விண்ணின் ஆற்றலை நீங்கள் பெறுவதற்காகச் சக்தி வாய்ந்த… “ஆண்டெனா பவர் (ANTENNA POWER)” கொடுக்கின்றோம்

 

ganakan

விண்ணின் ஆற்றலை நீங்கள் பெறுவதற்காகச் சக்தி வாய்ந்த… “ஆண்டெனா பவர் (ANTENNA POWER)” கொடுக்கின்றோம்

விஞ்ஞான அறிவால் பரீட்சாந்திரமாகப் பிற ஆன்மாக்கள் மீது நஞ்சு கொண்ட விஷமான உணர்வுகளைப் பாய்ச்சும் பொழுது அந்த ஆன்மாக்கள் எவ்வாறு பதை பதைக்கின்றது?

எதை அழிக்க நஞ்சான உணர்வாகச் செலுத்தி விஞ்ஞானத்தில் கண்டு கொண்டானோ அதனால் வெளி வந்த அந்த விஞ்ஞான அறிவு கொண்டு செயல்பட்ட உயிரான்மாக்கள் அனைத்தும் உலகில் சுழன்று கொண்டுள்ளது.

1.துன்புறுத்தும் நஞ்சு கொண்ட உணர்வின் ஆன்மாக்களாக எவ்வாறு படர்ந்து கொண்டிருக்கின்றது.
2.அதனுடைய விளைவுகள் என்ன என்ற நிலையை அறிந்து கொள்வதற்கு
3.குருநாதர் உலகம் முழுவதும் என்னைச் சுற்றுப் பயணம் செல்லச் செய்தார்கள்.
4.பன்னிரண்டு வருடம் இதையெல்லாம் அனுபவித்த பின் தான் உங்களுக்குச் சொல்லுகின்றேன்.

விஞ்ஞான அறிவால் தன் ஆராய்ச்சியின் நிமித்தமாகப் பல கடுமையான விஷம் கொண்ட இதைப் போன்ற நிலைகள் இந்தக் காற்றிலே சுழன்று கொண்டுள்ளது.

இதிலிருந்து தப்பும் மார்க்கம் என்ன?

ஒரு உணர்வைப் பிளந்து உடல் பெறும் தன்மையை மறைத்து தன் உணர்வுகளை ஒளியாக மாற்றி விண் சென்ற முதல் மனிதன் அந்த அகஸ்தியன்.

அகஸ்தியனின் உணர்வுகளைப் பின்பற்றிச் சென்றவர்கள் ஆறாவது அறிவால் ஏழாவது நிலையாக இன்றும் சப்தரிஷி மண்டலங்களாகச் சுழன்று கொண்டிருக்கின்றார்கள்.

துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வலைகளை எடுத்துச் சுவாசித்துத் தன் உணர்வுகளை ஒளியாக்கி விண் சென்றவர்கள் மெய் ஞானிகள்.

சூரியனின் ஈர்ப்பு வட்டத்தில் நமது பூமி சுழன்று கொண்டிருக்கின்றது.

அதே போல இந்தப் பூமிக்குள் உயிரணுவாகத் தோன்றி ஒளியின் சரீரமான அந்த அகஸ்தியனின் உணர்வைக் கண்டுணர்ந்து அதை நுகர்ந்து
ஒளியாக மாற்றிச் சென்ற மனிதர்கள் அனைவரும் சப்தரிஷி மண்டலங்களாகத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள்.

1.“முப்பது முக்கோடி தேவாதி தேவர்கள்…” என்று சொல்வார்கள்.
2.சப்தரிஷி மண்டலங்களாக நமது பூமியின் சுழல் வட்டத்தில் இருந்து கொண்டிருக்கின்றார்கள்.

அதிலிருந்து வெளிப்படும் ஆற்றல் மிக்க சக்திகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து நமது பூமியில் படரச் செய்கின்றது.

இன்று வெகு தொலைவில் இருந்து ஒலி/ஒளிபரப்பு செய்தாலும் சக்தி வாய்ந்த ஆண்டென்னாவை வைத்து தொலைக் காட்சியின் மூலமாக நாம் தெளிவாக அறிந்து கொள்கின்றோம்.

செயற்கைக் கோள்களை ஏவி விண்ணிலிருந்து ஒளி பரப்பச் செய்யும் விண்ணின் ஆற்றல்களையும் அந்த அலைகள் வெளியில் படர்ந்திருந்தாலும் அதற்குத் தகுந்த ஆண்டெனா பவரை வைத்து தரையிலிருந்து இங்கே கவர்கின்றார்கள்.

அதை விஞ்ஞானத்தின் மூலம் திரைகளிலும் டி.வி.யிலும் அந்தப் படங்களைத் தெளிவாகப் பார்க்கவும் முடிகிறது.

இதைப் போல மெய் ஞானிகள் கண்ட விண்ணின் ஆற்றல்களையும் நாம் பார்க்க முடியும் நுகர முடியும் அறிய முடியும்.

அந்த மெய் ஞானியின் ஆற்றல் மிக்க சக்தியை நீங்கள் பெறும் வண்ணம் யாம் உபதேசிக்கும் போது
1.எந்தளவிற்கு நினைவு கொண்டு கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கின்றீர்களோ
2.உங்கள் கண் இதை ஈர்த்து உடலுக்குள் ஊழ் வினையாகப் பதிவு செய்கின்றது.

சாதாரணமாக உங்கள் கண் ஈர்க்கும் நிலைகளைக் காட்டிலும் சக்தி வாய்ந்த ஆண்டெனா போன்று உங்கள் கண்களுக்கு ஈர்க்கும் சக்தியைக் கூட்டும் நிலைகளுக்கே இதை உபதேசிக்கின்றோம்.

எமது குருநாதர் எமக்கு உபதேசிக்கும் பொழுது நான் கூர்ந்து அவர் சொல்லும் உணர்வைக் கேட்டு என் நினைவைச் செலுத்தி அவர் உணர்வின் ஆற்றலை நான் நுகர்ந்தேன்.

அதனின் நினைவு கொண்டு என் கண்ணின் புலனறிவுகள் ஆற்றல் மிக்கதாக மாறியது. அவர் உபதேசித்த உணர்வுகள் அனைத்தும் எனக்குள் ஊழ் வினையாகப் பதிவானது.

அதை நான் மீண்டும் நினைவு கொள்ளும் பொழுது அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறும் தகுதியை குருநாதர் ஏற்படுத்தினார்.

நீங்களும் அவ்வாறு பெறவேண்டும் என்ற நிலைக்குத்தான் சொல்கின்றோம். இந்த உபதேசங்களை யாரெல்லாம் கூர்ந்து கவனித்துக் கேட்கின்றனரோ அவர்கள் கண்ணுக்கு (உரம் ஊட்டுவது போல) ஆற்றல் மிக்க சக்தியாக அந்த ஆண்டெனா பவர் கூடுகின்றது.

சாதாரண ஆண்டெனாவை வைத்து டி.வி.யைத் திருப்பி வைத்தால் அது பக்கத்தில் வரக்கூடிய ஸ்டேசன்களை இயக்கிக் காட்டுகின்றது.

இராக்கெட்டை விண்ணிலே ஏவி வெகு தொலைவில் இருக்கும் கோள்களின் செய்திகளை அறிய சக்தி வாய்ந்த ஆண்டெனாவைத் தரையிலே வைத்துக் கவரும் பொழுது அது நமக்குத் தெளிவாகத் தெரிகின்றது.

அதைப் போலத்தான் விண்ணிலே மிதந்து கொண்டிருக்கும்  சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வெளிப்படும் உணர்வுகளை நுகரும் ஆற்றலை உங்களைப் பெறச் செய்கிறோம்.

உங்கள் கண்ணின் ஈர்ப்பு சக்தியை அந்த ஆண்டெனா பவரைக் கூட்டுவதற்குத்தான் இதை உங்களுக்கு உபதேசிக்கின்றோம்.

கண்களுக்குக் கொடுக்கும் அதீத ஈர்க்கும் சக்தியை வைத்து நீங்கள் விண்ணை நோக்கி எண்ணி ஏங்கும் பொழுது சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வரும் உணர்வலைகளை எளிதில் பெற முடியும்.

அதை உங்கள் உடலில் வினையாகச் சேர்த்து அறியாது வந்த தீமைகளைத் துடைப்பதற்காக இதைச் சொல்கின்றோம்.

மனிதர்களுக்குள் நாம் பழகிய நிலைகள் கொண்டு பத்திரிகை வாயிலாக எங்கோ ஆக்ஸிடன்ட் ஆன நிலைகளைப் படிக்கும் பொழுது எண்ணத்தைக் கூர்ந்து செலுத்திவிட்டால் அதிர்ச்சி வேதனை பயம் போன்ற தீமைகளை நமக்குள் விளைவிக்கின்றது.

நாம் தவறு செய்யவில்லை. உலகத்தை அறிந்து கொள்ள நாம் படித்தாலும் இந்த உணர்வுகள் நமக்குள் வந்து இயக்கி விடுகின்றது.

பத்திரிக்கை வாயிலாக நாம் படித்துணர்ந்த அந்த எண்ண அலைகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து நமக்கு முன் சுழன்று கொண்டிருக்கின்றது.

அதை மீண்டும் எண்ணும் பொழுது பதிவான அதே எண்ண அலைகளைக் குவித்து நம்மை உணரச் செய்கின்றது. அதன் இயக்கமாக நம்மைச் செயல்படுத்துகின்றது.
1.எப்படியெல்லாம் அவர்கள் வேதனைப்பட்டார்களோ
2.அதே வேதனை நமக்குள் விளையும் தருணமும் வந்து விடுகின்றது.

இதே போன்ற நிலைகளிலிருந்து நம்மை மீட்டுக் கொள்ள வேண்டும் என்றால் மெய் ஞானிகளின் உணர்வுகளை எடுத்துத் தான் தடுத்து நிறுத்த முடியும்.

சலிப்பு சோர்வு கோபம் வேதனை வெறுப்பு ஆத்திரம் இத்தகைய உணர்வுகள் எல்லாம் சாதாரண ஆண்டெனாவில் கவருவது போல நமக்குள் வந்து விடுகின்றது.

அவைகளிலிருந்து விடுபட வேண்டும் என்றால் சக்தி வாய்ந்த மெய் ஞானிகளின் உணர்வு தேவை. அதைக் கவர நமக்கு அந்த அதீத ஈர்க்கும் சக்தியும் தேவை.

குருநாதர் எவ்வளவு பெரிய சக்தியை உணர்த்தினாரோ அதனின் உணர்வின் ஆற்றலை நான் பருகினேன். அவரைக் கூர்ந்து நான் கவனிக்கும் பொழுது அதனின் தன்மை ஊழ் வினையாகப் பதிவாகியது.

மீண்டும் நினைவு கொள்ளும் பொழுது சப்தரிஷி மண்டலங்களின் சக்தியை நுகர்ந்து எனக்குள் பெருக்கி அறியாது சேர்ந்த தீமைகளையும் துன்பங்களையும் நீக்கினேன்.

குருநாதர் காட்டிய வழியில் அதைக் கடைப்பிடித்தேன். தீமைகளை நீக்கிய அந்த அருள் உணர்வுகளைச் சொல்லால் சொல்லி உங்களுக்குள் இப்பொழுது ஆழமாகப் பதிய வைக்கின்றேன்.

இதை மீண்டும் நினைவு கூர்ந்து எண்ணிணீர்கள் என்றால் அந்த மெய்ஞான உணர்வுகள் உங்களுக்குள் விளைந்து உங்கள் துன்பங்களையும் துயரங்களையும் நீக்கச் செய்யும்.

குருநாதர் ஒவ்வொரு நிமிடத்திலும் துன்புறுத்தும் உணர்வுகளை செயற்கையாக எனக்குள் பாய்ச்சி
1.அந்தத் துன்பப்படுத்தும் உணர்வுகளை நீக்குவதற்காக
2.விண்ணின் ஆற்றலை நீ எவ்வாறு பருகப் போகின்றாய் என்று கேள்வி எழுப்பினார்.

பின் அந்த விண்ணின் ஆற்றலை எனக்குள் எடுக்க வேண்டிய முறைகளை உபதேசித்து செய்து அதனின் அனுபவபூர்வமான செயல்களை அவர் ஊட்டினார். அவர் ஊட்டிய பக்குவ நிலைகளை நான் எடுத்துக் கொண்டேன்.

மூன்று இலட்சம் பேரைச் சந்திக்கச் செய்து அவர்கள் உணர்வுகள் எவ்வாறு இயங்குகின்றது என்று இருபது வருட காலம் அனுபவ ரீதியாக  உணர்ந்தேன்.

அதிலே மனிதர்கள் நல்லவர்களாக இருக்கின்றார்கள். சந்தர்ப்பவசத்தால் நுகரும் உணர்வால் அவர்கள் எப்படி அவதிப்படுகின்றார்கள் என்று அனுபவத்தில் காட்டுகின்றார் குருநாதர்.

அதில் தேர்ந்தெடுத்துத் தீமைகளை நீக்கிய ஆற்றல்களையும் உபாயங்களையும் தான் இங்கே திரும்பத் திரும்பச் சொல்லி வருகின்றோம்.

“நல்லதை எண்ணி ஏங்குபவர்களைக் காக்க வேண்டும்…!” என்பதற்கே இதைச் செய்கின்றோம்.

Leave a Reply