நம் கண்களுக்குள் இருக்கும் “எக்ஸ்ரே” ஆற்றலை அறிந்திருக்கின்றோமோ…?

X rays - divine rays

நம் கண்களுக்குள் இருக்கும் “எக்ஸ்ரே” ஆற்றலை அறிந்திருக்கின்றோமோ…?

1.விஞ்ஞான அறிவின் தன்மை கொண்டு
2.உடலுக்குள் இருக்கும் நிலைகளை ஊடுருவி
3.தசைகளைத் தாண்டி எலும்புகளைப் படமாக்கி
4.எலும்பிற்குள் உறைந்து இருக்கும் சளியைக் காணுகின்றார்கள்.

எலும்பிற்குள் இருக்கும் சளியின் விளைவால் ஏற்படும் அணுக்களின் சிதைவின் தன்மையும் அது எலும்புகளை எப்படி அரிக்கின்றது (டி.பி. நோய்) என்பதையும் எக்ஸ்ரே மூலம் மருத்துவர்கள் காணுகின்றனர்.

அதைப் போல உடலின் உறுப்புகளில் உள்ள பாகங்களில் இந்தத் தசை மண்டலங்களில் விஷத்தின் ஆற்றல் அளவு கோல் அதிகமாகி விட்டால் அந்த உறுப்புகளில் வீக்கமோ அல்லது சீராக இயங்க முடியாமல் ஏதாவது அடைப்பாகிவிடும்.

இவ்வாறு அந்தந்த உறுப்புகள் செயலற்றதாக ஆகின்றது என்பதனை  விஞ்ஞானிகள் எக்ஸ்ரே மூலம்  கண்டறிகின்றனர். கருவி கொண்டு அவன் அறிகின்றான்.

எக்ஸ்ரே என்றால்
1.உணர்வின் ஒளிகளை ஒன்றிலே (ஊடுருவிப்) பாய்ச்சி
2.அதன் உணர்வின் அதிர்வுகளை வெளியாக்கி
3.அதைப் படமாக்கி எடுத்துக் கொள்வது.

எக்ஸ்ரே என்று அதற்குக் காரணப் பெயர் வைக்கின்றனர்.

உடலுக்குள் இருக்கும் நிலையை இந்த விஞ்ஞான அறிவால் நம்மை அறிந்திடச் செய்கின்றனர். இதைக் கண்டறிந்தது மனிதன் தான்.

ஆக உடலிலுள்ள உணர்வைக் கூர்மையான நிலையில் கண்டறிந்து எக்ஸ்ரே என்று படமாக எடுக்கின்றார்கள்.

அதைப் போன்று நாம் எத்தனையோ பேரைப் பார்க்கின்றோம். அவர்களுடன் பழகுகின்றோம். அவர்களை அறிந்து கொள்கின்றோம். அவ்வாறு அவர்கள் உணர்வுகள்
1.நமக்குள் பதிவான உணர்வுகளில்
2.மீண்டும் மீண்டும் பதிவானதை நினைவுக்குக் கொண்டு வந்தால்
3.எந்த  மனிதனின் உணர்வோ அது நுகரப்படும் போது
4.இதுவும் எக்ஸ்ரே தான்.

அடுத்தவர்களைப் பற்றி ஊடுருவி அதன் வழி அவர்கள் உணர்வலைகளை நாம் நுகரப்படும்போது அந்த (அவர்) உணர்வுகள் அதன் வழிப்படி நமக்குள் இயக்குகின்றது.

டி.பி. நோய் வந்தது என்றால் எலும்புகளையோ தசைகளையோ கரைக்கும் அணுக்களுக்கு அதற்கு மாற்றான அணுக்களை நம் உடலிலே உருவாக்குகின்றார்கள்.

மற்ற மருந்தின் துணை கொண்டு அதாவது இவன் எடுக்கும் உணர்வுகளை உள் செலுத்திப் புது விதமான அணுக்களை எலும்புக்குள்  உருவாக்குகின்றார்கள். நோயை நீக்குகிறார்கள்.

இது விஞ்ஞான அறிவால் கண்டறிந்து செயல்படுத்தப்படுகிறது. ஆனாலும் அந்த மருந்தின் அளவு கோல் உடலுக்குள் அதிகமாகும் பொழுது
1.நம் உயிரான்மாவில் நஞ்சு அதிகமாகின்றது.
2,அதற்குத்தக்கத்தான் அடுத்த உடல் நாம் பெறுவோம்.
3.விஞ்ஞான அறிவு கொண்டு உடலைக் காக்கலாம்.
4.உயிரான்மாவை ஒளியாக ஆக்க முடியாது.

மெய் ஞானிகள் கண்டுணர்ந்த உணர்வின் வழிப்படி அவர்கள் தங்கள் கண்ணின் புலனறிவை விண்ணிலே செலுத்தி அந்த ஆற்றல்களைத் தங்கள் உடல்களிலே வளர்த்து வாழ்க்கையில் வந்த நஞ்சை வென்று உணர்வுகளை உயிருடன் ஒன்றச் செய்து ஒளியின் சுடராக மாற்றினார்கள்.

அந்த மெய்ஞானிகள் விளைய வைத்த உணர்வை நாம் நுகர்ந்து அதை நம் உடலுக்குள் செலுத்த வேண்டும்.

அப்பொழுது அந்த மெய் ஞானிகளின் உணர்வுகள் எக்ஸ்ரே போன்று நம் உடலுக்குள் ஊடுருவிப் பாய்ந்து உறுப்புகளில் உள்ள தீமையான அணுக்களை அடக்கி அருள் ஒளியின் அணுக்களாக உருவாக்கும்.

தீமைகளையும் அகற்றுகின்றோம். நோயையும் அகற்றுகின்றோம். அதே சமயத்தில் ஞானிகள் உணர்வுகள் நம் உடலுக்குள் ஒளியான அணுக்களாக விளையத் தொடங்கும்.

விளைந்தது உயிரான்மாவில் சேர்ந்து ஒளியின் சுடராகும். இந்த உடலை விட்டுச் செல்லும் பொழுது அவர்கள் இருக்கும் எல்லையை நாம் அடையலாம். ஒளியின் சரீரம் பெற முடியும்.

Leave a Reply