!

Maharishikaludan Paesungal

அருளைத் தேடினால் பைத்தியம்… பிழைக்கத் தெரியாதவன்… வாழ்க்கையை அனுபவிக்கத் தெரியாதவன் என்கிறார்கள்…! 

பிறருடைய தீமைகளின் நிலைகளை நாம் காது கொடுத்துச் சிரத்தையாக என்ன ஏது…? என்று கேட்காது விட்டால் நம்மைப் பைத்தியக்காரன் என்று சொல்வார்கள்.

ஒருவர் ஏதாவது சொல்லிக் கொண்டிருக்கும்போது “நமக்கு எதற்கு இந்த வம்பு…!” என்று சென்றுவிட்டால் நம்மைப் பைத்தியக்காரன் என்று சொல்வார்கள்.

வாழ்க்கையில் நீங்கள் இந்த மாதிரிச் சொல்லிப் பாருங்கள்.

எதாவது ஒரு பொருளை “சரி…” என்று சொல்லி “அவன் ஆசைப்படி அவனே வைத்துக் கொள்ளட்டும்..,” என்று நாம் ஒதுங்கிச் சென்றால் “சரியான பைத்தியம்.. இது…!” என்று நம்மைச் சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள்.

அவன் கோபப்பட்டுத் திட்டும்போது நாம் அதைக் காது கொடுத்துக் கேட்காது சென்றால் “பைத்தியம்” என்று நம்மைச் சொல்வார்கள்.

தியான வழியில் இருக்கும்போது சொல்வார்கள். யாராவது சொன்னாலும் கூட கொஞ்சம் கூட ரோசம் இல்லை, அவன் ஒரு பைத்தியக்காரன் என்பார்கள்.

1.ஒருவரைச் சரி இல்லை…, என்று கேட்டவுடனே
2.அவனை உதைத்தோம்…! என்றால் அப்பொழுது “மனிதன்…!” என்று சொல்வார்கள்.

இந்தத் தியான வழியில் நீங்கள் சென்றால் மற்றவர்கள் சுத்தமாகவே பைத்தியம் என்று சொல்வார்கள். அடுத்தவர்கள்.., ஏதாவது சொன்னாலும் பாருங்கள், இவன் ஒன்றுமே சொல்ல மாட்டான்…! என்று சொல்லிவிட்டு
1.சூடு சுரணை எதுவும் இல்லை,
2.இவன் ஒரு பைத்தியக்காரன் என்பார்கள்.
3.ஆனால் அவன் பைத்தியம் என்று அவன் உணர்வதில்லை.

தான் நுகரும் உணர்வின் தன்மை தன்னை ஒரு பைத்தியக்காரனாக ஆக்குகின்றது. தன்னையறியாமலே அந்த உணர்வுகள் அவனுக்குள் செயல்படுகிறது என்று அவன் உணர்வதில்லை.

ஆனால் நம்மைப் பைத்தியக்காரன் என்பார். இதைப் போன்று இயற்கையின் உண்மையின் உணர்வுகளை நாம் அறிதல் வேண்டும்.

ஆக அருளைத் தேடினால் “பைத்தியம்…” என்கிறார்கள். மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் பைத்தியம் போன்று இருந்துதான் பேரண்டத்தின் பேருண்மைகள் அனைத்தையும் உணர்த்தினார்.

அகஸ்திய மாமகரிஷிகளின் மூச்சலைகளை நாம் நுகர்ந்து நஞ்சை அகற்றுவோம் – உலகைக் காப்போம்…!

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் “அணுவின் ஆற்றலை” அறியும் நிலை வந்ததால் தான் அவனுக்கு அகஸ்தியன் என்று காரணப் பெயர் வந்தது.

அவன் வாழ்ந்து வளர்ந்து சுழன்று வந்த இந்த இடத்தில் அகஸ்தியரின் மூச்சலைகள் இங்கே அதிகமாகப் பரவியுள்ளது. அவன் தாய் கருவிலே பெற்ற உணர்வின் தன்மை கொண்டு தாவர இனச் சத்தை அறியும் மலைப்பகுதியிலே சுற்றி வளர்ந்தான்.

1.பல கோடித் தாவர இனங்களை நுகர்ந்தான்.
2.தீமைகளை வென்றிடும் அருள் சக்திகளைத் தனக்குள் நுகர்ந்தான்.
3.விண்ணின் ஆற்றலைத் தனக்குள் நிலைத்து நிற்கும் நிலையும்
4.இருளை வென்றிடும் உணர்வின் தன்மை தன் உடலில் வளர்த்துக் கொண்டான்.

ஆகவே அவனுடைய நினைவாற்றலை நாம் கொண்டு வரப்படும் பொழுது அந்த உணர்ச்சிகளைத் தூண்டும் பொழுது
1.உங்கள் கண்ணின் நினைவலைகள் அந்த அகஸ்திமாமகரிஷியின் பால் செல்லும்.
2.அந்த உணர்வினை நுகரும் ஆற்றலை நாம் பெறுகின்றோம்.
3.நுகர்ந்த உணர்வுகள் உடலில் உள்ள இரத்த நாளங்களில் கலக்கின்றது.
4.இரத்தத்தின் கலந்த அகஸ்தியனின் உணர்வுகள் நமக்குள் கரு முட்டைகளாக விளையத் தொடங்கும்.

அந்த உணர்வின் தன்மையை எவ்வளவு நேரம் நீடித்து எண்ணுகின்றோமோ அந்த உணர்வின் கருவாக உருவாகும் தன்மைகள் உருப்பெறும்.

நமது குருநாதர் இப்படித்தான் எம்மைக் (ஞானகுரு) காட்டிற்குள் அலையச் செய்து ஒவ்வொரு நிமிடத்திலும் அகஸ்தியனைப் பற்றிய உணர்ச்சிகளை ஊட்டினார்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய வழியில் நஞ்சினை வென்றிடும் உணர்வின் ஆற்றலை நாம் பெறுவோம்.

அகஸ்தியரின் உணர்வைப் பரப்பி இந்த உலகில் தற்பொழுது பரவி வரும் நஞ்சினை அகற்றுவோம்.

உலகில் எந்த மூலையில் யார் இருப்பினும் அருள் மகரிஷிகளின் அருள் உணர்வுகள் அவர்கள் பெறவேண்டும் அவர்கள் அறியாது சேர்ந்த இருள்கள் நீங்க வேண்டும் என்று நாம் தவமிருப்போம்.

1.நம்மைக் காத்து
2.நம் குடும்பத்தைக் காத்து
3.எல்லோரையும் காத்திட வேண்டும்.
4.நம் நாட்டையும் இந்த உலகையும் காக்க வேண்டும்.
5.மனித இனத்தைக் காக்கும் உணர்வுகளை நமக்குள் விளையச் செய்வோம்.

மனிதன் என்ற உணர்வுகள் நாம் ஒன்று சேர்த்து இணைத்தால் தான் ”மரணமில்லாப் பெரு வாழ்வு” என்ற நிலைகளில் வாழ முடியும்.

Leave a Reply